அறிமுகம் :
பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பாக
முகலாயர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள்
நாட்டின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர்.
ஆளும் வர்க்கங்களான இறையாண்மையுள்ள
அரசுகள், நிலப்பிரபுக்கள், படைத்தளபதிகள்
மற்றும் அலுவலர்கள் ஆகியோர் முஸ்லிம்களாக
இருந்ததால் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் சில
சலுகைகளை ஆளும் வர்க்கத்தினரிடமிருந்துப்
பெற்றனர். அலுவலக மொழியாகவும் நீதிமன்ற
மொழியாகவும் பாரசீகமொழி இருந்தது. ஆங்கிலேயர்
படிப்படியாக அவற்றை மாற்றி ஒரு புதிய நிர்வாக
முறையை அறிமுகப்படுத்தினர். பத்தொன்பதாம்
நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஆங்கிலக் கல்வி
முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. 1857ஆம்
ஆண்டுப் பெரும்புரட்சியே ஆளும்வர்க்கத்தினரின்
இறுதி வாய்ப்பாக அமைந்தது. புரட்சியின்
கடுமையான அடக்குமுறைகளைத் தொடர்ந்து,
முஸ்லிம்கள் தங்களது நிலம், வேலை உள்ளிட்ட
வேறு பல வாய்ப்புகளையும் இழந்ததோடு
வறுமை நிலைக்கும் தள்ளப்பட்டனர். இத்தகைய
நிலைக்குத் தள்ளப்பட்டதை பொறுத்துக்கொள்ள
முடியாத அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி
வாழும் நிலை ஏற்பட்டது. மேலும் 1857ஆம்
ஆண்டு பெரும்புரட்சிக்குப்பின் வாழ்ந்த முதல்தலைமுறையினர் சிலர் ஆங்கிலேயரின்
அனைத்து நடவடிக்கைகளையும் வெறுத்தனர்.
மேலும் அவர்கள் ஆங்கிலேய காலனியக்
கொள்கையால் ஏற்படுத்தப்பட்ட புதிய வாய்ப்புகளை
பயன்படுத்திக்கொண்ட இந்தியர்களோடு போட்டியிட
நேர்ந்ததால் சீற்றம் கொண்டனர். கல்வி கற்ற
மேல்வகுப்பு இந்துக்கள் தேசிய உணர்வு பெற்று
எழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர்கள் நடுத்தர
வர்க்க முஸ்லிம்களை காங்கிரஸின் வளர்ச்சியை
தடுத்து நிறுத்த ஒரு சக்தியாகப் பயன்படுத்தினர்.
அவர்கள் இத்தகைய சூழலைப் புத்திசாலித்தனமாக
தங்களுக்குச் சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டனர்.
இப்பாடத்தில் நாம் மூன்று வகையான தேசியத்தின்
போக்குகளை பற்றி அறிய உள்ளோம் அவையாவன:
இந்திய தேசியம், இந்து தேசியம் மற்றும் முஸ்லிம்
தேசியம் என்பவனவாகும்.
பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம்
மற்றும் வளர்ச்சி :
இந்துமத மறுமலர்ச்சி :
ஆரம்பகால தேசியவாதிகள் சிலர்
தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் உருவாக்கமுடியும் என்று நம்பினர். சர்வபள்ளி
கோபால் குறிப்பிடுவது போல 1875இல் நிறுவப்பட்ட
ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து
மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது.
