அறிமுகம் :
இந்திய தேசிய அரசியலில் முதல்
உலகப்போருக்கு முந்தைய பல நிகழ்வுகள்
தாக்கத்தை ஏற்படுத்தின. 1905இல் ஜப்பான்
ரஷ்யாவை வீழ்த்தியது. 1908இல் இளம்
துருக்கியர்களும் 1911இல் சீன தேசியவாதிகளும்
மேற்கத்திய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளைப்
பயன்படுத்தி தத்தமது அரசுகளை அகற்றினார்கள்.
முதல் உலகப்போருடன் இந்த நிகழ்வுகளும்
1916 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய
தேசியத்துக்கானப் பின்னணியை உருவாக்கின.
சண்டைகள் பல பகுதிகளில் நடந்தபோதிலும்
இந்தப் போரின் முக்கியக் களமாக ஐரோப்பா
விளங்கியது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும்
மேற்கு ஆசியாவில் ராணுவ சேவை புரிய பெரும்
எண்ணிக்கையில் இந்தியர்களை ஆங்கிலேயர்கள்
பணிக்கு எடுத்தனர். இந்தப் போருக்குப்பின் புதிய
சிந்தனைகளுடன் இந்தியா திரும்பிய இந்த வீரர்கள்
இந்திய சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
வற்புறுத்தலின் காரணமாக 367 மில்லியன் பிரிட்டிஷ்
பவுண்டுகளை இந்தியா, 229 மில்லியன் பிரிட்டிஷ்
பவுண்டுகளில் நேரடி ரொக்கமாகவும் எஞ்சிய தொகையைப் போர்ச்செலவுகளைச் சமாளிக்க
கடனாகவும் வழங்கியது. இதைத்தவிர 250 மில்லியன்
பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்புக்குப் போருக்கானப்
பொருட்களையும் இந்தியா அனுப்பியது. இதனால்
பெருமளவில் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டதால்
இந்தியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத
தேசியவாதிகள், தீவிரத் தேசியவாதிகள் என
இருவேறு வகைகளில் பிரிந்த காரணத்தாலும்
போரின்போது பிரிட்டிஷாரின் நலன்களுக்கு
ஆதரவாக முஸ்லிம் லீக் செயல்பட்டதாலும் தேசிய
அரசியல் தீவிரமற்று இருந்தது. 1916இல் திலகர்
தலைமையில் தீவிரத் தேசிய தன்மையோடு
செயல்பட்டவர்கள் காங்கிரசை கட்டுப்படுத்தினர்.
மேற்கத்திய இந்தியாவில் திலகர் தலைமையிலும்
தென்னிந்தியாவில் டாக்டர் அன்னிபெசண்ட்
அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி (ஹோம்
ரூல்) இயக்கம் தொடங்கப்பட்ட து. இந்தப் போரின்
போது காங்கிரஸ் மீண்டும் ஒன்றுபட்டது. 1916இல்
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே
கையெழுத்தான லக்னோ ஒப்பந்தம் இந்திய
தேசியத்துக்கு மேலும் வலிமை சேர்த்தத இந்தப் போரின்போது தீவிர தேசியவாதிகளின்
சிந்தனைகளை மேற்கத்தியப் புரட்சிகர கருத்துகள்
பெருமளவில் ஆக்கிரமித்தன. எனவே அடக்குமுறைச்
சட்டங்களை இயற்றியும் பயன்படுத்தியும் தேசிய
இயக்கத்தை அடக்கியாள ஆங்கிலேய அரசு முயன்றது.
கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களில் மிகக்
கொடுமையானதாக ரௌலட் சட்டம் அமைந்தது.
இந்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்த இந்தியத்
தலைவர்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை
நடத்தினர். சர்வதேச நிகழ்வுகளும் குறிப்பாக ரஷ்யப்
புரட்சி போன்ற நிகழ்வுகளும் இந்தியாவின் மீது
தாக்கத்தை ஏற்படுத்தின. முதல் உலகப்போரில்
துருக்கி த ோற்றதும், அதன்பின் கையெழுத்தான
செவ்ரேஸ் உடன்படிக்கையின் கடுமையான
விதிமுறைகளும் துருக்கியின் சுல்தானை (கலிபா)
நிலைதாழ்த்திக் காட்டியது. இதன் விளைவாக
கிலாபத் இயக்கம் தோன்றியது.
