அறிமுகம் :
இந்தியா பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல்
காலப்பகுதியில் ஆங்கில நிர்வாகத்துடனும் ஆங்கில
வர்த்தகத்துடனும் நெருக்கமான தொடர்புடைய
ஆங்கிலக் கல்வி பயின்ற சிறிய அறிவுஜீவிகளின்
கூட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தது.
கிறித்தவ சமயப் பரப்பாளர்களின் பணிகளும்
சிந்தனைகளும் ஏற்கனவே தாக்கத்தை
ஏற்படுத்தத் தொடங்கியிருந்தன. ஆங்கிலேயச்
செல்வாக்கின் தாக்கத்திற்கு ஆட்பட்ட முதல்
மாகாணம் வங்காளமாகும். அதனால் பல
சீர்திருத்தக் கருத்துக்கள் அங்கிருந்தே உருவாயின.
ஆங்கில நிர்வாகம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய
இலக்கியங்கள் ஆகியவை புதிய சிந்தனை
அலைகளை இந்தியாவிற்கு கொ ண்டு வந்தன.
அவை மரபு சார்ந்த அறிவுக்குச் சவால் விடுத்தன.
பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிச்
சிந்தனைகள் மனித இனத்தின் பரிணாமம்,
வளர்ச்சி குறித்த சிந்தனை கள், அறிவொ ளியோடு
தொடர்புடைய இயற்கை உரிமைகள் கோட்பாடு
ஆகிய சிந்தனைகள் இந்திய மறுமலர்ச்சிக்கு
வித்திட்டன. அச்சுத் தொழில்.நுட்பம், சிந்தனை கள்
பரவுவதில் முக்கியப் பங்கை வகித்தத
சீர்திருத்த இயக்கங்களின் :
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியச்
சமூகம் மூடநம்பிக்கை, சீர்திருத்தங்களுக்கு
எதிர்ப்பு எனும் நச்சுச் சூழலில் சிக்கியுள்ளது
என ஆங்கிலேயர் விளக்கினர். அவர்களின்
கண்ணோட்டத்தில் உருவ வழிபாடும், பல
கடவுள் வழிபாடும் வைதீகத்திற்கு வலுவேற்றி,
அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மக்களைத்
தூண்டியவை ஆகும். அதற்கு இணையாகச் சமூகச்
சூழலும் உயிரோட்டமில்லாமல் தாழ்ந்த நிலையில்
இருந்தது. மேலும் பெண்களின் நிலை யும்
இரங்கத்தக்க நிலையில் இருந்தது. உடன்கட்டை
(சதி) ஏறும் பழக்கம் மிகவும் கண்டனத்திற்கு
உள்ளானது. பிறப்பின் அடிப்படையிலான சமூகப்
பிரிவுகளும் அதன் விளைவான சாதி முறையும்
விமர்சனம் செய்யப்பட்டது. மிக முக்கியமாக
ஆங்கிலேயர், தங்க ளின் தலை யீடு இல்லாமல்
இத்தகைய தீமைகளிலிருந்து இந்தியர்
விடுபட வாய்ப் பில்லை என வாதிட்டனர். இது
ஆங்கில ஆட்சியை நியாயப்படுத்துவதற்கா கக்
கிறித்துவ மதப் பரப்பாளர்களும் பயனெறி முறை
பண்பாட்டாளர்களும் முன்வைத்த கருத்தென்பதை ச்
சொல்லத் தேவையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
இந்தியா மிகப்பெரிய, மிகவும் சிக்கலான
பல்வகைப்பட்ட தன்மைகளைக் கொண்ட
நாடாக இருந்தது. இடத்திற்கு இடம் நிலைமை
மிகவும் மாறுபட்டிருந்தன. காலந்தோறும் சமூகப்
பண்பாட்டுத் தீமைகளுக்கு எதிராக இந்தியச்
சீர்திருத்தவாதிகள் போராடியிருந்த னர். ஆனால்
ஆங்கிலேயரின் அறிவொளிச் சிந்தனைகளுடன்
கூடிய வரவு சந்தேகத்திற்கிடமின்றிப் புதிய சவாலை
முன்வைத்தது இப்பாடப்பகுதி எவ்வாறு நாட்டின்
பல்வேறு பகுதிகளில் சீர்திருத்த இயக்கங்கள்
உதயமாயின என்பதை விவரிக்கின்றது.
