அறிமுகம் :
தொழிலக வளர்ச்சி :
பொருளாதார வளர்ச்சிக்கு விரைவான
தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும்
யோசனைக்கு இந்தியா உறுதியளித்தது.
பல்வேறு வழிகளின் மூலம் வளர்ச்சியை
அடைய முடியும். இந்தியா போன்ற அதிக மக்கள்
தொகை கொண்ட நாடுகளில், பலவகை கச்சாப்
பொருட்கள் கிடைக்கின்ற அல்லது விளைகின்ற,
அதிக உழைப்பு மிகுந்த செயலாக்க தொழில்களும்
தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதற்கு
மாற்றான காந்தியின் மாதிரி கிராமவளர்ச்சிக்கும்
முக்கியத்துவம் கொடுத்தது. குடிசைத் தொழில்களின்
மூலம் நுகர்வுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டால்
அது கிராமப்புற வறுமையையும் வேலையின்மையும்
அகற்றும் எனும் கருத்தை முன்வைத்தது.
ஆனால் அரசு பல்வகைப்பட்ட தொழில்களின்
முன்னேற்றத்திற்காக மிகப்பெரிய அளவிலான
கனரகத் தொழில்களை உருவாக்குவதில் கவனம்
செலுத்தும் நேருவின் மாதிரியைக்கைக்கொண்டது.
“சமதர்ம சமூகம்” எனும் அடிப்படைக்
கொள்கைக்கு ஏற்றவாறு அரசுக்குச் சொந்தமான
தொழிற்சாலைகள் அடங்கிய தொழில்துறையை
வளர்ப்பதில் அரசு பெரும்பங்கு வகிக்கும். எஃகு
உற்பத்திக்காகவும், இடைப்பட்ட பொருட்களான
இயந்திரங்கள், வேதியியல் பொருட்கள், உரங்கள்
போன்றவற்றிற்காகவுமே அரசு கனரகத்
தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமளித்தது.
சுரண்டும் தன்மை கொண்டதாகவும், மிகுந்த லாப
நோக்கம் கொண்டதாகவும் ஒரு சிறிய முதலாளிகள்
வர்க்கத்திற்கு மட்டும் பயனளிக்கக் கூடியதாக
உள்ள தனியார் முதலீட்டைக் கட்டுப்படுத்த
வேண்டும் என்பதே இவ்வளர்ச்சி மாதிரியின் சமூக
நோக்கமாகும்.
தொழிற்கொள்கை :
இந்நோக்கங்களை மேம்படுத்துவதற்காக
தொடர்ச்சியான தொழிற்கொள்கை அறிவிப்புகள்
ஏற்றுக்கொள்ளப்பட்டன. முதல் கொள்கை அறிக்கை
1948இல் அறிவிக்கப்பட்டது. இது தொழிலகங்களை
நான்கு வகைகளாகப் பிரித்தது 1956இல் நிறைவேற்றப்பட்ட தொழில்
கொள்கைத் தீர்மானமே மிகவும் உறுதியான
கொள்கை அறிக்கையாகும். அது தொழிலகங்களை
மூன்று வகைகளாகப் பிரித்தது. அட்டவணை
‘அ’ வில் இடம்பெற்ற தொழிலகங்கள் அரசின்
முற்றுரிமையின் கீழிருந்தன; அட்டவணை
‘ஆ’ வில் இடம் பெற்ற தொழிலகங்கள் அரசு புதிய
அலகுகளைத் தொடங்கலாம், ஆனால் தனியார்
துறையினரும் தங்கள் அலகுகளை அமைக்கலாம்
அல்லது விரிவாக்கலாம்; மீதமுள்ள தொழிலகங்கள்
அட்டவணை 'இ' யில் இடம் பெற்றன.
1951இல் இயற்றப்பட்ட தொழில் வளர்ச்சி மற்றும்
முறைப்படுத்துதல் சட்டம் தனியார் துறையைக்
கட்டுப்படுத்துவதற்கு முக்கியமான கருவியாகும்.
இச்சட்டம் அரசிடமிருந்து உரிமம் பெறாமல்
புதிய தொழிற்சாலைகள் நிறுவப்படக்கூடாது
எனவும், இருக்கின்ற தொழிற்சாலைகளின் திறன்
அதிகரிக்கப்படக் கூடாதெனவும் கட்டுப்பாடுகளை
விதித்தது. ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் நோக்கத்துடன்
கிராமப்புறங்களிலும் பின்தங்கிய பகுதிகளிலும்
செயல்படக்கூடிய பெரும் தொழில் நிறுவனங்களை
ஊக்குவித்தது. 1977இல் வெளியான கொள்கை
அறிக்கையானது சிறிது காலமே ஆட்சியிலிருந்த
ஜனதா அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்டது. அது
ஊரக, கிராமப்புறங்களை மேம்படுத்துவதோடு சிறு
தொழில்களின் வளர்ச்சியையும் குறிக்கோளாகக்
கொண்டிருந்தது. 1980இல் காங்கிரஸ் அரசால் வெளியிடப்பட்ட
கொள்கை அறிக்கையும் சமச்சீரான வளர்ச்சியைப்
பேணுவதை இலக்காகக் கொண்டிருந்தது.
