அறிமுகம் :
இந்திய தேசிய காங்கிரசில் இடதுசாரிகளின்
செல்வாக்கும் படிப்படியாகச் சுதந்திரப்போராட்டத்தில்
அது ஏற்படுத்திய தாக்கமும் 1920 களின் பிற்பகுதியில்
கணிசமான அளவில் உணரப்பட்டது. இந்தியப்
பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சியானது
எம்.என். ராய், அபானி முகர்ஜி, எம்.பி.டி. ஆச்சார்யா,
முகமது அலி, முகமது ஷாஃபிக் ஆகியோரால்
உஸ்பெகிஸ்தானிலுள்ள தாஷ்கண்டிலும் பின்னர்
சோவியத் யூனியனிலும் 1920ஆம் ஆண்டு
அக்டோபர் மாதத்தில் உருவாக்கப்பட்டது. அது
இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
போராட்டங்களில் ஒரு புதிய புரட்சிகர தேசியவாத
சகாப்தம் தோன்ற வழிவகுத்தது.
ஏற்கெனவே இந்தியாவில் பல புரட்சிகர
தேசியவாதக் குழுக்கள் செயல்பட்டுவந்தன.
முன்னதாக சோவியத் ரஷ்யாவின் வடிவில் ஒரு
கம்யூனிஸ்ட் அரசு அமைந்தது இந்தியாவில்
ஆங்கிலேயருக்குப் பெரிதும் அச்சமூட்டியது. 1921
ஜூன் 3இல் முதல் புரட்சிகர தேசியவாதக் குழுவினர்
பெஷாவருக்கு வந்தனர். கலகம் விளைவிப்பதற்காக
இந்தியாவுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தினரான
போல்ஷ்விக்குகள் வந்துள்ளனர் என்று குற்றம்
சாட்டி, அவர்கள் உடனடியாகக் கைது
செய்யப்பட்டனர். 1922-1927ஆம் ஆண்டுகளுக்க இடையில் அவர்கள் மீது தொடர்ச்சியாக ஐந்து சதி
வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றுள் முதலாவது
பெஷாவர் சதி வழக்கு ஆகும். இதனைத் தொடர்ந்து
கான்பூர் (போல்ஷ்விக்) சதி வழக்கு 1924ஆம்
ஆண்டிலும் மிகவும் பிரசித்தி பெற்ற மீரட் சதி வழக்கு
1929ஆம் ஆண்டிலும் தொடுக்கப்பட்டன.
இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய
மண்ணில் 1925இல் பம்பாயில் முறைப்படி
தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆண்டுவந்த இந்தியாவில்
அப்போது சோசலிச லட்சியங்களை ஏற்றுக்கொண்ட
பல்வேறு தேசபக்த புரட்சிகரக் குழுக்கள்
செயல்பட்டுவந்தன. ஆனால் அவை கம்யூனிஸ்ட்
கட்சிகள் அல்ல. இந்துஸ்தான் புரட்சிகர சோசலிசக்
கூட்டமைப்பைச் சார்ந்த பகத்சிங் வங்காளத்தில்
சிட்டகாங் படைத்தளத்தில் தொடர்ச்சியான
தாக்குதலை ஏற்பாடு செய்த இந்திய குடியரசு
இராணுவத்தைச் சேர்ந்த கல்பனா தத் ஆகிய
இரண்டு புரட்சியாளர்கள் அடுத்த பகுதியில் கவனம்
பெற உள்ளனர். இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி
கூட்டத்தொடரும் அதில் நிறைவேற்றப்பட்ட புகழ்
வாய்ந்த தீர்மானங்களும் – குறிப்பாக அடிப்படை
உரிமைகளும் கடமைகளும் ஆகியனவற்றை
அடுத்து நாம் பார்க்கவுள்ளோம். கடைசி இரண்டு
தலைப்புகளும் உலகம் முழுவதும் நிலவிய
மாபெரும் மந்தநிலை என்று பரவலாக அறியப்பட்ட ொருளாதார மந்தநிலை குறித்தும் இந்தியாவிலும்
தமிழ்ச் சமூகத்திலும் அது விளைவித்த தாக்கமும்
இந்தியாவில் பதிவான தொழில் மேம்பாடும் அதன்
விளைவுகளும் குறித்தவை ஆகும். மாபெரும்
மந்தநிலையானது உழைக்கும் தொழிலாளர்கள்,
விவசாயிகளுக்கு ஒரு கடுமையான அடியைக்
கொடுத்ததைத் தொடர்ந்து இந்தியச் சுதந்திரத்தின்
மீது ஒரு குறிப்பிடத்தக்க வகையில் செல்வாக்கும்
செலுத்தியது.