ஆரிய சமாஜம் இந்து மதத்தின் உயரியத்
தன்மைகளை உறுதியுடன் முன்வைத்தது. இந்து
தேசியவாதிகளில் ஒருவராகத் தன்னை அடையாளம்
கண்டுகொண்ட அன்னிபெசண்ட் அம்மையார் தனது
கருத்துகளைப் பின்வருமாறு குறிப்பிட்டார்:
“பண்டைய மதங்களைப் புத்துயிர்ப்பு செய்து
வலுப்படுத்தி, உயர்த்துவதே இந்தியர்களின்
முதற்பணி ஆகும். இது கடந்த காலப் பெருமையுடன்,
ஒரு புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின்
மீதான நம்பிக்கையையும், ஒரு தவிர்க்க இயலாத
விளைவாகவும், தேச/நாட்டுப்பற்றுடன் கூடிய
வாழ்வின் ஒரு பேரலையாகவும், நாட்டைப்
புனரமைப்பதற்கானத் தொடக்கமாகவும்
உருவாக்கப்பட வேண்டும்”
முஸ்லிம் உணர்வின் எழுச்சி :
சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல,
மறுபுறம் இஸ்லாம் அலிகார் இயக்கத்தின்
வழியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
பிரிட்டிஷார் அலிகார் கல்லூரியை ஏற்படுத்த
சையது அகமதுகானுக்கு ஆதரவளித்ததும் முஸ்லிம்
தேசியக்கட்சி தோன்றவும், முஸ்லிம் அரசியல்
கருத்தியல் தோன்றவும் உதவியது. வாஹாபிகள்
இஸ்லாமை அதனுடைய ஆதித்தூய்மைக்கு
அழைத்துச் செல்லவும், அதன் உயிரை
உருக்குலைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள்
கருதிய சில மூடப்பழக்கங்களை முடிவுக்குக்
கொண்டுவரவும் விரும்பினர். வாஹாபிகளில்
தொடங்கி கிலாபத்காரர்கள் வரையானோர்
அடிமட்டச் செயல்பாடுகளில் காட்டிய செயற்முனைப்பு
முஸ்லிம்களை அரசியல் மயமாக்குவதில் முக்கியப்
பங்காற்றியது. வேறுபல காரணங்களாலும் முஸ்லிம் உணர்வு
மேலோங்கத் தொடங்கியது. 1870களில் வங்காள
அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில்
உருதுக்குப் பதில் இந்தி மொழியை
அறிமுகப்படுத்தியதும், பாரசீக அரேபிய எழுத்து
வடிவத்திற்குப் பதில் நாகரி எழுத்து வடிவத்தைக்
கொண்டு வந்தது, முஸ்லிம் தொழில்வல்லுநர்கள்
மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை :
கூட்டு இந்திய அடையாளம் ஒன்று
உருவாவதைத் தடுப்பதே பிரிட்டிஷாரின்
நோக்கமாக இருந்ததால், இந்தியர்களின் ஒருங்கிணைப்பு முயற்சிகளை
முறியடிக்கத் தொடங்கினர்.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்
பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டது. பம்பாய்
ஆளுநர் எல்பின்ஸ்டோன், “பழைய ரோமானிய
இலட்சியமான ‘Divide et Impera’
(பிரித்தாளுதல்) என்பது நமதாக வேண்டும்” என்று எழுதினார்.
வகுப்புவாதக் கலவரங்கள் நாட்டின் ஆளுகைக்குச் சவாலாக இருக்கும் என்று
தெரிந்திருந்தபோதிலும் பிரிட்டிஷ் அரசாங்கம்,
வகுப்புவாதக் கருத்தியல் சார்ந்தஅரசியலுக்கு சட்டபூர்வ
அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வழங்கியது.
காங்கிரஸ் நடவடிக்கை :
ஆரிய சமாஜம் போன்ற இந்து அமைப்புகளில்
நிறைய காங்கிரஸ்காரர்கள் ஈடுபட்டபோதிலும்,
காங்கிரஸ் தலைமை சமயச்சார்பற்றதாகவே
இருந்தது. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது
கூட்டத்தில் பசுவதையைக் குற்றமென அறிவித்து,
தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என சில
காங்கிரஸ்காரர்கள் முயற்சிசெய்த போதிலும்,
காங்கிரஸ் தலைமை அத்தீர்மானத்தை
ஏற்கவில்லை. காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட
வகுப்பினரை அல்லது இனத்தைப் பாதிக்கும்
தீர்மானம் முன்மொழியப்படும்போது, அந்த வகுப்பைச்
சார்ந்த உறுப்பினர்கள் எதிர்த்தால், எதிர்க்கும்
உறுப்பினர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும்
அத்தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்ற
முடிவுக்கு காங்கிரஸ் வந்திருந்தது.
