அறிமுகம் :
காலனித்துவ ஆட்சியிலிருந்து கிடைத்த
விடுதலைக்கு ஒரு விலை கொடுக்க
வேண்டியிருந்தது. இந்தியப் பிரிவினை
வங்காளம் மற்றும் பஞ்சாபின் மாகாணங்களை
இரண்டாகப் பிரித்தது. பிரிவினையின்போது
திட்டமிடப்படவில்லை என்றாலும், இந்துக்கள் கிழக்கு
வங்காளத்திலிருந்து மேற்கு வங்காளத்திற்கும்
இஸ்லாமியர்கள் பீகார் மற்றும் மேற்கு
வங்காளத்தில் இருந்து கிழக்கு வங்காளத்திற்கும்
இடம்பெயர ஆரம்பித்தனர், இதேபோல், மேற்கு
பஞ்சாபில் இருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்
கிழக்கு பஞ்சாபிற்கும் கிழக்கு பஞ்சாபில் இருந்த
முஸ்லிம்கள் மேற்கு பஞ்சாபிற்கும் குடிபெயர்ந்தனர்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான
எல்லைப் பகுதியில் அமைந்த கிராமங்கள்
அவற்றில் வாழ்ந்த பெரும்பான்மை மதத்தினரைப்
பொருத்துப் பிரிக்கப்பட்டன. முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள்
பாகிஸ்தானுக்கு எனப் பிரிக்கப்பட்டன; இந்துக்கள்
பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள்
இந்தியாவோடு இணைக்கப்பட்டன. அந்த
கிராமங்களில் வாழ்ந்த சிறுபான்மையினரைப்
பொருத்தமட்டில் அதாவது பாகிஸ்தானுக்கு
ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த இந்துக்களும்
இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த
முஸ்லிம்களும் சிறுபான்மையினராகவே வாழ
வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆறுகள் சாலைகள்
மற்றும் மலைகள் ஆகியன எல்லை வகுப்பதில்
முக்கிய அடையாளமாக கொள்ளப்பட்ட வேறு சில
காரணிகள் ஆகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள
ஆனால், பாகிஸ்தான் நிலப் பகுதியோடு
தொடர்ச்சியாக அமையாத கிராமங்களும்,
இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த, ஆனால்
இந்தியாவோடு நிலத்தொடர்ச்சியாக அமையாத
கிராமங்களும் எந்த நாட்டோடு நிலத்தொடர்ச்சி
உள்ளதோஅந்தநாட்டின்பகுதியாகஇருந்துகொள்ள
அனுமதிக்கப்பட்டன. இந்த நேரத்தில் ஒரு
புதிய சிக்கல் எழுந்தது. இது பஞ்சாபில் தனி மத
அடையாளம் கொண்டிருந்த சீக்கியர் தொடர்பானது.
பாகிஸ்தானின் பகுதியாக அமையவுள்ள
கிராமங்களில் சீக்கிய மக்கள் வசித்த போதிலும்
அகாலி தளம் இந்தியாவோடு இணைந்திருக்க
விரும்புவதாக அறிவித்ததுஇந்தியாவிற்கு சுதந்திரம்
அளிப்பதற்கு பிரிட்டன்எடுத்த விரைவான நடவடிக்கைகளின் போது
இந்தியப் பிரிவினை சிக்கலான சூழ்நிலையை
ஏற்படுத்தியது. இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட்
அட்லி, 1947 பிப்ரவரி 20இல் லண்டனில்
வெளியிட்ட அறிவிப்பில் பிரிட்டிஷ் அரசாங்கம்
1948 ஜூன் 30க்குள் இந்தியாவிற்குச் சுதந்திரம்
அளித்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறும்
என்று தெரிவித்தார். 1947 மார்ச் 22இல் வேவல்
பிரபுவுக்குப் பதிலாக அரச பிரதிநிதியாக பதவிக்கு
