அறிமுகம் :
கி.பி.(பொ.ஆ.) 7-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவில் பக்தி
இயக்கங்கள் தோன்றின. இவ்வியக்கங்கள் இடைக்கால இந்திய வரலாற்றில் சமூக மற்றும்
சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றின. இதன் தொடர்ச்சியாக வங்காளத்தில்
சமூக�சமயச் சீர்திருத்த இயக்கம் இராஜாராம் மோகன்ராய் என்பவரால் தொடங்கப்பட்டு,
அதன்பின் இந்தியா முழுவதும் பல சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சமூக - சமய,
மறுமலர்ச்சிக்கு வித்திட்டன
இந்தியாவின் நிலை :
ஆங்கிலேய ஆட்சியில் இந்திய அரசர்களுக்கிடையே நிருவாகத்தில் பல
சீர்கேடுகள் காணப்பட்டன. இந்தியர்கள் மேலை நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினர்.
கிறித்துவ சமயப்பரப்புக் குழுவினர்களும், இந்திய ஆட்சியாளர்களும், இந்தியரின்
மொழிகளையும், இலக்கியங்கள், பண்பாடு, கலைக ள் போன்ற வற்றைப் போற்றினர்.
ஆனால், அதன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை .18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில்
இந்தியாவின் சமூகநிலை உலக நாடுகளுக்கிடையில் பின்தங்கியிருந்தது. குறிப்பாக அரசியல்,
பொருளாதார , சமூக,சமய, பண்பாடு, இலக்கியம், கல்வி போன்ற துறைகளில் வளர்ச்சி பெறவில்லை ,
ஏற்கெனவே இருந்த வளர்ச்சி படிப்படியாகக் குறைந்து கொண்டே சென்றது. நம் மக்களின்
அறியாமை , அன்னிய ஆட்சியாளர்களின் பேராசை போன்றவை நம்நாட்டுக் கலைகள்
அழியக் காரணமாயிற்று. புற்றீசல்போல படர்ந்த மேலை நாட்டு நாகரிகம், நம்முடைய
பண்பாட்டை மறக்கச் செய்தது. எனினும், 19-ஆம் நூற்றாண்டில் மேலை நாட்டுக்
கல்வி பயின்ற தன்விளைவாக நமது பண்பாடு, இலக்கியம் போன்றவை மீண்டும்
துளிர்த்து எழுவதற்கு படித்த இளைஞர்கள் முயற்சி செய்தார்கள். எனவே தீண்டாமை ,
உடன்கட்டை ஏறுதல் (சதி), பெண்சிசுக் கொலை , பர்தா முறை , தேவதாசிமுறை ,
ஆடவர் கடல்கடக்காமை , இன்ன பிறமூடப்பழக்க வழக்கங்களை க் களை ய சமூக,
சமயத்தில் பல இயக்கங்கள் தோன்றின. இக்காலத்தையே சமூக-சமய விழிப்புணர்வுக்
காலம் என்கிறோம்
1. அரசியல் ஒற்றுமை :
ஆங்கிலேய ஆட்சியின் விரிவாக்கக் கொள்கை , இந்திய மன்னர்களிடையே
அரசியல் ஒற்றுமை ஏற்படக் காரணமாக அமைந்தது. டல்ஹெளசி காலத்தில் கொண்டு
வரப்பட்ட வாரிசு இழப்புக்(Doctrine of Lapse) கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்கள்,
மீண்டும் தத்தெடுக்கும் உரிமை கொண்டுவரபாடுபட்ட னர். இந்து வாரிசு தத்தெடுக்கும்
சட்டத்தை மாற்றி அமைத்ததின் விளைவாக ,இந்து அரசர்கள் ஒன்றிணைந்து தமது
நாட்டின் பண்பாட்டைக் காப்பாற்ற ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஒன்று திரண்டனர்
2. இந்திய செய்தித்தாள்கள் :
இந்தியாவில் அச்சு இயந்திரம் ஐரோப்பியர்களால் அறிமுகம் செய்யப்பட்டதால்
செய்தித் தாள்கள் மற்றும் வார இதழ்கள் வெளிவந்தன. பல்வேறு மொழிகளில்
செய்தித்தாள் மற்றும் புத்தகங்களும் அச்சிடப்பட்டன. அமிர்தபஜார் பத்திரிக்கா ,
தி இந்து, சுதே சமித்திரன், இந்தியா, கேசரி, மராத்தா போன்ற செய்தித்தாள்கள் நம் நாட்டின்
பண்பாட்டை அறிந்துகொள்ள உதவியாக அமைந்தன