கான்பூர் சதிவழக்கு, 1924 :
கம்யூனிஸ்ட் கொள்கைகள் பரவுவதைக்
காலனிய ஆட்சியாளர்களால் மிகச் சாதாரணமாக
எடுத்துக்கொள்ள முடியவில்லை. பம்பாய், கல்கத்தா,
மதராஸ் ஆகிய பிரிட்டானியர் பிரதேசங்களிலும்
ஒன்றுபட்ட பிரதேசத்தில் கான்பூர் போன்ற
தொழில்மையங்களிலும் பல காலத்திற்கு முன்பே
தொழிற்சாலைகள் வந்துவிட்ட லாகூர் போன்ற
நகரங்களிலும் புரட்சிகர தேசியவாதம் பரவியது.
அதன் விளைவாக சணல், பருத்தி ஆடைத்
தொழிற்சாலைகளிலும் நாடெங்கிலுமுள்ள ரயில்வே
நிறுவனங்களிலும் பல்வேறு நகராட்சிப்
பணியாளர்கள் மத்தியிலும் தொழிற்சங்கங்கள்
உருவெடுத்தன. குறிப்பாக அப்போது போல்ஷ்விசம்
என்று அழைக்கப்பட்ட அரசியல் புரட்சிகர
தேசியவாதத்தை நசுக்கும் பொருட்டு பிரிட்டிஷ்
ஆட்சியாளர்களால் ஒடுக்குமுறைகள்
மேற்கொள்ளப்பட்டன. 1924ஆம் ஆண்டின் கான்பூர்
சதிவழக்கு அத்தகையதொரு நடவடிக்கையே
ஆகும். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் ஆவர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆறுமாத கால
அளவில் கைது செய்யப்பட்டனர். இந்திய
தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவின் கீழ் அவர்களுள்
எட்டு பேர் "வன்முறையான புரட்சி ஒன்றின் மூலம்
ஏகபோக பிரிட்டனிடமிருந்து இந்தியாவை
முற்றிலும் பிரித்து பிரிட்டானிய இந்தியாவின்
பேரரசரின் இறையாண்மைக்குக் குந்தகம்
விளைவிப்பதாகக்" குற்றம் சாட்டப்பட்டுப் பல்வேறு
சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கு மாட்சிமைபொருந்திய அமர்வு நீதிபதி H.E.ஹோம்ஸ்
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவர்
கோரக்பூர் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றியபோது
சௌரிசௌரா வழக்கில் தொடர்பு
கொண்டவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட 172
விவசாயிகளுக்கு மரணதண்டனை விதித்துத்
தீர்ப்பளித்துப் பிரசித்தி பெற்றவர்.
கான்பூர் சதிவழக்கில் முசாபர் அகமது, சவுகத்
உஸ்மானி, நளினி குப்தா, எஸ். ஏ. டாங்கே
ஆகியோர் நான்கு ஆண்டுகள் கடுங்காவல்
தண்டனை அனுபவிப்பதற்காகச் சிறைக்கு
அனுப்பப்பட்டனர். இதற்கிடையில், இந்த
விசாரணையும் சிறைத் தண்டனையும் இந்தியாவில்
கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகள் குறித்த
விழிப்புணர்வை ஓரளவுக்கு ஊட்டியது. ஆங்கிலேயர்
ஆண்ட இந்தியாவில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
ஆதரவாக வழக்கறிஞர்களை அமர்த்தவும் நிதி
திரட்டவும் ‘கம்யூனிஸ்ட்களின் பாதுகாப்புக் குழு’
ஒன்று உருவாக்கப்பட்டது. இவற்றுக்கு அப்பால்,
இந்தியாவின் மாநில மொழிப் பத்திரிகைகள்
நீதிமன்ற நடவடிக்கைகளை மிக விரிவான
முறையில் வெளியிட்டன.
