அறிமுகம் :
கிரோண்டியர்களும் ஜேக்கோபியர்களும் :
லஃபாயட்டியின் அரசியல் அமைப்புக்குக்
கட்டுப்பட்ட முடியாட்சி இரண்டு ஆண்டு காலம்
பிரெஞ்சு அரசியல் களத்தில் கோலோச்சியது. 1791
ஜூனில் பாரிசிலிருந்து தப்பித்து, எல்லையைக்
கடந்து அங்கே கூடியிருக்கும் எதிர்புரட்சிப்
படைகளுடன் இணைவதற்காக மன்னர்
மேற்கொண்ட முயற்சியைக் குடியானவர்
படையொன்று முறியடித்தது. இருந்தபோதிலும்
உணவுப் பண்டங்களுக்கான பற்றாக்குறையும்
விலையேற்றமும் வேலையில்லாத் திண்டாட்டமும்
கைவினைஞர்களையும் சிறு வணிகர்களையும்
தொழிலாளர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்தது
ஏமாற்றத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றது.
மக்கள் பொங்கியெழுவதை அடக்குமுறையால்
கட்டுப்படுத்த இயலவில்லை. அரசாங்கத்தை
நடத்திய மிதவாதிகள் தங்களுக்குள்ளேயே
வேறுபட்டனர். ஜோக்கோபியன் குழுவிற்குள்
இருந்த கிரோண்டியர்கள் (அவர்களின் ஒரு
தலைவர் பிரிசாட் என்ற பெயரால் பிரிசாடினியர்கள்
என்றும் அழைக்கப்பட்டனர்) ரோபஸ்பியரைப்
போலவோ, டாண்டனைப் போலவோ அதி
தீவிரவாதிகளாக இல்லை. அவர்களுக்குள்ளே பல
கருத்து வேறுபாடுகளிருந்தாலும் ரோபஸ்பியரைத்
தவிர மற்றவர்கள், அந்நிய சக்திகளுக்கு எதிரான
ஒரு போர் செய்வதன் மூலம் நிலைமைகளைச்
சீராக்கலாம் என நம்பினர். அவ்வாறான
போர் புரட்சிக்கான கதவுகளைத் திறந்து
வைக்குமென ரோபஸ்பியர் வாதாடினார். ஆனால்
கிரோண்டியர்கள் அரசருடன் இசைந்து ஒரு
அரசாங்கத்தை உருவாக்கியதையோ, பின்னர்
1792 ஏப்ரலில் ஆஸ்திரியாவுக்கும் பிரஷ்யாவுக்கும்
எதிராகப் போர் அறிவிப்புச் செய்ததையோ அவரால்
தடுக்க இயலவில்லை
தேசியப் பேரவை (National Convention):
கிரோண்டியர்கள் திட்டம் பேரிடராக
முடிந்தது. கோபம் கொண்ட ஜேக்கோபியன்
குழு உறுப்பினர்கள் பதினாறாம் லூயியின்
அதிகாரபூர்வமான வசிப்பிடமான டியூலரிஸ்
அரண்மனைக்குள் புகுந்தனர். காவலர்களைக்
கொன்று அரசரைச் சிறைப்பிடித்தனர். புதிதாக
உருவான சட்டமன்றமான தேசியப் பேரவை
அரசரைச் சிறையில் அடைக்கவும் நாட்டிற்குப் புதிய
தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடத்தவும்
வாக்களித்தது. தேர்தலில் 21 வயதிற்கு மேற்பட்ட
அனைவரும் செல்வத்திலும், அந்தஸ்திலும்
எந்த வேறுபாடும் இல்லாமல் வாக்களிக்கும்
உரிமையைப் பெற்றனர்.