3. மேலைநாட்டுக் கல்வி :
இந்தியாவில் ஆங்கிலக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டதால் மேலை நாட்டு
கருத்துகளான ஜனநா யகம், சுதந்திரம், சமத்துவம், தேசியஉணர்வு போன்றவை
மேலோங் கின. கி.பி (பொ.ஆ.) 1835-ஆம் ஆண்டு மெக்காலே (Macaulay) முயற்சியால் ஆங்கிலம்
இந்தியாவில் பயிற்று மொழியாக்கப்பட்ட து, கி.பி (பொ.ஆ.) 1854 ஆம் ஆண்டு சார்லஸ்
உட்(Charles wood) அறிக்கையின் படி கல்கத்தா ,பம்பாய், சென்னை ஆகிய இடங்களில்
பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்ட ன. இப்பல்கலைக்கழகங்கள் வாயிலாக ,
ஆங்கில வழிக்கல்வி இந்தியர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ன. இதன் விளைவாக
மேலை நாடுகளுக்குக் கல்வி கற்கவும், பணி நிமித்தமாகவும், வெளிநாடு சென்று
இந்தியா திரும்பியவர்கள், தங்கள் நாட்டின் சமூக நிலைமையை அறிந்து மக்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்டனர்
4. அறிவியல் தொழில் நுட்பம் :
19-ஆம் நூற்றாண்டில், இந்தியா உலகநாடுகளின் அறிவியல்
தொழில்நுட்பத் தோடு இணை ந்திருந்தது. இதனால், முற்போக்குச் சிந்தனை ,
பொருளாதாரம், தொழில்துறை போன்ற நிலைகளில் முன்னேற வேண்டும் என்ற
ஆர்வம் மேலோங்கியிருந்தது. எ.கா . தொலைத் தொடர்பு, போக்குவரத்துத் துறைகளில்
ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் உலக நாகரிக மாற்றங்கள் இந்தியாவில் மாற்றத்தை
ஏற்படுத்தின
5. அயல் நாட்டவரின் பங்களிப்பு :
மாக்ஸ்முல்லர் (Max Muller) மற்றும் வில்லியம் ஜோன்ஸ் (william Jones) போன்றோர்
இந்தியாவின் கடந்த கால பண்பாடுகளை மறு உயிர்பிப்பு செய்தனர். இந்தியாவின்
பாரம்பரிய நூல்களைக் கற்றுணர்ந்து இந்தியப் பண்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
அவர்கள் இலக்கியம், சமயம் சார்ந்த நூல்களை மேற்கத்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு
செய்தனர். இஃது உலகளவில் வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தது. படித்த
இந்தியர்கள் தங்கள் நாட்டின் பண்பாட்டை அறிந்து கொண்ட னர். அவர்கள் மேற்கத்திய
நாகரிகத்திற்கு எதிராக இந்திய நாகரிகத்தை மேம்படுத்த விரும்பினர்
பிரம்ம சமாஜத்தின் தோற்றம் :
பிரம்ம சமாஜத்தை த் தோற்றுவித்தவர் இராஜாராம் மோகன்ராய் ஆவார். இவர்
இந்து சமயத்தில் காணப்பட்ட பல்வேறு மூடநம்பிக்கைகளை நீக்க பாடுபட்டா ர்.
1815- இல் இவர் கல்கத்தாவில் ஆத்மிய சபாவைத் தோற் றுவித்தார். இதுவே பின்னர் 1828-இல்
பிரம்ம சமாஜமாக மாறியது. இச்ச மாஜம் இந்துசமயத்தில் உள்ள சமூக சீர்கேடுகளையும்
கொடுமைகளை யும் களைந்து “ஒரே கடவுள்“ என்ற கொள்கை யின் அடிப்படையில்பொது
சமயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது
பிரம்ம சமாஜத்தின் கோட்பாடுகள் :
தூய உள்ளமும் தூய வாழ்வும் உய்யும் வழி என்பதே பிரம்ம சமாஜத்தின் அடிப்படை தத்துவமாகும்.
- இச்சங்கம் ஒரே கடவுள் சங்கம் என்று அழைக்கப்பட்டது.
- ஒரே கடவுள் கொள்கையை நிலைநாட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும். பல கடவுள், கர்ம விதி, மறு பிறப்பு முதலியவற்றை ஏற்கவில்லை.
