அறிமுகம் :
ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம் :
1922இல் ஒத்துழையாமை இயக்கம்
நிறுத்தப்பட்டதும், 1924இல் கலீஃபா பதவி
ஒழிக்கப்பட்டதும் முஸ்லிம்களிடையே பெருத்த
ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஒத்துழையாமை
இயக்கத்தின் பின் விளைவாகக் காங்கிரசுக்கும்
கிலாபத்துக்கும் இடையேயான உறவு சிதைந்தது.
1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் அடிப்படையில்
உருவாக்கப்பட்ட சுயாட்சி நிறுவனங்களில் தங்கள்
அரசியல் கோரிக்கைகளுக்காக இந்துக்களும்
முஸ்லிம்களும் போட்டியிட்டனர் அதிகாரத்திற்கும்
பதவிகளுக்குமான இப்போட்டியின் விளைவாக புதிதாக
வகுப்பவாத வன்முறைகள் பெருகின. ஆகஸ்ட் 1923இல்
வாரணாசியில் நடைபெற்ற இந்து மகாசபையின்
ஆறாவது மாநாட்டில் 968 பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர். அவர்களில் 56.7 விழுக்காட்டினர் ஐக்கிய
மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். ஐக்கியமாகாணம்,
பஞ்சாப், டெல்லி, பீகார் ஆகியவை 86. 8 விழுக்கா ட்டுப்
பிரதிநிதிகளை அனுப்பி வைத்தன. சென்னை
பம்பாய், வங்காளம் ஆகிய மூன்றும் 6.6 விழுக்காடு
பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தன. 1920கள்
காங்கிரசிற்கு சோதனைகள் மிகுந்த காலமாகும்.
இம்முறை ஐக்கிய மாகாணத்தில் ஏற்பட்ட வகுப்புவாதப்
பதட்டத்திற்கு இந்து முஸ்லிம் தலைவர்களின் மத
ஈடுபாடு மட்டும் காரணமல்ல. சுயராஜ்யவாதிகளுக்கும்
தாராளவாதிகளுக்குமான (Liberal Party) அரசியல்
போட்டிகளும் தூண்டுகோலாய் அமைந்தன. அலகாபாத்தில் மோதிலால் நேருவும்
மதன்மோகன் மாளவியாவும் ஒருவரையொருவர்
எதிர்த்தனர். 1923இல் நடைபெற்ற நகரசபைத்
தேர்தலில் மோதிலால் நேருவின் குழுவினர்
வெற்றி பெற்றதால், மாளவியாவின் அணியினைச்
சேர்ந்தோர் மத உணர்வுகளைச் சுயநலத்திற்குப்
பயன்படுத்தத் தொடங்கினர். விசாரணை
மேற்கொண்ட மாவட்ட நீதிபதி குரோஸ்த்வெயிட்
“மாளவியாவின் குடும்பத்தார் வேண்டுமென்றே
இந்துக்களைத் தூண்டிவிட்டனர். இச்செயல்
முஸ்லிம்களின் மீது எதிர்வினையாற்றியது” எனத்
தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்து மகாசபை :
வகுப்புவாதம் பஞ்சாபில் ஒரு வலுவான
இயக்கமாக முழுமையாக நிலை கொண்டது.
1924இல் பஞ்சாப் மாகாணம் இந்து, முஸ்லிம்
மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென
லாலா லஜபதி ராய் வெளிப்படையாகக் கூறினார்.
அரசியல் களத்தில் இந்துமத மறுமலர்ச்சிக்கு
ஆதரவான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய
இந்துமகாசபை ‘அகண்ட இந்துஸ்தான்’ என்னும்
முழக்கத்தை முன் வைத்தது. இது முஸ்லிம்
லீக்கின் தனித்தொகுதிக் கோரிக்கைக்கு
எதிராக வைக்கப்பட்டதாகும். இந்து மகாசபை
நிறுவப்பட்டதிலிருந்து சுதந்திரப் போராட்டத்தில்
அதன் பங்கு முரண்பட்டதாகவே இருந்தது.