செப்டம்பர் படுகொலைகள் :
முடியாட்சி தூக்கி எறியப்பட்ட பின்னர்
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள்
எதிர்புரட்சியாளர்கள் தீட்டிய சதியொன்றில்
இணையப் போவதாக மக்கள் நம்பினர். இதன்
விளைவாக மக்கள் கூட்டம் சிறைச்சாலைகளைத்
தாக்கின. அரச குடும்ப ஆதரவாளர்கள் எனக்
கருதப்பட்ட அனைவரும் கேள்வி முறையின்றி
கொல்லப்பட்டனர். 1792 செப்டம்பர் 2இல் பாரிஸ்
நகரில் அபே சிறையில் தொடங்கிய இப்படுகொலை
நகரின் ஏனைய சிறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு
அடுத்து வந்த நான்கு நாட்களுக்கும் தொடர்ந்தது.
செப்டம்பர் படுகொலைகள் எனப் பின்னர்
அழைக்கப்பட்ட இந்நிகழ்வில் மொத்தம் 1,200
கைதிகள் கொல்லப்பட்டனர். புரட்சியின்
பயங்கரத்திற்கு ஆதாரமாக இப்படுகொலைகள்
பற்றிய செய்திகள் ஏனைய நாடுகளில்
பரவின. இதற்கு கிரோண்டியர்கள் தங்களின்
அதிதீவிர எதிரிகளைக் குறிப்பாக மாரட், டாண்டன்,
ரோபஸ்பியர் ஆகியோரைக் குற்றம் சாட்டினர்.
தேசியப் பேரவையின் பணிகள் :
1792 செப்டம்பர் 20இல் புரட்சிப் படையினர்
ஊடுருவி வந்த பகைவர்களை வால்மி எனுமிடத்தில்
எதிர்கொண்டு நிறுத்தினர். மறுநாள் புதிய
சட்டமன்றமான தேசியப்பேரவை முடியாட்சியை
ஒழித்து பிரான்ஸ் ஒரு குடியரசு என அறிவித்தது.
1793 ஜனவரி 21இல் அரசர் பதினாறாம் லூயி
மக்கள் தீர்ப்பாயத்தின் முன்னர் கொண்டுவரப்பட்டு
கில்லட்டின் கொலைக்கருவியில் கொல்லப்பட்டார்.
தனது மக்களுக்கு எதிராக அயல்நாட்டவரின்
உதவியைக் கோரியதே அவர் செய்த குற்றமாகும்.
இதன் பின்னர் விரைவில் மேரி அன்டாய்னெட்டும்
சிரச்சேதம் செய்யப்பட்டார்.இச்சூழ்நிலையில் நகர்ப்புறங்களிலும்
கிராமப்புறங்களிலும் ஒரு சேரப் பசித்துயரம்
பெருகியது. விலைகளைக் கட்டுப்படுத்தும்படியும்,
மக்களுக்கு உணவு தானிய விநியோகங்களை
முறைப்படுத்தும்படியும் ஊகவணிகர்களுக்கும்
பதுக்கல்காரர்களுக்கும் எதிராக நடவடிக்கை
எடுக்கும்படியும் பாரிஸ் நகர மக்கள் கோரிக்கை
வைத்தனர். பாரிஸ் நகர மக்களின் நியாயமான
கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான
முயற்சிகளை முன்னெடுக்காத தேசியப் பேரவை,
மாறாக இராணுவத்தை ஏவி மக்களைத்
தாக்கியது. படைத்தளபதிகளில் பலர் எதிரணியில்
சேர்ந்து கொண்டதால் படைகள் தொடர்ந்து
தோல்விகளைச் சந்தித்தன. மேற்கு பிரான்சின்
வெண்டி பகுதியில் நம்பிக்கை இழந்த விவசாயிகள்
முடியாட்சி ஆதரவாளர்களுடன் கைகோர்த்தனர்.
முடிவாக (1793 மே 29) மிதவாதிகளும்
முடியரசு ஆதரவாளர்களும் லியான்ஸ் (Lyons)
பகுதியைக் கைப்பற்றினர். இப்ப குதி பட்டு
ஆலைத் தொழில் நன்கு செயல்பட்ட பகுதியாகும்.
மேலும் இப்பகுதியில் ஜெர்மனி, இத்தாலி ஆகிய
நாடுகளிலிருந்து பணம் படைத்த வணிகர்கள்
பலர் குடியேறியிருந்தனர்.