சையது அகமது கானின் பங்கு :
அலிகார் இயக்கத்தின் நிறுவனரான சர் சையது
அகமது கான், தொடக்கத்தில் காங்கிரசின் ஆதரவாளராக
இருந்தார். பின்னர், அவர் சிந்தனைவேறுவிதமாக மாறத்
தொடங்கியது. இந்துக்களால் ஆளப்படும் நாட்டில்,
சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தக்க உதவிகள் கிடைக்காது
என்று எண்ணினார். ஆனால், முஸ்லிம்
தலைவர்களான பத்ருதீன் தியாப்ஜி, பம்பாயைச்
சார்ந்த ரஹமதுல்லா சயானி, சென்னையைச் சேர்ந்த
நவாப் சையது முகமது பகதூர், வங்காளத்தைச்
சேர்ந்த ஏ.ரசூல் ஆகியோர் காங்கிரசை ஆதரித்தனர்.
ஆனால், வடஇந்தியாவில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் சையது அகமதுகானின் வழியைப்
பின்பற்றி பிரிட்டிஷாரை ஆதரிக்கத் தொடங்கினர்.
பிரதிநிதித்துவ அமைப்புகளின் அறிமுகம், அரசுப்
பணிக்கான போட்டித் தேர்வுகள் போன்றவை
முஸ்லிம்களின் பயத்தை அதிகரிக்கத்
தொடங்கியதால் சையது அகமது கானும், அவரைப்
பின்பற்றியவர்களும் அரசாங்கத்தோடு இணைந்து
செயல்படத் தொடங்கினர். அரசாங்கத்தோடு
இணக்கமாக செயல்படுவதன் மூலம் தனது
இனத்திற்கு அரசாங்கத்திடமிருந்து பெரும்பங்கினை
பெற்றுத்தர இயலும் என்றும், அப்படியில்லாதபட்சத்தில்
தம் இனத்தவர்கள் சிறுபான்மையினர் என்பதால்
எண்ணிக்கை அல்லது தகுதி அடிப்படையில்
வழங்கப்படும் குறைவான அரசு வெகுமதியே
கிடைக்கும் என்று எண்ணினார் இந்து-முஸ்லிம் விரிசலைக் குறைத்து
அனைத்து வகுப்பினரின் உண்மையான
குறைகளையும், தேவைகளையும் பிரிட்டிஷ்
அரசாங்கத்திடம் எடுத்துச்செல்லும் முயற்சியாகவே
1885இல் இந்திய தேசிய காங்கிரஸ்
தொடங்கப்பட்டது. ஆனால், சர் சையது அகமது கான்
இலண்டன் பிரிவி கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல் இந்தியரான சையது அமீர் அலி போன்ற
முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ், இந்துக்களை
மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்று
வாதிட்டனர். காங்கிரசின் முதல் கூட்டத்தில்
பங்கேற்ற 72 பிரதிநிதிகளில் இரண்டு பேர் மட்டுமே
முஸ்லிம்கள். மேலும், முஸ்லிம் தலைவர்கள்
காங்கிரசில் முஸ்லிம்கள் பங்கேற்றால் அது
ஆட்சியாளர்களிடையே அவர்கள் இனத்திற்குப்
பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற
அடிப்படையில் காங்கிரசை முழுமையாக
எதிர்த்தனர்
காங்கிரசின் பலவீன கொள்கை :
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
வங்காளத்தில் சுதேசி இயக்கம் (1905-06)
தொடங்கப்பட்டபோது, அதை ஆதரித்த முஸ்லிம்கள்
காங்கிரஸின் தரகர்கள் என்ற கண்டனத்திற்கு
உள்ளாயினர். காங்கிரஸ் இத்தகைய வாதங்களை
மறுத்து தக்க எதிர்வினை ஆற்றாமல் மௌனம்
காத்ததால், வகுப்புவாத அரசியல் சக்திகள் மேலும்