ஆங்கிலேய ஆட்சியை ஆதரிக்காத இந்து மகாசபை,
அதே நேரத்தில் தேசிய இயக்கத்திற்கும் தனது
முழுமையான ஆதரவை நல்கவில்லை. அந்நிய மேலாதிக்கத்திற்கு எதிராக அனைத்து
வர்க்கங்களின், சமூகங்களின் ஆதரவைத் திரட்ட
வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இருந்தது.
ஆனால் பல்வேறு சமூகங்களின் தலைவர்களால்
சமய உணர்வுமிக்கக் குழுவினரின் ஆதரவை
இழக்க நேரிடும் எனும் அச்சத்தின் காரணமாக
சமயச் சார்பின்மை எனும் கோட்பாட்டை வலியுறுத்த
முடியவில்லை. இக்காலகட்டத்தில் காந்தியடிகளின்
தலைமையில் காங்கிரஸ் பல ஒற்றுமை
மாநாடுகளை நடத்திய போதிலும் அவற்றால்
பயன்களேதும் ஏற்படவில்லை.
முஸ்லிம்களின் டெல்லி மாநாடும் அவர்களின் புதிய கருத்துருக்களும் :
1927 மார்ச் 20இல் டெல்லியில் முஸ்லிம்களின்
மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் நிகழ்வுகள்
ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின்
உன்னத வெளிப் பாடாய் அமைந்தது. மாநாடு
முன்வைத்த நான்கு கோரிக்கைகள் ஏற்றுக்
கொள்ளப்பட்டால், தனித்தொகுதிக்கோரிக்கையை
தாங்கள் கைவிடுவதாக முஸ்லிம்கள்
அறிவித்தனர். அந்நான்கு கோரிக்கைகள்
வருமாறு 1. பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத்
தனியாகப் பிரிப்பது 2. பலுச்சிஸ்தானையும் அதன்
எல்லைகளையும் சீர்திருத்துவது 3. பஞ்சாபிலும்
வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில்
பிரதிநிதித்துவம் 4. மத்திய சட்டமன்றத்தில்
முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடுகள் இட ஒதுக்கீடு டெல்லி முஸ்லிம் மாநாடு வடிவமைத்த புதிய
கருத்துக்களை ஒப்புக்கொள்ளும்படி மோதிலால்
நேருவும் எஸ். ஸ்ரீனிவாசனும் அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டியை வற்புறுத்தினர். ஆனால்
வகுப்புவாத உணர்வுகள் மிகவும் ஆழமாக
வேர்விட்டிருந்ததால் இம்முன் முயற்சிகள்
தோல்வியடைந்தன. இந்து முஸ்லிம் பம்பாயிலிருந்து சிந்துவை பிரிப்பது நிதியாதார
அடிப்படையில் இயலும் என்பதைக் கண்டறிய ஒரு
குழு, முஸ்லிம் பெரும்பான்மையைப் பாதுகாக்கும்
ஒரு உத்தியாக விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்
குறித்து ஆய்வு மேற்கொள்ள மற்றொரு குழு
என இரு குழுக்கள் அமைக்கப்பெற்றன. இரு
பிரிவினருக்குமிடையே ஏற்பட்டிருந்த விரிசலைச்
சுருக்குவதற்கான முயற்சிகளை ஜின்னா
மேற்கொண்டிருந்தார். அவர் இந்து-முஸ்லிம்
ஒற்றுமையின் தூதுவர் என சரோஜினியால்
புகழாரம் சூட்டப்பெற்றவராவார். ஆனால்
1928இல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக்
கட்சிக் கூட்டத்தில், இந்து மகாசபையின்
உறுப்பினர்கள் திருத்தங்கள் அனைத்தையும்
ஒப்புக்கொள்ள மறுத்து, ஒற்றுமைக்கான வாய்ப்புகள்
அனைத்தையும் அழித்தபோது ஜின்னா, தான்
கைவிடப்பட்டதாக வேதனையுற்றார். இதன் பின்னர்
பெரும்பான்மையான முஸ்லீம் தலைவர்கள்
காங்கிரஸிலிருந்து சிறப்பு சலுகைகளைப் பெறுவதைவிட
ஆங்கிலேய அரசாங்கத்தை நாடுவது சாலச் சிறந்தது என உறுதியாக நம்பினர்.
