அறிமுகம் :
பதின்மூன்று முதல் பதினாறாம் நூற்றாண்டு
முற்பகுதி வரையான காலத்தில் (1200-
1550) இஸ்லாமிய அரசு (தில்லி சுல்தா னியம்)
நிறுவப்பட்டது. இதன் விளைவாக இஸ்லாமிய
நிறுவனங்களும் இஸ்லாமியப் பண்பாடும்
இந்தியாவில் காலூன்றின. இக்காலகட்டத்தின்
வரலாற்றை வெவ்வேறு கண்ணோட்டத்தில்
வரலாற்றா சிரியர்கள் விளக்கியுள்ளனர். தனிப்பட்ட
சுல்தான்களின் சாதனைகளையும் தோ ல்விகளையும்
மட்டும் அடிப்படை யாகக் கொ ண்டு சுல்தா னிய
ஆட்சியை மதிப்பிடுவது வழக்கம். தனிநபரை
முன்வைத்து வழக்கமாக எழுதப்படும் வரலாற்றை
ஏற்க மறுக்கிற வரலாற்றாசிரியர்கள, சுல்தா னிய
ஆட்சி பொருளாதாரம், பண்பாட் டு வளர்ச்சிக்கு
பங்களித்துள்ளது என்றும், இதன் மூலம் இந்தியாவில்
ஒரு பன்முகப் பண்பாடு தோ ன்றுவதற்கு
வழிவகுத்தது என்றும் கூறுகின்றனர். வர்க்க
உறவுகளின் அடிப்படை யில் வரலாற்றைக் கணிக்கும்
வரலாற்றாசிரியர்களின் பார்வையில் மத்திய கால
அரசுகள், ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாகவே
செயல்பட்டன; எனவே , முகலாயர் ஆட்சிகளுடன்
ஒப்பிடுகையில் சுல்தா னிய ஆட்சியில் அமைப்பு
ரீதியான முன்னேற்றம் மிகக் குறைவு என்று
கருதுகின்றனர். இவ்வாறாக, சுல்தா னிய ஆட்சியின்
இயல்பை முடிவு செய்வதில் அறிஞர்களிடையே
இன்னமும் கருத்தொற்றுமை இல்லை .
இப்பாடம் இரு நோ க்கங்களைக்
கொண்டுள்ளது: (அ) சுல்தா னிய ஆட்சிக்கால அரசர்கள், நிகழ்வுகள், கருத்துகள், மக்களின் நிலை
குறித்தஒரு வழக்கமான கற்றலை மாணவர்களுக்கு
அறிமுகம் செய்வது. (ஆ) மாணவர்கள் அதன் சரி,
தவறுகளை சீர்தூக்கிப் பார்த்து, புதிய வினாக்களை
எழுப்புகிற விதத்தில் பாடத்தின் உள்ளட க்கத்தை
அமைத்தல்.
அரபியரின் வருகை: பின்னணி :
இந்தியாவுக்கும் அரபியாவுக்கும் இடையே
வணிகத் தொடர்புகள் ஏற்பட புவியியல் ரீதியான
அமைவிடம் உதவியது. இஸ்லாம் தோ ன்றுவதற்கு
முன்பே, கடல்வ ழி வணிகத்தில் அரபியர்
ஈடுபட்டிருந்தனர். இந்தியாவின் கிழக்கு, மேற் குக்
கடற்கரைகளுடன் கடல்வ ழி வணிகத் தொடர் புகள்
கொண்டிருந்தனர். இவர்கள் தென்னிந்தியாவின்
மேற்கு (மலபார்), கிழக்குக் (கோர மண்டல்/
சோழமண்டல) கடற்கரைகளில் குடியேறினர்.