மற்றபடி இந்த அறிக்கைகள் அனைத்தும் அரசுக்குச்
சொந்தமான ஒரு வலுவான பொதுத்துறை
மற்றும் தனியார் துறை மற்றும் குறிப்பாகப் பெரும்
வணிக நிறுவனங்களின் மீதான கட்டுப்பாட்டைத்
தொடர்ந்தன. சந்தைப் பொருளாதாரத்தில் ஊடுருவிய
பிற தலையீடுகளும் இருந்தன. தனியார்
துறையில் தயாரிக்கப்படும் சிமெண்ட் போன்ற
இடு பொருட்கள் பங்கீட்டு முறையின் (Ration) கீழ்
கொண்டுவரப்பட்டன. தனிநபர்கள் வீடு கட்டுவதற்கும்
அனுமதி பெற்றாக வேண்டியதிருந்தது. உரிமம்
வழங்கல் கொள்கையின் கீழ் நுகர்பொருட்களின்
உற்பத்தி கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இது
சமூகத்தில் வசதிமிக்கவர்கள், வசதியற்றவர்கள்
ஆகியோரிடையே நுகர்விலுள்ள ஏற்றத்தாழ்வுகளை
சமன்செய்யும் கருத்தியலின் வெளிப்பாடேயாகும்.
அதே சமயம் அரிதான மூலப்பொருட்களான எஃகு,
சிமெண்ட் போன்றவை நீண்டகாலப் பொருளாதார
வளர்ச்சிக்கு தேவைப்படும் போர்த்துறை சார்ந்த
தொழில்களுக்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி
செய்தது.
தாராளமயமாக்கம் – தொழில் கொள்கை அறிக்கை 1991 :
இறுதியாக 1991இல் இந்திய அரசு
தன்னுடைய தொழில் கொள்கையில் ஒரு
மாற்றத்தை அறிவித்தது. அது உரிமங்கள்
வழங்கப்படுவதிலுள்ள கட்டுப்பாடுகளை
நீக்குவதாகவும், தாராளமயமாக்கப்பட்ட
பொருளாதாரத்தை நோக்கி நகர்வதாகவும்,
தனியார்துறையின் அதிகமான பங்கேற்பை
அனுமதிப்பதாகவும் அமைந்தது. செயல்படாத
தொழிற்சாலைகளை மூடுதல், முதலீட்டைத்
திரும்பப்பெறும் கொள்கை ஆகியவற்றின் மூலம்
பொதுத்துறையின் பங்கு குறைக்கப்பட நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாட்டில்
பொருளாதாரம் குறித்த மனப்போக்கில் குறிப்பாக
நுகர்வோரின் கண்ணோட்டத்தில் மிகப்பெரும்
மாற்றம் உருவாயிற்று. பொருட்களும் சேவைகளும்
கிடைப்பதன் மூலம், வளர்ந்து வரும் மத்தியதர
வர்க்கம் ஆசைப்பட்ட உயர்ந்த வாழ்க்கைத்தரம்
கிட்டியது என்பது மட்டுமல்லாமல் இப்போது
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களாலும்
கூட அப்பொருட்களை வாங்க முடிந்தது. நேர்மறை கோணத்தில், தாராளமயமானது
இந்தியாவை மிக அதிகமாக அந்நிய நாடுகளின்
முதலீட்டினை ஈர்க்கும் இடமாக மாற்றியுள்ளது.
மாநில அரசுகள் தொழில் செய்வதை எளிதாக்கும்
வகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக
விளம்பரம் செய்வதில் ஆர்வமாக உள்ளன.
இவையனைத்தும் ஒரு செல்வச்செழிப்பான
பொதுச்சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தப்
பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்களில் அது
பிரதிபலிக்கின்றது
ஐந்தாண்டு திட்டங்கள் :
ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக
வளர்ச்சிக்குத் திட்டமிடுவதில் இந்தியா சோவியத்
யூனியனின் முன்னுதாரணத்தைப் பின்பற்றியது.
பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை
வடிவமைப்பதற்காக 1950இல் திட்டக் குழு (Planning
Commission) நிறுவப்பெற்றது. ஒவ்வொரு திட்டமும்
பொருளாதாரத்தின் செயல்பாடுகளையும், எதிர்கால
வளர்ச்சிக்கு கிடைக்கப்பெறும் மூலவளங்களையும்
மதிப்பீடு செய்தது. அரசாங்கத்தின்
முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு இலக்குகள்
நிர்ணயம் செய்யப்பட்டன. வேளாண்மை,
தொழிலகம், ஆற்றல், சமூகத்துறைகள் மற்றும்
தொழில்நுட்பம் மற்றும் முழுமையான பொருளாதார
வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு
துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.
தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குவது
திட்டமிடுதலின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக
இருந்தது.1951-56 வரையிலான காலப்பகுதி
முதலாவது ஐந்தாண்டு திட்டத்திற்கானது.
இதுவரையிலும் பன்னிரண்டு ஐந்தாண்டு
திட்டங்கள் நிறைவேறியுள்ளன. இவை தவிர
1966-1969 வரை மூன்று ஓராண்டு திட்டங்களும்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது ஐந்தாண்டு திட்டம்
(1951-56) வேளாண்மையை வளர்ப்பதிலும்
குறிப்பாக வேளாண் உற்பத்தியிலும் கவனம்
செலுத்தியது. மொத்த முதலீட்டில் 31 விழுக்காடுகள்
வேளாண்மைக்கும் நீர்பாசனத்திற்கும்
ஒதுக்கப்பட்டது. இதற்குப் பின்னர் தொழில்
துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட து. மொத்த
முதலீட்டில் வேளாண்மைக்கான பங்கு 20
விழுக்காட்டிற்கும் 24 விழுக்காட்டிற்கும் இடையே
இருந்தது. பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தில்
இது 20 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தது.
பொதுவாக மகலனோபிஸ் திட்டம் என அறியப்பட்ட
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956-61)
பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு
கனரகத் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம்
வழங்கியது. முதலாவது திட்டத்தில் 6 விழுக்காடாக
இருந்த தொழில் துறையின் பங்கு இரண்டாவது
திட்டத்திற்குப் பின்னர் 24 விழுக்காடாக உயர்ந்தத
கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :
கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சமூகத்
துறையில் இடம் பெற்றிருப்பதோ டு கல்வியின்
நிலையும் சுகாதாரக் குறிப்பான்களுமே
(Indicators) ஒரு நாட்டின் சமூகவளர்ச்சியை
மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக
உள்ளன. இந்தியாவில் 1951இல் 18.3
விழுக்காட்டிலிருந்த எழுத்தறிவு நிலை 2011இல்
74 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆண்களில்
82 விழுக்காட்டினரும் பெண்களில் 65
விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
ஒப்பிட்டுப் பார்க்கையில் எழுத்தறிவில் பெண்கள்
பின்தங்கியிருந்தனர். தொடக்கக் கல்வி முதல்
உயர்நிலைப் பள்ளி வரையிலான பள்ளிகளின்
எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.
மேற்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும்
பெருகிற்று. 2014-15இல் நாட்டில் 12.72 லட்சம்
தொடக்க, உயர்தொடக்கப் பள்ளிகளும் 2.45
லட்சம் இடைநிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளும், 38,498 கல்லூரிகளும், 43
மத்தியப் பல்கலைக்கழகங்களும், 316 மாநிலப்
பல்கலைக்கழகங்களும் 122 நிகர்நிலைப்
பல்கலைக்கழகங்களும் 181 மாநில தனியார்
பல்கலைக்கழகங்களும் செயல்பட்டன.
நகர மற்றும் கிராமப்புறங்களில் இடைநிற்கும்
குழந்தைகள் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச்
சேர்ந்தோராகவே இருந்தனர். குறிப்பாகப் பெண்
குழந்தைகளேஇடைநிற்றலில் அதிகமாக இருந்தனர்.
சேர்க்கை விகிதத்திலும், இடைநிற்றல் விகிதத்திலும்
மிகப்பெரும் பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன.
ஆகவே பின்தங்கிய மாநிலங்களிலும், பகுதிகளிலும்
பள்ளிக் கல்வியின் நிலை மோசமாகவே
இருந்தது. இடைநிற்றல் பிரச்சனையை தீர்க்க
அரசாங்கத்தினால், அனைவருக்கும் கல்வித் திட்டம்
(சர்வ சிக்ஷா அபியான்-SSA), அனைவருக்கும்
இடைநிலைக் கல்வித் திட்டம் (ராஷ்ட்ரிய மத்யமிக்
சிக்ஷா அபியான்-RMSA) மற்றும் அண்மையில்
ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான ஒருங்கிணைந்த
பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்ஷா அபியான்)
போன்றவற்றின் மூலம் பல்வே று முயற்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பம் :
இந்தியா, அறிவியல் ஆய்வு மற்றும்
தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்தெடுப்பதில்
பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது. விடுதலைக்கு
முன்னர் இந்தியாவிலிருந்த ஒரேயொரு அறிவியல்
ஆய்வு நிறுவனம் 1909இல் J.R.D. டாட்டா மற்றும்
மைசூர் மகாராஜா ஆகியோ ரின் நிதியுதவியில்
பெங்களூருவில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல்
நிறுவனம் (Indian Instititute of Science - IISc)
மட்டுமேயாகும். 1945இல் முனைவர் ஹோமி J. பாபா
என்பாரின் முன்னெடுப்பில், டாட்டா என்பவரின்
நிதியுதவியுடன் டாட்டா அடிப்பட ை ஆராய்ச்சி
நிறுவனம் (Tata Institute of Fundamental Research
- TIFR) நிறுவப்பெற்றது. கணிதம் மற்றும் அறிவியல்
ஆகிய துறைகளில் ஆய்வுகளைஊக்குவிப்ப தற்காக
இது அமைக்கப்பட்டது. புனேயில் அமைக்கப்பட்ட
தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical
Laboratory), புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய
இயற்பியல் ஆய்வகம் (National Physics Laboratory)
ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில்
முதன்முதலாக அமைக்கப்பட்டவை ஆகும். அது
முதலாக அறிவியல் துறையின் வானியற்பியல்
(astrophysics), மண்ணியல் (geology) / நிலவியல்
சார் இயற்பியல் (geo-physics), உயிரணு மற்றும்
மூலக்கூறு உயிரியல் (cellular and molecular
biology), கணித அறிவியல்கள் (mathametical
sciences) மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை
மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை
தொடர்ந்து பெருகின. விமானங்கள் ஆகியவை குறித்த மேம்பட்ட
ஆய்வினை முன்னெடுக்கிறது. அணுசக்தி ஆணையமானது அணு
அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையாகத்
(nodal agency) திகழ்கிறது. அணுசக்தி உற்பத்தி
அணு ஆயுத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும்
கவனம் செலுத்தும். அது போர்த்திறம் சார்ந்த
முக்கியத்துவம் பெற்றதாகும். அறிவியல் சார்ந்த
ஆய்வுகளுக்காக பல நிறுவனங்களுக்கு அணுசக்தி
ஆணையம் நிதியளிக்கிறது. ஆய்வும் வளர்ச்சியும் குறிப்பிட்டுச்
சொல்லும்படி விரிவடைந்திருக்கும் மற்றொரு
துறை வேளாண்மை ஆகும். இத்துறையில்
நடைபெறும் ஆய்வுகளை இந்திய வேளாண்
ஆய்வுக் கழகம் (Indian Council of Agricultural
Research - ICAR) ஒருங்கிணைக்கிறது. இதன்
ஆய்வுகள், அடிப்படை வேளாண்மை குறித்து
மட்டுமல்லாமல், துணை நடவடிக்கைகளாக
மீன்வளர்ப்பு, வனங்கள், பால்வளம், தாவர
மரபியல், உயிரி-தொழில்நுட்பம், பல்வேறு
பயிர் வகைகளான நெல், உருளைக்கிழங்கு,
கிழங்கு வகைகள், பழங்கள் மற்றும் பூச்சிகளைக்
கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளையும்
இவ்வமைப்பு மேற்கொள்கிறது. வேளாண்
பல்கலைக்கழகங்களும் கல்வி கற்பித்தல், வேளாண்
நடைமுறைகள் குறித்த ஆய்வு ஆகியவற்றில்
செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில்
67 வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இவற்றில் 3 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில்
அமைந்துள்ளன.இத்தகைய முன்னேற்றங்கள்
ஏற்பட்டிருந்தாலும் இந்தியாவில் அறிவியல்
ஆய்வானது வளர்ந்த நாடுகள் மற்றும் சீனா
அடைந்துள்ள முன்னேற்றங்களை எட்டிப்பிடிக்க
இன்னும் நீண்டதூரம் பயணம் செய்தாக
வேண்டுமென்பது பொதுவான கருத்தாகும். நாட்டில்
அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் பல இருந்தும்
கோட்பாட்டுக் கருத்துக் களத்தில் ஆய்வுப் பங்களிப்பு
ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அரிதாகவும் உள்ளது.
Comments
Post a Comment