வந்த மௌண்ட்பேட்டன் பிரபுவின் நடவடிக்கைகள்
இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்படுவதைத்
துரிதப்படுத்தின. இந்த நிலையில், முஸ்லிம்
லீக் கட்சியின் தலைமை பெரும்பகுதி முஸ்லிம்
சமூகத்தின் ஆதரவைத் தன்கீழ் திரட்டியதன் மூலம்,
காங்கிரஸ் கட்சி அனைத்து இந்தியர்களையும்
தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக்
கோரியதைத் தகர்க்க முயன்றது. 1947 ஜூன்
3இல் மௌண்ட்பேட்டன் பிரபு, அட்லி அறிவித்த
தினத்திற்கு முன்னதாகவே 1947 ஆகஸ்ட் 15 அன்று
இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று
அறிவித்தார். வகுப்புவாதப் பிரச்சனை, இருநாடு
கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிட்டிஷ்
இந்தியாவின் அதிகாரத்தை இந்தியா – பாகிஸ்தான்
என இரண்டு டொமினியன் அரசாங்கங்களிடம்
பகிர்ந்து ஒப்படைப்பதே மௌண்ட்பேட்டன்
திட்டமாகும். முன்மொழியப்பட்டபடி, வங்காளம்
மற்றும் பஞ்சாபை பிரிவினை செய்து பாகிஸ்தானை
உருவாக்கும் இந்தியப் பிரிவினையை இறுதியாக
காங்கிரஸ் சமரசத்துடன் ஏற்றுக்கொண்டது. 1947
ஜூன் 14இல் மீரட்டில் நடைபெற்ற காங்கிரஸ்
கூட்டத்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய
சுதந்திரத்திற்கான மௌண்ட்பேட்டன் திட்டம்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிரிவினையின் விளைவுகள் :
சுதந்திர இந்தியாவின் முன்னின்ற சவால்கள்
பலவாகும். அவற்றுள் பிரிவினையைச் சமாளித்தல்,
பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கல்விமுறையைச்
சீரமைத்தல், (அடுத்த பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது)
இந்திய விடுதலைப் போராட்டத்தால் கிளர்ந்தெழுந்த
உயர்ந்த இலட்சியங்களை எதிரொளிக்கும்
அரசமைப்பை உருவாக்குதல், 500க்கும் அதிகமான
எண்ணிக்கையில் வெவ்வேறு பரப்பளவில் இருந்த
சுதேச அரசுகளை இந்தியாவோடு
ஒருங்கிணைத்தல், தேசிய அரசின் தேவைகளைப்
பூர்த்தி செய்கிற, மக்களால் பேசப்படும் மொழிகள்
அடிப்படையிலான வேறுபாட்டைத் தீர்த்து வைத்தல்
போன்ற நாட்டின் தேவைகள் உள்ளடங்கும்.
மேலும், மக்களாட்சி, இறையாண்மை,
சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு
இசைவான ஒரு வெளியுறவுக் கொள்கையை
உருவாக்க வேண்டிய சவாலும் அடங்கும்.
முஸ்லிம் லீக், இந்து-முஸ்லிம் அடிப்படையில்
இந்தியாவைப் பிரிவினை செய்வதற்கான
கோரிக்கையை லாகூர் மாநாடு (மார்ச் 1940)
முதலே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அந்தக்
கோரிக்கைக்கான வடிவமும் செயலாக்கமும் 1947
ஜூன் 3இல் வெளியிடப்பட்ட மௌண்ட்பேட்டன்
திட்டத்தில் இடம் பெற்றது. மௌண்ட்பேட்டன் அதிகார
மாற்றத்திற்கான நாளை ஆகஸ்ட் 15, 1947 என்று அறிவித்ததால்,
மௌண்ட்பேட்டன் திட்ட வெளியீடு, இந்திய விடுதலை
ஆகியவற்றுக்கான கால இடைவெளி வெறும் 72 நாட்கள் மட்டுமே.