மலபார் பெண்களைத் திருமணம் செய் துகொண்டு
அங்கேயே குடியமர்ந்த அரபியர், “மாப்பிள்ளை ”
என்று அழைக்கப்பட்டனர். பொ .ஆ. 712இல்
மேற்கொள்ளப்பட்ட அரபியப் படையெ டுப்பும் அதைத்
தொடர்ந்து நடந்த கஜினி, கோ ரி மன்னர்களின்
படையெடுப்புகளும் இங்கிருந்து கொள்ளை யடித்துச்
சென்ற செல்வத்தைக் கொண்டு மத்திய
ஆசியாவில் அவர்கள் ஆட்சியை வலுப்படுத்தும்
நோக்கம் கொண்டதாக இருந்தன. இதனுடன்,
கஜினி மாமுதுவும், முகமது கோ ரியும் நிகழ்த்திய
திடீர்த் தாக்குதல்கள், ஆக்கிரமிப்பாள ர்கள்,
ஆக்கிரமிப்புக்குள்ளா னவர்கள் என்ற உறவை
ஏற்படுத்தின. குரசன் நாட்டு (கிழக்கு ஈரான்) ஷா,
பின்னர்செங் கிஸ் கான் ஆகியோர் ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்ததும், வட இந்திய சுல்தான் ஆட்சிக்கு
ஆஃப்கானிஸ்தானுடனிருந்த உறவுகளைத்
துண்டித்தன. மங்கோலியப் படையெ டுப்புகள்,
கோரி சுல்தானிய ஆட்சியையும் கஜினியையும்
அழித்து உச், மற்றும் முல்தா னின் அரசர் சுல்தா ன்
நசுருதீன் குபாச்சா வின் (1206-28) கருவூலத்தைக்
காலியாக்கின. இவ்வாறாக, வட இந்தியாவில் தமது
செல்வாக்கை விரிவுபடுத்துகிற நல்வாய்ப் பு சுல்தா ன்
இல்துமிஷுக்கு இருந்தது. இது, தில்லியைத்
தலைநகராகக் கொண்டு இந்திய மாகாணங்களை
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஏறத்தா ழ நான்கு
நூற்றாண்டுகள் ஆள்வதற்கு வழிவகுத்தது.
இக்காலகட்டத்தை இஸ்லாமிய ஆட்சிக்
காலம் என்று விவரிப்பது வழக்கம். இருப்பினும்
மத்திய இந்தியாவை ஆட்சி செய்த இவர்கள்,
பல்வேறு பிரதே சங்களையும் இனங்களையும்
சேர்ந்தவர்களாவர்; அரபியரும், துருக்கியரும்,
பாரசீகத்தவரும், மத்திய ஆசியரும் இராணுவத்திலும்
நிர்வாகத்திலும் பங்கு கொண்டிருந்தனர்.
இல்துமிஷ் ஓர் இல்பா ரி துருக்கியர் (Ilbari Turk)
என்பதோடு அவரது இராணுவ அடிமைகள்
பலரும் புக்கார ா, சாமர்கண்ட், பாக்தாத் ஆகிய
இடங்களைச் சேர்ந்த வணிகர்களால் தில்லிக்கு
அழைத்துவரப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டோர்
துருக்கிய, மங்கோலிய வழி வந்தவர்களாவர்.
பிற இனங்களைச் சேர்ந்த அடிமைகளும்
(குறிப்பாக, மத்திய இந்தியாவின் மிஹிரிலிருந்து
சிறைப்பிடிக்கப்பட்ட ஹிந்து கான்) இருந்தனர்
என்றாலும், இல்துமிஷ் அவர்கள் அனைவருக்கும்
துருக்கியப் பெ யர்களையே சூட்டினார்.
இக்காலகட்ட (1206-1526)
தில்லி சுல்தா னியம் ஒரே மரபைச் சேர்ந்த
ஆட்சியாளர்களால் ஆளப்படவில்லை . அதன்
ஆட்சியாளர்கள் ஐந்து வெவ்வேறு வம்சங்களைச்
சேர்ந்தவர்கள் அ) அடிமை வம்சம் (1206-1290),
ஆ) கில்ஜி வம்சம் (1290-1320), இ) துக்ளக் வம்சம்
(1320-1414), ஈ) சையது வம்சம் (1414-1451), உ)
லோடி வம்சம் (1451-1526).
சிந்து மீது அரபுப் படையெடுப்பு :
ஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ்-பின்-யூசுஃப் ,
கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை
என்ற காரணம் காட்டி, சிந்து அரசர் தாகிரை
எதிர்த்து, தரை வழி, கடல் வழி என இரு தனித்தனி
படைப் பிரிவுகளை அனுப்பினார். ஆனால்
இரண்டு படைப் பிரிவுகளும் தோ ற்றன;அவற்றின்
தளபதிகளும் கொல்ல ப்பட்டனர். பிறகு ஹஜஜ்,
கலிபாவின் அனுமதியுடன் 6000 வலுவான
குதிரைப் படை, போர் த் தளவாடங்களைச்
சுமந்துவந்த ஒரு பெரிய ஒட்டகப் படை ஆகியவை
அடங்கிய ஒரு முழுமையான இராணுவத்தைப் 17
வயது நிரம்பிய தனது மருமகன் முகமது-பின்-
காசிம் தலைமையில் அனுப்பினார்.
