10th Tamil New Books Important One Mark and Important Lines - PR220
1.சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் -க. சச்சிதானந்தன்
2.தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத்
தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.
3.உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி,
பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார். துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.
4.. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார். திருக்குறள் மெய்ப்பொருளுரை,
தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு
5.திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை”
ஒன்றை அமைத்திருப்பவர்; பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவ ர் - உலகப் பெருந்தமிழர்
தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்.
6.விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று
எண்ணியவர்; அதற்காக, தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி
எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் -உலகப் பெருந்தமிழர்
தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்.
7.'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் - மகாகவி பாரதியார்.
8.இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு,
குண்டலகேசி உரை, யாப்பருங்கலம்உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள்
தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியன இவர்தம் தமிழ்ப்
பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகள். அவர்தான் உ லகப் பெருந்தமிழர்
தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்.
9.உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு
ந டத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல்
மொழியும் தமிழே. -பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார்
10.மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் “சொல்லாய்வுக் கட்டுரைகள்“ நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும்
கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது.
11.தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணர்,
12.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குநராகப் பணியாற்றியவர்; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித்
தலைவராக இருந்தவர். மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணர்,
13.போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத்
தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது.இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.
செய்தி- ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
14.இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார்
15.முச்சங்கங்களால் - முதல் இடை கடை
16.தமிழ்: தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது;
17.வெண்சங்கு ,சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று
வகையான சங்குகளைத் தருகிறது;
18.பாடல்- முத்தமிழ் , தமிழுக்கு - இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் , கடலுக்கு -முத்தினைஅமிழ்ந்து எடுத்தல்
19.பாடல் -முச்சங்கம் ,தமிழுக்கு -முதல், இடை,கடை ஆகிய முச்சங்கம்,கடலுக்கு-மூன்று வகையான சங்குகள் தருதல்
20.பாடல் - மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) தமிழுக்கு - ஐம்பெரும் காப்பியங்கள் ,கடலுக்கு-மிகுதியான வணிகக் கப்பல்
21.பாடல் -சங்கத்தவர் காக்க ,தமிழுக்கு -சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை ,கடலுக்கு -நீரலையைத் தடுத்து நிறுத்தி,
சங்கினைக் காத்தல்
22.ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும்.
இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும்
சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
23.புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப்
பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பாடலைப்
படைத்தவர் தமிழழகனார்.
24.புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப்
பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பாடலைப்
படைத்தவர் தமிழழகனார்.
25.சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் 12
சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
26.கபிலரின் குறிஞ்சிப் பாட்டு
27.தமிழ் மறையான திருக்குறளைத் தந்த “திருவள்ளுவர்” பெயரில்
முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா
புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது.
28.சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும்
தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் “திருவள்ளுவரே”!
29.“ திருப்பரங் குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய
நிலைக்கண்ணாடிகளைப்போல் வட பு றமும் தென்புறமும் நீர்நிறைந்த
கண்மாய்கள்” என்று "குறிஞ்சிமலர்" என்னும் நூலில் நா . பார்த்தசாரதி உவமையைப்பயன்படுத்தியுள்ளார்.
30.உருவகத்தைப் பற்றி ‘உவமையும் பொருளும் வேற்றுமை
ஒழிவித்து ஒன்றெனமாட்டி ன் அ ஃ து உருவகமாகும்' என்று எழுதியிருக்கிறார். -தண்டி'
31.இலக்கியங்களில் உவமையை விட உருவகமே உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றி பெறுகின்றது ‘முகநிலவில் வியர்வைமுத்துகள் துளிர்த்தன’
என்று உருவகமாக எழுதுகிறார்கள்.
32.“களம்புகத் துடித்து நின்ற உனக்கு,
வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு
மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச்
சான்று” – அறிஞர் அண்ணா
33.உவம உருபு மறைந்து வந்தால், அதற்கு எடுத்துக்காட்டு உவமை அணி என்று பெயர்.
34.உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் ‘இணை ஒப்பு’ (analogy) என்கிறோம்.
35."ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா?
என்று கேட் கிறார்கள், ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண் டு ம்
என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது, புரோகிதருக்காக அமாவாசை
காத்திருப்பதில்லை" என்று எழுத்தாளர் வ.ராமசாமி 'மழையும் புயலும்' என்னும்
நூலில் குறிப்பிட்டுள்ளார்.
36.உயிர் இல்லாதபொருள்க ளை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத
பொரு ள்களை உ ணர்வுடையன போலவும் கற்பனை செய்வதுண்டு என்று
எடுத்துக்காட்டியிருக்கிறார்.தொல்காப்பியர் “ ஞாயிறு ,
திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொ ருள்கள், சொல்லுந போலவும் ,
கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்”
37.மோனையும் எதுகையும் செய்யுளில் வருமாயின் இனிய ஓசையின்பம்
விளையும்.
