அறிமுகம் :
14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
தில்லி சுல்தானியம் தெற்கே விரிவாக்கத்திற்குத்
தயாரானபோது தக்காண தென்னிந்தியாவும்
நான்கு அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவை
தேவகிரியின் யாதவர் (மேற்குத் தக்காணம்/
தற்போதைய மகாராஷ்டிரா), துவாரசமுத்திரத்தின்
ஹொய்சாலர் (கர்நா டகா), வாரங்கலின் காகதியர்
(தற்போதைய தெலங்கா னாவின்கிழக்குப்ப குதி),
மதுரையின் பாண்டியர் (தென் தமிழ்நாடு) ஆகும்.
1310 ,1304 ஆகிய ஆண்டுகளில் மாலிக் காபூரின்
இரு படையெடுப்புகளில் இந்தப் பழைய அரசுகள்
ஒன்றன்பின் ஒன்றாகத் தோற்கடிக்கப்பட்ட ன;
சேர்த்துவைக்கப்பட்டிருந்த தங்கள் செல்வங்களின்
பெரும் பகுதியையும் தில்லி சுல்தானியத்தின்
படையெடுப்பின்போது இழந்தன. துக்ளக் அரச
வம்சம் தனது படைத்தளபதிகளின் மூலம் தென்னிந்தியப் படையெடுப்புகளை த் தொடர்ந்து
நடத்தியது. முகம்மது பின் துக்ளக் (1325-1351)
பரந்த தன் அரசை சிறப்பாக ஆட்சி புரிவதற்கென
தலைநகரைக்கூட தேவகிரிக்கு மாற்றினார்
(தௌலதாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது).
ஆனால் அம்முயற்சிகள் தோல்வியடைந்து
மக்கள் பெருந்துயரத்திற்கு ஆளாயினர். மீண்டும்
தன் தலைநகரை தில்லிக்கு மாற்றியபோது
அவரின் தென்பகுதி மாகாண ஆளுநர்கள்
தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்தனர்.
இதன் காரணமாக 1333இல் மதுரையில்
சுதந்திரமான மதுரை சுல்தா னியம் உருவானது.
1345இல் வடக்குக் கர்நாடகா வில் ஜாபர்கான்
தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக்கொண்டு
தன் தலைநகரை தேவகிரியிலிருந்து
குல்பர்காவிற்கு மாற்றினார். அவர் பாமன் ஷா
என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரசவம்சத்தைத்
(1347-1527) தோற்றுவித்தார். இதற் கு சில ஆண்டுகளுக்கு முன்பாக 1336ஆம்
ஆண்டு விஜயநகர அரசு சங்கம வம்ச
சகோதரர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால்
துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரை த்
தலைநகராகக் கொ ண்டு (தற்போதைய ஹம்பி)
தோற்றுவிக்கப்பட்டது. அடுத்த நூற்றாண்டுகளில்
இவ்வரசுகள் தங்களுக்குள் வளமா ன ரெய் ச்சூர்
ஆற்றிடைப் பகுதியைக் கட்டுப்படுத்தவும்
இவர்களின் இராணுவத்திற்குத் தேவைப்ப டும்
குதிரைகளை இறக்குமதி செய்யவும், மேற்குக்
கடற்கரையிலுள்ள கோவா, ஹோனாவர்
துறைமுகங்களைக் கட்டுப்படுத்தவும்
இடைவெளியில்லாமல் கடுமையாகப் போரிட்டனர்.இக்காலப் பகுதியைப்
பற்றி அறிய இலக்கியம்,
கல்வெட்டு, தொல்பொருள்
போன்ற பலவகை ஆதாரங்கள் கிடைக் கின்றன.
பாமினி அரசவையிலிருந்த
வரலாற்றாசிரியர்கள், பாமினி,
விஜயநகர அரசுகளுக்கிடையிலான மோதல்கள்
பற்றிப் பாரசீக மொழியில் எழுதிய பல குறிப்புகள்
உள்ளன. அவற்றில் சில சார்புத் தன்மையோடு
மிகைப்படுத்திய தகவல்களைக் கொண்டிருந்தாலும்,
அவை போர்கள், அரண்மனை ச் சதிகள்,
இருதரப்புக்களை சார்ந்த மக்களின் வாழ்க்கை,
துயரங்கள் ஆகியன பற்றிய போர்களைக்கண்ணால்
கண்ட சாட்சியங்களைக் கொண்டுள்ளன.
