அறிமுகம் :
இந்தியாவை முன்னைக் காட்டிலும் அதிகமாகச்
சுரண்டுவதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும்
இந்திய அரசியலை, பொருளாதாரத்தை
ஒருமுகப்படுத்துவதில் ஆங்கிலேயர் வெற்றி
பெற்றனர். இவ்வெற்றி தவிர்க்க இயலாத வகையில்
தேசிய உணர்வின் வளர்ச்சிக்கும், தேசிய இயக்கம்
தோன்றுவதற்கும் இட்டுச் சென்றது. பத்தொன்பதாம்
நூற்றாண்டில் சமூகச் சீர்திருத்தங்களுக்காக
மேற்கொள்ளப்பட்ட இயக்கங்கள், போராட்டங்கள்
அவற்றைத் தொடர்ந்து மேலைக்கல்வி பயின்ற
இந்தியர்கள், குடிமை உரிமைகளுக்காக முன்வைத்த
வேண்டுகோள்கள், சமர்ப்பித்த மனுக்கள்
ஆகியவற்றை ஆரம்பப் புள்ளிகளாகக் கொண்டு
இந்திய தேசிய இயக்கத்தின் வரலா று
தொடங்குகிறது. கி.பி. (பொ .ஆ) 1915இல் மோகன்தாஸ்
கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து
இந்தியா திரும்பி, 1919இல் இந்திய தேசிய
இயக்கத்திற்கு அவர் தலைமைேயற்றதிலிருந்து
இந்திய தேசியம் மிகப்பெ ரும் மக்கள் இயக்கமாக
மாறியது காந்தியடிகளுக்கு முன்னர் தாதாபாய்
நௌரோஜி, கோபால கிருஷ்ண கோகலே, பிபின்
சந்திர பால், லாலா லஜபதி ராய், பால கங்காதர
திலகர் போன்றோரும், ஏனையோரும் காலனியச்
சுரண்டல் குறித்தும், மக்களின் தேசிய அடையாளம்
பற்றியும் இந்தியர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கான
முன் முயற்சிகளை மேற்கொண்டனர் . இவ்வியலில்
இந்திய தேசிய இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி
ஆகியவற்றின் வழித்தடத்தைக் கண்டறிவதோடு,
தொடக்ககாலத் தலைவர்கள் என்றறியப்பட்ட
இவர்களின் பங்களிப்பின் மீதும் கவனம்
செலுத்துகிறோம்.
சமூகப் பொருளாதாரப் பின்னனி :
இந்தியாவின் மரபு சார்ந்த நிலவுடைமை
முறையை ஆங்கிலேயர் சிதைத்தனர்.
ஆங்கிலேயர்க்கு முந்தைய காலங்களில்
நிலவரியானது, விவசாயிகளுடன் விளைச்சலைப்
பகிர்ந்து கொள்வதாய் அமைந்திருந்தது. ஆனால்,
ஆங்கிலேயர் பயிர்கள் விளையாமல் போவது,
விலைகளில் ஏற்படும் வீழ்ச்சி, வறட்சி, பஞ்சம்
போன்ற நிகழ்வுகளைக் கணக்கில் கொள்ளாமல்
நிலவரியைப் பணமாகக் கணக்கிட்டு நிர்ணயம்
செய்தனர். மேலும் கடனை அடைப்பதற்காக
விற்பனை செய்வது என்பதும் பழக்கமானது.
வட்டிக்குக்கடன் கொடுப்பவர்களை
நிலவுரிமையாளர்களுக்கு முன்பணம் வழங்க
ஊக்குவித்து, கடன் கொடுத்தவர்கள் கடன்
வாங்கியவரின் சொத்துகளை இதன்மூலம்
அபகரிக்க அனைத்து விதமான சூழ்ச்சிகளையும்,
மோசடிகளையும் மேற்கொண்டனர். கிழக்கிந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய
நில நிர்வாகக் கொள்கையினால் மேலும் இரண்டு
முக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டன. நிலத்தை
விற்பனைப் பொருளாக்குவது, இந்தியாவில்
வேளாண்மையை வணிகமயமாக்குவது ஆகிய
இரண்டையும் அவர்கள் நிறுவனமாகவே
ஆக்கினர். ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு
இந்தியாவில் நிலத்தில் தனிச் சொத்துரிமை
என்பது இல்லை. தற்போது நிலம் ஒரு சரக்காக
மாற்றப்பட்டு விற்பது அல்லது வாங்குவதன்
வழியாக நபர்களிடையே கைமாறியது. மேலும்
வரி/குத்தகை செலுத்தப்படவில்லை என்பதற்காக
அரசு நிர்வாகம் நில உரிமையாளர்களிடமிருந்து
நிலங்களைப் பறிமுதல் செய்தது. இந்நிலங்கள்
மற்றவர்களுக்கு ஏலத்திற்கு விடப்பட்டன.