இந்திய வரைபடத்தைப் பிரிவினைக்கேற்றவாறு மாற்றி வரைவதற்கு
லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட வழக்கறிஞரான சர்
சிரில் ராட்க்ளிஃப் இந்தியாவைப் பற்றிய எந்த முன்
அனுபவமும் இல்லாதவராகவும் இந்திய நிலைமை
புரியாதவராகவும் இருந்தார். அவர் உருவாக்கிய
வரைபடத்தின் அடிப்படையில் எல்லைகளை
வரையறுத்துக்கொள்ளும் பொறுப்பு 1947 ஆகஸ்ட்
15க்குப் பின் இந்தியா – பாகிஸ்தான் என்ற இரண்டு
அரசமைப்பு நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
1947 ஜூலை 8இல் சர் சிரில் ராட்க்ளிஃப்
இந்தியா வந்தடைந்தார். பஞ்சாப்-வங்காளம் ஆகிய
இரண்டு எல்லை ஆணையங்களுக்கும் அவர்
தலைமைப் பொறுப்பு வகித்தார். அவர் தலைமையில்
அமைக்கப்பட்ட ஆணையத்தில் முஸ்லிம் சமூகம்
மற்றும் இந்து சமூகத்தைச் சேர்ந்த தலா இரண்டு
நீதியரசர்கள் இணைந்து பணியாற்றினர். இந்து
மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை யினர் வாழும்
கிராமங்களை 1941ஆம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப்பின்படி அடையாளம் கண்டறிய
எல்லை ஆணையத்திற்கு ஐந்து வார கால அவகாசம்
மட்டுமே இருந்தது. 1941ஆம் ஆண்டு மக்கள்தொகை
கணக்கெடுப்பு இரண்டாம் உலகப்போரின் நடுவில்
பரபரப்பாக நடத்தப்பட்டதால் பல தவறுகளை
உள்ளடக்கியது என்ற கருத்து பரவலாக நிலவியது.
சீக்கிய சமூகத்தின் கோரிக்கைகளின்
காரணமாக மேற்கு பஞ்சாபில் இருந்த
கிராமங்களைச் சேர்ந்த சீக்கியர்களின்
மக்கள்தொகையைப் பொருட்படுத்தாமல் சீக்கிய
குருத்துவாரா இருந்த கிராமங்கள் இந்திய
எல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற
கோரிக்கையைஇரண்டு ஆணையங்களும் தங்கள்
அறிக்கை மூலம் 1947 ஆகஸ்ட் 9இல் வெளியிட்டன.
ராட்க்ளிஃப் எல்லைக்கோட்டின் அடிப்படையில்
எல்லைகளை வரையறுக்கும் பணியைச் சுதந்திரம்
வழங்கப்பட்டபின் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய
நாடுகள் மேற்கொள்ளலாம் என்று மௌண்ட்பேட்டன்
தீர்மானித்தார். நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில்
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கான நில
வரையறையோடு, 1947 ஆகஸ்ட் 14-15இல் திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் இருநாட்டு
மக்களுக்கும் அவர்கள் சுதந்திர தினத்தைக்
கொண்டாடும் நாளில் புதிய வரைபட விவரம்
தெரிவிக்கப்படவில்லை. ராட்க்ளிஃப் அறிவிப்பு பல முரண்பாடுகளைக்
கொண்டிருந்தது. மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானோடு
இணையும் என்ற தீர்மானத்தை பஞ்சாப் மாகாணச்
சட்டமன்றம் நிறைவேற்றியது. பாகிஸ்தானோடு
நிலத்தொடர்ச்சியைக் கொண்டிருந்த
மாகாணங்களான சிந்து, பலுசிஸ்தான், வடமேற்கு
எல்லைப்புற மாகாணம் ஆகியவையும் இதைப்
பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றின. அதேபோல்,
வங்காள சட்டமன்றம் அந்த மாகாணத்தின் கிழக்குப்
பகுதி பாகிஸ்தானில் சேரும் எனத் தீர்மானம்
நிறைவேற்றியது. 1947 ஆகஸ்ட் 9இல் ராட்க்ளிஃப் அளித்த
திட்டத்தின்படி அதுவரையில் பஞ்சாபின் பகுதியாக
இருந்து வந்த 62,000 சதுர மைல்கள் கொண்ட
நிலம் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது. இந்தப்
பகுதியின் மொத்த மக்கள் தொகை (1941ஆம்
ஆண்டு கணக்கெடுப்பின்படி) 1.58 கோடியாகும்.
அவர்களில் 1.18 கோடி மக்கள் முஸ்லிம்கள் ஆவர்.
மேற்கு பஞ்சாபின் மக்கள் தொகையில் நான்கில்
ஒரு பங்கு முஸ்லிம் அல்லாதோர் ஆவர். சர்.
ராட்கிளிஃப் செயல்படுத்திய மௌண்ட்பேட்டன்
திட்டத்தின்படி அவர்கள் தொடர்ந்து பாகிஸ்தானின்
சிறுபான்மையினராக இருப்பர். அதே போல்
இந்தியாவின் பகுதியாக வரையறை செய்யப்பட்ட
கிழக்கு பஞ்சாப் 37,000 சதுரடி நிலப்பரப்பும் 1.26
கோடி மக்கள் தொகையும் உடையதாக இருந்தது.
