Skip to main content

Posts

Showing posts with the label Tnpsc

Processes of motivation - ஊக்கப்படுத்துதலின் செயல்முறைகள்

முன்னுரை : மேலாண்மை என்பது நிறுவனத்தின்  நோக்கங்களை அடைவதற்காக ஒவ்வொரு  நபரும் இணைந்து குழுவாக செயல்படக்கூடிய சூழலை உருவாக்குதல் மற்றும் அதனை தக்க வை த்துக் கொள்வ துமாகும் . நிர்வாகம் ஊழியர்களை ஊக்குவிப்பதன்  மூலம் தன் பணியை திறமையாக செயலாற்றுகிறது. இதற்கு நிறுவனம்  தன் ஊழியர்களை ஊக்குவிக்கும்  காரணிகளை அறிந்துகொள்ளவேண்டும்.  திறமையான ஊக்கத்தின் வெற்றி என்பது ஒப்புக்கொள்ளப்படுகின்ற ஆணை மட்டுமன்றி திறமையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை பார்க்கும்  உறுதிப்பாடுமாகும். எனவே நிறுவனம்  ஊழியர்கள் நிறுவனத்திற்காக உழைக்க  ஊக்கிகளை வழங்கவேண்டும். ஊக்கப்படுத்துதலின் பொருள் : ஊக்கப்படுத்துதல் என்பது ஒரு  செயலைச் செய்வதற்கான காரணம்  என்னும் பொருள் கொண்ட’ஊக்கு காரணி”என்னும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.  ஊக்கம் என்பது திசை, தீவிரம் மற்றும்  தொடர்ச்சியான இருப்புடைய தன்னார்வ நடத்தை போன்றவற்றை பாதிக்கும்  ஒரு நபரின் உள்ளிருக்கும் விசைகளின்  தொகுப்பு.  முழுமையான உந்துதல்கள், ஆசைகள், தேவைகள், விருப்பங்கள் ம...

Yoga inspires Ethics of Life and Types Of Yoga's In Indian Culture - PR220

 அறிமுகம் : இயற்கையிலேயே மனிதனுக்கு இறைவனை நோக்கிய உந்துதல் உள்ளது.  அதனை நமது முன்னோர்களாகிய  யோகிகளும், ஞானிகளும், முனிவர்களும்  முறைப்படுத்தி, நமது பாரதத் திருநாட்டிற்கு மட்டுமல்லாது உலகத்திற்கே இறைநெறியில்  வாழ அளித்திருக்கும் கொடைதான் யோகா . ஞானிகளும் யோகிகளும் முனிவர்களும்  மனிதப் பிறவிப்பயனை, மக்கள் அடையும் நிலைகளை , யோக முறையில்  வடிவமைத்துத் தந்துள்ளனர் . யோகா என்பது, முனிவர்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே உகந்தது என்ற கருத்து மாறித் தற்போது உலகிலுள்ள அனைத்து சமயத்தைச் சார்ந்த மக்களாலும் பின்பற்றப்படும் வாழ்வியல் கலையாக மிளிர்ந்துள்ளது யோகா - பொருள் : யோகா என்ற சமஸ்கிருத சொல்லானது யுஜ் (YUJ) என்ற சொல்லிருந்து தோன்றி யோக் (YOKE) என்ற சொல்லாக மாறி இறுதியில் “யோகா ” (Yoga) எனப் பெயர்பெற்றது. யுஜ் மற்றும் யோக் என்ற சொற்கள் “இணைத்தல்” என்று பொருள்படுகின்றன .இதில்இணைத்தல் என்பது உடலையும் மனத்தையும் இணைத்தல் முதல் நிலை  உடலையும் உயிரையும் இணைத்தல் இரண்டாம் நிலை  உயிரையும் இறைவனையும் இணைத்தல் மூன்றாம் நிலை யோகா பொருள்  பதஞ்சலி முனிவரின்...

Indian Culture Development Ethics Important Lines and Questions - PR220

அறிமுகம் : நமதுநாடு பழைமையான பண்பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்வியல்  முறைகள், இலக்கியம், கணிதம், வானவியல், இசை, ஓவியம், நடனம், சிற்பம், கட்டடக்கலை போன்றவற்றில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது. தே சிய ஒருமைப்பாட்டை  மையப்படுத்தும், ஆன்மிக உணர்வு, இந்தியாவின் பலம் என சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். “உலகப்பொதுமறை“ என்றழைக்கப்படும் திருக்குறள் , தமிழர்  வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெ றிகளைக் கூறும் சங்க இலக்கியம், இராமாயணம்,  மகாபாரதம், கௌதம புத்தர் தோற்றுவித்த பௌத்தசமயம் போன்றவை , உலகிற்கு  இந்தியா வழங்கிய அளப்பரிய பண்பாட்டுக் கொடையாகும் இந்தியப் பண்பாட்டின் மேன்மைகள் : இந்தியப் பாரம்பரியத்தின் உயரியப்பண்பு சகிப்புத்தன்மையும்  பன்முகத்தன்மையுமாகும். யூதர்கள் , கிறித்துவர்கள் , முஸ்லீம்கள் , பார்சிக்கள் போன்றோர் இந்தியாவில் குடியேறி, இந்தியப்பன்முகத்த ன்மையை ஏற்றுக்கொண்டு, இந்தியப்பண்பாட் டுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள் . மதநல்லிணக்க அடிப்படையில்  அனைத்துச் சமயங்களிலுமுள்ள நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்ளல், பிற சமயத்தினருக்கும் மதிப்பளித்தல...