இம்முறையால் ஒரு புதுவகையான நிலப்பிரபுக்கள்
வர்க்கம் உருவானது. தங்கள் நிலங்களில்
வாழாமல் நகரங்களில் வாழ்ந்த இவர்கள்
குத்தகையை மட்டும் கறந்து கொண்டனர். மரபு
சார்ந்த வேளாண் முறையில் விவசாயிகள்
பெரும்பாலும் தங்கள் நுகர்வுப் பயன்பாட்டிற்குத்
தேவையானதை மட்டுமே உற்பத்தி செய்தனர்.
புதிய நிலவருவாய் முறைகள் அறிமுகமான
பின்னர் அவர்கள் சந்தைக்குத் தேவையானதை
மட்டுமே உற்பத்தி செய்தனர். நிலம் விற்பனைச்சரக்காக மாற்றப்பட்டதும்
வேளாண்மை வணிகமயமாக்கப்பட்டதும்
விவசாயிகளின் வாழ்க்கை நிலையில் எந்த ஒரமேுன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை; மாறாக,
விவசாயிகளிடையே மனநிறைவின்மையை
ஏற்படுத்தி அவர்களை அமைதி இழந்தவர்களாக,
கட்டுப்பாடுகளை மீறுபவர்களாக ஆக்கியது. இந்த
விவசாயிகள் பின்னர் ஏகாதிபத்தியவாதிகளுக்கும்
அவர்களின் கூட்டாளிகளுக்கும் எதிராகத் திரும்பினர். இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத்
தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக்
கொள்கையானது, இந்தியாவில் தொழில்கள்
நீக்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தியது.
இப்போக்கு முதல் உலகப் போர் தொடங்கும் வரை
நீடித்தது. ஆங்கில அரசு கட்டுப்பாடுகளற்ற சுதந்திர
வணிகம் (laissez faire) எனும் கொள்கையைப்
பின்பற்றியது. பருத்தி, சணல், பட்டு ஆகிய கச்சாப்
பொருட்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு
எடுத்துச் செல்லப்பட்டன. இக்கச்சாப்
பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டப்
பொருட்கள் மீண்டும் இந்தியச் சந்தைக்கு அனுப்பி
வைக்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சியின்
உதவியுடன் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்டப்
பொருட்கள் இந்தியச் சந்தைகளில் மலைபோல்
குவிந்தன. இந்தியக் கைத்தறி நெசவுத்
துணிகளைக் காட்டிலும் இறக்குமதி செய்யப்பட்டத்
துணிகள் குறைந்த விலையில் கிடைத்தன.
ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பாக தனது
கைத்தறித் துணிகளுக்கா கவும் கைவினைப்
பொருட்களுக்காகவும் இந்தியா புகழ் பெற்றிருந்தது.