கல்வெட்டுகளில் அது போன்ற செய்திகள்
இல்லை. விஜயநகர அரசவையின் ஆதரவில்
எழுதப்பட்ட மனுசரிதம், சாளுவபையுதயம் போன்ற
இலக்கியங்கள் விஜயநகர அரசின் வம்சாவளி,
அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களைத்
தருகின்றன. தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட
இலக்கியமான ராயவாசகமு கிருஷ்ணதேவராயரின்
கீழ் இருந்த நாயங்காரர் முறை பற்றிய
ஆர்வமூட்டக்கூடிய தகவல்களைத் தருகின்றது. 14
முதல் 16ஆம் நூற்றாண்டு வரைதென்னிந்தியாவிற்கு
வந்த பல அயல்நாட்டுப் பயணிகள் தங்கள்
பயணங்களைப் பற்றி எழுதியுள்ள னர். அவை
அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய அம்சங்களின்
முக்கியத்துவத்தை அறிய உதவுகிறது.. மொ ராக்கோ
நாட்டைச் சேர்ந்த பயணியான இபன் பதூதா
(1333-45), பாரசீகப் பயணியான அப்துர் ரசாக்
(1443-45), ரஷியப் பயணியான நிகிடின் (1470-74),
போர்த்துகீசிய நாட்டு வணிகர்களானடோமிங்கோ
பயஸ், நூனிஸ் (1520-37) ஆகியோரின் குறிப்புகள்
குறிப்பிடத் தகுந்த முறையில் அதிகமான செய்திகளை
முன்வைக்கின்றன. கன்னடம், தெலுங்கு, தமிழ ஆகிய மொழிகளிலுள்ள ஆயிரக்கணக்கான
கல்வெட்டுகளும் சமஸ்கிருத மொழியிலுள்ள பல
செப்புப் பட்டயங்களும் இலக்கியச் சான்றுகள் தரும்
செய்திகளோடு அதிகச் செய்திகளை வழங்குகின்றன.
கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள்,
மசூதிகள் என வளமான தொல்லியல் சான்றுகளும்
உள்ளன. நாணயச் சான்றுகளும் அதிக அளவில்
கிடைக்கின்றன
பாமினி அரச :
கிருஷ்ணா , துங்க பத்ரா நதிகளுக்கிடையிலான வளமான ரெய்ச்சூர்
பகுதியைக் கைப்பற்றுவதில் பாமினி, விஜயநகர
அரசுகளிடையே ஏற்பட்ட போட்டி பாமினி அரசின்
தொடக்க கால வரலாற்றைக் குறிப்பதோடு
மட்டுமல்லாமல் இரு நூற்றாண்டுகளுக்கு நீடித்த
அம்சமாக இருந்தது. வாரங்கல்லின் கிழக்குப்
பகுதி மற்றும் ஒரிசா ஆட்சியாளர்களுக்கு எதிராக
பாமன்ஷா தன் போராட்டத்தைத் தொடங்கினார்.
சுமூகமான நிர்வாக த்திற்காக தில்லி சுல்தா னியர்
முறையைப் பின்பற்றிய இவர் தன் ஆட்சிப் பகுதியை
நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பகுதிகள் தராப்ஸ்
எனப்பட்டன. பிரிக்கப்பட்டட நான்கு பகுதிகளுக்கும்
ஒவ்வொரு ஆளுநர் நியமிக்கப்பட்டார். அவர்கள அப்பகுதியின் படைகளையும் வழிநடத்தினர்.
குல்பர்கா, தௌலதாபா த், பீடார், பெரார்
ஆகியவை அந்த நான்கு மாகாணங்களாகும்.