மேற்கத்தியப் பண்பாடு, சிந்தனைகள்
ஆகியவற்றின் வளர்ச்சி பத்தொன்பதாம்
நூற்றாண்டில் மரபு சார்ந்த நிறுவனங்கள்
தங்களை உயிர்த்துடிப்புள்ள னவாக மாற்றிக்
கொள்ளக் கட்டாயப்படுத்தின. பத்தொன்பதாம்
நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில்
எதிர்ப்புகளின் வெளிப்பாடுகளும், மாற்றத்திற்கான
வேட்கையும் பல்வகைப்பட்ட சீர்திருத்த
இயக்கங்களின் மூலம் வெளிப்பட்டன.
இவ்வியக்கங்கள் இந்திய மக்களின் மதக்
கண்ணோட்டத்தையும் சமூக நிறுவனங்களை யும்
சீர்திருத்துவதையும் ஜனநாயகப்படுத்துவதையும்
குறிக்கோளாகக் கொ ண்டிருந்தன. புதிய
பொருளாதார சக்திகளின் தோற்றம், கல்வியின்
பரவல், தேசிய மனப்பான்மையின் வளர்ச்சி,
நவீன மேற்கத் திய சிந்தனைகள்-தத்துவங்கள்-
பண்பாட்டின் செல்வாக்கு, ஐரோப்பாவில் ஏற்பட்டுக்
கொண்டிருக்கும் மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு
போன்றவை சீர்திருத்தங்களின் அவசியத்திற்கு
வலுசேர்த்தன. இச்சீர்திருத்த இயக்கங்க ளுக்குக்
கருத்தொற்றுமை வழங்கியது பகுத்தறிவு,
மனிதநேயம், உலகளாவிய மத உணர்வு
ஆகியனவாகும். இக்கண்ணோட்டம் மரபு
சார்ந்தவற்றைப் பகுத்தறிவோ டு அணுகவும்
சமகால சமூக-சமய நடைமுறைகளைச் சமூகப்
பயன்பாடு எனும் பரிமாணத்தில் பார்க்கவும்
உதவின. எடுத்துக்காட்டாக பிரம்ம சமாஜத்தில் ராஜா
ராம்மோகன் ராய் வேதங்க ளில் தவறே இருக்க
முடியாது எனும் கருத்தைப் புறக்கணித்தார். அலிகர்
இயக்கத்தின்போது சையது அகமதுகான்மதம் சார் இவ்விருவகைப்பட்ட இயக்கங்க ளும்
தாங்கள் மீட்டெடுக்கவுள்ள மதம் இழந்துவிட்ட
தூய்மையைப்பற்றி மாறுபட்ட அணுகுமுறைகளைக்
கொண்டிருந்தன. ஒரு சீர்திருத்த இயக்கத்திற்கும்
மற்றொன்றுக்குமான வேறுபாடு, இவை
ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு மரபுகளைச்
சார்ந்திருந்தன என்பதைப் பொறுத்தே அமைந்தது.
அடிப்படையில் சமூக சீர்திருத்த இயக்கங்க ள்
மதச்சீர்திருத்தங்களோ டு ஒருங்கிணைந்த
ஒரு பகுதியாகவே இருந்தது. ஏனெனில்
சமூகத் தீமைகளான சாதியும், ஆண் பெண்
சமத்துவமின்மையும் தங்களின் இருப்பிற்கா ன
நியாயத்தை மதங்களிடமிருந்தே பெற்றன.
தொடக்கத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஒரு
குறுகலான சமூக அடித்தளத்தைக் கொண்டிருந்தன.
சமூகத்தின் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டை
சேர்ந்த அவ்வியக்கங்க ள் தங்க ளின் நவீன
சிந்தனைகள் நிலவிவரும் சமூக எதார்த்தங்களோடு
இணைந்து செல்வதற்கான முயற்சிகளை
மேற்கொண்டன. அதன் பின்னர் சமூக
சீர்திருத்த இயக்கங்க ள் சமூகத்தின் அடிப்படைக்
கட்டுமானத்தை மறுகட்டமைப்பு செய்வதென்பது
சமூகத்தின் கீழ் அடுக்குகளுக்குள்ளும் கசியத்
துவங்கின. பொது விவாதங்க ள், ஆய்வுக்
கட்டுரைகள், பத்திரிகைகள் ஆகிய வடிவங்களில்
அறிவுஜீவிகளிடையே நடைபெற்ற அனல் பறக்கும்
விவாதங்கள், புதிய சிந்தனைகளை மக்களிடையே
கொண்டு செல்வ திலும் பழைய சிந்தனை களைப்
புதிய வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்வதிலும்
பெரும்பங்கு வகித்தன.
