அறிமுகம் :
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869இல்
கடற்கரையோர நகரான போர்பந்தரில் பிறந்தார்.
1915ஆம் ஆண்டு அவர் இந்தியா திரும்பியபோது
தென்னாப்பிரிக்காவின் இனவாத அரசு விதித்த
சமத்துவமில்லாத நிலைமைகளுக்கு எதிரான
காந்தியடிகளின் போராட்டங்கள் ஒரு சாதனையாக
இருந்தன. இந்திய தேசிய சக்திகளுக்கு உதவ
வேண்டும் என்று காந்தியடிகள் உறுதியாக
விரும்பினார். தென்னாப்பிரிக்காவில்
இந்தியர்களுக்காக முன்னர் ஆதரவு
திரட்டியபோது காங்கிரஸ் தலைவர்களுடன்
அவர் தொடர்பில் இருந்ததால் காந்தியடிகளுக்கு
இந்தியத் தலைவர்களுடன் தொடர்பு இருந்தது.
கோபால கிருஷ்ண கோகலேவின் செயல்பாடுகள்
மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட் டு அவரைத்
தனது அரசியல் குருவாக அடையாளம் கண்டார்.
இந்தியாவை விட்டு இருபது ஆண்டுகள்
வெளியே இருந்த காந்தியடிகள் கோகலேவின்
அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பிய
உடன் நாட்டின் நிலைமையோடுத் தன்னைப்
பொருத்திக்கொள்ளும் விதமாக நாடு முழுவதும்
ஓராண்டு காலத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.
அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவிய
அவர், தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் உள்ளிட்ட
அரசியல் இயக்கங்களில் தீவிரப் பங்மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869இல்
கடற்கரையோர நகரான போர்பந்தரில் பிறந்தார்.
1915ஆம் ஆண்டு அவர் இந்தியா திரும்பியபோது
தென்னாப்பிரிக்காவின் இனவாத அரசு விதித்த
சமத்துவமில்லாத நிலைமைகளுக்கு எதிரான
காந்தியடிகளின் போராட்டங்கள் ஒரு சாதனையாக
இருந்தன. இந்திய தேசிய சக்திகளுக்கு உதவ
வேண்டும் என்று காந்தியடிகள் உறுதியாக
விரும்பினார். தென்னாப்பிரிக்காவில்
இந்தியர்களுக்காக முன்னர் ஆதரவு
திரட்டியபோது காங்கிரஸ் தலைவர்களுடன்
அவர் தொடர்பில் இருந்ததால் காந்தியடிகளுக்கு
இந்தியத் தலைவர்களுடன் தொடர்பு இருந்தது.
கோபால கிருஷ்ண கோகலேவின் செயல்பாடுகள்
மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட் டு அவரைத்
தனது அரசியல் குருவாக அடையாளம் கண்டார்.
இந்தியாவை விட்டு இருபது ஆண்டுகள்
வெளியே இருந்த காந்தியடிகள் கோகலேவின்
அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பிய
உடன் நாட்டின் நிலைமையோடுத் தன்னைப்
பொருத்திக்கொள்ளும் விதமாக நாடு முழுவதும்
ஓராண்டு காலத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.
அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவிய
அவர், தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் உள்ளிட்ட
அரசியல் இயக்கங்களில் தீவிரப் பங்ேகற்கவில்லை.கற்கவில்லை.தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது இனவாத
அடிப்படையில் செயல்பட்டஅந்நாட்டு அரசுக்கு எதிராக
சத்யம் (உண்மை), அஹிம்சை (வன்முறையற்ற
தன்மை) ஆகியவற்றின் அடிப்படையிலான
சத்தியாகிரகப் போராட்டத்தைப் படிப்ப டியாக
உருவாக்கினார். தீமை மற்றும் அநீதிக்கு எதிராக
போராடியபோதிலும், ஒரு சத்தியாகிரகி தனது
மனதில் அமைதியை நிலைநிறுத்துவதோடு
தவறு செய்தவரை வெறுக்கக்கூடாது. எதிர்ப்பின்
பாதையில் ஒரு சத்தியாகிரகி சிரமங்களை
ஏற்றுக்கொள்வார் மற்றும் அவரது நடவடிக்கையில்
வெறுப்புணர்வுக்கு இடமில்லை. அஹிம்சையும்
உண்மையும் தைரியமானவர்கள் மற்றும்
அச்சமற்றவர்களின் ஆயுதங்களாக விளங்கும். அவை
கோழைகளின் ஆயுதங்கள் அல்ல. எண்ணப்போக்கு
மற்றும் பழக்கம், நம்பிக்கை மற்றும் செயல்பாட்டுக்கு
இடையே காந்தியடிகளுக்கு எந்தவித
வேறுபாடுமில்லை.
காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள் :
சம்பரான் இயக்கம் (1917)
சம்பரானில் இருந்த விவசாயிகளின்
வேண்டுகோளை ஏற்று, இந்திய மக்களை
ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் காந்தியடிகள்
மேற்கொண்டார். அவர் போராட்டத்தைத் துவங்குமுன், நிலைமை குறித்து விரிவாக
ஆராய்ந்தார். பீகாரின் சம்பரான்மாவட்டத்தில் இருந்த
கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் ஐரோப்பிய
வர்த்தகர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டனர்.
அவர்களிடம் இருந்த 3/20 பங்கு நிலத்தில்
விவசாயிகள் கருநீலச்சாயத்ைதக் கட்டாயம்
விளைவிக்க வேண்டும். அதனையும் வர்த்தகர்கள்
நிர்ணயிக்கும் விலைக்கே விற்கவேண்டும். இந்தக்
கட்டமைப்பு விவசாயிகளைச் சுரண்டியதோடு
அவர்களை வறுமையின் பிடியில் சிக்கவைத்தது.
ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய
கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர்
தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான
விசாரணை மேற்கொண்டார். உடனடியாக
அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறவேண்டும்
என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் காந்தியடிகளுக்கு
உத்தரவிட்டனர். ஆனால் வெளியேற மறுத்த
காந்தியடிகள், இந்த உத்தரவு நியாயமற்றது என்று
மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உத்தரவை
மீறுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க
போவதாகவும் கூறினார்.
காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக்
கொண்டு விசாரணைக் குழு ஒன்று
அமைக்கப்பட்டது. ஏழை விவசாயிகளின்
சிரமங்கள் குறித்து குழுவிடம் எடுத்துரைத்துப்
புரியவைப்பதில் காந்தியடிகளுக்குச்
சிரமம் ஏற்படவில்லை. அந்த அறிக்கை
ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டதில்
ஐரோப்பிய வர்த்தகர்களின் கட்டுப்பாட் டிலிருந்த
கருநீலச்சாய விவசாயிகள் மீட்கப்ப ட்டனர்.
ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்ப டியாக சம்பரானை
விட்டே வெளியேறிவிட்டனர்.
ஆலைத் தொழிலாளர்களின்
வேலைநிறுத்தம் மற்றும் அகமதாபாத்தில்
காந்தியடிகளின் உண்ணாவிரதம் (1918) :
இவ்வாறாக காந்தியடிகள் தனது
முதலாவது வெற்றியைத் தாய்மண்ணில் பதிவு செய்தார். விவசாயிகளின் நிலைமையை
நெருக்கமாகப் புரிந்துகொள்ள இந்த போராட்டம்
அவருக்கு வழிவகை செய்தது. அகமதாபாத் நகர
மையத்தில் பணியாளர்களுக்காக மக்களை
ஒன்றுதிரட்டும் பணி காத்திருந்தது. துணிஆலைப்
பணியாளர்களுக்கும், ஆலை முதலாளிகளுக்கும்
இடையே பிரச்சனை நிலவியது. காந்தியடிகள்
இருதரப்பையும் சந்தித்துப் பேசினார். மிகக்
குறைவான ஊதியம் பெற்ற பணியாளர்களின்
கோரிக்கைகளை ஏற்க முதலாளிகள் மறுத்ததை
அடுத்து 35 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும்
என்று கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு
காந்தியடிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொழிலாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அவர்
உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.
தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும்
காந்தியடிகளின் உண்ணாவிரதமும் இறுதியில்
தொழிலாளர்களின்கோரிக்கையைஏற்கவேண்டிய
நிலைக்கு ஆலை முதலாளிகளை நிர்ப்பந்தித்தது
கேதா போராட்டம் (1918) :
கேதா மாவட்ட விவசாயிகள் பருவமழை
பொய்த்ததன் காரணமாகச் சிரமத்தைச்
சந்தித்தனர். 1918இல் நில வருவாய் வசூலை
ரத்துசெய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம்
அவர்கள் கோரினர். அரசின் பஞ்சகால விதியின்படி,
பயிர்சாகுபடி சராசரியாக 25 சதவீதத்துக்கும்
குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி
ரத்துக்கு தகுதிபெறுவர். ஆனால் நிர்வாகத்தினர்
இவ்விதியை அமல்படுத்த மறுத்துவிட்டு
முழுமையாக பணத்தைச் செலுத்துமாறு
துன்புறுத்தினர். பிளேக் நோயாலும் அதிக
விலையேற்றத்தாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்ப ட்ட
விவசாயிகள் காந்தியடிகள் உறுப்பினராக அங்கம்
வகித்த இந்தியப் பணியாளர் சங்கத்தை (Servants
of India Society) உதவி கோரி அணுகினர். ஏழை
விவசாயிகள் சார்பாக விதல்பாய் பட்டேலுடன்
இணைந்து தலையிட்ட காந்தியடிகள் பணம்
செலுத்துவதை நிறுத்திவிட்டு இந்த எதேச்சதிகாரம்
மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை
எதிர்த்து சாகும்வரைப் போராட்டம் நடத்துமாறு
அறிவுறுத்தினார். இளம் வழக்கறிஞரான வல்லபாய்
பட்டேலும் இந்துலால் நாயக்கும் காந்தியடிகளுடன்
இந்த இயக்கத்தில் இணைந்து விவசாயிகளை
உறுதியாக இருக்குமாறு வேண்டினர். பயிர்களை
எடுத்துக்கொள்வது, போராட்டம் நடத்தியவர்களின்
சொத்துகளையும் கால்நடைகளையும்
சொந்தமாக்கிக் கொள்வது, சில நேரங்களில்
அவற்றில் சிலவற்றை ஏலம் விடுவது என அரசு
அடக்குமுறைகளைக் கையாண்டது.
பிராமணரல்லாதார் இயக்கம் :
பல்வேறு அடுக்குகள் கொண்ட இந்திய
சமூகமும் அதனுள் இருந்த முரண்பாடுகளும் உயர்
வகுப்பு ஆளுமையைக் கேள்வி கேட்கும் சாதி
அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தொடங்கப்பட
ஏதுவாக அமைந்தன. உற்பத்தியின் காரணிகளை
மேல் வர்க்கத்தினர் கட்டுப்படுத்திய நிலையில்
வாழ்வாதாரத்தை நடுத்தர மற்றும் ஒடுக்கப்பட்டோர்
சார்ந்திருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின்
சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்களை
ஆளுமைப்படுத்திய மற்றும் இணைந்து செயல்பட்ட
தாராளமயமாக்கலும், மனிதாபிமானமும்
சமூகத்தைப் பாதித்ததோடு அதனைச் சற்றுத்
திருப்பிப்போட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின்
கடைசி இருபத்தைந்தாண்டுகளில் இந்த
விழிப்புணர்வுக்கான அறிகுறிகள் ஏற்கனவே
தென்பட ஆரம்பித்துவிட்டன. வங்காளத்திலும்
இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும்தொடங்கப்பட்ட
நாமசூத்ரா இயக்கம், இந்தியாவின் வடமேற்கு பகுதியில் தொடங்கப்பட்ட ஆதிதர்மா இயக்கம்,
மேற்கு இந்தியாவில் சத்யசோதக் இயக்கம் மற்றும்
தென்னிந்தியாவின் திராவிட இயக்கங்கள் இந்த
நூற்றாண்டின் திருப்பத்தில் தங்கள் குரல்களை
எழுப்பின. பிராமணர் அல்லாத தலைவர்களால்
நடத்தப்பட்ட இந்த இயக்கங்கள் பிராமணர்கள்
மற்றும் இதர உயர் வகுப்பினரின் மேன்மை