38.“சோலையில் புகுவேன்; மரங்கள்
கூப்பிடும்; விருந்து வைக்கும், ஆலமர நிழலில் அமர்வேன் -தி ரு.வி. கலியாணசுந்தரனார்
39.“தென்றல் அசைந்துவரும் தென்தமிழ்
நாட்டில் அமைந்த திருக்குற்றாலம் , மலைவளம் படைத்த பழம்பதியாகும். சொல்லின் செல்வர் இரா.பி.சே.,
தமிழின்பம் என்னும் நூலில் எழுதியுள்ளார்.
40.சொல்லையோ கருத்தையோ திரும்பத் தி ரு ம்பச் சொல்வதுண்டு ! ெசாற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு
செய்ய மு.வரதராசனார், “வாழ்க்கை ந டத் துவதற்குப் பொருள்கள்பல வேண்டும். அரிசி, காய், கனி முதலிய வை வேண்டும். உடை ,
வீடு முதலிய வை வேண்டும். காசும் காகித நோட்டும் வேண்டும், இன்னும்பல வேண்டும். இவற்றை ஆளும்
அறிவும் வேண்டும்” என்று எழுதியிருக்கிறார்.
41.முரண்படாத – மெய்ம்மையைச் சொல்லுவது ‘முரண்படு மெய்ம்மை’
42.முரண்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுவார்கள்... ’கலப்பில்லாத பொய்’... இதைச் சொல்முரண்
(Oxymoron) என்கிறோம்.
43.சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து
எழுதுவோம்... இதனை எதிரிணை இசைவு (Antithesis) என்கிறோம்.
44.“குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம்;
புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம் : மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம்;
பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச்சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!”
என்று தோழர் ப.ஜீவானந்தம் எழுதியிருப்பது
45.“இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை.
இந்தியாதான் என் இளமையின் மெத்தை; என் யௌவனத்தின் நந்தவனம்; என்
கிழக்காலத்தின் காசி” என்று பாரதி என்னும் தமிழ்க்கவிஞர் நம் நாட்டை உயர்த்திக் கூறுகிறார்.
46.எழில்முதல்வன் எழுதிய 'புதிய உரைநடை' என்னும் நூலிலுள்ள உரைநடையின்
அணிநலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் வடிவமாக மாற்றித் தரப்பட்டுள்ளது.
47.மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர்
பணியைத் தொடர்ந்தவர். குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்
தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்தவர். மரபுக் கவிதை, புதுக்கவிதை படைப்பதிலும் வல்லவர்.
48.இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய
பெருமைக்குரியவர். 'புதிய உரைநடை' என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர்.மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன்
49.இலக்கியத் தொடர் -உள்ளங்கை நெல்லிக்கனி போல ,இடம்பெற்றுள்ள நயம் - உவமை
50.தொல்காப்பியர், உலகம் எ ன்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்.
51.திருமூலர் தம் திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று
கூறியுள்ளார்.
52.ஔவையார் தம்குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில்,
வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம்உண் டாம்
– ஔவை குறள், 49 என்று என்னைச் சிறப்பித்துள்ளார்.
53.கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும்பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்போது
நான் கொண்டல் எனப்படுகிறேன் .
54.மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும்பெயருமுண்டு.மேற்கிலிருந்து வீசும்போது
நான் கோடை எனப்படுகிறேன்;
55.வடக்கு என்பதற்கு வாடை என்னும்பெயருமுண்டு.
56.தெற்கிலிருந்து வீசும்போது நான் தென்றல் காற்று எனப்படுகிறேன்;
57."வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்"
- சிலம்பு 2: 24
58.பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
59.பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி,
"நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்
சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே" எனத் தூது செல்ல என்னை அன்போடு
அழைக்கிறாள்.
60."நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே " -பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
61.ஹிப்பாலஸ் பருவக்காற்று -யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும்
சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்துசென்றன. அந்தப் பருவக் காற்றுக்கு
யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள்.
ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.
62."நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!"
- புறம். 66
63.கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பாடலில், சங்ககாலப் பெண் புலவர்
வெண்ணிக்குயத்தியார் ‘வ ளி’ எனக் குறிப்பிட்டுச் சிறப்புச் செய்திருப்பது என்னையே!
64.ஜூன் முதல் செப்டம்பர்வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் அக்டோபர் முதல்
டிசம்பர்வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் வீசுகின்றேன்;
65.வளி மிகின் வலி இல்லை (புறம். 51) என்று ஐயூர் முடவனார்
சிறப்பித்துள்ளார்.
66.மதுரை இளநாகனார் (புறம். 55) கடுங்காற்று ,
மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று என் வேகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
67.உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம்
இடம்பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில்
தமிழகம் முதலிடம் வகிக்கிறது
68.ஜூன்15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி
வருகிறீர்கள்.