தூண்டப்பட்டன. அதே நேரத்தில், தேசியவாத
முஸ்லிம்கள் தங்கள் ஊக்கத்தையும், நம்பிக்கையும்
இழந்தனர். இருபதாம் நூற்றாண்டின் முதல் பதிற்றாண்டில்
அரசியல் தீவிரவாதம் சமய பழமைவாதத்துடன்
கைகோர்த்துக் கொண்டபோ து மோசமான
நிலைக்கு மாறத்தொடங்கியது. திலகர், அரவிந்த
கோஷ் மற்றும் லாலா லஜபதி ராய் ஆகியோர் சமய
அடையாளங்கள், திருவிழாக்கள் ஆகிய தளங்களை
பயன்படுத்தி காலனித்துவ எதிர்ப்பு உணர்வை
ஊட்டினர். கணபதி விழா மூலம் இந்துக்களை
திரட்டுவதற்கு திலகர் மேற்கொண்ட முயற்சி
மேலும் தீவிரப்படுத்திய மற்றொரு காரணியாகும்.
முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் கொள்கையை,
இந்திய தேசிய காங்கிரஸ் பின்பற்றியதற்கு லால்
சந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம் :
1906 அக்டோபர் 1இல் முஸ்லிம் பிரபுக்கள்,
ஆளும் வர்க்கத்தினர், சட்ட வல்லுநர்கள் மற்றும்
சமூகத்தின் உயர்பிரிவினர் பெரும்பாலும் அலிகார்
இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் ஆகிய 35
பங்கேற்பாளர்கள் ஆகாகான் தலைமையின்
கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய
அரசப்பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் தங்களது
கருத்துக்களை முன்வைத்தனர். அவர்கள்
அரசுப் பணிகளில் முஸ்லிம்க ளின் சதவீதத்தை
உயர்த்துதல், உயர்நீதி மன்றங்களில் முஸ்லிம்
நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரச பிரதிநிதியின்
ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த சிம்லா மாநாடு அரசப்பிரதிநிதியிடமிருந்து
எந்த ஒரு நல்ல தீர்மானத்தையும் முஸ்லிம்களுக்கு
வழங்கவில்லையென்றாலும், இது அகில இந்திய
முஸ்லிம் லீக் உருவாவதற்கு ஒரு ஊக்கியாக
செயல்பட்டது எனலாம். முஸ்லிம்களின்
நோக்கங்களுக்கு ஒரு பாதுகாப்பினை 1907ஆம்
ஆண்டில் வழங்கியது. இவ்வியக்கத்தில் பெரும்
ஜமீன்தார்களும், முன்னாள் நவாப்புகளும் மற்றும்
முன்னாள் அதிகாரத்துவவாதிகள் ஆகியோரும்
இதில் உறுப்பினர்களாக இருந்து செயலாற்றினர்.
இந்த லீக்கானது, வங்காளப் பிரிவினை,
முஸ்லிம்களுக்கான தனித்தொகுதி கோரிக்கை
மற்றும் அரசுப்பணிகளில் முஸ்லிம்களுக்கான
பாதுகாப்பினை வலியுறுத்துதல் போன்றவற்றில்
ஒத்துழைப்பை நல்கியது.
தனித்தொகுதியும் வகுப்புவாதப் பரவலும் :
பிரிட்டிஷ் இந்தியஅரசு, வகுப்புவாதத்தை
வளர்ப்பதற்கும் பரப்புவதற்கும் தனித்தொகுதி
என்னும் முதன்மையான ஒரு நுட்பத்தை
நடைமுறைப்படுத்தியது.பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் லேடி மிண்டோ
அவர்களுக்கு அனுப்பிய குறிப்பின் வாயிலாக
பிரிட்டிஷார் உள்நோக்கத்துடனேயே இத்தகைய
செயலைச் செய்ததை அறியமுடிகிறது.
