அறிமுகம் :
உலக நாடுகளுள் ஒன்றான இந்தியா, வளமையும், பெருமையும் மிக்கதாக
விளங்குகிறது. அதன் பெருமைக்குச் சிறப்பு சேர்ப்பது இந்தியப் பண்பாடாகும்.
இப்பண்பாடு தனிச்சிறப்புடையது, பழைமையையும், பண்பாட்டுப் பாரம்பரியத்தையும்
கொண்டது. உலகளாவிய பண்பாட்டுக் கூறுகளைத்தன்னிடத்தே கொண்டும், உலகிலுள்ள
மற்றநாடுகள் பின்பற்றத்தக்க வகையிலும் சிறப்புற்று விளங்குவது இந்தியப் பண்பாடாகும்.
இப்பாடப்பகுதி, பண்பாடு அதன் விளக்கம், வரையறைகள், இந்தியப் பண்பாட்டை அறிய உதவும்
தொன்மைச் சான்றுகள், பண்பாட்டின் இயல்புகள், அதன் சிறப்புக் கூறுகள், பண்பாட்டுக் கல்வியினால்
நாம் அடையும் பயன்கள் ஆகியவற்றை அறிய உதவும் வாயிலாக அமைகின்றது.
பண்பாடு – விளக்கம் :
பண்படு என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்தே பண்பாடு தோன்றியது பண்படுத்துதல் என்பதற்குச்
செம்மைப்படுத்துதல் அல்லது சீர்படுத்துதல் என்பது பொருள். பண்படுத்துதல் என்னும்
சொல்வழக்கு, நிலத்தைப் பண்படுத்துவதற்கும், உள்ளத்தைப் பண்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
‘Cultura‘ என்ற இலத்தீன் சொல்லுக்குச் சூழலுக்கு ஏற்ற வளர்ச்சி (In conditions suitable for growth)
என்று பொருள். இச்சொல்லின் திரிபே ‘Culture‘ என ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின்
தொ டக்கத் தில், 1937இல் ‘Culture‘ என்னும் சொல்லுக்கு இணையாகப் ‘பண்பாடு‘ என்னும்
தமிழ்ச் சொல்லை டி. கே . சிதம்பரநாதனார் பயன்படுத்தியதாகப் பேராசிரியர் எஸ். வையாபுரியார் குறிப்பிடுகிறார்.
பண்பாடு - வரையறைகள் :
பண்பாடு என்பது பண்பட்ட ,பக்குவப்பட்ட , சீரான, நேரிய வழியில் செல்லும் ஒழுக்கவியல் கோட்பாடாகும்.
இன்று நாம் பண்பாடு என்னும் சொல்லால் குறிப்பிடுவதை நம் முன்னோர்கள் பண்புபண்புடைமை, சால்பு,
சால்புடைமை, சான்றாண்மை போன்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளனர். இச்சொற்கள் வெவ்வேறு
இடங்களில் வேறு சில பண்பாட்டுடன் தொடர்புடைய பொருள்களைக் குறித்தாலும்
பல இடங்களில் பண்பாட்டையே குறிக்கிறது. கலித்தொகையில், ‘‘பண்பெனப்படுவது
பாடறிந்து ஒழுகுதல்“ என்றும், வள்ளுவத்தில், “பண்புடையார்ப் பட்டுண்டு உலகு“ என்றும்
குறிப்பிடப்ப டுகின்றன. பண்பா டு உடையோரைச் சான்றோர் என்றும், ஒழுக்கமுடையோர்
என்றும், மாசற்ற காட்சிகளை உடையோர் என்றும் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன
பண்பாடு என்பது, ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள்,
வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், சமயங்கள்,
வழிபாட்டுமுறைகள், களவு, கற்பு, அகபுறத்திணைமரபுகள், இலக்கியமரபுகள்,
அரசியலமைப்புகள், ஆடை , அணிகலன்கள், திருவிழாக்கள், உணவுமுறை ,பொழுதுபோக்குகள் விளையாட்டுகள்
ஆகிய எல்லாவற்றை யும் ஒருங்கே பெற்று அமைவதாகும்
ஓர் இனத்தாரின் பண்பாட்டை அறிந்துகொள்ள எழுத்திலக்கியங்கள்
பயன்படுவதைப் போல, நாட்டுப்புற இலக்கியங்களும் பயன்படும். அதனை
நாட்டுப்புறப்பாடல்க ள், நாடோடி இலக்கியங்கள், பழமொழிகள், விடுகதைகள், முதுமொழிகள்,
இசை , நாடகம், நாட்டியம், செந்தமிழ், கொடுந்த மிழ் அமைப்புகள், வளர்ச்சிகள்
ஆகியவற்றிலும் காணலாம். மேலும், ஓவியம், சிற்பம், கட்ட டக்கலை போ ன்ற கலைகளிலும்
அவரவரின் பண்பாடு வெளிப்படும். வாழ்வியற்களஞ்சியம்: “மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச்
சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்க ளும்,மரபுகளும் சேர்ந்ததே பண்பாடு“.