மீரட் சதி வழக்கு, 1929 :
1929ஆம் ஆண்டின் மீரட் சதி வழக்குதான்
அனேகமாக, ஆங்கிலேய அரசினரால் தொடுக்கப்பட்ட
அனைத்துக் கம்யூனிஸ்ட் சதி வழக்குகளிலும்
பெரிதும் புகழ்பெற்றதாகும். 1920களின் பிற்பகுதி
ஏராளமான தொழிலாளர் எழுச்சிகளைக் கண்டது.
இந்த நிலையின்மைக் காலம் மாபெரும்
பொருளாதார மந்தநிலையின் சகாப்தம் (1929 –
1939) வரை நீண்டது. தொழிற்சங்க நடவடிக்கைகள்
பற்பல நகர்ப்புறங்களுக்குப் பரவி, தொழிலாளர்
வேலைநிறுத்தங்களை ஏற்படுத்தியது ஒருங்கிணைப்பதில் கம்யூனிஸ்டுகள் முக்கியப்
பாத்திரத்தை வகித்தனர். 1927ஆம் ஆண்டு
பிப்ரவரியிலும் செப்டம்பரிலும் நடைபெற்ற காரக்பூர்
ரயில்வே பணிமனை வேலைநிறுத்தங்கள்,
1928ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை
மாதங்களுக்கிடையில் நடைபெற்ற லில்லுவா ரயில்
பணிமனை வேலைநிறுத்தம், 1928ஆம் ஆண்டின்
கல்கத்தா துப்புரவுத் தொழிலாளர்களின்
வேலைநிறுத்தம், 1929ஆம் ஆண்டு ஜூலை,
ஆகஸ்ட் மாதங்களில் வங்காளத்தின் சணல்
ஆலைகளில் நடைபெற்ற பல்வேறு
வேலைநிறுத்தங்கள், 1928ஆம் ஆண்டு ஜூலையில்
திருச்சிராப்பள்ளியின் பொன்மலை பணிமனையில்
நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே
வேலைநிறுத்தம், 1928 ஏப்ரலில் பம்பாயில்
நடந்தேறிய ஜவுளித் தொழிலாளர் வேலைநிறுத்தம்
ஆகியன குறிப்பிட்டுச் சொல்லத்தக்கச் சில
வேலைநிறுத்தங்கள் ஆகும்.
அரசு ஒடுக்குமுறை :
இந்த வேலைநிறுத்தங்களின் அலையாலும்
கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் பரவுவதாலும் கவலை
அடைந்த ஆங்கிலேய அரசு 1928ஆம் ஆண்டின்
தொழிற்தகராறுகள் சட்டம், 1928ஆம் ஆண்டின்
பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா ஆகிய இரு
கொடுஞ்சட்டங்களை இயற்றியது. இவ்விரு
சட்டங்களும் பொதுவாகப் பொதுமக்கள்
உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் – குறிப்பாக
தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவதற்கும்
உரிய அதிகாரங்களை அரசுக்கு அளிப்பதாக
விளங்கியது. தொழிலாளர்கள், விவசாயிகள்
மத்தியில் வலுவான கம்யூனிஸ்ட் செல்வாக்கு
நிலவுவது கண்டு அரசு கவலை கொண்டது.
புரட்சிகர தேசியவாத இயக்கத்தை
துடைத்தெறியத் தீர்மானித்த அரசு பல்வேறு
ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இறங்கியது.
அவர்கள் பம்பாய், கல்கத்தா, பஞ்சாப், பூனா,
ஒருங்கிணைந்த பிரதேசங்கள் போன்ற பிரிட்டிஷ்
இந்தியாவின் பகுதிகளிருந்து கம்யூனிஸ்ட்
கட்சியின் 32 முன்னோடிச் செயல்பாட்டாளர்களைக்
கைது செய்தது. அவர்கள் அனைவரும் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அல்லர்
எனினும் அவர்களில் பெரும்பாலானோர்
தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்கள் ஆவார்கள்.