வகுப்புவாதத்தீர்வும் அதன்பின்விளைவுகளும் :
பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதில்
ஆங்கில அரசு உறுதியாய் இருந்தது. இரண்டாவது
வட்டமேஜை மாநாட்டுப் பிரதிநிதிகள் வகுப்புவாத
அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டனர். வட்ட
மேஜை மாநாடுகளின் தோல்விக்குப் பின்னர்
இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்டு
வகுப்புவாதத் தீர்வை அறிவித்தார். அது அரசியல்
சூழலை மேலும் சீர்குலைத்தது 1925இல் உருவாக்கப்பட்ட
ராஷ்ட்ரிய சுயசேவா சங்கம் விரிவடைந்து கொண்டிருந்தது.
அதன் உறுப்பினர் எண்ணிக்கை1,00,000 மாக உயர்ந்தது.
K.B. ஹெட்கேவர், V.D. சவார்க்கர், M.S. கோல்வாகர் ஆகியோர் இந்து
ராஷ்டிரா எனும் கோட்பாட்டை மேலும் விரிவாக்கம்
செய்யும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
“இந்துஸ்தானிலுள்ள இந்துக்கள் அல்லாத மக்கள்
இந்து பண்பாட்டையும் மொழியையும் ஏற்றுக்
கொள்ள வேண்டும்.” அவர்கள் அந்நியர்களாக
இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது
இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும்
உரிமை கோராதவர்களாகவும் இருத்தல் வேண்டும்
என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறினர்.
“இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு
தேசமாக உள்ளோம்” என V.D. சவார்க்கர்உறுதிபடக்
கூறினார். 1934 முதலாகவே தனது உறுப்பினர்கள்
இந்து மகாசபையிலோஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலோ
இணைவதைக் காங்கிரஸ் தடைசெய்தது. ஆனால்
டிசம்பர் 1938இல் தான் காங்கிரஸ் செயற்குழு இந்து
மகாசபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்
காங்கிரசில் உறுப்பினர்களாக இருக்கத் தகுதி
இல்லாதவர்கள் என அறிவித்தது.
முதல் காங்கிரஸ்அமைச்சரவைகள் :
இந்திய தேசிய காங்கிரஸின்தேசியவாதத்தை
உருவகப்படுத்திய மகாத்மா காந்தி ஆரிய சமாஜமும்,
அலிகார் இயக்கமும் முன்வைத்த குறுகிய
தேசியவாதத்தை மறுத்தார். மேலும் பல்வேறு
மதங்களுக்கு அப்பாற்பட்ட, அவற்றைக் கடந்த ஓர்
அரசியல் அடையாளத்தை தோற்றுவிக்க அவர்
விரும்பினார். பல்வேறு சாயல்களைக் கொண்ட
அரசு ஆதரவு பெற்ற வகுப்புவாத சக்திகள் இருந்த
போதிலும் இந்தியாவில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் பெரும் செல்வாக்குப் பெற்ற சக்தியாகத்
திகழ்ந்தது. 1937இல் தேர்தல் நடைபெற்ற
பதினோரு மாகாணங்களில் ஏழு மாகாணங்களில்
காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. மேலும் மூன்று
மாகாணங்களில் மிகப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது.
முஸ்லிம் லீக்கின் செயல் பாடு மோசமாகவே
அமைந்தது. மொத்த முஸ்லிம் வாக்குகளில் 4.8
விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே அது
வெற்றி பெற்றது. காங்கிரஸ், மதச்சார்பற்ற மாபெரும்
மக்கள் கட்சியாக எழுச்சி பெற்றது. ஆனால் அரசு
அதற்கு இந்து அமைப்பு என்ற முத்திரையை இட்டது.