ஆங்கில அகராதி: “பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின்மூலம் உடல், உள்ளம், உணர்வு
ஆகியன அடையும் வளர்ச்சியே பண்பாடு“
இலக்கியச் சான்றுகள் :
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நடந்த நிகழ்வுகளை அறிந்துகொள்ள இலக்கியங்கள்
துணைபுரிகின்றன. அதனால்தா ம் அவை , காலக் கண்ணாடிகள் எனச் சிறப்பித்துக்
கூறப்பெ றுகின்றன. நம் பண்பாட்டுக்கூறுகளின் சிறந்த வாயில்களாக இலக்கியங்கள்
அமைந்துள்ளன எனில், அது மிகையாகாது.
வேதங்கள் :
இலக்கியச் சான்றுகளில் மிகவும் தொன்மை வாய்ந்தவை வேதங்கள். ரிக், யஜூர்,
சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்க ளும் அக்காலத்தில் பின்பற்றப்பட்ட சடங்குகள்,
முறைகள் ஆகியவற்றை விளக்கியுள்ளன. வேதங்கள் மற்றும் பிராமணங்கள், ஆரியர்களின் வழிபாடு, நம்பிக்கைகள்
பற்றியும் ஆரண்யங்கள், உபநிடதங்கள் முதலியன அக்கால ஞானிகள், துறவிகள் ஆகியோரின் தத்துவப் பார்வை பற்றியும்
எடுத்துரைக் கின்றன. மேலும் வானநூல், மருத்துவம், மொழிநூல் போன்றவற்றில்
அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கைப் பற்றியும் கூறுகின்றன. வேள்விகளின் வகைகளையும், இல்லற , துறவறத்தாரின் வாழ்க்கை
நெறிமுறைகளையும் நன்கு விவரிக்கின்றன
இதிகாசங்கள் :
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களாக, இராமாயணமும், மகாபாரதமும் விளங்கின. இவற்றின்
வாயிலாக நாடோடிகளாக வாழ்ந்த ஆரியர்கள், தங்களுக்கெனக் குடியிருப்புகளை
ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்தமையை அறியமுடிகிறது. அக்கால அரசியல், சமுதாயப்
போராட்டங்கள், நகர வாழ்க்கை , வரிகள், தண்டனைகள், பல்வேறு மாந்தர்களின்
வாழ்க்கை முறை கள் ஆகியவற்றையும் அறியமுடிகிறது. பின்வேதகாலத்தில் தோன்றிய
‘நான்கு வருணமுறை ‘ இக்காலத்தில் வலிமை பெற்றன
தரும சாத்திரங்கள் :
வரலாற்றுச் சான்றுகளாகவும், பண்பாட்டுச் சான்றுகளாகவும், தருமசாத்திரங்கள் விளங்குகின்றன. மனு, யஜ்
வால்கியர், விஷ்ணு, பிரகஸ்பதி, நாரதர் ஆகியோர் எழுதியவற்றையே தருமசாத்திர நூல்கள் என்கிறோம். இந்நூல்களின்
வாயிலாக நீதி, தண்டனை வழங்கப்பட்டமுறைகள், அக்காலச் சட்டதிட்டங்கள், சமுதாய
அமைப்புக்கேற்ற நெறிமுறைகள் ஆகியவற்றை அறியமுடிகிறது
பதினெண் கீழ்க்கணக் கு நூல்களுள் பதினொருநூல்கள் அறக்கருத்துகளை
வலியுறுத்துகின்றன. ‘உலகப்பொ துமறை ‘ என அனைவராலும் போற்றப்படும் ‘திருக்குறள்‘,
எக்கா லத்துக்கும் ஏற்புடையதாய் உலக மக்களின்வாழ்வியலுக்கு உகந்த அறநெறிகளை
எடுத்துரைக் கிறது. சமண முனிவர்களால் பாடப்பெற்ற ‘நாலடியார்‘ என்னும் நூலும் அறக்கருத்துகளை வெளிப்படுத்துகிறது.