முகமது-பின்-காசிம் :
காசிமின் படை, பிராமணாபாத் வந்து
சேர்ந்த நேரத்தில் சிந்துப் பகுதியில் தாகிர் ஆட்சி
செய்துகொண்டிருந்தார் . பிராமணர்கள் அதிகம்
வாழ்ந்த இப்பகுதியை தாகிரின் முன்னோர்கள்
பௌத்த அரச வம்சத்திடமிருந்து கைப்பற்றி ஆட்சி
நடத்திவந்தனர். ராணுவம் உள்ளிட்ட நிர்வாகப்
பதவிகளில் பிராமணர்களே இருந்தனர். இதனால்
அந்நகரம் பிராமணாபாத் எனப்பட்டது. அரசர் தாகிர் அவரது முதன்மை அமைச்சர் ஆகியோ ருக்கிடையே
அப்போது கருத்து மோ தல் ஏற்பட்டிருந்தது. முகமது
காசிம் படையெடுத்தபோ து, முதன்மை அமைச்சர்
அவருக்குத் துரோகம் இழைத்த தால் தாகிருடைய
படையின் ஒரு பகுதி விலகிக்கொண்டது. மக்களும்
மன்னர் மீது அதிருப்தி அடைந்திருந்த சூழலில்,
முகமது-பின்-காசிம், பிராமணாபாத்தை எளிதில்
கைப்பற்றினார். தாகிரை விரட்டிச் சென்ற காசிம்
ரோஹ்ரியில் நிகழ்ந்த ஒரு மோ தலில் அவரைக்
கொன்றார். அதன் பிறகு காசிமின் படை, சிந்துவின்
தேபல் துறைமுக நகரத்தை அழித்து மூன்று
நாள்கள் கொள்ளை யடித்தது. சிந்து மக்களைச்
சரணடையுமாறு காசிம் கேட்டுக்கொண்டார் ; அவர்கள்
தத்தமது மதத்தைப் பின்பற் றுவதற்கு முழுப் பாதுகாப்பு
தருவதாகவும் வாக்களித்தார் . தான் கொள்ளை
அடித்ததில் வழக்கமான ஐந்தில் ஒரு பங்கைக்
கலிபாவுக்கு அனுப்பிவைத்த காசிம், எஞ்சியதைத்
தனது படைவீரர்களுக்குப் பிரித்துக் கொ டுத்தார் .
அரேபியரின் சிந்து படையெ டுப்பானது ஒரு
"விளைவுகளற்ற வெற்றியாகவே" குறிப்பிடப்படுகிறது.
ஏனெனில் இது நாட்டின் எல்லை ப்பகுதியை
மட்டுமே தொட்டதோ டு காசிமின் படையெ டுப்பிற்குப்
பின்னர் ஏறத்தா ழ மூன்று நூற்றாண்டுகள் பல்வேறு
முற்றுகைகள் இன்றி அமைதியாக இருந்தது.
கஜினி மாமுது :
இதனிடையே, மத்திய ஆசியாவிலிருந்த
அரபியப் பேரர சு உடைந்து, அதன் பல
மாகாணங்கள், தங்களைச் சுதந்திர அரசுகளாக
அறிவித்துக் கொண ்டன. இவற்றில் ஒன்றுதான்
சாமானித் (Shamanid) பேரர சு. பிறகு இதுவும்
உடைந்து, பல சுதந்திர அரசுகள் தோ ன்றின.
சாமானித் பேரர சில் குரசன் ஆளுநராக இருந்த
துருக்கிய அடிமை அல்ப்டிஜின், 963இல் கிழக்கு
ஆப்கானிஸ்தானிலிருந்த கஜினி நகரைக் கைப்பற்றி,
ஒரு சுதந்திரஅரசை நிறுவினார். பிறகு விரைவிலேயே
அல்ப்டிஜின் இறந்துபோ னார். தொடர் ந்து அவரது
வாரிசாக வந்த மூவரின் தோ ல்வியால், உயர்குடிகள்
சபுக்தஜின்னுக்கு முடிசூட்டினர்.