மாகாண ஆளுநர்கள் மாகாண நிர்வாகம், வரி
வசூல் போன்றவற்றிற்கு முழுப்பொ றுப்பா வர்.
வலிமையான அரசர்களின் கீழ் நன்கு செயல்பட்ட
இம்முறை, திறமை குன்றிய அரசர்களின் காலத்தில்
ஆபத்தாக மாறியது. 11 ஆண்டுகள் பாமன்ஷா
தன் அரசியல் எதிரிகளை அடக்கி சிறப்பாக ஆட்சி
செய்தார். வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான
ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியவற்றிடமிருந்து
வருடம்தோ றும் கப்ப ம் பெற அவர் மேற்கொண்ட
முயற்சி பல போர்களுக்கு இட்டுச் சென்றது.
அனைத்திலும் அவர் வெற் றிபெ ற்றார். இவர் தான்
பெற்ற வெற்றிகளை நினைவுகூறும் வகையில் தன்
நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம்
அலெக்சாண்டர் என்று பொறித்துக்கொண்டார
கோல்கொண்டா கோட்டை :
ராஜா கிருஷ்ண தேவ் என்ற வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்ட காகத்திய
வம்ச அரசர் கட்டிய கோட்டை இது. 1495-1496இல் இக்கோட்டை சுல்தான் குலிகுதுப்ஷாவிற்கு ஒரு ஜாகீராகத்
(நிலமாக) தரப்பட்ட து. அவர் அக்கோட்டையைக்கருங்கற்கள் கொண்டு புனரமைத்தார். அதன்பின் இக்கோட்டைப்
பகுதி இருந்த நகரம் முகம்மது நகர் எனப்பட்டது. பிற்காலத்தில் பாமினி அரசின் கைவசமாகி, அதன்பின்னர்
குதுப்ஷாகி வம்ச அரசின் தலைநகரானது. குதுப்ஷா கி வம்சத்தின் ஐந்தாவது சுல்தானான முகம்மது குலி
குதுப்ஷா காலத்தில் கம்பீரமான கோட்டையாக கோல்கொண்டா கோட்டை திகழ்ந்தது. பாமினி சுல்தானியத்தின்
வீழ்ச்சிக்குபின் இந்நகரம் வளர்ச்சியடைந்தது. 17ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைரச்
சந்தையாகத் திகழ்ந்தது. கோஹினூர் வைரம் உட்பட மிகச்சிறந்த வைரங்களை உலகிற்கு வழங்கியது.
கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலைமீது 120
மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள து. கோல்கொண்டா கோட்டை அதன் ஒலி அம்ச அடிப்படை யில் சிறந்த
கட்டடக் கலையின் அம்சமாகும். இக்கோட்டையின் உயர்ந்த பகுதி பாலா ஹிசார் என்றழைக்கப்படுகிறது. இதில்
ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதை உள்ளது. அது தர்பார் அறையிலிருந்து மலையின் கீழுள்ள அரண்மனைக்குச்
செல்வதாகச் சொல்லப்படுகின்ற து. இக்கோட்டையில் அரச அவையும் (Durbar Hall) உள்ளது. இதில் ஒரு
மாளிகையும் உள்ளது.
கோல்கொண்டா கோட்டையில் குதுப்ஷா கியின் கல்லறையும் உள்ளது. இதில் இருவிதத் தனி வழிகள்
உள்ளன. இவை கோல்கொண்டா கட்டடக்கலையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகத் கருதப்ப டுகிறது. பீரங்கிகள்,
பாலங்கள், அரச அரண்மனைகள், அறைகள், மசூதிகள், தொழுவங்கள் உட்பட நான்கு சிறிய கோட்டைகளும்
இதனுள் அடங்கும். இக்கோட்டையின் நுழை வாயில் பகுதி பதேதர்வா சா (அ) வெற்றி நுழை வாயில்
என்றழைக்கப்படுகிறது. ஔரங்கசீப் எட்டு மாதங்கள் முற்றுகையிட்டு 1687இல் ஆப்கானிய வாசல் காப்பாளரின்
துரோகம் காரணமாக கோல்கொண்டா கோட்டையை அதன் ஆட்சியாளரிடமிருந்து கைப்பற்றினார
தோற்றமும் விரிவாக்கமும :
விஜயநகரப் பேரரசின் உருவாக்கம்
தொடர்பாக பல மரபுசார்ந்த செய்திகள் உள்ளன.