இவர்களில் 43.75 இலட்சம் பேர் முஸ்லிம்கள்
ஆவர். வேறுவிதமாக சொல்வதெனில் கிழக்கு
பஞ்சாப் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதி
முஸ்லிம்கள் ஆவர்
அரசமைப்பு உருவாக்கம் :
இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்கள்
தான் உருவாக்க வேண்டும்; பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல
என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக
1934இல் அதிகாரப்பூர்வமாக எழுப்பப்பட்டது. காலனிய
அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையைக் காங்கிரஸ்
புறக்கணித்தது. இந்தியர்களே தங்களுக்கான
அரசமைப்பை உருவாக்குவார்கள் என்ற
அடிப்படைக் கருத்து 1922லேயே காந்தியடிகளால்
முன்வைக்கப்பட்டது. தன்னாட்சி என்பது பிரிட்டிஷ்
பாராளுமன்றத்தால் இந்தியர்களுக்கு வழங்கப்படும்
கொடையாக இல்லாமல் இந்தியர்களால்
சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட , இந்தியர்களின்
விருப்பத்தைவெளிப்படுத்தும் பிரதிநிதிகளிடமிருந்து
உருவாக வேண்டும் என்று காந்தியடிகள் தெரிவித்திருந்தார்.
இந்திய அரசாங்கச் சட்டம் 1935இன்
அடிப்படையில் ஆகஸ்ட் 1946இல் மாகாண
சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
மாகாண சட்ட மன்றங்கள் மத்திய சட்டமன்றத்தைத்
தேர்ந்தெடுக்க அது அரசமைப்பு நிர்ணய சபையாக
செயல்பட்டது. 1946இல் நடைபெற்ற மாகாண
தேர்தலில் சொத்துரிமை உரியவர்களுக்கு மட்டுமே
வாக்குரிமை என இருந்தது. வயதுவந்தோர்
அனைவருக்குமான வாக்குரிமை என்ற
தத்துவம் நடைமுறைக்கு வந்திருக்கவில்லை.
தேர்தல் முடிவுகள் முஸ்லிம் பெரும்பான்மை
தொகுதிகளில் முஸ்லிம் லீக் கட்சிக்கும் மற்ற
இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும்
செல்வாக்கு இருந்ததை உணர்த்தின. முஸ்லிம் லீக்
அரசமைப்பு உருவாக்கும் நடவடிக்கையிலிருந்து
ஒதுங்கியிருந்து தனி நாடு கோரிக்கைக்கு அழுத்தம்
கொடுக்கத் தொடங்கியது. காங்கிரஸ் அரசமைப்பு
நிர்ணயசபையில் இடம்பெற்றது.
மாகாண சட்டமன்றங்களிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அரசமைப்பு
நிர்ணயசபைக்கான காங்கிரஸ் உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுத்தனர். அரசமைப்பு நிர்ணய சபையில்
காங்கிரஸ் (224 இடங்கள்) ஆதிக்கம் செலுத்திய
போதிலும் கம்யூனிஸ்டுகளும் சோஷியலிஸ்டுகளும்
குறைந்த எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தனர்.
டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர், பம்பாயிலிருந்து
அரசமைப்பு நிர்ணயசபைக்கு தேர்ந்தெடுக்கப்ப டுமாறு
பார்த்துக் கொண்ட காங்கிரஸ் அவரை அரசமைப்பு
வரைவுக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.