இந்தியாவில் இஸ்லாமிய அரசை தெற் கு
நோக்கி விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை
சபுக்தஜின் தொடங் கிவைத்தார் . ஆப்கானிஸ்தான்
ஷாஹி அரசர் ஜெயபாலரைத் தோ ற்கடித்து, அம்மாகாணத்தில் தனது மூத்த மகன் மாமுதை
ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். 997இல்
சபுக்தஜின் இறந்தபோ து, கஜினி மாமுது குரசனில்
இருந்தார். இதனால், சபுக்தஜினின் இளைய மகன்
இஸ்மாயில் வாரிசாக அறிவிக்கப்பட்டார் . பிறகு,
தனது சகோதரன் இஸ்மாயிலை த் தோ ற்கடித்து
இருபத்தேழு வயது கஜினி மாமுது ஆட்சியில்
அமர்ந்தார். கஜினி மாமுது ஆட்சிப் பொ றுப்பு ஏற்றதை ,
ஒரு பதவியேற் பு அங்கியை அளித்தும் யாமினி-
உத்-தவுலா (’பேரர சின் வலது கை’) என்ற பட்டத்தை
வழங்கியும் கலிபா அவரை அங்கீகரித்தார் .
கஜினி மாமுதின் தாக்குதல்கள் :
32 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கஜினி மாமுது,
பதினேழு முறை இந்தியா மீது தாக்குதல்கள ை
நடத்தினார். செல்வக் களஞ்சியமாக இருந்த இந்துக்
கோவில்களில் கொள்ளை அடிப்பதே முதன்மை
நோக்கம். இருப்பினும் கோ வில்கள ை இடிப்பது,
சிலைகளைத் தகர்ப்பது ஆகிய நடவடிக்கைகளும்
நடந்தன. இதை கஜினி மாமுதுவின் படைவீரர்கள்,
தங்களது கடவுளின் வெல்ல ப்படமுடியாத ஆற்றலின்
விளைவாகக் கண்டனர். ‘பிற மதத்தினரை’ வெட்டிக்
கொல்வதிலும், அவர்களது வழிபாட்டுத் தலங்களை
அழிப்பதிலும் கஜினி மாமுதுவின் படையினரின்
மதப்பற்று வெளிப்பட்டது. எனினும் மக்களை
இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதற்கு அவர்கள் எந்த
முயற்சியும் செய்யவில்லை . தங்களது உயிரையும்
உடைமைகளையும் காத்துக்கொள்வ தற்காக
இஸ்லாமியராக மாறியவர்கள்கூட கஜினி
மாமுதுவின் படையெ டுப்பு முடிவுக்கு வந்ததும்
தங்களின் மதத்துக்கே திரும்பினர்.