- இறைவன் மனித குலத்திற்குப் பொதுவானவர். அதே போன்று சமயமும் மனித குலத்திற்குப் பொதுவானது
- பிரம்ம சமாஜக் கோட்பாட்டின்படி, ஆத்ம பலம்பெறும் எவரும் இறைநெறியில் நிற்பர். இந்நெறியில் உயர்வு தாழ்வு இல்லை.
- பிரம்மச மாஜம் எந்தவொரு உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை கொள்ளவில்லை.
- பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்கள் “பிரமோக்கள்” என்றழைக்கப்பட்டனர்.
- இவர்கள் வழிபட்ட கடவுளுக்கு பெயரோ, சிலையோ கிடையாது
விதவை மணம், குழந்தைத் திருமணம் :
மனை வி இறந்தால் கணவனின் மறுதாரத்தை ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்,
கணவன் இறந்தால் மனை வி மறுமணம் செய்து கொள்வதை ஏன் ஏற்கக்கூடாது என்று
இராஜாராம் மோகன்ராய் வாதிட்டார். எனவே , பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை
ஆதரித்தார். இராஜாராம் மோகன்ராய் இறப் பிற்குப் பின் குழந்தைத் திருமணத்தால்
பாதிக்கப்பட்டு கணவனை இழந்த இளம்பெண்க ள் கைம்மை நோன்பால்
பா திக்கப்பட்ட வர்களுக்கு 1856-இல் விதவை மறுமணச்சட்டம் (widow Remarriage act 1856)
கொண்டுவரப்பட்டது. இச்சட்டப்படி, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதற்கும்
சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் உரிமைப் பெற்றனர்
பிரம்ம சமாஜத்தின் சமயப்பணிகள் :
இச்ச மாஜத்தைச் சார்ந்தோர் ஒருகடவுள் வழிபாட்டைத்தான் பின்பற்றவேண்டும்.
இறை வனை இரு கைகளால் மட்டுமன்றி இதயத்தாலும் வழிபடவேண்டும்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், மக்கள் அனை வரையும் சகோதர
சகோதரியாக வாழவேண்டுமென்று இவர்கள் வலியுறுத்தினார்கள். இந்து சமயத்தை விட்டு
விலகாமல் அதேநேர த்தில் மேலை நாட்டில் தோன்றிய நல்ல கருத்துகளையும்
ஏற்றுக்கொண்டு, பரந்த உணர்வுடன் செயல்பட பிரம்ம சமாஜம் விரும்பியது. இச்சமாஜம்
பயனற்ற சமுதாய பழக்கவழக்கங்களைச் சட்ட த்திற்குப் புறம்பானது என்று சாடியது
ஆரிய சமாஜம் –விளக்கம் :
ஆரியா என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள், அறிவார்ந்தோர் அமைப்பு (Noble
Society) மற்றும் ‘கடவுளின் குழந்தை ’ (Arya means son
of God) என்ப தாகும். அனைத்து ஆன்மாக்களும் கடவுளின் குழந்தைகள் என்றும், அவை
கடவுளுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துகளாகும்
ஆரியசமாஜம், தயானந்த சரஸ்வதியால் கி . பி (பொ. ஆ)1875-இல் தோற்றுவிக்கப்பட்டது .
இவருடைய இயற்பெயர் மூல்சங்கர் (Mulsankar).இவர் கத்தியவாரில் உள்ள
மூர்வி என்னுமிடத்தில்கி.பி(பொ.ஆ.) 1824-இல் பிறந்தார். மதுராவிற்குச் சென்று அங்கு சுவாமி
விரஜானந்தரின் சீடரானார். வேத நூல்களை ஆழ்ந்து படித்தார். கி.பி (பொ.ஆ.) 1875-இல்
பம்பாயில் ஆரிய சமாஜத்தைத் தொடங்கினார். பின் ஆரிய சமாஜத்தின் தலைமையிடம்
லாகூருக்கு மாற்றப்பட்ட து. இவர் வேதநூல்களை மொழிபெயர்த்தார். அவற்றைச்
சத்தியார்த்தபிரகாஷ் இந்தியிலும், வேதபாஷ்யங்கள், யஜுர் வே தம் போன்ற வற்றைச்
சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்தார்.வேதங்களின் பகுதிகளான பிராமணங்கள்,
சம்ஹிதைகள் மற்றும் உபவே தங்களில் காணப்படும் கருத்துகளே ஆரிய சமாஜத்தின்
கருவூலங்களாகும். மேற்கத்திய அறிவாலும், பண்பாட்டாலும் சிறிதும் மாற்றம் பெறாதவர்.
“வேதங்களை நோக்கிச் செல்” (Go Back to Vedas) என்பதை த்தாரக மந்திரமாகக் கொண்டவர்.