முஸ்லிம் மக்களின் உண்மையான பிரதிநிதியாக
முஸ்லிம் லீக்கை மட்டுமே முன்னிலைப்படுத்தியது.
முஸ்லிம் லீக்கை காங்கிரசிற்கு சமமான
சக்தியாகவே நடத்தியது
மீட்பு நாளாகக் கடைப்பிடித்தல் :
1939இல் இரண்டாம் உலகப்போர் வெடித்தது.
இந்தியாவின் அரச பிரதிநிதியாக இருந்த
லின்லித்கோ இந்தியாவும் போரில் இருப்பதாக
உடனடியாக அறிவித்தார். காங்கிரசைக்
கலந்தாலோசிக்காமல் இம்முடிவு எடுக்கப்பட்டதால்
காங்கிரஸ் மிகவும் ஆத்திரமடைந்தது. காங்கிரஸ்
செயற்குழு மாகாணங்களைச் சேர்ந்த காங்கிரஸ்
அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமாச் செய்ய
வேண்டுமென முடிவு செய்தது. காங்கிரஸ்
அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து
மாகாண ஆளுநர்கள் சட்டமன்றங்களை
தற்காலிகமாக நிறுத்தி வைத்த பின்னர் மாகாண
நிர்வாகப் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக்
கொண்டனர்.காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்ததை மீட்பு
நாளாக 1939 டிசம்பர் 22இல் முஸ்லிம் லீக்
கொண்டாடியது. அன்று பல இடங்களில்
முஸ்லிம்களுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொண்ட
செயல்களுக்கு எதிராகத் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. தேசியவாத முஸ்லிம்களின்
செயல்பாடுகள் இஸ்லாமுக்கு எதிரானதென
பெயரிடப்பட்டு சிறுமைபடுத்தப்பட்டன. இவ்வாறான
சூழலில் 1940 மார்ச் 26இல் லாகூரில் முஸ்லிம்
லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற
கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
முதலில் ஜின்னாவோ, நவாப் ஜாஃபருல்லா
கானோ முஸ்லிம்களுக்கு தனி நாடு உருவாக்குவது
சாத்தியமாகும் என்று கருதவில்லை.
இருந்தபோதிலும் 1940 மார்ச் 23இல் முஸ்லிம் லீக்
பின்வருமாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
தீர்மானத்தின் வாசகங்கள் பின்வருமாறு: "இது
அகில இந்திய முஸ்லிம் லீக்கின், இந்த அமர்வின்ஒருங்கிணைந்த கருத்தாகும்.
கீழ்க்கண்ட கொள்கைகளைக் கொண்டிராத எந்தவொரு
அரசியல் அமைப்புத் திட்டமும் இந்நாட்டில் செயல்பட
இயலாது முஸ்லிம்களுக்கு ஏற்புடையாகவும்
இருக்காது. அதாவது நிலவியல் அடிப்படையில்
நிர்ணயித்து அடுத்தடுத்து அமைந்துள்ள பகுதிகள் மண்டலங்களாக அவற்றின்
எல்லைகள் வரையறை செய்யப்பட வேண்டும்.