“இன்று மிகப்பெரிய செயல் நடைபெற்றது
என்பதை தங்களின் மேலான பார்வைக்கு
நான் அனுப்புகிறேன். இத்தகைய ராஜதந்திர
நடவடிக்கை இந்திய வரலாற்றில் நீண்டகாலத்
தாக்கத்தை ஏற்படுத்தும். இது 62 மில்லியன் மக்கள்
தூண்டிவிடப்பட்ட எதிர் முகாமில் சேர்ந்துவிடாமல்
இழுத்துப்பிடிக்கும் முயற்சி என்பதைத் தவிர
வேறில்லை”.தனித்தொகுதி அறிவிப்பு மூலம் ஆங்கிலேயரின்
பிரித்தாளும் கொள்கை என்ற கோட்பாடு அரசமைப்பு
அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி :
அகில இந்திய முஸ்லிம் லீக்
உருவாக்கப்பட்டதையும், 1909ஆம் ஆண்டு இந்தியக்
கவுன்சில் சட்டம், அறிமுகப்படுத்தப்பட்டதையும்
தொடர்ந்து ஒரு இந்து அமைப்பைத் தொடங்க
வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்தது.
அம்பாலாவில் நடைபெற்ற ஐந்தாவது பஞ்சாப் இந்து
மாநாட்டிலும், பெரோஷ்பூரில் நடைபெற்ற ஆறாவது
மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்
தொடர்ச்சியாக 1915இல் இந்துக்களின் முதல் அகில
இந்திய மாநாடு ஹரித்துவாரில் கூட்டப்பெற்றது.
அங்குதான் டேராடூனைத் தலைமையிடமாகக்
கொண்டு அகில இந்திய இந்து மகாசபை
தொடங்கப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மாகாண
இந்துசபைகள் அலகாபாத்தைத் தலைமையிடமாகக்
கொண்டு ஐக்கிய மாகாணத்திலும் பம்பாயிலும்,
பீகாரிலும் தொடங்கப்பெற்றன. பம்பாயிலும், பீகாரிலும்
இவ்வமைப்புகள் திறம்பட செயல்படவில்லை.
சென்னையிலும் வங்காளத்திலும் ஓரளவிலான
ஆதரவேயிருந்தது நகர்ப்புற இயல்பினை அதிகம் கொண்டிருந்த
இம்மகாசபை வட இந்தியாவின் பெரும் வணிக
நகரங்களில், குறிப்பாக அலகாபாத், கான்பூர்,
பனாரஸ், லக்னோ, லாகூர் போன்ற நகரங்களில்
வீரியத்துடன்செயல்பட்டது. ஐக்கிய மாகாணத்திலும்
பீகாரிலும் பெரும்பாலும் படித்த இடைத்தட்டு
வர்க்கத்தைச் சேர்ந்த தலைவர்களால் இவ்வமைப்பு
உருவாக்கப்பட்டிருந்தது. இவர்கள் காங்கிரசிலும்
திறம்படச் செயல்பட்டனர். வகுப்புவாதிகளின்
பிரிவினைவாத அரசியலைக் கிலாபத் இயக்கம்
ஓரளவுக்கு ஒத்திபோட்டது. இதன்விளைவாக
1920-1922 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட
காலத்தில் இந்து மகாசபை செயல்படவில்லை.
அரசியலில் உலோமாக்கள் நுழைந்ததானது
இந்துக்களிடையே ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட,
புத்துயிர் பெற்ற இஸ்லாமைப் பற்றிய அச்சத்தை
ஏற்படுத்தியது. அலி சகோதரர்களைப் போன்ற
முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கூட எப்போதும்
கிலாபத் இயக்கத்தவர்களாகவே இருந்தனர்.
அடுத்தபடியாகத்தான் அவர்கள்
காங்கிரஸ்காரர்களாய் இருந்தனர்.
Comments
Post a Comment