சமகாலக் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படை யில்,
பொதுவாக ஏற்கப்படும் கருத்து யாதெனில்
சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர், புக்கர்
ஆகியோர் ஹொய்சாள அரசரிடம் சில காலம் பணி
செய்த பின்னர் தங்களை சுதந்திர அரசர்களாக
நிலைநிறுத்திக் கொ ண்டு 1336இல் புதிய
அரசுக்கான அடித்தளத்தை அமைத்தனர். இந்நிகழ் வு
ஹொய்சாள அரசர் மூன்றாம் பல்லாலர், மதுரை
சுல்தானால் கொல்லப்பட்ட பின்னர் நடைபெற்றிருக்க
வேண்டும். தொடக்கத்தில் துங்கபத்திரை நதியின்
வடக்குக் கரையில் அனகொண்டி அருகே தலைநகர்
அமைந்திருந்தது. ஆனால் விரைவில் ஆற்றின்
தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள
நகரமான ஹொசபட்னா (ஹம்பிக்கு அருகே)
என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது. தலைநகரம்
விரிவுபடுத்தப்பட்ட பின்னர் வெற் றியின் நகரம்
என்ற பொருளில் விஜயநகரம் எனப் புதிய பெயர்
சூட்டப்பட்டது. இதன் பின்னர் அவர்கள் தங்களை
விஜயநகர அல்லது கர்நாடக-விஜயநகர அரசர்களாகப்
பிரகடனப்படுத்திக் கொண்டனர். 1346ஆம் ஆண்டு
ஹரிஹரரின் முடிசூட்டுவிழா கொண்டா டப்பட்ட து.
வரலாற்றறிஞர்கள் ஹரிஹரர், புக்கர் தொடங்கிய
இவ்வரச வம்சத்தை அவரின் தந்தையாரின் பெயரில்
அல்லது மூதாதையரின் பெயரில் சங்கம வம்சம் என
அழைத்தனர். விஜயநகர அரசர்கள், சாளுக்கியரின்
முத்திரையான பன்றி (வராகம்) உருவத்தைத்
தங்களது அரச முத்திரையாகக் கொண்டனர தொடக்கத்திலிருந்தே பாமினி விஜயநகர
அரசுகள் தொடர்ந்து மோதிக் கொண்ட ன.
இடங்களைக் கைப்பற்றுதல், கப்பம்
வசூலித்தல், குதிரை வாணிகத்தின் மேலான
கட்டுப்பா டு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே
மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும்.
கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக்கு
இடைப்பட்ட வளம் மிக்க ரெய் ச்சூர் பகுதியை
இணைத்துக்கொள்ளவும், மேலாதிக்கம் செலுத்தவும்
இருவருமே விரும்பினர். ஆனால் இருவராலும்
முழுமையான வெற்றியைப் பெற இயலவில்லை.
நிலையற்ற சிறிய வெற்றிகளுக்காகப் பெருமளவில்
ரத்தம் சிந்தப்பட்ட து. சில வரலாற்று ஆய்வா ளர்கள்
இந்து விஜயநகரத்திற்கும் இஸ்லாமிய
பாமினி அரசுகளுக்கு இடையே நிலவிய மதப்
பகைமையே தொடர்ந்த போர்களுக்கா ன
அடிப்படைக் காரணமென்று கருதுகின்ற னர்.
ஆனால் உண்மையில் விஜயநகர அரசர்கள்
முஸ்லீம்கள் அல்லாத இந்து அரசுகளான
வாராங்கல், கொண்டவீடு, ஒரிசா ஆகியவற்றுடன்
போரிட்டபோது முஸ்லீம் அரசுகள் சில சமயம்
விஜயநகருக்கு ஆதரவாகவும் சில சமயம்
எதிர்தரப்புக்கு ஆதரவாகவும் பங்கேற்றனர்.