தேவைக்கேற்றவாறு மாற்றப்பட்ட, நிலப்பகுதிகளைக்
கொண்டவைகளாக அவைகள் அமைதல்
வேண்டும். முஸ்லிம்களின் எண்ணிக்கையில்
பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் சுதந்திரமான
தனி மாநிலமாக அமைக்கப்படவேண்டும்". பிரிட்டிஷ்
அரசாங்கம் இந்தியாவை விட்டுச் செல்லும் முன்
நாட்டை இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான்
யூனியன் என பிரிவினை செய்ய வேண்டுமென்று
முஸ்லிம் லீக் தீர்மானித்தது
நேரடி நடவடிக்கை நாள் :
1940களின் தொடக்கத்தில் இந்து மற்றும்
முஸ்லிம் வகுப்புவாதங்கள் ஒன்றையொன்று
ஊட்டி வளர்த்தன. 1942இல் நடைபெற்ற
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முஸ்லிம்
லீக் வெளிப்படையாகவே புறக்கணித்தது. 1946இல் அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில்
முஸ்லிம் லீக் மத்திய சட்டமன்றத்தில் தனக்கென
ஒதுக்கப்பட்ட 30 இடங்களிலும் வென்றதோடு, மற்ற
மாகாணங்களில் ஒதுக்கப்பட்ட பெரும்பாலான
இடங்களையும் வென்றது. காங்கிரஸ் கட்சி பொது
தொகுதிகள் அனைத்தையும் வெற்றிகரமாக
கைப்பற்றியது. ஆனால் ஒட்டுமொ த்த பிரிட்டிஷ்
இந்திய மக்களின் குரலாக ஒலிக்கும் கட்சி
அதுமட்டுமே என்ற கருத்தை வலியுறுத்தும் வாய்ப்பை
இழந்தது. 946இல் அரசு செயலாளரான பெதிக் லாரன்ஸ்
தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட
அமைச்சரவைத் தூதுக்குழு காங்கிரஸ்-முஸ்லிம்
லீக் இடையிலான பிணக்கைத் தீர்த்து அதிகாரத்தை
ஒரு இந்திய நிர்வாக அமைப்பிடம் மாற்றம்
செய்யும் நம்பிக்கையோடு புதுடெல்லி வந்தது.
மூன்று உறுப்பினர்களில் ஒருவரான கிரிப்ஸ்
அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்ட வரைவு
தயாரிப்பில் முக்கிய பங்காற்றினார். இத்திட்டமானது
இந்தியாவிற்கு மூன்றடுக்கு கொண்ட கூட்டாட்சி
முறையைப் பரிந்துரைத்தது, இந்த கூட்டாட்சி
முறையில் டெல்லியிலுள்ள மத்திய அரசாங்கம்
ஒருங்கிணைக்கப்பாளராகவும் வெளியுறவு
விவகாரங்கள், தகவல்தொடர்பு, பாதுகாப்பு மற்றும்
ஒன்றிய விவகாரங்களுக்கு மட்டுமான நிதி
வழங்குதல் ஆகிய குறைந்தபட்ச, வரையறுக்கப்பட்ட
அதிகாரங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.
இத்துணைக் கண்டத்தின் மாகாணங்கள்
மூன்று பெரும் குழுக்களாக வகைப்படுத்தப்படும்:
இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட
மாகாணங்களான, பம்பாய் மாகாணம், மதராஸ்
மாகாணம், ஐக்கிய மாகாணம், பீகார், ஒரிசா மற்றும்
மத்திய மாகாணம்ஆகியன குழு - அ - வில் அடங்கும்;
முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட
மாகாணங்களான பஞ்சாப், சிந்து, வடமேற்கு
எல்லைப்புற மாகாணம் மற்றும் பலுச்சிஸ்தான்
ஆகியன குழு - ஆ - வில் அடங்கும்; முஸ்லிம்களை
பெரும்பான்மையினராகக் கொண்ட வங்காளமும்
இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட
அசாமும் குழு - இ - யில் அடங்கும். மத்திய அரசுக்கு
ஒதுக்கப்பட்ட துறைகளைத் தவிர மற்ற அனைத்துத்
துறைகளிலும் இந்த மாகாண அரசாங்கங்கள்
தன்னாட்சி அதிகாரம் கொண்டு விளங்கும்.
இக்குழுவில் உள்ள சுதேச அரசுகள் பின்னர்
அந்தந்த குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட்டு
அவற்றின் அருகில் இருக்கும் மாகாணங்களோடு
இணைக்கப்படும். உள்ளூர் மாகாண அரசுகள்
தமது குழுவிலிருந்து வெளியேற வாய்ப்பு தரப்படும்.
ஆனால் அந்த மாகாண அரசின் பெரும்பான்மையான
மக்கள் விரும்பினால் மட்டுமே அது சாத்தியமாகும்.
Comments
Post a Comment