ஜேகோபியன்களின் ஆட்சி :
புரட்சி தொடங்கியது முதல் கடந்த நான்கு
ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த நன்மைகளை
இழப்பதற்கு ரோபஸ்பியர் விரும்பவில்லை. எனவே
அவர் தன்னுடைய சர்வாதிகார ஆட்சியைத்
தொடங்கினார். ஜேகோபியர்கள், கிரோண்டியர்
குழுவின் தலைவர்களை சிரச்சேதம் செய்யும்
கில்லட்டின் இயந்திரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
டாண்டனும் கில்லட்டினுக்கு அனுப்பப்பட்டார்.
1793க்கும் 1794க்கும் இடைப்பட்ட காலம் தீவிர
சீர்திருத்தங்களுக்கான காலமாகும். 1794 பிப்ரவரி
4இல் ஜேக்கோப்பியர்கள் அதிகம் இருந்த சட்டமன்றம் பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலும்
அடிமைமுறையை ஒழித்து ஆணை பிறப்பித்தது.
மக்கள் பெரும் ஊதியத்திற்கு உச்சவரம்பு
விதிக்கப்பட்டது. ரொட்டி, இறைச்சி போன்ற உணவுப்
பண்டங்கள் பங்கிட்டு விநியோகம் (Ration)
செய்யப்பட்டன. பண்ணைப் பொருட்களுக்கான
விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்தது. ‘சார்’,
‘மேடம்’ எனும் சொற்களுக்குப் பதிலாக ஆண்
குடிமகன், பெண் குடிமகள் எனும் வார்த்தைகள்
பயன்பாட்டிற்கு வந்தன. திருச்சபைகள் போன்ற
சமயம் சார்ந்த இடங்கள் இராணுவ முகாம்களாக
மாற்றப்பட்டன. அரசாங்கமும், சமூகத்தின்
அடித்தளமும் அளவுக்கு மேலாக
தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம் கொண்ட
உறுப்பினர்கள் ரோபஸ்பியருக்கு எதிராகவே
திரும்பினர். அவரும் குற்றம் சாட்டப்பெற்று 1794இல்
தூக்கிலிடப்பட்டார்
இயக்குநர் குழு :
ரோபஸ்பியரை பதவியைவிட்டு
தூக்கியவர்களாலும் நீண்ட நாட்கள் அதிகாரத்தில்
இருக்க முடியவில்லை. புரட்சியை வெறுத்தவர்கள்
பாரிஸ் நகரின் வீதிகளை ஆக்கிரமித்து புரட்சிகர
சிந்தனைகளை ஆதரித்தவர்களையெல்லாம்
தாக்கினர். 1795 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்
இரண்டு கிளர்ச்சிகள் ஏற்பட்டன. புதிதாக
உருவாயிருந்த தெர்மிடோரியன் எனும் குழுவுக்கு
விசுவாசமாயிருந்த படைகளால் அவைகள்
நசுக்கப்பட்டன. இதனிடையே எமிகிரஸ்கள் (Emigres)
நாடு திரும்பத் தொடங்கினர். அவர்கள் விரைவில்
முடியாட்சி மீட்கப்படுமென தற்பெருமை பேசினர்.
1795 அக்டோபரில் முடியாட்சி ஆதரவாளர்கள்
பாரிஸ் நகர வீதிகளில் தாங்களாகவே ஒரு
கிளர்ச்சியை அரங்கேற்றினர். ஒரு காலத்தில்
ஜேகோபியராக இருந்தவரும், ராணுவத்தில்
முன்னேறிக் கொண்டிருக்கும் அதிகாரியுமான
நெப்போலியன் போனபர்ட் படைகளுக்குத்
தலைமையேற்று கிளர்ச்சியாளர்களுக்கு உதவி
செய்யக் களமிறங்கினார். ரத்தம் சிந்துவதற்கு அஞ்சிய
தெர்மிடோரியன்கள் ஐந்து நபர்களைக் கொண்ட
இயக்குநர் குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க
இசைந்தனர். நான்கு வருட காலத்தில் ஏதாவது
ஒன்றை சாக்காகக் கொண்டு நெப்போலியன்
அதிகாரம் மிக்கவரானார். 1799இல் நெப்போலியன்
ராணுவப் புரட்சியை அரங்கேற்ற அது அவருக்கு
அனைத்து அதிகாரங்களையும் நல்கியது. 1804இல்
நெப்போலியன் தன்னைப் பிரான்சின் பேரரசராகப்
போப்பாண்டவரைக் கொண்டு முடிசூட்டச் செய்தார்
இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகள் :
பதினாறாம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்க
பகுதிகள் ஸ்பானியர்களால் கைப்பற்றப்பட்டன.