பிரம்ம சமாஜம் (1828) :
ராஜா ராம்மோகன் ராய் பல்துறை புலமை
பெற்றவராவார். அவர் 1828இல் பிரம்ம சமாஜத்தை
நிறுவினார். “எங்கும் நிறைந்துள்ள, கண்டறிய
முடியாத, மாற்ற முடியாத, இவ்வுலகத்தை
உருவாக்கி பாதுகாக்கும் சக்தியை வணங்கி
வழிபடுவதில் பிரம்ம சமாஜம் உறுதியாயிருந்தது.
இந்து மதத்தைத் தூய்மைபடுத்தல், ஒரு கடவுள்
வழிபாட்டைப் போதித்தல், மனித கண்ணியத்திற்கு
முக்கியத்துவம் தருதல், உருவ வழிபாட்டை
எதிர்த்தல், சமூகத் தீமையான உடன்கட்டை
ஏறுதலை ஒழித்தல் ஆகியன அவருடைய
நீண்டகாலத் திட்டங்களாகும். ஆங்கிலேயக்
கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு
பெற்ற அவர் பாரசீகம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல
மொழிகளில் உரையாடக் கூடியவர். அவருடைய
சிந்தனைகளும் செயல்பா டுகளும் சமூக
சீர்திருத்தங்களின் வழியாக மக்களை அரசியல்
ரீதியாக உயர்வடையச் செய்வதை இலக்காகக்
கொண்டிருந்தன. அவர் மனித நேயமற்ற
சமூகப்பழக்கமான உடன்கட்டை ஏறுதலுக்கு
எதிரான மனவுறுதிமிக்க போராளியாவார்.
1818 இல் அவர் எழுதிய “கைம்பெண்களை
உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும்
எதிர்ப்போருக்குமிடையே நடைபெற்ற விவாதம்”
எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையில் எந்த
மதமும் கைம்பெண்களை உயிரோ டு எரிப்பதை
ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை புனித
நூல்களைச் சுட்டிக்காட் டி நிரூபித்தார் . கம்பெனி
1829இல் ஒரு சட்டத்தை இயற்றி அதன்மூலம்
உடன்கட்டை ஏறுதல் குற்றம் என அறிவித்ததன்
மூலம் அவருடைய முயற்சிகள் வென்றன. பிரெஞ்சுப் புரட்சியின்
கோ ட ்பா டு க ள ா ல்
ஈர்க்கப்பட்டு ஐரோப்பா
சென்ற ராஜா ராம்மோகன்
ராய் பிரிஸ்டல் நகரில்
மரணத்தைத் தழுவினார்.
த க்க சமயத்தி ல் தேவேந்திரநாத் தாகூர்
(ரவீந்திரநாத் தாகூரின் தந்தையார்) புத்துயிர்
ஊட்டாமல் இருந்திருந்தால் இவ்வியக்கம் விரைவாக வீழ்ந்திருக்கும்.
அவருக்குப்பின் 1857 முதல் கேசவ் சந்திர
சென் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்.
இவ்வமைப்பின் வலுவை 1865இல் அது பெற்றிருந்த
54 கிளைகளின் எண்ணிக்கையிலிருந்து தெரிந்து
கொள்ளலாம். (வங்காளத்தில் 50 கிளைகள்,
வடமேற்கு மாகாணத்தில் 2, பஞ்சாப்பில் 1,
தமிழ்நாட்டில் 1 என மொ த்தம் 54 கிளைகள்)
காலப்போக்கில் பிரம்ம சமாஜம் இரண்டாகப்
பிரிந்தது. அவை தேவேந்திரநாத் தாகூரின்
தலைமையில் இயங்கிய ‘இந்திய பிரம்ம சமாஜம்’,
கேசவ் சந்திர சென்னுடைய ‘சதாரன் பிரம்ம சமாஜ்’
என்பனவாகும்.
பிரார்த்தனை சமாஜம் (1867) :
ிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பான
பிரார்த்தனை சமாஜம் 1867இல் பம்பாயில்
ஆத்மராம் பாண்டுரங் என்பவரால் நிறுவப்பட்டது.