ஷாஹி அரசன் அனந்தபாலரைத்
தோற்கடித்த கஜினி மாமுது, பிறகு பஞ்சாபைக்
கடந்து கங்கைச் சமவெளிக்குள் நெடுந்தொலை வு
உள்ளே வந்தார் ; கன்னோசி சென்றடை வதற்கு
முன்னர் மதுராவைச் சூறையாடினார். தொடர் ந்து
கஜினி மாமுது, 1025இல் குஜராத் கடற்கரையிலுள்ள
கோவில் நகரமான சோ மநாதபுரத்தின் மீது
படையெடுத்துக் கொள்ளை யடித்தார் . சோ மநாதபுரக்
கோவில் கொள்ளை பற்றிய ஆங்கிலேய காலனிய,
மற்றும் இந்திய தேசியவாதிகளின் வரலாற்றியல்கள்
மாமுதுவைக் கொடும் படையெ டுப்பாளர ாக
சித்தரிக்கின்றன. கஜினியின் இக்கொள்ளை களை,
மத ஆதிக்கம் சார்ந்தவை என்று கூறுவதைவிட
பெரிதும் அரசியல், பொ ருளாதாரத் தன்மை
கொண்டவை என்பதே பொ ருந்தும் எனப் பல
வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். மத்திய கால
இந்தியாவில் வழிபாட்டிடங்களைச் சூறையாடுவதும்
கடவுள் திருவுருவங்களை அழிப்பதும் பேரர சின்
ஏகபோக அதிகாரத்தின் வெளிப்பாடுகளாகவே
கருதப்பட்டன. கஜினி மாமுதின் ராணுவத் தாக்குதல்களும் அவரது செயல்களும்
அப்படிப்பட்டவையே . மேலும், கஜினி மாமுது
கொள்ளை அடித்தது, அவரது பெரும் படையைப்
பராமரிக்கிற செலவை ஈடுசெய் யும் தேவை யினால்
ஏற்பட்டது. துருக்கியப் படை என்பது நிரந்தர மான,
தொழில்நேர்த்திப் பெற்ற படையாகும். அது
தெரிந்தெடுத்து தகுதி உயர்த்தப்பட்ட வில்லா ளிகள்
பிரிவை மையமாகக் கொண்டு கட்டப்பட்டது;
இவர்கள் அனைவரும் விலைக் கு வாங்கப்பட்ட
அடிமைகளாவர்; இவர்களுக்குப் பயிற்சியளித்து
ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. இந்தியாவின் இந்து
அரசாட்சிகளிலிருந்தும் ஈரானின் இஸ்லாமிய
அரசாட்சிகளிலிருந்தும் அடிக்கப்பட்டப் போர்க்
கொள்ளையிலிருந்து இவர்களுக்கு ஊதியம்
அளிக்கப்பட்டது. இந்தப் போர்க் கொள்ளை களில்
கைப்பற்றப்பட்ட செல்வ ம் குறித்துப் பாரசீகக்
குறிப்புகள் மிகைப்படுத்திக் கூறுகின்றன.
எடுத்துக்காட்டா க, 1029இல் ரேய் என்ற ஈரானிய
நகரத்தைச் சூறையாடியதில் கஜினி மாமுதுவுக்கு
500,000 தினார்கள் மதிப்புள்ள ஆபரணங்கள்,
நாணயங்களாக 260,000 தினார்கள், 30,000
தினார்கள் மதிப்புடைய தங்க, வெள்ளிப்
பாத்திரங்கள் கிடைத்த தாகக் கூறப்படுகிறது.
இது போலவே, சோ மநாதபுரத்தை ச் (1025)
சூறையாடியதில், 2 கோ டி தினார் மதிப்புடைய
கொள்ளைப் பொ ருள்கள் கஜினி மாமுதுவுக்குக்
கிடைத்ததாக நம்பப்படுகிறது. வரலாற்றறிஞர்
ரோமிலா தாப்பர், “சோ மநாதபுரப் படையெ டுப்பு
குறித்த தகவல்கள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து
அரபு மரபுவழிப் பதிவுகளில் காணப்படுகின்றன.
ஆனால், இதன் சமகால சமண மதச் சான்றுகள்
இதனை உறுதிப்படுத்தவில்லை ” என்கிறார்.
“இத்தகைய திடீர் இராணுவத் தாக்குதல்களும்
கொள்ளையடிப்புகளும் பொ ருளாதார மற்றும்
மத உருவ எதிர்ப்புத் தன்மை கொண்டதே
தவிர வகுப்புவாதத் தன்மை கொண்டதல்ல.
சமகாலப் போர்முறையிலிருந்து பிரிக்க முடியாத
அழிவுகளையும் மத்திய கால அரசர்களின்
வழக்கமான கொள்ளை யிடும் தன்மையை யுமே
அவை வெளிப்படுத்துகின்றன” என்கிறார். கஜினி மாமுது இறந்த பிறகு கஜினி
வம்சத்தில் உறவினர்களிடையே அரச வாரிசுரிமை
தொடர்பாக முடிவற்ற மோதல்கள் நிகழ்ந்தன.