மேலும் போர்த்துகீசியரும் பிரெஞ்சுக்காரர்களும்
அங்கு சென்றனர். இன்கா, அஸ்டெக்குகள்
போன்ற தென்அமெரிக்க பண்பாடுகளின்
அரசியல் அதிகாரம் இக்காலனியாதிக்கச்
சக்திகளால் சிதிலமாக்கப்பட்டன. அங்கிருந்த
மத நம்பிக்கைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு
வந்த காலனியாதிக்கச் சக்திகள் அப்பகுதிகளில்
கத்தோலிக்க மதத்தை அறிமுகம் செய்தன. இலத்தீன்
அமெரிக்காவில் காலனியாதிக்கவாதிகளின்
ஆட்சியானது கொடூரமானதாக இருந்தது. அது
இனப்படுகொலைகள் மற்றும் பூர்வகுடி மக்கள்
கணக்கில்லாமல் கொன்று குவிக்கப்படுதல்
போன்றவற்றால் அடையாளப்படுத்தப்பட்டது.
தொழிற்புரட்சி :
பிரெஞ்சுப் புரட்சியின் பின்விளைவில்,
நெப்போலியன் பிணையப்பணம் பெறுவதற்காக
ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தன்வசம்
வைத்திருந்தபோது, மனிதகுல வரலாற்றின்
மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை தனது
விதியாகக் கொண்ட மற்றொரு புரட்சி
இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அதுவே தொ ழிற்புரட்சியாகும். தொழிற்புரட்சி
என்பது பெருமளவிலான பொ ருட்களை
மிகப்பெரும் ஆலைகளில் உற்பத்தி செய்யும்
முறையைப் பின்பற்றுதலைக் குறிக்கிறது.
இது கைவினைஞர்களின் குடிசைத்
தொழிற்கூடங்களிலோ அல்லது பட்டறைகளிலோ
பொருட்களைத் தயாரிப்பது எனும் பழைய முறைக்கு
எதிரானது
பருத்தித் தொழிற்சாலைகளில் புரட்சியை
ஏற்படுத்திய சில முக்கியமான கண்டுபிடிப்புகளின்
தோற்றமே தொழிற்புரட்சியின் முதல் கட்டமாகும்.
நீராவியின் பயன்பாடானது நிலக்கரியைப்
பயன்படுத்தி இரும்பை உருக்கும் பழைய
முறையைக் கைவிடச் செய்தது. நிலக்கரி, இரும்புத்
தொழிற்சாலைகள் மிக வேகமாக வளர்ந்தன. பின்பு
செய்திப் பரிமாற்றத்திற்கான வழிவகைகளில்
பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இடம் விட்டு இடம்
செல்லக்கூடிய முதல் பயணிகள் ரயில் (1830),
நீராவிப்படகு, மின்சாரத் தந்தியின் பயன்பாடு
(1835) ஆகியவை நடைமுறைக்கு வந்தன. ஒரு
நூறாண்டு காலத்தில் இங்கிலாந்து முற்றிலுமாக
மாற்றப்பட்டது.
சிறப்புக் கூறுகள் :
தொழிற்புரட்சியின் இன்றியமையாத கூறு,
அறிவியல் தொழிலில் புகுத்தப்பட்டதுதான்.