அவர்களில் குறைந்தபட்சம் 8 பேர் இந்திய தேசிய
காங்கிரசைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில்
கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க
உதவுவதற்கென பிரிட்டானிய கம்யூனிஸ்ட்
கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட பிலிப் ஸ்ப்ராட், பான் ப்ராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகிய
பிரிட்டானிய கம்யூனிஸ்டுகள் மூவரும் கைது
செய்யப்பட்டனர். கான்பூர் சதி வழக்கில் கைது
செய்யப்பட்டவர்களைப் போன்று இவர்களும்
இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவின் கீழ்
குற்றம் சாட்டப்பட்டனர். கைது செய்யப்பட்ட 32
தலைவர்களும் மீரட்டுக்கும் (அப்போது
ஒருங்கிணைந்த பிரதேசத்தில் இருந்தது)
கொண்டுவரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காலனிய நிர்வாகத்தினரால் ’நிலைகுலைவிக்கும்
விஷயங்கள்’ (subversive materials) என்று
விவரிக்கப்பட்ட புத்தகங்கள், கடிதங்கள், போன்ற
கணிசமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுக்
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான
சாட்சியங்களாக ஒப்படைக்கப்பட்டன.
பகத்சிங்கும் கல்பனா தத்தும் :
தேசியவாதத்தின் ஓர் ஒப்பற்ற நிலையைப்
பகத்சிங் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவருடைய
புரட்சிகர தேசியவாத நிலைப்பாடு, ஒரு தனித்த வழி
என்ற அளவில் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தின்
லட்சியங்களுக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது.
கிஷன்சிங் (தகப்பனார்), வித்யாவதி கவுர்
(தாயார்) ஆகியோரின் மகனாக பகத்சிங்,
தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியான
பஞ்சாப் மாநிலத்திலுள்ள லயல்பூர் மாவட்டம்,
ஜார்ன்வாலா என்ற இடத்தில் 1907 செப்டம்பர்
28இல் பிறந்தார். அவருடைய தகப்பனார் ஒரு
தாராளவாதியாக இருந்தார். அவருடைய
குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டக்காரர்களாக
விளங்கினர். பகத்சிங்கின் 14ஆம் வயதில் ஜாலியன்
வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது. அவர் தனது
இளமைக் காலம் முதலாகவே, நவ்ஜவான் பாரத்
சபா, ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன்
ஆகிய அமைப்புகளில் தன்னை
இணைத்துக்கொண்டார். இதில் இரண்டாவது
அமைப்பு சச்சின் சன்யால், ஜோகேஷ் சட்டர்ஜி
ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது. செப்டம்பர் 1928இல் அதனைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான்
சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்று
பகத்சிங்காலும் அவரது தோழர்களாலும் பெயர்
மாற்றம் செய்யப்பட்டு அவ்வமைப்புத்
திருத்தியமைக்கப்பட்டது. 1917இல் ரஷ்யாவில்
நடந்தேறிய அக்டோபர் புரட்சியும் சோசலிசச்
சித்தாந்தங்களும் இந்தப் புரட்சியாளர்களிடையே
பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. சந்திரசேகர
ஆசாத், சிவராம் ராஜகுரு, சுகதேவ் தாபர்
ஆகியோருடன் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட்
ரிபப்ளிகன் அசோசியேஷனின் தலைவர்களில்
ஒருவராக பகத்சிங் விளங்கினார்.
பகத்சிங்கின் குண்டுவீச்சி :
பகத்சிங்கின் பெயரை நாம் குறிப்பிடும்போதே
நமது நினைவுக்கு வருகிற சித்திரம் அவர் 1929
ஏப்ரல் 8இல் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய
நிகழ்வுதான். அந்தக் குண்டுகள் எவரையும்
கொல்லவில்லை. ஆங்கிலேயர்களின்
கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான ஒரு
போராட்ட செயலாகச் செயல்பூர்வமான ஒரு
நடவடிக்கையாகப் புரட்சியாளர்களால் அது
கருதப்பட்டது. தொழிலாளர் வர்க்கத்திற்கு முற்றிலும்
எதிரான ஒரு சட்டத்தைச் சட்டமன்றத்தில்
நிறைவேற்றுவதற்காக அதற்கான
தொழிற்தகராறுகள் மசோதாவை அறிமுகப்படுத்தும்
நாளை அவர்கள் இதற்கெனத்
தேர்ந்தெடுத்திருந்தனர்.
Comments
Post a Comment