இந்தியாவின் விசுவாசத்துக்குப் பிரிட்டன்
உரிய மதிப்பளிக்கும் என்று நம்பி இந்தியாவும்
இந்தியர்களும் இந்தப் போரில் தீவிரமாகச்
செயல்பட்டனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
அவ்வாறாக இந்தியாவின் சமூகம், பொருளாதாரம்
மற்றும் அரசியலில் பலதரப்பட்ட பாதிப்புகளை
இந்தப் போர் உண்டாக்கியது. இந்தப் பாடத்தில்
தன்னாட்சி இயக்கத்தின் பங்கு, லக்னோ ஒப்பந்தம்
கையெழுத்தாவதற்கான காரணிகள் மற்றும் அந்த
ஒப்பந்தத்தின் அம்சங்கள், ஜாலியன் வாலாபாக்
படுகொலையில் முடிவடைந்த ஆங்கிலேயர்களின்
அடக்குமுறை நடவடிக்கைகள், கிலாபத் இயக்கம்,
முறைசார்ந்த தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி
ஆகியன குறித்து நாம் விவாதிக்கலாம்
அகில இந்திய தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் :
A.O. ஹுயூம் உள்ளிட்ட பல வெளிநாட்டினர்நமது
விடுதலைப் போரின் தொடக்க காலத்தில் முக்கியப்
பங்கினை ஆற்றினர். இருபதாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார்
இதேபோன்றதொரு முக்கியப் பணியை ஆற்றினார்.
அயர்லாந்தவரான டாக்டர் அன்னிபெசண்ட்,
பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்தின் தன்னாட்சி
இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள் , குடும்பக் கட்டுப்பாட்டு
இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்காற்றினார்.
பிரம்மஞான சபையின சொசைட்டி) உறுப்பினராக அன்னிபெசண்ட்
அம்மையார் இந்தியாவுக்கு 1893இல் வந்தார்.
பனாரஸில் (வாரணாசியில்) மத்திய இந்துக்
கல்லூரியை அவர் நிறுவினார். (பின்னர்
இந்தக் கல்லூரி 1916ஆம் ஆண்டு பண்டித
மதன்மோகன் மாளவியா மூலமாக பனாரஸ் இந்துப்
பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது) 1914இல் பிரிட்டன் முதல் உலகப்போரில்
ஈடுபடும் அறிவிப்பை வெளியிட்ட து. சுதந்திரம் மற்றும்
ஜனநாயகத்துக்காகத் தான் பாடுபடுவதாகவும்
அது தெரிவித்தது. பிரிட்டனின் போர் முயற்சிகளை
இந்தியத் தலைவர்கள் நம்பிக்கையுடன்
ஆதரித்தனர். இந்தியா பற்றிய பிரிட்டிஷாரின்
நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாததால்
விரைவில் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும் இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத
தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதத்தன்மை
உடையவர்கள் என்ற குழுக்களாகப் பிளவுபட்டதால்,
தன்னாட்சிக்கான அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து
மேலும் வலியுறுத்த முடியவில்லை. மையநாடுகளை
ஆதரித்து முதல் உலகப்போரில் துருக்கியின்
சுல்தான் நுழைந்ததை அடுத்து பிரிட்டிஷார் முஸ்லீம்
லீக்கை சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர்.
இந்த பின்னணியில் தான் அன்னிபெசண்ட்
அம்மையார் இந்திய அரசியலில் நுழைந்தார்.