இருப்பினும், 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி
புரிந்த சுல்தான் இப்ராஹிம், 17 ஆண்டுகள் ஆட்சி புரிந்த
அவரது மகன் மசூத் போன்ற சில விதிவிலக்குகளும்
இருந்தனர். வடக்கே கோரிகளிடமிருந்தும் மேற்கே
செலிஜுக் துருக்கியரிடமிருந்தும் கஜினி வம்ச
ஆட்சிக்கு நிரந்தர அபாயம் இருந்து வந்தது. இது
அரசாட்சிக்குப் பேரழிவை ஏற்படுத்தியது. இதனால்,
கஜினி வம்சத்தின் பிற்கால ஆட்சியாளர்கள் லாகூர்
பகுதியில் மட்டுமே அதிகாரம் செலுத்த முடிந்தது;
இதுவும்கூட முப்பது ஆண்டுகளே நீடித்தது. 1186இல்
கோரி அரசர் மொய்சுதீன் முகமது என்கிற கோரி
முகமது, பஞ்சாப் மீது படையெடுத்து லாகூரைக்
கைப்பற்றினார். கஜினி வம்சத்தின் கடைசி
அரசர் குரவ் ஷா, 1192இல் கைது செய்யப்பட்டுக்
கொல்லப்பட்டார். அவரது மரணத்துடன் கஜினி அரசு
முடிவுக்கு வந்தது.
பக்தியும் கலைகளும் :
கிராமிய நடனங்களின் தோ ற்றம் பெற்று
கோவில் நடனங்களில் ஆடற்கலை ஒழுங்குகள்
மாறி மதம் சார்ந்த விஷயங்களைக் கருவாகக்
கொண்டு இறுதிநிலையை எட்டியது. பல்ல வர்கா லம்
முதலாகப் பயிற்சியளிக்கப்பட்ட நடனக்
கலைஞர்களைக் கொண்ட குழுக்கள் செல்வச்
செழிப்பு மிக்க கோ வில்களா ல் பராமரிக்கப்பட்டன.
புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவற்றில் இடம்
பெற்ற முக்கியக் காட்சிகள் கோ வில் சுவர்களில்
சிற்பங்களாகச் செதுக்கப்பட்டன. கல்லிலும்
செம்பிலும் சிலைகளாக வடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இசை, நடனம் போன்ற
கவின்கலைகளை ஊக்குவிக்கும் நோக்கத் தில்
கலைஞர்கள் அரசின் ஆதரவுடன் கோ வில்களோ டு
இணைக்கப்பட்டனர். மதப் பாடல்க ளும் இசையும்
மதத் தொண்டர்களா ல் பிரபலமாயின. கோ வில்
விழாக்களின்போ து இப்பாடல்கள ைப் பாடுவது
ஒரு முறையாகவே ஆனது. யாழ் அடிக்கடி
பயன்படுத்தப்பட்ட இசைக் கருவியாக இருந்திருக்க
வேண்டும். பொ.ஆ. ஐந்தா ம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் யாழுக்குப் பதிலாக வீணை
பயன்பாட்டிற்கு வந்தது. இரு நூற்றாண்டுகளுக்குப்
பின்னர் வீணையானது சிறிய சுரை வடிவிலான
அடிபாகத்தையும் நீண்ட வடிவிலான விரலால்
மீட்டுவதற்கான தந்திகள் கொண்ட பகுதியையும்
கொண்டதாக உருவெடுத்தது. பெரியாழ்வார். கண்ணனின் குழந்தைப் பருவமே
அவருடையபாடல்க ளின் கருவாயிருந்தது.
ஆண்டாள் பாடல்க ளின் பாட்டுடைத் தலைவனும்
கண்ணனே. ஆண்டா ளின் பாடல்க ள் அவர்
கண்ணனின் மீது கொண்டிருந்த காதலை
வெளிப்படுத்துகின்றன. நம்மாழ்வா ர் ஆழ்வார்க ளில்
தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். அவர்
இன்றைய தூத்துக்குடி மாவட்டத் திலுள்ள
குருகூரைச் (ஆழ்வா ர்திருநகரி) சேர்ந்த வர்.
திருவாய்மொழி உட்பட நான்கு நூல்கள ை
அவர் எழுதியுள்ளா ர். அவருடைய பாடல்க ள்
நான்கு வேதங்களின் சாரத்தை வடித்தெடுத்து
எழுதப்பட்டதென்ப து வைண வ நம்பிக்கை.
பன்னிரண்டாம் நூற்றாண்டு முதலாக வைண வப்
பாடல்களுக்கு விரிவான புலமையுடன் கூடிய
விளக்கவுரைகள் எழுதப்பட்டன.
Comments
Post a Comment