அறநெறிச்சாரம் என்னும் நூல், பண்பாட்டுக் கருத்துகளைப் புலப்படுத்துகிறது. ஔவையாரின் நீதிநூல்களுள் ஆத்திசூடி
குறிப்பிடத்தக்கதாகும். பின்பற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை எளிய ஓரடிப் பாடலாக வெளிப்படுத்துகிறது. அவருடைய
பிற நீதிநூல்கள், வாழ்வில் போற்ற வேண்டிய அறநெறிகளை வலியுறுத்துகின்றன
பௌத்த சமய இலக்கியங்கள் :
புத்தரின் அறிவுரைகளையும் கருத்துகளையும் எடுத்துரைப்பவை பெளத்த சமய இலக்கியங்களாகும். பாலி, பிராகிருதம்
ஆகிய மொழிகளில் இவை எழுதப்பட்டுள்ளன. பௌத்த சமய நூல்கள் முப்பிரிவாக உள்ளன.
அவை சுத்த பீடகம், விநய பீடகம், அபிதம்ம பீடகம் என்பனவாகும். சுத்த பீடகம், புத்தரின் அறிவுரை களைக் கூறுகிறது. விநய பீடகம்,
பௌத்த துறவிகளுக்கான சட்ட திட்டங்கள், ஞான ஒழுக்க முறைகள் ஆகியவற்றைப்பற்றிக்
கூறுகிறது. அபிதம்ம பீடகம், புத்தரின் தத்துவங்களை மிகச்சிறந்த முறையில் ஏழு படலங்களில் விரித்துரைக்கிறது.
மிலிந்தபான்ஹா, லலிதவிஸ்தரா, வைபுல்ய சூத்திரங்கள், நேத்திபிரகர்ண ம், பேதக உபதேசம்
போன்றவை சில புத்த சமய நூல்களாகும்.
சமண நூல்கள் :
மண நூல்கள், ஆகமசித்தாந்தங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை அங்கங்களாகப் பகுக்கப்பட்டுச் சமண சமயக்
கோட்பாடுகளை விளக்குகின்றன. சமண சமயம் சுவேதம்பரர், திகம்பரர் என இரு பிரிவாகப்
பிரிந்தாலும் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நூல்கள் தோன்றின. தமிழில் எழுதப்பட்ட சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலான
பல்வே று காப்பியங்களும், இலக்கண நூல்களும்சமணத்தின் தத்துவங்களை அறிய உதவுகின்றன.
தனி இலக்கியங்கள் :
சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றின் வாயிலாகத் தமிழர்களின் பண்பாட்டுச்
சிறப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன
நாட்டுப்புற இலக்கியங்கள் :
ஏட்டில் எழுதா இலக்கியங்கள் எனப் போற்றப்படுபவை நாட்டுப்புற இலக்கியங்களாகும். இவை , ஒரு நாட்டு
மக்களின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை எடுத்தியம்புகின்றன. ‘இலக்கியங்கள்,
காலங்காட்டும் கண்ணாடிகளாக விளங்க, நாட்டுப்புற இலக்கியங்கள் சமுதாய வளர்ச்சியை க்காட்டும் கண்ணாடிகளாக
விளங்குகின்றன‘ என்று, பேராசிரியர் சு. சக்திவேல் தமது ‘நாட்டுப்புற இயல் ஆய்வு‘ என்னும் நூலில் கூறுகிறார்
நாட்டுப்புற இலக்கியங்க ள், மக்களின் நம்பிக்கைகள், தெய்வ வழிபாடுகள், திருவிழாக்கள், விளையாட்டுகள், மருத்துவ
முறைகள் முதலானவற்றை அறிந்துகொள்ள உதவுகின்றன. இவ்வகை இலக்கியங்களில்
பாடல்கள், கதைகள், கதைப்பாடல்க ள், பழமொழிகள், விடுகதைகள், புராணக்கதைகள் போன்றவையும் அடங்கும்
Comments
Post a Comment