1914இல் தி காமன்வீல் என்ற வாரந்திரியை அவர்
தொடங்கினார். சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக
மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில்
இந்த வாராந்திரி கவனம் செலுத்தியது. 1915இல் “How
India Wrought for Freedom” என்ற தலைப்பிலான
புத்தகத்தைப் பதிப்பித்தார். கடந்த காலத்தில்
ஆழமாக வேரூன்றிய தேசிய விழிப்புணர்வின்
தொடக்கங்களை அவர் இந்தப் புத்தகத்தில் விரிவாக
எடுத்துரைத்தார். இங்கிலாந்தின் கடினமான தருணம்
இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம் என்று
அவர் முழக்கமிட்டார். சீர்திருத்தங்கள் குறித்து
வலியுறுத்துமாறு இந்தியத் தலைவர்களை அவர்
கேட்டுக்கொண்டார். இங்கிலாந்தில் பயணம்
மேற்கொண்ட அவர் இந்திய விடுதலை குறித்து
பல உரைகளை நிகழ்த்தினார். பிரிட்டன்
நாடாளுமன்றத்தில் இந்தியக் கட்சி ஒன்றை
ஏற்படுத்த முயன்று த ோல்வி கண்டார். எனினும்
அவரது பயணம் மூலம் இந்தியா குறித்த அனுதாபம்
ஏற்பட்டது. இந்தியா திரும்பிய அவர், 1915 ஜூலை
14இல் நியூ இந்தியா என்ற தினசரியைத்
தொடங்கினார். பம்பாயில் நிகழ்த்திய உரையில்
தன்னாட்சி குறித்த தனது கொள்கையை அவர்
வெளிப்படுத்தினார். “தன்னாட்சி என்பது நாட்டில்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்
கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு
கடமைப்பட்டவர்களாகவும் விளங்க நடைபெறும்
ஆட்சியாகும்.” ஆங்கிலேயக் காலனிகளைப்
போன்று போருக்குப் பிறகு இந்தியாவுக்கு தன்னாட்சி
கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தைப் பரப்பவும்
கோரிக்கையை வலியுறுத்தவும் அன்னிபெசண்ட்
அம்மையார் பொதுக்கூட்டங்களையும்
மாநாடுகளையும் நடத்தினா அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின்
அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை
துவக்கப்போவதாக அவர் 1915 செப்டம்பர் 28இல்
முறைப்படி அறிவித்தார். மற்றொ ரு தனி இயக்கம்
தொடங்கப்படுவதை மிதவாத தேசியவாதிகள்
விரும்பவில்லை. தனது இயக்கம் வெற்றிபெற
காங்கிரஸ் கட்சியின் அனுமதி தேவை என்பதை
அவரும் அறிந்திருந்தார்.
திலகர், பெசண்ட் அம்மையார் ஆகியோரின்
முயற்சிகளால் டிசம்பர் 1915இல் பம்பாயில்
நடந்த காங்கிரஸ் அமர்வில் தீவிர தேசியத்
தன்மையுடையவர்களை உறுப்பினர்களாகச்
சேர்க்கும் வகையில் தனது விதிமுறைகளில்
அக்கட்சி முறையாக திருத்தம் செய்தது. 1916
செப்டம்பர் மாதத்திற்குள் தன்னாட்சி இயக்கத்தை
கையிலெடுக்குமாறு அந்த மாநாட்டில் காங்கிரஸ்
கட்சியைப் பெசண்ட் கேட்டுக்கொண்டார். அவ்வாறு
செய்யத்தவறினால், தாமே தன்னாட்சி இயக்கத்தை
அமைக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.
ஒன்று திலகர் தலைமையிலும் மற்றொ ன்று
பெசண்ட் அம்மையார் தலைமையிலும்
என 1916இல் நாட்டில் இரண்டு தன்னாட்சி
இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இரு
இயக்கங்களின் வரையறைகளும் தெளிவாக
வகுக்கப்பட்டிருந்தன. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள்: பிரிட்டிஷ் ஆட்சியில்
இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது மற்றும்
தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய
மக்களிடையே ஏற்படுத்துவது ஆகியன அந்த இரண்டு
குறிக்கோள்களாகும்
திலகரின் தன்னாட்சி இயக்கம் :
ஏப்ரல் 1916இல் பெல்காமில் நடந்த பம்பாய்
மாகாண மாநாட்டில் இது நிறுவப்பட்டது. பம்பாய்
நகரம் உட்பட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய
மாகாணங்கள், பெரார் ஆகிய பகுதிகளில் திலகரின்
தன்னாட்சி இயக்கம் செயல்படும். திலகரின்
இயக்கத்துக்கு ஆறு கிளைகள் ஒதுக்கப்பட்டன.
அன்னிபெசண்ட் அம்மையாரின் இயக்கத்துக்கு
இந்தியாவின் எஞ்சிய அனைத்துப் பகுதிகளும்
ஒதுக்கப்பட்டன. தன்னாட்சி குறித்த கோரிக்கைகளை தமது
உரைகள் மூலம் திலகர் பிரபலப்படுத்தினார்.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில்
பிரபலமடைந்திருந்த அவரது இயக்கம்,
ஏப்ரல் 1917இல் 14 ஆயிரம் உறுப்பினர்களில்
இருந்து 1918இன் தொடக்கத்தில் 32 ஆயிரம்
உறுப்பினர்களாக அதிகரித்தது. தன்னாட்சி பற்றிய
கொள்கைகளை பரப்பியதற்காக 1916 ஜூலை 23இல்
தமது அறுபதாவது பிறந்த நாளில் திலகர் கைது
செய்யப்பட்டார்.
தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம் :
காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கங்கள்
தொடங்கப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில்
மக்களை ஒன்றுதிரட்ட தன்னாட்சி இயக்கங்கள்
களம் அமைத்தன. காந்தியடிகளின் சத்தியாக்கிரகப்
போராட்டங்களில் முதன்முதலில் ஈடுபட்டோரில்
பலர் தன்னாட்சி இயக்க உறுப்பினர்கள்.