69.மென்துகிலாய் உடல்வருடி
வாஞ்சையுடன் மனம்வருடி
பகலெரிச்சல் பணக்கவலை
பயக் குழப்பம்-தேவகோட்டை வா.மூர்த்தி
70.தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய்
மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.-- தனிநாயக அடிகள்(ஒன்றே உலகம்)
71.மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’, ‘சிந்துக்குத்
தந்தை’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்;
72.எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்;
73.கேலிச்சித்திரம்-கருத்துப்படம் போன்றவ ற்றை
உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும்,
பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்;
74.குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என,
குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்;
75.இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
76.பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்;
77.உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை
வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
78.உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக்
கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று..
79.நின் தலைவன் பகைவரை வென்று திறை ப்பொருளோடு வருவது உறுதி .
தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே! என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர்.
80.விரிச்சி-ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள்
நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தை த் தொழுது நின்று அயலார்
பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில்
முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.
81.pg 44 10th book
82.முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 103 அடிகளைக் கொண்டது.
83.முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில்
குறைந்த அடிகளை உடைய நூல் இது. இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.
84.கப்பித்தான் - தலைமை மாலுமி (கேப்டன்) ,தொங்கான் - கப்பல்
85.வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை
2000ஆம் ஆண்டில் தொடங்கியது.
86.புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை
ஆய்வு மையம் 2004 செப்டம்பரில்இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
87.வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள்,மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை,
தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப்பெயர்களை வழங்கியுள்ளன.
88.இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ்,
பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.
89.‘கஜா’ புயலின் பெயர் இலங்கை தந்தது. அடுத்து வந்த ‘பெய்ட்டி’
புயல் பெயர் தாய்லாந்து தந்தது.
90.அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்களும் இடம்புரிப்
புயல்கள்!
91.ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள்
வலம்புரிப் புயல்கள்!
92.பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட்
குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார். புயலின் இந்த
இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.
93.பறவை மீன், அவுலியா மீன் – மீன் வகை ,பிலவான் – இந்தோனேசியாவிலுள்ள இடம்
94.புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி.
இந்நூலாசிரியர் ப.சிங்காரம் (1920 – 1997).
95இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது. அச்சூழலில்,
மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப்
படைப்பு இப்புதினம். அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி
இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
96.ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். வேலைக்காக இந்தோனேசியா
சென்றார். மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார். இவர் அன்றைய சூழலில்
அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.
97.உறவினர் வேறு, விருந்தினர்வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே
விருந்தினர் என்று பெயர். ‘விருந்தே புதுமை’என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
98.திருவள்ளுவர் இல்லறவியலில் 'விருந்தோம்பலை வலியுறுத்த ஓர்
அதிகாரத்தையே ' அ மைத்திருக்கிறார்
99.முகம் வேறுபடாமல்முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க
வேண்டும் என்பதை “மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் எடுத்துரைக்கிறார்.
100.கண்ணகி வருந்துகி றாள் .கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி
அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே
வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர்
மரபு என்பதை இளங்கோவடிகள் உணர்த்துகிறார்.
101.கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர்
குறிப்பிட்டுள்ளார்.
102.கலிங்கத்துப்பரணியிலும் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உ ணவிடுவோரின்
முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்.
103."பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே" - கம்பராமாயணம்
104."விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போல" - கலிங்கத்துப்பரணி
105.“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே........ ”
- புறநானூறு, 182 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
குறிப்பிட்டுள்ளார்.
106.“அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும்”என்று நற்றிணை (142) குறிப்பிடுகிறது.
107.‘’காலின் ஏழடிப் பின் சென்று’’
-பொருநராற்றுப்படை, 166
108.குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலள்
என்று புறநானூறு (333) காட்சிப்படுத்துகிறது.
109.நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்.... - புறநானூறு, 316
110.இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க
அவரிடம் தானியமில்லை; எனவே, அன்றுவிதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து
வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.
111.நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும்
கொடுத்தனர் என்கிறது -சிறுபாணாற்றுப்படை
(அடி:160-163).
112.“இலையை மடிப்பதற்கு முந்தைய
வினாடிக்கு முன்பாக
மறுக்க மறுக்க
பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
நீண்டு கொண்டிருந்தது
பிரியங்களின் நீள் சரடு“
-அம்சப்பிரியா
113.“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ” என்ற குறுந்தொகை (11 8) அடிகள்
புலப்படுத்துகின்றன.
114.“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கொன்றை வேந்தனில் ஔவையார்
பாடியுள்ளார். அவர் பாடிய தனிப்பாடலில்,
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே
புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈ(து)
எல்லா உலகும் பெறும்”
115.இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும்.
116.அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்
சங்கம் ’வாழையிலை விருந்து விழா’வை
ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.
117."இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள்கூடி
இரையுண்ணும்................." பாரதிதாசனார்
Comments
Post a Comment