குறித்துக் கேள்வி எழுப்பின 1872ஆம் ஆண்டு ஜோதி
ராவ் பூலேவின் புத்தகம் குலாம்கிரி என்ற தலைப்பில்
முதலில் வெளிவந்தது. அவரது அமைப்பு, சத்யசோதக்
சமாஜ், பிராமணியத்தின்கொடுங்கோல் மற்றும்
சுரண்டல் ஆகியவற்றிலிருந்து ஒடுக்கப்பட்ட சாதியினரை
விடுவிப்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக்
காட்டியது. காலனித்துவ நிர்வாகிகள் மற்றும்
கல்வி நிறுவனங்கள் ஆகியவை மறைமுகமாக
இப்போக்கை ஊக்குவித்தன. காலனித்துவ
காலத்தில் இந்நாட்டு மக்களுக்கென
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய
வாய்ப்புகளிலும் பிராமணிய ஆதிக்கம் அதிகரிக்கத்
தொடங்கிய போது காலனிய அரசாங்கம் பத்தாண்டு
மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளை
வெளியிடத் தொடங்கியது. இந்த அறிக்கைகளில்
சாதிகள் வகைப்படுத்தப்பட்டன. ’உள்ளூர்
பொதுக் கருத்தினால் அங்கீகரிக்கப்ப ட்ட சமூக
முன்னுரிமை’யின் அடிப்படையில் சாதிகளை
வகைப்படுத்தி மக்கள்தொகை கணக்கெடுப்பு
குறிப்பிட்ட போது சாதிகளுக்கு இடையே மோதல்கள்
எழுந்தன. உரிமைகோரல்களும், அவற்றை எதிர்த்து
உரிமையோடு மறுப்ப தும் என இந்த அமைப்புகளின்
தலைவர்கள் தாங்கள் முக்கியத்துவம்
பெறுவதற்காகப் போராடத் துவங்கினர். பலர் புதிய
அமைப்புக்களையும் தொடங்கினார்கள். இந்த
முயற்சிகளுக்கு அப்போது உருவாகிய அரசியல்
சூழ்நிலை மேலும் உதவியாக இருந்தத சமூக அடையாளத்தைப் பெறுவதற்குத் தங்கள்
சாதிகளைப் போராட்டத்துக்கு ஒருங்கிணைக்க
வேண்டும் என்று சாதிகளின் முன்னணித்
தலைவர்கள் உணர்ந்தனர். அங்கீகாரத்தைஎதிர்த்து
அவர்களில் பலர், ஆண்டுகள் செல்லச் செல்ல,
அவர்களது சாதி சார்ந்த மாணவர்கள் கல்வி பெறவும்,
கல்வி பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப்
பெறவும் உதவினர். இதனிடையே, வாக்குரிமை
அரசியல் 1880களில் அறிமுகம் செய்யப்பட் டு இது
போன்ற அமைப்புகளின் இடத்தை அைவ நிரப்பின.
சாதி விழிப்புணர்வு, சாதி ஒற்றுமை என்ற பெயரில சமூகப் பொருளாதார பதற்றங்களின் வெளிப்பாடாக
இவற்றின் முடிவுகள் இருந்தன.
பிராமணரல்லாதார் இயக்கங்களில் இருந்து
இரண்டு போக்குகள் வெளியாகின. கீழ்நிலை
சாதிகளுக்குச் சமஸ்கிருதத்தைச் சொல்லிக்
கொடுப்பது, மற்றொன்று அந்தக் காலகட்டத்தில்
தீவிரமாக இருந்த ஏழைகளுக்கு ஆதரவாகவோ
அல்லது முற்போக்குத் தொழிலாளர் மற்றும்
விவசாயிகளுக்கு ஆதரவான இயக்கங்கள்
ஆகியன செயல்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கு
சாதி இயக்கங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதம்
சார்ந்தும் மேற்கத்திய மற்றும் தெற்கத்திய
இயக்கங்கள் பிளவுபட்டு அப்போது வளர்ந்துவந்த
தேசியவாத மற்றும் திராவிட-இடதுசாரி
இயக்கங்களைச் சேர்த்துக்கொண்டன. ஆனால்,
அனைத்து இயக்கங்களுேம பிராமண ஆதிக்கம்
என்று குறிப்பிட்டு அதனை எதிர்த்துக் கடுமையாக
விமர்சனம் செய்தன. தங்கள் அமைப்புகள் மூலம்
நீதிவேண்டி அரசிடம் கோரிக்கை வைத்தன.
பம்பாய் மற்றும் மதராஸ் மாகாணங்களில் அரசு
சேவைகள் மற்றும் பொதுக் கலாச்சாரம் சார்ந்த
துறைகளில் பிராமணர்கள் தெளிவாக ஆதிக்கம்
செலுத்தியதன் விளைவு பிராமணர் அல்லாதோரின்
அரசியலுக்கு வழிவகுத்தது.
Comments
Post a Comment