இந்த இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட
கட்டமைப்புகளைக் காந்தியடிகளின்
போராட்டங்களைப் பரப்புவதற்கு அவர்கள்
பயன்படுத்தினர். அனைத்துவிதப் பிரிவுகளைத்
தாண்டி காங்கிரஸ், முஸ்லிம் லீக், பிரம்மஞான
சபையாளர்கள், தொழிலாளர் அமைப்பினர் என
பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட முதல்
இந்திய அரசியல் இயக்கமாக தன்னாட்சி இயக்கம்
விளங்கியது.
இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம், 1915 :
முதல் உலகப்போரின்போது தேசியவாத
மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக்
கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக
இயற்றப்பட்ட இந்தச் சட்டம், இந்தியப் பாதுகாப்பு
ஒழுங்குமுறைகள் சட்டம் என்று குறிப்பிடப்பட்டது.
உள்ளூர் அரசு நியமித்த மூன்று ஆணையர்கள்
அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயங்கள் சந்தேகத்துக்கு
இடமானவர்கள் மீது வழக்குத் தொடர இந்தச் சட்டம்
அனுமதித்தது. மீறுவோருக்கு இந்தச் சட்டத்தின்
கீழ் வரும் விதிமுறைகளையும் உத்தரவுகளையும்
மீறும் பட்சத்தில் மரண தண்டனை விதிப்பது;
வாழ்நாள் முழுவதற்குமாய் நாடுகடத்துவது;
பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை
ஆகியவற்றை விதிக்க தீர்ப்பாயத்துக்கு இச்சட்டம்
அதிகாரமளித்தது. வழக்கு விசாரணை ரகசியமாக
நடைபெற்றதால் முடிவுகள் மேல்முறையீட்டுக்குத்
தகுதியில்லாதவையாகவும் இருந்தன. இந்தச் சட்டம்
முதல் லாகூர் சதித்திட்ட வழக்கு விசாரணையின்
போது பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப்போர்
முடிவுற்றபின் இச்சட்டத்தின் அடிப்படைகூறுகளுடன்
புதிதாக ரௌலட் சட்டம் உருவானது
கிலாபத் இயக்கம் :
முதல் உலகப்போரில், நேசநாடுகளுக்கு
எதிராக முக்கூட்டு நாடுகளுக்கு ஆதரவாக
துருக்கி சுல்தான் களம் இறங்கி ரஷ்யாவைத்
தாக்கினார். கலீபா மற்றும் இசுலாமிய புனிதத்
தலங்களின் பொறுப்பாளராகத் துருக்கிய சுல்தான்
விளங்கினார். போருக்குப் பிறகு துருக்கியின்
நிலையைப் பலவீனப்படுத்த முடிவுசெய்த பிரிட்டன்
செவ்ரெஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
துருக்கியின் கிழக்குப்பகுதியில் இருந்த சிரியா,
லெபனான் ஆகிய நாடுகள் பிரான்ஸின்
கட்டுப்பாட்டிலும் பாலஸ்தீனமும் ஜோர்டனும்
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலும் இடம்பெற்றன.
கலீபாவின் ஆளுமையை முடிவுக்குக் கொண்டுவர
கூட்டணிப்படைகள் அவ்வாறு முடிவு செய்தன கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது
இசுலாம் மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கலீபா
மீது அனுதாபம் கொண்டவர்கள் அதனால்
இந்நடவடிக்கையை எதிர்க்க முடிவு செய்தனர்.
மௌலானா முகமது அலி, மௌலானா சௌஹத்
அலி என்ற முஸ்லிம் சகோதரர்கள் கிலாபத்
இயக்கத்தைத் தொடங்கினர். அவர்களின்
தலைமையின் கீழ் இந்தியாவில் இருந்த
முஸ்லிம்கள் ஒன்றுபட்டனர். ஆட்டோமன் அரசை
ஆதரிப்பதையும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை
எதிர்ப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்த
இயக்கம் த ோன்றியது. மௌலானா அபுல் கலாம்
ஆசாத், M.A. அன்சாரி, ஷேக் ஷௌகத் அலி சித்திக்,
சையது அதுல்லா ஷா புகாரி ஆகிய பல முஸ்லிம்
தலைவர்கள் இந்த இயக்கத்தில் தங்களை
இணைத்துக் கொண்டனர்.
Comments
Post a Comment