Indian Culture ( Panpadu ) Important Points and Questions - PR 220

அறிமுகம் : உலக நாடுகளுள் ஒன்றான இந்தியா, வளமையும், பெருமையும் மிக்கதாக  விளங்குகிறது. அதன் பெருமைக்குச் சிறப்பு  சேர்ப்பது இந்தியப் பண்பாடாகும்.  இப்பண்பாடு தனிச்சிறப்புடையது, பழைமையையும், பண்பாட்டுப் பாரம்பரியத்தையும்  கொண்டது. உலகளாவிய பண்பாட்டுக் கூறுகளைத்தன்னிடத்தே கொண்டும், உலகிலுள்ள  மற்றநாடுகள் பின்பற்றத்தக்க வகையிலும் சிறப்புற்று விளங்குவது இந்தியப் பண்பாடாகும்.  இப்பாடப்பகுதி, பண்பாடு அதன் விளக்கம், வரையறைகள், இந்தியப் பண்பாட்டை அறிய உதவும்  தொன்மைச் சான்றுகள், பண்பாட்டின் இயல்புகள், அதன் சிறப்புக் கூறுகள், பண்பாட்டுக் கல்வியினால்  நாம் அடையும் பயன்கள் ஆகியவற்றை அறிய உதவும் வாயிலாக அமைகின்றது.  பண்பாடு – விளக்கம் : பண்படு என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்தே பண்பாடு தோன்றியது பண்படுத்துதல் என்பதற்குச்  செம்மைப்படுத்துதல் அல்லது சீர்படுத்துதல் என்பது பொருள். பண்படுத்துதல் என்னும்  சொல்வழக்கு, நிலத்தைப் பண்படுத்துவதற்கும், உள்ளத்தைப் பண்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ‘Cultura‘ என்ற இலத்தீன் சொல்லுக்குச் சூழலுக்கு ஏற்ற வளர்ச்...

World History Important Questions and one Mark Questions For Tnpsc and UPSC -PR220

  அறிமுகம் : முதல் உலகப்போருக்குப் பின் கூட்டுப் பாதுகாப்பை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பன்னாட்டு அமைப்பு தகர்ந்தது. 1939 செப்டம்பரில்  ஐரோப்பா, மீண்டும் ஒரு பெரும் போரை எதிர்கொண்டது. 1939 முதல் 1945 வரை நடந்த போர், இதற்குமுன் 1914 முதல் 1918  வரை நடந்த உலகப்போரை விஞ்சியதாக இருந்தது. இதற்கு ஜப்பான் எடுத்த நிலைப்பாடும்  முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். அதன்  விளைவாக கடுமையான அளவிற்கு உயிரிழப்பும்,  பொருள் சேதமும், போர்செலவினங்களும்  ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்  காலனிய நாடுகளில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டு  தேசியவாத கிளர்ச்சிகள் சூடுபிடித்தன. இதனால்  ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் காலனியாதிக்க நீக்கம் தொடங்கியது. தென்கிழக்கு ஆசியாவில்,  டச்சு ஒரு தோல்வியுற்ற போரை நடத்தியது,  ஆனால் இறுதியாக முந்தைய டச்சு காலனி  நாடாக இருந்த கிழக்கிந்தியத் தீவுகளான  இந்தோனேசியாவுக்கு 1949இல் விடுதலை அறிவிக்கப்பட்டது. இப்பாடம் இந்தோனேசியாவிலும்,  அமெரிக்க காலனியான பிலிப்பைன்ஸ் நாட்டிலும்  ஏற்பட்ட முன்னேற்றங்களை அணுகுபொர...