எம்.ஜி. ரானடே, ஆர்.ஜி. பண்டார்க்கர் ஆகியோர்
இவ்வமைப்பில் சேர்ந்து அமைப்புக்கு வலிமை
சேர்த்தனர். பிரார்த்தனை சமாஜம் ஓர்அமைப்பு என்ற
அளவில் பெரும் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை.
ஆனால் அவ்வமைப்பின் உறுப்பினர்களான
ரானடே, பண்டா ர்க்கர் , கே.டி. தெலங் போன்றோர்
மகாராஷ்டிராவின் பத்தொன்பதாம் நூற்றாண்டைச்
சேர்ந்த மாபெரும் தலைவர்களாவர். பின்வந்த
ஆண்டுகளில் அவர்கள் சமூக சீர்திருத்த
இயக்கங்களை நிறுவினர்.
பிரார்த்தனை சமாஜம் பிரம்ம சமாஜத்தைப்
போன்றதே என்றாலும் அது மகாராஷ்டிராவைச்
சேர்ந்த துறவிகளின் பக்தி மரபுகளோ டு
உளப்பூர்வமான தொ டர்பைக் கொ ண்டிருந்தது.
பிரார்த்தனை சமாஜம், சமூகத்தின்
கடைநிலையிலுள்ள பெண்கள், தொழிலாளர்
ஆகியோருக்குக் கல்வி வழங்குவதன் மூலம் தனது
பணியைத் தொடர்ந்தது. சமபந்தி விருந்து, சாதி
மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள்
மற்றும் தாழ்த்தப்பட்டோரின் மேம்பாடு ஆகிய
சமூக சீர்திருத்தப் பணிகளில் ஆழ்ந்த கவனம்
செலுத்தியது.
ரானடேயின் முயற்சியால் உருவாக்கப்பட்ட
தேசிய சமூக மாநாடு என்னும் அமைப்பு ஒவ்வொரு
ஆண்டும் இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாடு
(1885) நடைபெற் று முடிந்தவுடன் கூடும். ஆழமான
அறிவும் கூர்மைத்திறனும் கொண்ட நீதியரசர்
ரானடேயின் வழிகாட்டுதலில் பிரார்த்தனை
சமாஜம் மேற்கிந்தியப் பகுதியில் சமூக
சீர்திருத்தத்தின் செயலூக்கமிக்க மையமானது.
விதவை மறுமணச் சங்கம் என்னும் அமைப்பை
உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். மேலும்
தக்காணக் கல்விக் கழகம் என்னும் புகழ் பெற்ற
அமைப்பைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றார்.
நாட்டுக்குத் தன்னலமற்றச் சேவை செய்வதற்கு
எத்தகைய கல்வி அவசியமோ அக்கல்வியை
இளைஞர்களுக்கு வழங்குவதை இவ்வமைப் பு
நோக்கமாகக் கொண்டிருந்த து. ரானடே 1901இல்
இயற்கை எய்திய போது சந்தவர்க்கர் தலைமைப்
பொறுப்பேற்ற
பிரம்மஞான சபை (1875)
இந்திய அறிவுஜீவிகள், தாங்கள் மேற்கத் திய
அறிவொளி மற்றும் பகுத்தறிவு இயக்கங்களால்
விழிப்புணர்வு அடைந்ததாக உணர்ந்த நேரத்தில்
மேலை நாடுகளின் சிந்தனை யில் ஒரு சோர்வு
எற்பட்டு அது ஆன்மவிடுதலைக்கு கிழக்கு நாடுகளை
அணுகியது. இச்சிந்தனைப் போக்கிலிருந்தே பிரம்ம
ஞான சபை உதயமானது. இவ்வமைப்பு 1875இல்
பிளாவட்ஸ்கி அம்மையார், கர்னல் ஆல்காட்
ஆகியோரால் அமெரிக்காவில் நிறுவப்பட்டது.