கோவா மற்றும் ஏனைய துறைமுகங்கள் வழியாக
நடைபெற்ற குதிரை வாணிகத்தைத் தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வ தில் ஏற்பட்ட
போட்டி இப்போர்களுக்கு மற்றொரு காரணமாகும்.
தொடர்ந்து போரிட்டுக்கொண்டாலும் கிருஷ்ணா
நதியே ஏறக்குறைய இவ்விருவரை யும் பிரிக்கும்
எல்லைக் கோடாக அமைந்திருந்தது.
ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில்
அதிகாரத்திற்கான போட்டி ஒரிசாவைச் சேர்ந்த ிஜயநகரால் பெரும் வெற்றி என எதையும்
பெற இயலவில்லை. இரண்டாம் தேவராயர்
(1422-46) ஒரியர்களைச் சில போர்களில்
தோற்கடித்தார். இப்போர்கள் அனைத்தும் கப்ப ம்
வசூல் செய்வதற்காகவே நடைபெ ற்றன. இடங்கள்
கைப்பற்றப்பட்டு இணைக்கப்படவில்லை. சங்கம
வம்ச அரசர்களுள் மிகச் சிறந்த அரசர் இரண்டாம்
தேவராயர் ஆவார். தன்னுடைய குதிரைப்
படையின் வலிமையைப் பெருக்குவதற்காக ப்
பயிற்சி பெற்ற முஸ்லீம் குதிரைப்படை வீரர்களைத்
தனது படைகளில் சேர்த்துக் கொண்டார்.
இரண்டாம் தேவராயரின் காலத்தில் இங்கு வந்த
பாரசீக நாட்டின் தூதுவர் அப்துர் ரஸாக் கொ ச்சி
சாமரின் அரசவைக்கும் விஜயநகரத்திற்கும்
வருகை தந்தா ர். இரண்டாம் தேவராயர்
மிகப்பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தினார்
என்று குறிப்பிடுகின்றார். இரண்டாம் தேவராயர்
இலங்கை அரசனிடமிருந்தும் கப்பம் பெற்றார்.
இரண்டாம் தேவராயருக்குப் பின்னர்
பிரச்சனைகள் தலைதூக்கின. வாரிசுரிமைச்
சண்டைகளும் திறமையற்ற அரசர்கள் ஆட்சிப்
பொறுப்பேற்றதின் விளைவாக கஜபதி அரசர்கள்
ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் ஆதிக்கம்
செலுத்தினர். 1460-65க்கும் இடைப்பட்ட காலப்
பகுதியில் கஜபதி படைகள் பலமுறைதாக்குதல்களை
மேற்கொண்டன. மேலும் திருச்சிராப்பள்ளி
வரை வெற்றிகரமாகப் படையெடுத்து
வந்த கஜபதி படைக ள் பெரும் அழிவுகளை
ஏற்படுத்தியதோடு கோவில்களின் செல்வத்தை யும்
கொள்ளையடித்தன. இச்சூழலை சாதகமாகப்
பயன்படுத்திய குறுநில மன்னர்கள் சுதந்திர
அரசர்களாயினர். சாளுவ வம்ச அரசர்களின் எழுச்சி
வரை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி பகுதிகளில்
திருமலைத்தேவர், கோனேரித்தேவர் போன்ற
குறுநில மன்னர்கள் ஒரு சில பத்தா ண்டுகள்
சுதந்திர அரசர்களைப் போல ஆட்சி நடத்தினர்.
காலத்தின் நகர்வில் அரசியல் அதிகாரம்
நம்பிக்கைக்குரிய தளபதி சாளுவ நரசிம்ம ரின்
கைகளுக்குச் சென்றது. அவர் கஜபதிகளிடமிருந்து கிருஷ்ணதேவராயரின் மருமகனான ராமராயர்
அச்சிறு வயது இளவரசனுக்குப் பட்டம் சூட்டுவதன்
வழியாக அரசியல் மேலாதிக்கம் செலுத்த
விரும்பினார். இருந்தபோதிலும் அச்சுதராயருக்கு
செல்லப்பா (சாளுவநாயக்கர் என்றும்
அறியப்படுபவர்) என்பாரின் ஆதரவு இருந்தது.