காங்கிரஸ்தலைமைதன் கட்சியின் வல்லுநர்களோடு
புகழ்பெற்ற அரசமைப்பு வழக்கறிஞர்களையும்
அரசமைப்பு நிர்ணயசபையில் இடம்பெறச் செய்தது
மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு :
விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின்
உருவாக்கத்தில் முக்கியமான ஒரு
அம்சம் மொழிவாரியாக மாநிலங்களை
மறுசீரமைத்ததாகும். காலனிய ஆட்சியாளர்கள்
இந்தியத் துணைக் கண்டத்தை நிர்வா க அலகுகளாக
அதாவது, இந்திய நிலப்பரப்பு மொழி, பண்பாடு
ஆகியவற்றின் அடிப்படையில் அமையாத, நிர்வாக
வசதிக்காக மட்டுமே பிரிக்கப்பட்ட மாகாணங்களாக
விட்டுச் சென்றனர். விடுதலையும் அரசமைப்பு
அடிப்படையிலான மக்களாட்சி கருத்தாக்கமும்
மக்களை இறையாண்மை உள்ளவர்களாகவும்
இந்தியாவை வெறும் நிர்வாகரீதியாக அணுகாமல்,
பன்முக கலாச்சாரம் கொண்ட தேசமாக, கூட்டாட்சித்
தத்துவ அடிப்படையில் முழுமையாக அணுக
வேண்டும் என்பதை வலுப்படுத்தின.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பு, இந்திய
அரசமைப்பு நிர்ணய சபையின் 1947 மற்றும்
1949 இடைப்பட்ட ஆண்டுகளில் எழுப்பப்பட்டு
விவாதிக்கப்பட்டது. ஆனால், அரசமைப்பு நிர்ணய
சபை இது குறித்த விவாதத்தை இரண்டு
காரணங்களுக்காக நிலுவையில் வைத்தது.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பானது பெரும்பணி
என்பது முதற் காரணம், இந்தியப் பிரிவினையும்
அது தொடர்பான வன்முறைகளும் நிகழ்ந்து
கொண்டிருக்கும் நேரத்தில் மொழிவாரியான
மாநிலம் குறித்து விவாதம் மேலும் பிரச்சினைகளை
உருவாக்கும் என்பது இன்னொரு காரணம்.
இந்திய வெளியுறவுக் கொள்கை :
சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக்
கொள்கைக்கான அடிப்படைக் கோட்பாடுகள்
இந்தியா விடுதலை அடைவதற்கு குறைந்தது முப்பது
ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன எனலாம்.
இந்தக் கோட்பாடு விடுதலைப் போராட்டத்தின்போது
படிப்படியாக வளர்ச்சியுற்றது. காலனியம் எந்த
வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்பதே இந்தக்
கோட்பாட்டின் அடிநாதமாகும். ஜவகர்லால் நேருவே
இந்திய வெளியுறவுக் கொள்கையை முதன்மையான
சிற்பி ஆவார்.இந்திய வெளியுறவுக் கொள்கையின்
அடிப்படைக் கோட்பாடுகள் பின்வருமாறு: காலனிய
எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு, இன ஒதுக்கலை
எதிர்த்தல், இனவெறியை எதிர்த்தல், வல்லரசு
நாடுகளுடன் அணி சேராமை, ஆப்பிரிக்க�ஆசிய ஒற்றுமை, பிறநாடுகளை ஆக்கிரமிக்காமல்
இருத்தல், பிறநாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில்
தலையிடாமல் இருத்தல், ஒரு நாடு மற்றொரு
நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை
மதித்தல், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை
மேம்படுத்துதல், நாடுகளுக்கிடையேயான
அமைதியை நிலைநிறுத்துவதில் வெற்றிடம்
ஏற்படா வண்ணம் இரு நாடுகளும் சமநீதியைப்
பாதுகாத்தல்.சீன மக்கள் குடியரசை 1950 ஜனவரி 1இல்
முதன் முதலாக அங்கீகரித்த நாடு இந்தியா. காலனி
ஆதிக்கத்தால் பெற்ற துன்பம், அதன் விளைவுகளான
வறுமை மற்றும் பின்தங்கிய வளர்ச்சி ஆகிய
அனுபவ ஒற்றுமைகளின் காரணமாக இந்தியாவும்
சீனாவும் கைகோர்த்து உலகில் ஆசியாவிற்கோர்
இடத்தை நிலைநிறுத்த முடியும் என்று நேரு
கருதினார். ஐ.நா பாதுகாப்பு அவை கம்யூனிச
சீனாவை உறுப்பினராக ஏற்க வேண்டுமென்று
நேரு வலியுறுத்தினார். ஆனால், 1950இல்
சீனா, திபெத்தை ஆக்கிரமித்த போது இந்தியா
வருத்தமடைந்தது. இந்தியாவின் நம்பிக்கைக்குப்
பாத்திரமாகச் சீனா நடந்துகொள்ளவில்லை என
இந்தியா கருதியது. 1954இல் இந்தியா மற்றும்
சீனாவிடையே கையெழுத்தான ஒப்பந்தம்
சீனாவிற்கு திபெத் மீதிருந்த உரிமையை
அங்கீகரித்தது. அத்தோடு இந்திய சீன உறவுக்கான
கோட்பாடுகளாகப் பஞ்சசீலக் கொள்கையை
வகுத்தது.
Comments
Post a Comment