1879இல் இந்தியா வந்த அவர்கள் 1882இல்
அமைப்பின் தலைமை யிடத்தை ச் சென்னை
அடையாரில் அமைத்தனர். 1893இல் இந்தியாவிற்கு
வந்த அன்னி பெசன்ட் அம்மையாரின் தலைமையில்
பிரம்மஞானசபை வலுப்பெற்று குறிப்பாகப் பல
தென்னிந்திய ஆதரவாளர்களைப் பெற்றது. இந்துப்
பாரம்பரியத்தை மேற்கத்திய அறிவுஜீவிகள்
ஒத்துக்கொண்டதில் அவர்கள் பெருமை
கொண்டனர். தென் னிந்தியாவின் பல பகுதிகளில்
பிரம்மஞான சபையின் கிளைகள் உருவாயின. பல
முரண்பாடுகளுக்கு உள்ளானாலும் இவ்வமைப் பு
இந்தியாவில் பௌத்தம் மீண்டும் உயிர்
பெற்றதில் முக்கியப் பங்கு வகித்தது. முற்போக்குச்
சிந்தனையாளரான அயோத்திதாச பண்டிதர்,
ஹென்றி ஆல்காட்டுடன் கொண்ட தொடர்பின்
காரணமாக நவீன பௌத்தத்திற்கு அறிமுகமானார்.
ஆல்காட் அயோத்திதாசரை இலங்கைக்கு
அழைத்துச் சென்றார். அங்கு அவர் புகழ்பெற்ற
மீட்பு வாதிகளான அனகரிகா தர்மபாலா, ஆச்சாரிய
சுமங்களா உட்பட பல பௌத்த பிட்சுக்களைச் 1827இல் பிறந்த ஜோதிபா பூலே மாலி (தோட்ட
வேலை செய்வோர்) சமூகத்தைச் சேர்ந்தவராவார்.
தொடக்கக் கல்வியைக் கிறித்தவ சமய நிறுவனப்
பள்ளியில் கற்ற அவர் இடையில் கல்வியைத்
தொடர முடியாமல் நின்றுவிட்டார். ஜோதிபா பூலே
மேல் சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக
வாழ்நாள் முழுவதுமான நீண்ட போராட்டத்தை
மேற்கொண்டார். உண்மையை அறிந்துகொள்ள
வேண்டுமெ ன்ற தாகத்தினால் வேதங்கள்,
மனுசங்கிதை, புராணங்கள், புத்தர் , தீர்த்தங்க ரர்
ஆகியோரின் கருத்துகள், இடைக்கால பக்தி
இயக்கத்தைச் சேர்ந்த சமயப் பெரியோ ர்கள்
என மிக விரிவான வாசிப்பை மேற்கொண்டார்.
மேற்கத்திய சிந்தனைகளோ டும் கிறித்தவம்,
இஸ்லாம் ஆகிய மதங்களோடும் தன்னைப்
பரிச்சயப்படுத்திக் கொண்டார். ஒட்டுமொத்தப்
பண்பாட்டையும் மரபுகளையும், பகுத்தறிவு மற்றும்
சமத்துவம் ஆகிய இரண்டு அளவுகோல்களைக்
கொண்டு சீர் தூக்கிப் பார்த்தார். சமத்துவம் எனும்
கொள்கை சாதிய முறையையும் அதிகாரமிக்க
குடும்ப அமைப்பையும் பெண்களின் கீழான
நிலையினையும் ஒட்டுமொத்தமாக மறுக்க
கோரியது. பகுத்தறிவு எனும் கொள்கை மூட
நம்பிக்கைகளும் சடங்குகளும் நீக்கப்பட
வேண்டுமெனக் கோரியத 1857 பெருங்கிளர்ச்சியும், அது ஆங்கிலேயரால்
கொடூரமாக அடக்கப்பட்டதும் தெற்கா சிய
முஸ்லிம்களின் மீது பாதகமான தாக்கத்தை
ஏற்படுத்தின. 1857 எழுச்சிக்கு முஸ்லீம்களே
காரணம் என்று ஆங்கிலேயர் சந்தேகித்த நிலையில்,
முஸ்லீம்களும் காலனிய நவீனத்துவம் வழங்கும்
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளா மல்
வீடுகளுக்குள்ளேயே சுருங்கியிருந்தனர். இதன்
விளைவாக முஸ்லீம்க ள் கல்வியிலும் அரசு
வேலை வாய்ப் புகளிலும் பின்தங்கியிருந்த னர்.
இச்சூழலில் ஒரு சில பதிற்றாண்டுகளுக்குப் பின்னர்
முஸ்லீம்களுக்கிடையே சில சீர்திருத்த இயக்கங்கள்
தோன்றின.
Comments
Post a Comment