Freedom Stage World History Important Lines and Questions For Tnpsc Exams - PR220

அறிமுகம் : கிரோண்டியர்களும் ஜேக்கோபியர்களும் : லஃபாயட்டியின் அரசியல் அமைப்புக்குக் கட்டுப்பட்ட முடியாட்சி இரண்டு ஆண்டு காலம்  பிரெஞ்சு அரசியல் களத்தில் கோலோச்சியது. 1791  ஜூனில் பாரிசிலிருந்து தப்பித்து, எல்லையைக் கடந்து அங்கே கூடியிருக்கும் எதிர்புரட்சிப்  படைகளுடன் இணைவதற்காக மன்னர் மேற்கொண்ட முயற்சியைக் குடியானவர்  படையொன்று முறியடித்தது. இருந்தபோதிலும்  உணவுப் பண்டங்களுக்கான பற்றாக்குறையும்  விலையேற்றமும் வேலையில்லாத் திண்டாட்டமும் கைவினைஞர்களையும் சிறு வணிகர்களையும்  தொழிலாளர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்தது ஏமாற்றத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றது. மக்கள் பொங்கியெழுவதை அடக்குமுறையால் கட்டுப்படுத்த இயலவில்லை. அரசாங்கத்தை நடத்திய மிதவாதிகள் தங்களுக்குள்ளேயே வேறுபட்டனர். ஜோக்கோபியன் குழுவிற்குள் இருந்த கிரோண்டியர்கள் (அவர்களின் ஒரு  தலைவர் பிரிசாட் என்ற பெயரால் பிரிசாடினியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்) ரோபஸ்பியரைப் போலவோ, டாண்டனைப் போலவோ அதி  தீவிரவாதிகளாக இல்லை. அவர்களுக்குள்ளே பல கருத்து வேறுபாடுகளிருந்தாலும் ரோபஸ்பியரைத் தவிர மற்றவர்கள்,...

Tamil Indian History Best Awesome Points for Tnpsc Exams - PR220

அறிமுகம் : நிலவியல் கண்டுபிடிப்புகள், மறுமலர்ச்சி, சமய மறுமலர்ச்சி, “முடியரசர்களின் காலம்” ஆகியவற்றின் காரணமாக, பதினெட்டாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில், உலகம் முழுவதிலும், அரசியல், சமய, சமூக, பொருளாதார நிலைகள் மாற்றமடையத் தொடங்கின. பதினெட்டாம் நூற்றாண்டு முடிவடைகின்ற  தருவாயில் இரு புரட்சிகள் நடைபெற்றன. அவை அமெரிக்க புரட்சி (1775-83), பிரெஞ்சுப் புரட்சி  (1789-95) ஆகியனவாகும். இப்புரட்சிகள்  முடியாட்சிமுறை சார்ந்த அரசாங்கங்களுக்கு  பெரும் வீழ்ச்சியைக் கொடுத்ததோடு, அதற்குப்  பின்னரான மனிதகுல வரலாற்றின்மீது நிலையான தாக்கத்தினையும் ஏற்படுத்தின.  இப்புரட்சிகள் மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அத்துடன் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட  பொருளாதாரமானது ஆலையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றம்பெறும் புதிய  காலகட்டத்தை அடைந்தது. மேற்சொல்லப்பட்ட, உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைப் புரிந்து கொள்ள இப்பாடம் நமக்கு உதவும். அமெரிக்க விடுதலைப் போர்: கண்டுபிடிப்புகளின் காலம் என்றறியப்படும்  காலப்பகுதியில், துணிச்சல்மிக்க கடலோடிகள...

World History and Indian History Important Questions and One Mark Question - PR220

அறிமுகம் : கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451-1506) : ஜெனோவாவைச் சேர்ந்த இத்தாலியரான கிறிஸ்டோபர் கொலம்பஸ்ஸ்பானிய ஆட்சியாளர்கள்  பெர்டினான்ட் மற்றும் இசபெல்லாவின் ஆதரவைப் பெறுவதற்கு முன் பல கடினமான சூழ்நிலைகளை கடக்க நேரிட்டது. 1492 ஆகஸ்ட் 3இல்  கொலம்பஸ் காடிஸ் அருகே உள்ள பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று சிறிய கப்பல்க ள் (தி  சாண்டா மரியா, தி பிண்ட்டா, தி நினா) மூலமாகப்  பயணித்தார். 1492ஆம் ஆண்டில் இரண்டு  மாதங்கள் மற்றும் ஒன்பது நாட்களுக்கான பயணத்துக்குப் பிறகு இந்தியா என்று அவரால்  நம்பப்பட்ட நிலப்பகுதியை அவர் வந்தடைந்தார்.  ஆனால் உண்மையில் அது அமெரிக்கா எனும் ஒரு  புதிய கண்டமாகும். தங்கம், பருத்தி, விந்தையான மிருகங்கள் மற்றும் கிறித்தவ சமயத்தில்  ஞானஸ்தானம் கொடுக்கப்பட வண்ணம்  தீட்டப்பட்ட அகலமான கண்களுடன் இரண்டு  இந்தியர்களுடன் ஸ்பெ யின் சென்றுசேர்ந்தார். தான் கண்டுபிடித்த நிலப்பகுதி இந்தியா என்று  அவர் தனது இறுதிக் காலம் வரை நம்பியதால் அவர்கள் இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். வாஸ்கோடகாமா : கொலம்பஸ் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஸ்க...