அக்கால கட்ட த்தில் சிறப்பிடம் வகித்த இவர்
தமிழகத்தின் பெரும்ப குதியைத் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தார். காலப்போக்கில் இவரே
கிளர்ச்சியில் ஈடுபட அச்சுதராயர் பெரும்படையோடு
தென்னகம் வந்து இவரை அடக்கினார். அச்சுத
தேவராயர் பாமினி சுல்தான்களோடும் சில
போர்களை மேற்கொண்டா ர். 1542 இல் அவர்
மரணமடைந்தபோது அவருடைய ஒன்றுவிட்ட
சகோதரர் அரச பதவியேற்று ஏறத்தாழ முப்பது
ஆண்டுகள் ஆண்டார் (1542-70). ஆனால்
உண்மையான அதிகாரம் ராம ராயரின்கைக ளில்
இருந்தது. பல நெருங்கிய உறவினர்களின் (ஆரவீடு
வம்சாவளியினர்) ஆதரவு அவருக்கு இருந்தது.
அரசின் பல முக்கியப் பொறுப்புகளில் அவர் தன்
உறவினர்களை அமர்த்தினா அந்நாயக்குகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
குதிரை, காலாட்படை வீரர்களைப் பராமரித்து
தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச்
சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் எனவும்
நூனிஸ் குறிப்பிடுகின்றார். மேலும் அவர்கள்
ஒவ்வொரு ஆண்டிலும் சில குறிப்பிட்ட
ஒன்பது நாள் இராம நவமித் திருவிழா
போன்ற சமயங்களில் அரசருக்குக் குறிப்பிட்ட
அளவு வருவாயை வழங்க வேண்டும்.
நூனிஸின் கூற்றை ‘ராயவாசகமு’ என்னும்
தெலுங்கு நூல் உறுதிப்படுத்துகிறது. இந்நூல்
கிருஷ்ணதேவராயரின் காலத்தில் இம்முறை
நடைமுறையில் இருந்ததைக் கூறுகிறது.
பிற்காலத்தை ச் சேர்ந்த பாளையக்கா ரர்களின்
வம்சாவளிகள் (அவர்களில் பெரும்பாலோ ர்
பழைய நாயக்கர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்)
இந்நாயக்க முறையானது கிருஷ்ணதேவராயர்
காலத்தில் நிறைவு பெற்றது எனக்
குறிப்பிடுகின்றன. பெரும்பா லான நாயக்கர்கள்
கன்னடம், தெலுங்கு பேசுபவர்கள். இவர்கள்
போர்த்தளபதிகளாகவும் இருந்த னர். உள்ளூர்த்
தலைவர்களாகவும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
நாயக்குகள் பிராம ண, பிராம ணர் அல்லாத
பல சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருந்தனர்.
பிராமணரல்லாத நாயக்குகள் பல்வேறு சமூகப்
பின்னணியைக் கொண்டிருந்தனர். போர்புரியும்
மரபினைச் சார்ந்தவர்களாகவும், மேய்ச்சல்
தொழில் செய்பவர்களாகவும், வனங்களில்
வாழும் குலத்தோ ராகவும் (யாதவர், பில்லமர்),
விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும்
(ரெட்டி) வணிகர்களாகவும் (பலிஜா) இருந்த னர்.
கிருஷ்ணதேவராயரிடம் பணிபுரிந்த செல்லப்பா
போன்ற மிகச்சிறந்த நாயக்குகள் பிராமணர்கள்
ஆவர்.