உலகச் சந்தையிலும் நல்ல மதிப்பை ப்
பெற்றிருந்தது. இருந்த போதிலும் காலனியாதிக்கக்
கொள்கையின் விளைவாக இந்தியக் கைத்தறிப்
பொருட்களும் கைவினைப் பொருட்களும் தங்கள்
உள்நாட்டு, பன்னாட்டுச் சந்தைகளைப் படிப்படியாக
இழந்தன. இங்கிலாந்துப் பொருட்கள் இறக்குமதி
செய்யப்பட்டதால் இந்தியாவின் நெசவாளர்,
பருத்தியிழை ஆடை தயாரிப்போர், தச்சர், கொல்லர்,
காலணிகள் தயாரிப்போர் ஆகியோர்
வேலையற்றோர் ஆயினர். கச்சாப் பொருட்களைக்
கொள்முதல் செய்வதற்கான இடமாக இந்தியா
மாறியது. இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத்
தேவையான தொழிற்சாலைப் பயிர்களான அவுரி
(Indigo) மற்றும் ஏனையப் பயிர்களை உற்பத்தி
செய்யும்படி இந்திய விவசாயிகள்
வற்புறுத்தப்பட்டனர். இம்மாற்றத்தினால் பல
நூற்றாண்டுகளாக இந்தியாவின் மூலாதாரமாக
விளங்கிய வேளாண்மை பாதிக்கப்பட்டு உணவுப்
பற்றாக்குறைக்கு இட்டுச் சென்றன 1859-60இல் வங்காளத்தில் நடைபெற்ற
இண்டிகோ கலகம் கம்பெனியின் அடக்குமுறைக்
கொள்கைக்கு எதிரான இந்திய விவசாயிகளின்
ஒரு எதிர்வினையாகும். பெரும்பாலும்
ஐரோப்பியர்களுக்கு ச் சொந்த மாயிருந்த
நிலங்களில் இந்தியக் குத்தகை விவசாயிகள்
அவுரியைப் பயிரிடக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
துணிகளுக்கு சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இச்செடிக்கு ஐரோப்பாவில்
பெரும்தேவை ஏற்பட்டிருந்தது. சிறியதோர்
தொகையை முன்பணமாகப் பெற்றுக்
கொள்ளவும் சாதகமற்ற ஒப்பந்தங்களை ஏற்றுக்
கொள்ளவும் இந்திய விவசாயிகள்
கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரு விவசாயி
இவ்வொப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளும்
பட்சத்தில் அவர் தனது நிலத்தில் அவுரியை
மட்டுமே பயிர் செய்தாக வேண்டும். அவுரிக்குப்
பண்ணையார் கொடுக்கும் விலையோ சந்தை
விலையைவிடக் குறைவாக இருந்தது. இதனால்
பல சமயங்களில் தங்கள் நிலங்களுக்கான
வரிபாக்கியைக்கூட விவசாயிகளால் செலுத்த
இயலாத நிலை ஏற்பட்டது. ஆட்சியாளர்கள்
தங்களது குறைகளை நிவர்த்தி செய்வர் என்ற
நம்பிக்கையில் விவசாயிகள் அதிகாரிகளுக்குப்
பல மனுக்களை எழுதினர். அமைதியான
வழிகளில் தங்களின் எதிர்ப்புகளைத்
தெரிவித்தனர். இவர்களின் வேண்டுகோள்கள்
ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில்
கல்வி :
காலனிய காலத்திற்கு முந்தைய
இந்தியாவில் கல்வியானது சாதி, மத
அடிப்படையில் துண்டுபட்டிருந்தது.
இந்துக்களிடையே, பிராமணர்கள் உயர்நிலை
சார்ந்த சமய, தத்துவ அறிவினைப் பெறும்
தனியுரிமையைப் பெற்றிருந்தனர். கல்வியைத்
தங்களின் முற்றுரிமையாக்கிக் கொண்ட
அவர்கள் பிரதானமாக அர்ச்சகர்களாகவும்
ஆசிரியர்களாகவும் சமூகத்தில் அங்கம்
வகித்தனர். வித்யாலயங்கள், சதுஸ்பதிகள்
என்றழைக்கப்பட்ட உயர்தரக் கல்விக்
கூடங்களில் கல்வி பயின்றனர். புனிதமான
மொழி எனக் கருதப்பட்ட சமஸ்கிருத மொழி
வழியில் அவர்கள் கல்வி கற்றனர். தொழில் நுட்ப
அறிவானது - குறிப்பாகக் கட்டடக்கலை,
உலோகவியல் சார்ந்த அறிவுத்திறனானது
பரம்பரையாக ஒரு சந்ததியிடமிருந்து
மற்றொன்றுக்கு கைமாற்றம் செய்யப்பட்டது.
இம்முறை புதிய முயற்சிகளுக்குத்
தடையாயிருந்தது. இம்முறையிலிருந்த
மற்றுமொரு குறைபாடு பெண்களும்
ஒடுக்கப்பட்டோரும் ஏனைய ஏழை மக்களும்
கல்வியறிவு பெறுவதிலிருந்து தடை
செய்யப்பட்டதாகும். கல்வி கற்பதில் மனப்பாட
முறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. புதிய
முயற்சிகளுக்கு மற்றுமொரு தடைக்கல்லாயிற்று. இயற்றியது. இந்தியாவில் அறிமுகம் செய்யவேண்டிய
ஆங்கிலக் கல்விமுறையை வடிவமைத்தவர்
டி.பி. மெக்காலே ஆவார். இதன் விளைவாகக்
காலனிய நிர்வாகம், ஆங்கில நவீனக் கல்வியை
வழங்கும் பள்ளிகளையும், கல்லூரிகளையும்
பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில்
தொடங்கிற்று. 1857இல் பம்பாய், சென்னை, கல்கத்தா
ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள்
நிறுவப்பட்டன. இந்தியர்களில் படித்த வகுப்பினர்
ஆங்கிலேயர்க்கு விசுவாசமாக இருப்பதோடு ஆங்கில
அரசின் தூண்களாகவும் திகழ்வர் என காலனியரசு
எதிர்பார்த்தது
கற்றறிந்த மத்தியதர வகுப்பினரின் பங்கு :
பொருளாதார நிர்வாக மாற்றங்கள் ஒருபுறமும்
மேற்கத்தியக் கல்வியின் வளர்ச்சி மறுபுறத்திலுமாக
புதிய சமூக வர்க்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு
இடமளித்தன. இப்புதிய வர்க்கங்களின்
இடையேயிருந்து ஒரு நவீன இந்திய கற்றறிந்தோர்
பிரிவு உருவானது. ஆங்கிலேயர்களால்
உருவாக்கப்பட்ட இந்நவீன சமூக வர்க்கம்
இந்தியாவின் வணிகவர்த்தகச் சமூகங்கள்,
நிலப்பிரபுக்கள், லேவாதேவி செய்வோர் (வட்டிக்குப்
பணத்தைக் கடன் கொடுப்போர்) ஆங்கிலம் பயின்ற
ஏகாதிபத்திய அரசின் துணை நிர்வாகப் பிரிவுகளில்
பணியமர்த்தப்பட்டோர், மருத்துவர்கள்,
வழக்கறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாய்
இருந்தது. இவர்கள் தொடக்க காலத்தில் ஆங்கிலேய நிர்வாகத்துடன் இணக்கமான அணுகுமுறையைக்
கொண்டிருந்தனர். இருந்தபோதிலும் தங்களது
விருப்பங்கள் சுதந்திர இந்தியாவில் மட்டுமே
நிறைவேறுமென்பதை இவர்கள் உணர்ந்து
கொண்டனர். மேற்சொல்லப்பட்டவர்க்கங்களைச் சேர்ந்த
மக்கள் ஏனைய மக்களிடையே நாட்டுப்பற்றை
வளர்த்தெடுப்பதில் சிறப்பான ப் பங்காற்றினர். தேசிய
அளவில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுவதற்கு
முன்னர் இருந்த பல அமைப்புகளில் இவ்வகுப்புகளைச்
சேர்ந்தோரின் உணர்வுகள் தெளிவாகப்
பேசப்பட்டதைக் காண முடிகிறது நவீன இந்தியக் கற்றறிந்தோர் பிரிவைச்
சேர்ந்த ராஜா ராம்மோகன் ராய், ஈஸ்வர சந்திர
வித்யாசாகர், சுவாமி விவேகானந்தர், அரவிந்த
கோஷ், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய்
நௌரோஜி, பெரோஸ்ஷா மேத்தா, சுரேந்திரநாத்
பானர்ஜி ஆகியோரும் மற்றோரும் இந்திய அரசியல்,
சமுதாய, மத இயக்கங்களுக்குத் தலைமையேற்றனர்.
மேலைநாட்டு அறிஞர்களான ஜான்லாக், ஜேம்ஸ்
ஸ்டூவர்ட் மில், மாஜினி, கரிபால்டி, ரூஸோ,
தாமஸ் பெயின், மார்க்ஸ் ஆகியோராலும்
மற்றவர்களாலும் கூறப்பட்ட தேசியம், மக்களாட்சி,
சோசலிசம் போன்ற தத்துவக் கருத்துக்களைக்
கற்றறிந்த இந்தியர்கள் அறிந்து கொண்டனர்.
சுதந்திரமான பத்திரிகை உரிமை,
பொதுக்கூட்டங்களில் சுதந்திரமாகப் பேசும் உரிமை,
சுதந்திரமாக ஒன்று கூடும் உரிமை ஆகியன
இயற்கையான இயல்பான உரிமைகளாகும்.
கற்றறிந்த இந்தியரின் ஐரோப்பியக் கூட்டாளிகள்
இந்த உரிமைகளைத் தங்கள் நெஞ்சுக்கு
நெருக்கமாக வைத்திருந்தனர்; அதை அவ்வாறே
கடைபிடிக்க இவர்களும் விரும்பினர்; பல
அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அங்கே மக்கள்
ஒருவரையொருவர் சந்தித்துத் தங்களைப் பாதிக்கும்
அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இச்செயல்
போக்குவரத்து வசதியின் மிகப்பெரும் விரிவாக்கம்,
இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட அஞ்சல், தந்தி
சேவைகள் ஆகியன இதுபோன்ற விவாதங்கள்
தேசிய அளவில் நடைபெறுவதையும்
சாத்தியமாக்கின
சமயப் பரப்பாளர்களின் பங்களிப்பு :
இந்திய மக்களிடையே நவீனக் கல்வியைக்
கற்றுத்தர மேற்கொள்ளப்பட்ட தொடக்க கால
முயற்சிகளிலான்று கிறித்தவ சமயப்பரப்பு
நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டதாகும்.
மதமாற்ற ஆர்வத்தால் தூண்டப்பெற்ற அவர்கள்
இந்துக்களிடையே நடைமுறையிலிருந்த பலகடவுள்
நம்பிக்கையையும் சாதிய ஏற்ற தாழ்வுகளையும்
தாக்கலாயினர். நவீன மதச்சார்பற்ற கல்வியின் மூலமாக கிறித்தவத்தைப் போதிப்பது சமயப் பரப்பு
நிறுவனங்கள் கைக்கொண்ட ஒரு முறையாகும்.
மரபு சார்ந்த கல்வி முறையில், கல்வி கற்பதற்கான
உரிமைகள் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களும்,
விளிம்பு நிலை மக்களும் கல்வி பெறுவதற்கான
வாய்ப்பை இவை வழங்கின. மக்களில் மிகமிகச்
சிறிய பகுதியினரே கிறித்தவ மதத்திற்கு மாறினர்.
ஆனால் கிறித்தவம் விடுத்த சவால்கள் பல்வேறு
சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் தோன்ற
வழிவகை செய்தது. அரசியல் செயல்பாடுகளில் மக்களை
ஈடுபடுத்தும் முன்னர் சமூகத்தை சீர்திருத்த
வேண்டியதை ஆங்கிலக் கல்வியைக் கற்றறிந்தோர்
உணர்ந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில்
நடைபெற்ற சீர்திருத்த இயக்கங்களைப்
பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1. ராஜா
ராம்மோகன் ராயால் நிறுவப்பெற்ற பிரம்ம சமாஜம்,
டாக்டர் ஆத்மராம் பாண்டுரங் உருவாக்கிய
பிரார்த்தனை சமாஜம், சையத் அகமது கானால்
பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அலிகார் இயக்கம்
ஆகிய சீர்திருத்த இயக்கங்கள். 2. மீட்பு
இயக்கங்களான ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண
இயக்கம், தியோபந்த் இயக்கங்கள். 3. புனேயில்
ஜோதிபா பூலே, கேரளாவில் நாராயண குரு,
அய்யன்காளி, தமிழ்நாட்டில் இராமலிங்க அடிகள்,
வைகுண்ட சுவாமிகள் பின்னர் அயோத்தி தாசர்
ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட சமூக
இயக்கங்கள் குறித்தும் இவ்வனைத்து
சீர்திருத்தவாதிகள் குறித்தும் அவர்களின் பங்களிப்பு
குறித்தும் பதினொன்றா ம் வகுப்பு பாடப்புத்தகத்தில்
விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சீர்திருத்தவாதிகள்
காரணத்தை அடிப்படையாகக் கொண்டு கற்றறிந்த
மேலை நாட்டினர் முன்வைத்த சவால்களைப்
எதிர்கொண்டு பதில் கூறினர்.
இச்சீர்திருத்தவாதிகளால் தூண்டப்பட்ட மீள்
சிந்தனையின் விளைவாகவே இந்திய தேசிய
உணர்வு உதயமானது. 1828இல் ராஜா ராம்மோகன ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். அதனைத்
தொடர்ந்து ஏனைய சமூகப் பண்பாட்டு
அமைப்புகளான பிரார்த்தன சமாஜம் (1867) ஆரிய
சமாஜம் (1875) ஆகியவை நிறுவப்பெற்றன. ராயின்
முன் முயற்சி கேசவ் சந்திர சென், ஈஸ்வர சந்திர
வித்யாசாகர் போன்ற சீர்திருத்தவாதிகளால்
தொடரப்பட்டன. சதி ஒழிப்பு, குழந்தைத் திருமண
ஒழிப்பு, விதவை மறுமணம் ஆகியவைகளின் மீது
இச்சீர்திருத்தவாதிகள் அதிக அக்கறை செலுத்தினர்.
இஸ்லாமியரிடையே அலிகார் இயக்கம் இதே
பணியை மேற்கொண்டது. காலப்ப ோக்கில் அரசியல்
தன்மை கொண்ட அமைப்புகளும் கழகங்களும்
பிரிட்டிஷ் இந்தியாவின் பல பகுதிகளில் தோன்றி
மக்களின் குறைகளைப் பற்றி பேசத்தொடங்கின. 1857இன் பேரெழுச்சியே இந்திய தேசிய
இயக்கத்தின் பிறந்த நாளாகும். புரட்சி ஒடுக்கப்பட்ட
பின்னர் ஆங்கில ராணுவம் செய்த அட்டூழியங்கள்
‘பழி தீர்க்கப்படாமலே’ இருந்தன. ராணுவச்
சட்டங்களும் நடைமுறைகளும்கூடப்
பின்பற்றப்படவில்லை. ராணுவ நீதிமன்றத்தின்
விசாரணை அதிகாரிகள் தங்கள் கைதிகள் குற்றம்
புரிந்தவர்களோ அல்லது ஒன்றுமறியாதவர்களோ
எப்படியிருப்பினும் அவர்களைத் தூக்கிலிடப்
போவது உறுதி எனக் கூறினர். இவ்வாறான
பாகுபாடற்ற பழிச்செயலுக்கு எதிராக யாரேனும்
குரலை உயர்த்தினால் அதிகாரியின் உடன்
பணியாற்றுபவர்கள் கோபத்துடன் அவர்களை
அடக்கினர். கேலிக்கூத்தானஇவ்விசாரணைகளுக்குப்
பின்னர் மரண தண்டனை அளிக்கப்பட்டோர் அது
நிறைவேற்றப்படும் வரை அதிகாரிகளுக்கு
தெரிந்த வீரர்களால் சித்திரவதை செய்யப்பட்டனர்.
1857 ஜூன் – செப்டம்பர் மாதங்களில் ஆங்கிலப்
படைகளால் டெல்லி முற்றுகையிடப்பட்டது
குறித்து, பம்பாய் மாகாணத்தின் முன்னாள்
ஆளுநர் எல்பின்ஸ்டன், அப்போதைய
இந்தியாவின் எதிர்கால அரசப்பிரதிநிதி (1864)
சர்ஜான் லாரன்ஸுக்கு எழுதியதை இங்கே பதிவு
செய்வது பொருத்தமுடையதாகும். “நண்பன்
பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சிலான
பழி வாங்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொள்ளையடிப்பதைப் பொறுத்தமட்டில் நாம்
உண்மையாகவே நாதிர்ஷாவை
மிஞ்சிவிட்டோம்” ஆங்கிலேயர் இனப்பா குபாட்டுக்
கொள்கையைப் பின்பற்றினர். அரசு உயர்பதவிகளில்
இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு
விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக்
கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர். இதன்
விளைவாக இந்திய உயர் வகுப்பா ரிடையே ஏற்பட்ட
வெறுப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிராக இந்தியர்கள்
புரட்சி செய்ய இட்டுச் சென்றது. குடிமைப்
பணிக்கானத் தேர்வுகள் அறிமுகமானபோது வயது
வரம்பு இருபத்தொன்று என நிர்ணயம் செய்யப்பட்டது.
அத்தேர்வுகளில் இந்தியர்கள் வெற்றி பெற்றதைத்
தொடர்ந்து அத்தேர்வுகளை இந்தியர்கள்
எழுதவிடாமல் தடுப்பதற்காக வயது வரம்பு
பத்தொன்பதாகக் குறைக்கப்பட்டது. இதைப்ப ோலவே
குடிமைப்பணித் தேர்வுகளை ஒரே நேரத்தில்
இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடத்த
வேண்டுமென இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர
வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு
ஏற்றுக்கொள்ள மறுத்ததன
Comments
Post a Comment