அவர், தம் வாழ்நாளை வேதசமயத்தைப் பரப்புவதிலும் இந்து சமய, சமுதாயப்பணிகள்
செய்வதிலும் ஈடுபட்டார்
ஆரிய சமாஜத்தின் கோட்பாடுகள்:
- அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதால் அவர்களிடம் சாதி, சமய, இனவேறுபாடுகள் அர்த்தமற்றதாகும்.
- தியானம், தன்னலமற்ற நற்செயல்கள் மூலமாகவும் கடவுளின் அருளைப் பெறமுடியும்.
- இறைவன் எங்கும் நிறைந்தவன். அவனுக்கு முதலும் இல்லை; முடிவுமில்லை.
- இறைவன், ஆத்மா , பிரகிருதி ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.
- ஆன்மா அழியாது, ஆன்மாபிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை, கடவுளைப் போன்றே ஆன்மாவும் நிலையானது.
- ஆன்மாவின் பயணம் முடிவற்றது. இது பல்வேறு பிறப்பு மற்றும் இறப்புகளின் மூலம் மேன்மையடைகிறது.
- தீபம் ஏற்றுதல் என்பது, அதன் ஒளியின் எதிர்காலத்தில் நற்செயல்களைச் செய்வதற்குத் திட்டமிடலாகும்.
- இறைவனிடம் தமது குறைகளை முறையிட எந்தவொரு பிரதிநிதியும் தேவையில்லை.
- உலகிலும், அண்டக்கோள்களிலும் எல்லாப்படைப்புகளிலும் எங்கும் காணப்படும் கடவுளைப் பரபிரம்மம் என்கிறோம்
ஆரிய சமாஜத்தின் செயல்பாடுகள் :
இந்து சமயத்தில் நிலவி வந்த காலத்திற்குப் பொருந்தாதச் சடங்குகளைக்
களையவும், வேதசமயத்திற்குப் புத்துயிர் அளிக்கவும் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டன.
வேதகாலச் சமூகத்தில் மிகவும் நம்பத்தகுந்த செய்திகள் உள்ளடங்கி இருப்பதால், அவற்றை
நூற்றுக்கணக்கானபோதகர்களும்,துறவிகளும் நாடு முழுமைக்கும் பரப்ப ஏற்பாடுகள்
செய்ய ப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளில் மக்களுக்குப் புரியும்வகையில்
கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.
கல்வி நிறுவனங்களை உருவாக்குதல் :
இந்தியாவில் கி.பி. (பொ.ஆ.) 1886-ஆம் ஆண்டு லாகூரில் ஹன்ஸ்ராஜ் தலைமையில்
தயானந்த ஆங்கிலோ வேதப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. இச்சமாஜம், தயானந்த
ஆங்கிலோ வேதப்பள்ளிகளையும் (DAV,Dayananda Anglo Vedic School) கல்லூரிகளையும்
நடத்தி வருகின்றது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் தனித்தனியாகக்
கல்வி பயிலவும், இருபாலரும் சேர்ந்து கல்வி பயில்வதற்கென, கல்வி நிறுவனங்கள்
செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில்ஆங்கிலம் முதன்மை மொழியாகவும் இந்தி,
சமஸ்கிருதம் இரண்டாம் மொழியாகவும் கற்பிக்கப்படுகின்றன. இதனை ,
தயானந்த ஆங்கிலோ வேதக்கல்வி நிறுவனங்களின் மேற்பார்வை அமைப்பு (DAVCMC Dayananda
Anglo Vedic College managing Committee) நிர்வகித்து வருகிறது. இது ஓர் அரசுசாராநிறுவனமாகும்.
பிஜி, நேபாளம், மொரீசியஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
சுவாமி தயானந்த சரஸ்வதி – மதிப்பீடு :
சுவாமி தயானந்தர் சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவராவார்.
இவர் கடந்த காலப்பண்பாட்டிற்கும் நிகழ்காலப்பண்பாட்டிற்கும் பாலமாகத்
திகழ்ந்தார். வேதசமயம், நாகரிகம், பண்பாடு இவை மூன்றையும் உலகிலேயே சிறந்தவையாக
இவர் கருதினார். இவர் சுயராஜ்ஜியம் என்று கூறி விடுதலை உணர்வை மக்களிடையே
தோற்றுவித்தார். இக்கருத்து பிற்காலத்தில் 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை ' என்ற
திலகரின் கூற்றுக்கு அடிப்படையாக அமைந்தது
Comments
Post a Comment