நாட்டைக் காத்து, ஆந்திரக் கடற்கரை பகுதிகளை
மீட்டார். 1485இல் அரசாட்சியைக் கைப்பற் றி
தன்னையே அரசரென அறிவித்து, குறுகிய காலமே
ஆட்சி செய்து சாளுவ வம்சத்தின் ஆட்சியைத்
தொடங்கி வைத்தா ர். அவருடைய தளபதியும்
மாபெரும் போர்வீரருமா ன நரச நாயக்கர்
அவருக்குத் துணை நின்றார். அவர் தென்பகுதியில்
கலகத்தில் ஈடுபட்ட உள்ளூர் தலைவர்களை
அடக்க முயன்றார். 1491இல் சாளுவநரசிம்மர்
மரணமடைந்தார். அதற்கு முன்பாக தனது இளம்
வயது மகன்களை நரச நாயக்கரின் பாதுகாப்பில
கஜபதி அரசுக்கும் விஜயநகருக்குமிடையே
நடைபெற்றது. இரண்டாம் தேவராயர் ஆட்சிப் கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசர்களில்
மகத்தானவராகக் கருதப்ப டுகிறார். தனது தந்தையும்
அண்ணனும் அமைத்துக் கொ டுத்த வலுவான
ராணுவ அடித்தளத்தின் மீது அவர் ஒரு பேரரசைக்
கட்டினார். தனது நாட்டின் பெருமைக் குக் குறை
ஏற்படாமலிருக்கப் பல படையெடுப்புகளை
மேற்கொண்டார். தனது ஆட்சியின் தொடக்கத்தில்
மைசூருக்கு அருகேயிருந்த கலக மனப்பான்மை
கொண்ட உம்மத்தூர் குறுநில மன்னனைத்
தோற்கடித்துப் பணியச் செய்தார். இதனைத்
தொடர்ந்து அவர் இரு முனைகளில் போரிட
வேண்டியிருந்தது. ஒன்று பரம்பரை எதிரிகளான
பாமினி சுல்தான்களுடன், மற்றொ ன்று ஒரிசாவின்
கஜபதி அரசர்களுடன். அவருடைய கிழக்குத்திசை
படையெடுப்பின்போது கஜபதி அரசர்களின் வசமிருந்த
உதயகிரி கோட்டையைப் போன்று பல கோட்டைகள்
கைப்பற்றப்பட்டதை ப் பற்றிப் பல கட்வெ ட்டுகள்
தெளிவாக விளக்குகின்றன. முடிவில் அவர் தனது
வெற்றித் தூணை சிம்மாச்சலத்தில் நிறுவினா
பொறுப்பை ஏற்கும்வரை இப்பிரச்சனை யில் கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசர் எனப்போற்றப்படுவதற்கு வேறு
சில காரணங்களும் உள்ளன. ஸ்ரீசைலம், திருப்பதி,
காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,
சிதம்பரம் ஆகிய இடங்களிலுள்ள சைவ, வைணவக்
கோவில்களுக்குப் பெருமளவில் கொடையளித்தார்.
பல கோவில்களில் அவர் எழுப்பிய கோபுரங்கள்
இன்று வரை உள்ளன. விஜயநகருக்கு வருகை
தந்த சமகாலத்து வெளிநாட்டுப் பயணிகளான
நூனிஸ், பயஸ் போன்றோர் அவருடைய ஆளுமை
குறித்தும் விஜயநகரத்தின் உயர் நிலை, செல்வச்
செழிப்பு ஆகியன பற்றியும் பாராட்டுகளை விட்டுச்
சென்றுள்ளனர். அவருடைய அரசவையை
அல்லசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணாபோன்ற
தலைசிறந்த புலவர்கள் அலங்கரித்தனர். கிருஷ்ண
தேவராயரே பெரும் அறிஞராக கருதப்ப டுகிறார்.
ஆமுக்தமால்யதா (ஆண்டாளின் கதை) எனும்
நூலை இயற்றியுள்ளா ர். ஆனாலும் அவருடைய
தலை சிறந்த சாதனை , ஒரு மதிநுட்பம் மிக்க
நிர்வாகியாக அவர் நாயக்கர் அல்லது நாயங்கா ரா
முறையை மறுசீரமைப்பு செய்து அதற்கு சட்ட
அங்கீகாரத்தையும் கொடுத்ததாகும். அது நிர்வாக
முறை என்ற தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment