அறிமுகம் :
ஆரியர்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. 1000 வாக்கில்
கிழக்குநோக்கி இடம்பெயரத் தொ டங்கினர்.
அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தபோது, அடர்ந்த
காடுகளை எதிர்கொண்டார்கள். காடுகளைத்
திருத்துவதில் இரும்பு முக்கியப் பங்காற்றியது.
கங்கைச் சமவெளியின் வளம் செறிந்த மண்ணும்
இரும்புக்கொழுமுனைகளின் பயன்பாடும்
வேளாண் உற்பத் தியை மேம்படுத்தின.
பானை வனைதல், மர வேலைகள், உலோக
வேலைகள் போன்ற கைவினைப்பொருட்களின்
உற்பத்தி அதிகரித்ததிலும் இரும்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. இவற்றின் விளைவாக
நகரமயமாக்கத்துக்கு வழி ஏற்பட்டது. இதே
காலகட்டத்தில் சமூகத்தில் பின்பற்றப்ப ட்ட
வைதீகச் சடங்குகள், பழக்கவழக்கங்கள்
ஆகியனவற்றின் மீது கேள்விகளை எழுப்பிய
சந்தேகிக்கும் உணர்வுகள் தோ ன்றின. இவை
புதிய கருத்தியல்களும் நம்பிக்கைக ளும் தோன்ற
வழிவகுத்தன. இவ்வாறு உருவான பல அவைதீக
மதக்கோட்பா டுகளில் சமணம், பௌத்தம் ஆகியன
மக்களின் மனதைத் தொ ட்டன. இக்காலத் தின்போ து
உருவான பிராந்திய அடையாளங்கள், அவைதீக
மதக்கோட்பாடுகள் ஆகியன குறித்து இப்பாடத்தில்
காண்போம் .
முடியாட்சிகள் அல்லது அரசுகள் :
முடியாட்சி முறை நடைமுறை யிலிருந்த
அரசுகள் அனைத் திலும் வைதீக வேத மரபுகள்
நடைமுறையில் இருந்தன. கண சங்கங்களைப்
போலன்றி, மதகுருமார்கள் மகாஜனபதங்களில்
உயர்ந்த தகுதிநிலையைஅனுபவித்தார்கள். அரசுகள்
அரசர்களால் ஆட்சி செய்யப்ப ட்டன.மையப்ப டுத்தப்ப ட்ட
நிர்வாகம் இருந்தது. பல்வேறு சடங்குகள் மூலம்
பிராமண குருக்கள் அரசனுக்குச் சட்டபூர்வ
அங்கீகாரத்தை அளித்தனர். அரச உரிமை வாரிசு
முறையில் வந்தது. அரச உரிமை பெரும்பாலும் மூத்த
மகனுக்கே உரிமை என்ற விதிப்ப டி தொ டர்ந்தது.
பரீஷத், சபா என்ற அமைப்புகள் அரசருக்கு உதவி
செய்தன. இந்த அமைப்புகள் ஆலோ சனை
தருபவையாக இருந்தன. வேளாண் உபரியை அரசர்
நில வரி மூலமும் வேறு சில வரிகள் மூலமாகவும்
பெற்றுக் கொண்டார் . வேளாண் நிலத்தின் மீதான
வரி ‘பலி‘ எனப்பட்டது. உற்பத் தியில் ஒரு பங்காக ப்
பெறப்பட்ட வரி ‘பாகா ‘ என்று சொல்லப்ப ட்டது. ‘கரா’,
‘சுல்கா’ ஆகியவை இக்காலக ட்டத் தில் வசூலிக்கப்பட்ட
வேறு சில வரிகளாகும். இவ்வாறாக, ஒரு விரிவான
நிர்வாக அமைப்பையும் ராணுவத்தையும்பராமரிக்கத்
தேவையான வருவாயை அரசர் வரிகள் மூலம்
ஈட்டினார்.
செல்வம் மிக்க நிலஉரிமையாளர்கள்
கிரகபதி என்றழைக்கப்பட்டனர். இவர்கள்
தாசர் அல்லது கர்மகா ரர் என்று அழைக்கப்பட்ட
வேலைக்காரர்களை பணியமர்த்தியிருந்தனர். சிறு
நில உரிமையாளர்கள் கசாகா அல்லது கிரிஷாகா
என்று அறியப்பட்டனர். சமூகம், வர்ணத்தின்
அடிப்படையில் அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
இது சமூக மரியாதை யின் குறியீடானது. விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும்
சூத்திரர் எனப்பட்டா ர்கள். இக்காலத் தில் வேறுசில
சமூகக் குழுவினர் உருவாகியிருந்தனர். சமூகப்
படிநிலையில் அவர்கள் சூத்திரர்களுக்குக் கீழே
வைக்கப்பட்டா ர்கள்; தீண்டத்தகாத வர்களாக க்
கருதப்பட்டா ர்கள். இவர்கள் ஊருக்கு வெளியே
வசிக்கும்படி கட்டா யப்படுத்தப்பட்டார்கள். தம்
உணவிற்காக, பிழைப்பிற்காக இவர்கள்
வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்
ஆகியவற்றை நம்பி இருந்தார்கள். இவர்கள்
பொதுவான வாழிடங்களின் ஓரங்களில் வசிக்கும்படி
ஒதுக்கப்பட்டா ர்கள். நகரமயமாக்கம்அதிகரித்தபோது,
இவர்களுக்கு குற்றே வல் வேல ைகளே தரப்பட்டன.
இவர்கள் தங்களுக்கெனத் தனி மொ ழியைக்
கொண்டிருந்தனர். அது இந்தோ -ஆரியர்களால்
பேசப்பட்ட மொ ழியிலிருந்து மாறுபட்டிருந்தது.
அவைதீகச்சிந்தனையாளர்களின்
தோற்றம் :
பொது ஆண்டுக்கு முந்தை ய ஆறாம், ஐந்தாம்
நூற்றாண்டுகளில் வட இந்தியா கவனிக்கத்தக்க
அறிவுமலர்ச்சியைச் சந்தித்தது. இம்மலர்ச்சி இந்தியா
முழுவதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்ப டுத்தியது.
அதற்குப் பிந்தை ய நூற்றாண் டுகளிலும்
இந்தியாவின் பண்பாட் டில் இத்தாக்கம் தொ டர்ந்தது.
அறிவுமலர்ச்சி தெற்கா சியா முழுவதும் பரவியது.
ஏற்கெனவே பின்பற்றப்பட் டுவந்த தத்துவத்தைச்
சில அவைதீகச் சிந்தனை யாளர்கள் கேள்விக்கு
உட்படுத்தியதன் விளைவாக இத்தகை ய அறிவு
மலர்ச்சி தோன்றியது. இக்காலக ட்டத் தில்தான்
கோசலர், கௌதம புத்தர், மகாவீரர், அஜிதகேசகம்பளி
முதலான பல்வேறு மாறுபட்ட சிந்தனை யாளர்கள்
இவ்வுலக இன்பங்களைத் துறந்து, அன்று நிலவி
வந்த சமூக, பண்பாட் டுச் சூழல் குறித்து ஆழ்ந்த
சிந்தனைகளுடன் கங்கை ச் சமவெளிகளில் திரிந்து
வந்தனர். இத்தகைய துறவிகள் கங்கை ச் சமவெளி
முழுவதும் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம்
செய்வதும் புதிய கருத்துகளைப் எடுத்துரைப்ப தும்
அவற்றை ஆதரிப்பதும் வழக்கமாக இருந்தன.
இத்துறவிகளின் போதனைகள் புதிய
ஆட்சிமுறைகள், நகர மையங்களின் உருவாக்கம்,
கைத்தொழில்கள், தொலைதூர வணிகத்தின்
வளர்ச்சி ஆகியவற்றா ல் மிகவிரைவாக
மாறிக்கொண்டிருந்த சமூகத்தின் தேவைக ளைப்
பேசின. இந்த அறிவுமலர்ச்சி வாதிகள் வேதக்
கருத்தாக்கங்களான ஆன்மா , மனம், உடல்
ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார்கள்.
அதன்வழியாக, புதிய மதங்கள் தோ ன்றுவதற்கு
வழிவகுத்தார்கள். இவர்கள் அனைவரும்
வேத மதத்தைக் கேள்விக்குள்ளா க்கினாலும்,
ஆசீவகர்கள் :
தோற்றுவித்தவர் ‘நந்த வாச்சா ‘ என்பவர் என்று
கருதப்படுகிறது. இவருக்குப் பின் வந்தவர் கிஸா
சம்கிக்கா. ஆசீவகர்களில் தலைசிறந்தவரும்,
மூன்றாவது தலைவராக இருந்தவரும் மக்கா லி
கோசலர் ஆவார். கோ சலர் மகாவீரரை நாளந ்தாவில்
முதன்முறையாகச் சந்தித்தார். இவர்களது நட்பு
ஆறாண்டு நீடித்தது. இவர்கள் பின்னர் கோ ட்பாட் டு
வேற்றுமைகாரணமாகப் பிரிந்தனர். பின்னர் கோ சலர்
சிராவஸ்தி சென்றார் . அங்கு ஹலாஹலா என்ற
வசதிமிக்க குயவர் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார் .
இவர் புத்துயிர்ப்பு என்ற கோ ட்பா ட்டை நம்பினார்.
வேதத் துறவிகளின் பல்வே று கடும் தவங்களைக்
கேலிசெய்து, விமர்சித்தார். எதிர்ப்பிரிவுகள் என்பதா ல்
பௌத்த, சமண நூல்கள் கோ சலரை க் கெட்ட குணம்
உள்ளவராகச் சித்தரிக்கின்றன. ஆசீவகப் பிரிவின்
தலைமை யகமாக சிராவஸ்தி இருந்தது. ஆசீவகர்கள்
நிர்வாணத் துறவிகள். ஊழ்வினைக் கோட்பாட்டை
நம்பியவர்கள். ஆசீவகர்களின் அடிப்படை க்
கொள்கை நியதி அல்லது விதி என்பதா கும். இது
‘எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை
என்பதால் இவ்வுலகில் எதையும் மாற்ற முடியாது;
துக்கத்தைத் தீர்ப்பத ற்கு ஒருவர் பல்வே று
பிறவிகளை எடுக்க நேரிடும்’ என்று கருதுவதாகும்.
ஆசீவகத்தின்படி, வாழ்வில் தவிர்க்க முடியாத ஆறு
அம்சங்கள் இருக்கின்றன. அவை லாபம் , நஷ்டம் ,
இன்பம், துன்பம் , வாழ்வு, மரணம் ஆகியன ஆகும்.
கோசலரின் மரணத்திற்குப் பிறகு, புராண கஸ்ஸபர் ,
பகுத கச்சாயனர் என்ற இரு பரப்புரையாளர்கள்
ஆசீவகர்களோடு இணைந் து, அதற்குப் புத்துயிர்
கொடுத்தனர்.
செயல்களுக்கு நற்கூறுகள், தீயகூறுகள்
எதுவும் கிடையாது என்று புராண கஸ்ஸபர்
கருதினார். சித்திரவதை, காயம்இழைத்தல், கொலை
ஆகியவற்றால் எந்தத் தீமை யும் நேர்ந் து விடாது
என்று கருதினார். அதேபலஈகை, சுயக்கட்டுப்பா டு,
உண்மையான பேச்சு ஆகியவற்றா லும் எந்த
நன்மையும் கிட்டா து. ஏனென்றா ல், எல்லாமே
முன்னரே முடிவுசெய்யப்ப ட்டவை என்பதா ல்
மனிதர்கள் எதையும் தமது செயல்களால் மாற்ற
முடியாது. இருக்கும் ஒரே வழி செயலின்மைதா ன்
என்பது அவரது கருத்து. பகுத கச்சா யனர் இந்த
உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக
நம்பினார். அவை ‘உருவாக்கப்படாதவை ,
குறைக்க முடியாதவை , படைக ்கப்படாதவை ,
விளைவுகள் அற்றவை , மலைச் சிகரத்தைப் போல
நிலையானவை, ஒரு தூணைப்போல உறுதியாக
நிற்பவை, வடிவங்கள், வேறொன்றாக மாறாதவை ,
ஒன்றில் ஒன்று தலையிடாதவை , ஒன்றிற்கு ஒன்று
மகிழ்ச்சியோ, வேதனையோ அல்லது மகிழ்ச்சி,
வேதனை இரண்டையுமோ தர இயலாதவை . குயவர்கள், வங்கியாளர்கள் போன்ற
செல்வமிக்க துறவறம் பூணாத சீடர்கள்
ஆசீவகத்திற்கு இருந்தார்கள். பௌத்தம், சமணம்
ஆகியவற்றோடு ஒப்பிடும்போ து, ஆசீவகத்தின்
செல்வாக்கு குறைவுதான் என்றா லும், நாடு
முழுவதும் பரவியிருந்தது.
அஜித கேசகம்பளி (கேசத்தாலான
கம்பளியணிந்த அஜிதன்) ஒரு பொருள்முதல்வா தி.
அவர் ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர்,
காற்று, உணர்வு ஆகிய நான்கு அடிப்படை ப்
பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று
கருதினார். மரணத்திற்குப் பிறகு இந்த மூலப்
பொருட்கள் பூமிக்குத் திரும்பிவிடும். மரணத்திற்குப்
பிறகு வாழ்வில்லை . ”பெருந்தன்மை மூடர்களால்
கற்றுத்தரப்படுவதாகும். மரணத்திற்குப் பிறகா ன
வாழ்க்கையைப் பற்றிப் பேசுபவர்களின் பேச்சு
பொய்யும் வெற்று அரட்டையுமாகும். உடல்
அழியும்போது புத்திசாலி, முட்டா ள் எல்லோ ருமே
முற்றிலுமாக அழிந்து போகிறார்கள். மரணத்திற்குப்
பிறகு அவர்கள் வாழ்வதில்லை ” என்றார் அவர்.
சமணம் :
பல்வேறு பிரிவுகளில், வர்த்தமான மகாவீரரின்
தலைமையிலான பிரிவு (பௌத்த இலக்கியங்களில்
நிகந்த நடபுத்தர் என்று இவர் குறிப்பிடப்படுகிறார்)
சமணம் என்ற ஒரு மதமாக மலர்ந்தது. இது
முதலில் நிர்கிரந்தம் (தளைகளிலிருந்து விடுபட்டது)
என்று அழைக்கப்பட்டது. மகாவீரர் ஜீனர் (உலகை
வென்றவர்) என்று அழைக்கப்பட்டதா ல், அவரது
பிரிவு ஜைனம் என்றும் அழைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சமணம் என்று அழைக்கப்படுகிறது.
சமணப் பாரம்பரியத்தின் படி, சமணத்தை ஆதியில்
தோற்றுவித்தவர் மகாவீரர் அல்ல. அவர் இருபத்தி
நான்கு தீர்த்தங ்கரர்களில் கடை சியானவர். சமண
பாரம்பரியத்தின்படி அதைத் தோ ற்றுவித்தவர்
ரிஷபர் என்பவராவார். இவர் முதல் தீர்த்தங்கரராகக்
கருதப்படுகிறார். யஜுர்வேதம் ரிஷபர் , அஜிதானந்தர் ,
அரிஷ்டநேமி என்ற மூன்று தீர்த்தங்கரர்களைக்
குறிப்பிடுகிறது. மகாவீரர் தமது உறுப்பினர்களைத்
துறவிகளாகவும், துறவறம் கொள்ளா து தம்மைப்
பின்பற்றுபவர்களாக வும் திரட்டினார். மரணத்திற்குப் பிறகு, தமது முப்பதா வது வயதில் அவர்
வீட்டை விட்டு வெளியேறினார் . உண்மையான
ஞானத்தைத் தேடிப் பன்னிரண்டாண் டுகள்
அலைந்தார். அவர் கடுமையான விரதத்தை
மேற்கொண்டார் . ஆடைக ளைத் துறந்தார். இப்படித்
திரிந்த காலத்தில் கோசால மாஸ்கரிபுத்திரரைச்
சந்தித்து அவரோ டு ஆறாண்டு காலம் இருந்தார்.
பின்னர் கருத்து வேறுபாட்டா ல் பிரிந்தார். இப்படித்
திரிய ஆரம்பித்த பதின்மூன்றா வது ஆண்டில்,
தனது நாற்பத்தியிரண்டாம் வயதில் வர்த்தமானர்
ஞானத்தை அல்லது நிர்வாணத்தை அடைந்தார்.
பிறகு தீர்த்தங்கரர் ஆனார் . ஜீனர் (வெற்றி பெற்ற வர்)
என்றும் மகாவீரர் என்றும் அழைககப்பட்டார் .
அவர் முப்பதாண்டு காலம் உபதே சம் செய்தார்.
செல்வர்களும் மேட் டுக்குடியினரும் அவரை
ஆதரித்தனர். பொ.ஆ.மு. 468 வாக்கில் தனது
எழுபத்தியிரண்டாம் வயதில், ராஜகிருகத்திற்கு
அருகில் உள்ள பவபுரியில் மரணமடைந்தார். சமண
நம்பிக்கையின்படி, அவர் உண்ணாவிரதமிருந்து
உயிர் நீத்ததாக நம்பப்ப டுகிறது. அவரது மரணம்,
அதாவது இறுதி விடுதலை சமணர்களுக்கு ஒரு
மகிழ்ச்சியான நிகழ்வாகும்.
மகாவீரரை ஏராளமானோர் பின்பற்றினர்.
ஆரம்ப காலங்களில், இவர்கள் சமூகத்தின் பல்வே று
பிரிவுகளிலிருந்தும் வந்தனர். எனினும்
காலப்போக்கில், சமணம் வணிகம், வட்டிக்குக்
கடன் தருவோர் ஆகிய சமூகத்தினரோ டு
சுருங்கிவிட்டது. அகிம்சையை சமணம் மிகவும்
வலியுறுத்தியதால், வேளா ண்மை உள்ளிட்ட மற்ற
தொழில்களை அவர்களால் செய்ய முடியாமல்
போனது. ஏனெனில் இத்தொ ழில்களில் தெரிந்தோ ,
தெரியாமலோ பிற உயிர்களைக் கொல்ல நேரலாம்
Comments
Post a Comment