இரும்பு, எஃகு ஆகியவற்றின் பயன்பாடு நிலக்கரி
மற்றும் நீராவி போன்ற ஆற்றலுக்கான புதிய
மூலப்பொருட்களின் பயன்பாடு, உற்பத்தியை
அதிகரிக்கச்செய்த புதிய இயந்திரங்களின்
கண்டுபிடிப்பு, ஆலைமுறை என்றழைக்கப்பட்ட
வேலைகளை ஒழுங்கு செய்த புதியமுறைகள்
ஆலைகளில் நடைமுறைபடுத்தப்பட்ட வேலை
பிரிவினை, சிறப்புத் தொழிற்திறன் முறைகள்,
போக்குவரத்திலும் செய்தித் தொடர்புகளிலும் ஏற்பட்ட
முன்னேற்றங்கள் ஆகியவை பேரளவிலான
பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதை
சாத்தியமாக்கியது
தொழிற்புரட்சி காலத்தைய முக்கியக் கண்டுபிடிப்புகள் :
தொழிற்சாலை அமைப்பு :
தொழிற்புரட்சிக்கு முன்னர் பொருள்களின்
உற்பத்தியானது தொ ழிற்கூடங்களிலோ அல்லது
தொழிலாளர்களின் குடிசைகளிலோ நடைபெற்றது.
மண்பாண்டத்தொழில் செய்வோர், சக்கரங்கள்
தயாரிப்போர், வண்டிகள் செய்வோர், நூற்போர்,
நெசவு செய்வோர் தங்களின் திறன்களையும்
வலுவையும் கொண்டு விரும்பிய பொருட்களை
உற்பத்தி செய்தனர். புதிய கண்டுபிடிப்புகளின்
வருகைக்குப் பின்னர் இப்பணிகளை
இயந்திரங்கள் செய்தன. இயந்திரங்களைக்
குறிப்பிட்ட இடைவெளிகளில் இயக்குவதற்கு
தனித்திறன் பெற்ற அல்லது ஓரளவு திறன்
பெற்ற தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
தொழிற்சாலைகள் பெருமளவிலான பொருட்களை
உற்பத்தி செய்யுமிடமாயிற்று.
பருத்தித் தொழிலில்தான் முதன்முதலாக
தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. நூற்பு
இயந்திரம், நூற்புச் சட்டகம், பறக்கும் நாடா,
கிராம்டன் மியூல் எனும் நூற்கும் இயந்திரம்
ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதின் காரணமாக
இது சாத்தியமாயிற்று. பறக்கும் நாடா 1733இல்
ஜான் கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கண்டுபிடிப்புக்கு முன்னர் நெசவு செய்பவர் தனது
கையிலிருக்கும் நாடாவிலுள்ள நூலை, தனக்கு
முன்பாக நீளவாக்கில் இருக்கும் நூல்களுக்கிடையே
(பாவு) மெதுவாகச் செலுத்தி எடுக்க வேண்டும்.
பறக்கும் நாடா கண்டுபிடிக்கப்பட ்ட பின்னர் இப்ப ணி
வேகமாக நடைபெற்று நெசவு செய்பவரின் உற்பத்தி
இருமடங்காயிற்று. 1764இல் ஸ்பின்னிங் ஜென்னி
எனும் நூற்பு இயந்திரம் ஜேம்ஸ் ஹார்கிரீவ்ஸ்
என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது முறையின்படி ஒரே ஒரு இழையை மட்டுமே நூற்க
இயலும். ஆனால் இந்த இயந்திரம் ஒரே நேரத்தில்
எட்டு இழைகளைப் பின்னி நூற்றது. ரிச்சர்டு
ஆர்க்ரைட் என்பவரால் 1769இல் உருவாக்கப்பட்ட
நீர்ச்சட்டகம் என்ற இயந்திரத்தால் ஒரே சமயத்தில்
128 நூல்களை நூற்க முடிந்தது. ஸ்பின்னிங்
ஜென்னியையும் நீர்ச்சட்டகத்தையும் இணைத்து
சாமுவெல் கிராம்டன் மியூல் எனும் இயந்திரத்தைக்
கண்டுபிடித்தார். இவ்வியந்திரத்தின் மூலம்
நெசவுமுறையைப் பெருமளவில் கட்டுக்குள்
வைத்துக்கொள்ள முடிந்ததோடு ஒரே நேரத்தில்
பல்வகைப்பட்ட நூல்களையும் நூற்க முடிந்தது.
Comments
Post a Comment