அறிமுகம் :
கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451-1506) :
ஜெனோவாவைச் சேர்ந்த இத்தாலியரான
கிறிஸ்டோபர் கொலம்பஸ்ஸ்பானிய ஆட்சியாளர்கள்
பெர்டினான்ட் மற்றும் இசபெல்லாவின்
ஆதரவைப் பெறுவதற்கு முன் பல கடினமான
சூழ்நிலைகளை கடக்க நேரிட்டது. 1492 ஆகஸ்ட் 3இல்
கொலம்பஸ் காடிஸ் அருகே உள்ள பாலோஸ்
துறைமுகத்திலிருந்து மூன்று சிறிய கப்பல்க ள் (தி
சாண்டா மரியா, தி பிண்ட்டா, தி நினா) மூலமாகப்
பயணித்தார். 1492ஆம் ஆண்டில் இரண்டு
மாதங்கள் மற்றும் ஒன்பது நாட்களுக்கான
பயணத்துக்குப் பிறகு இந்தியா என்று அவரால்
நம்பப்பட்ட நிலப்பகுதியை அவர் வந்தடைந்தார்.
ஆனால் உண்மையில் அது அமெரிக்கா எனும் ஒரு
புதிய கண்டமாகும். தங்கம், பருத்தி, விந்தையான
மிருகங்கள் மற்றும் கிறித்தவ சமயத்தில்
ஞானஸ்தானம் கொடுக்கப்பட வண்ணம்
தீட்டப்பட்ட அகலமான கண்களுடன் இரண்டு
இந்தியர்களுடன் ஸ்பெ யின் சென்றுசேர்ந்தார்.
தான் கண்டுபிடித்த நிலப்பகுதி இந்தியா என்று
அவர் தனது இறுதிக் காலம் வரை நம்பியதால்
அவர்கள் இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
வாஸ்கோடகாமா :
கொலம்பஸ் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து
வாஸ்கோடகாமா கிழக்குப் பகுதி நோக்கி தனது
வரலாற்றுப் பயணத்தைத் (1497) தொடங்கினார்.
லிஸ்பனில் இருந்து நான்கு கப்பல்களில் பயணம் மேற்கொண்ட
அவர் மொசாம்பிக் தீவை சென்றடைந்தார். பின்னர் அவர் மேலும்
தெற்கே பயணம் செய்து கேரளாவின் கோழிக்கோடு
அருகே உள்ள கப்ப ட் (கப்ப க்கடவு) என்ற
கடற்கரையை அடைந்தார். இந்தியாவின் ஒரு
பகுதியை அடைந்த அவர் இந்தியாவுடனான
நேரடி வர்த்தக வாய்ப்புகளை திறந்துவிட்டார்.
இந்தப் பயணம் இந்தியாவின் சில பகுதிகளை
காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர உதவியது.
கோவா அவ்வாறான ஒரு பகுதியாகும்.
போப்பின் ஆணை (1493) :
போர்த்துகல் நாட்டவர்கள் கடல்
பயணங்களில் ஈடுபடுவது குறித்து ஸ்பெயின்
அரசர்கள் அச்சம் கொண்டனர். போப் ஆறாம்
அலெக்ஸாண்டர் என்பவரிடம் அவர்கள் இதற்கு
ஒரு தீர்வு காணுமாறு கோரினார்கள். 1493ஆம்
ஆண்டு, போப் ஒரு ஆணையை வெளியிட்டார்.
வெர்டி முனை தீவுகளுக்கு மேற்கே 320
மைல்கள் தொலைவில் கண்டம் விட்டு கண்டம்
வடக்கு-தெற்கான ஒரு கோட்டினை வரைய
இவ்வாணை வகை செய்தது. அந்தப் பிரகடனம்
மேற்கில் செய்யப்ப டும் எந்தவொரு புதிய
கண்டுபிடிப்பும் ஸ்பெயினுக்குச் சொந்தம் என்று
கூறியது. போர்த்துகல் இந்த திட்டத்தால் மகிழ்ச்சி
அடையவில்லை. அடுத்த ஆண்டே (1494)
ஸ்பெயினுடன் டார்டெசில்லாஸ் ஒப்பந்தத் தில் அது
கையெழுத்திட்டது. பாகுபடுத்தும் வடக்கு-தெற்கு
கோடு என்ற கொள்கைத் திட்டத்தை மதித்தாலும்
வெர்டி முனை தீவுகளுக்கு மேற்கே 1185
மைல்கள் தொலைவுக்கு தள்ளிப் போட்டது. மேலும்
இந்தக் கோட்டுக்கு கிழக்கில் கண்டுபிடிக்கப்படும்
அனைத்தும் போர்த்துகல் நாட்டுக்கு சொந்தம்
என்று ஏற்றுக்கொண்டது. ஆறு ஆண்டுகளுக்குப்
பிறகு 1500ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இது
போர்த்துகலின் கை ஓங்க வழிவகுத்தது.
பெட்ரோ அல்வரெஸ் காப்ரல் பிரேசிலின்
கிழக்குக் கடற்கரையோரத்தைச் சென்றடைந்து
அதனை போர்த்துகல் நாடு உரிமை கொண்டாட
வழிவகுத்தார்.
போர்த்துகல் நாட்டு பயணி பெட்ரோ காப்ரல் :
1500இல் பெட்ரோ காப்ர ல் மேற்குநோக்கி
பயணித்து பிரேசிலை கண்டுபிடித்தார். இந்தத்
தீவுக்கு உண்மையான சிலுவையின் தீவு
(ஐலாண்ட் ஆஃப் தி ட்ரூ கிராஸ்) என்று பெயரிட்டார்.
போர்த்துகலின் காலனியாக பிரேசில்
மாறியது. எஞ்சிய வரலாறு 11ஆம் அத்தியாயத்தில்
விளக்கப்பட்டுள்ளது. வாஸ்கோடகாமா சென்ற வழியைப்
பின்பற்றி இந்தியாவுக்குப் பயணித்த
காப்ரல் கோழிக்கோட்டை சென்றடைந்தார்.
தொடக்கத்தில் போர்த்துகீசியர்களுக்கு
ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர் சாமரின் ஒரு
கோட்டையைக் கட்டி வர்த்தகம் செய்ய காப்ரலை
அனுமதித்தார். எனினும் விரைவில் அராபிய
வர்த்தகர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு
ஒரு பெரிய வர்த்தகச்சாவடியை அரபு படைகள்
தாக்கியதில் பல போர்த்துகீசிய படைவீரர்கள்
கொல்லப்பட்டனர். போர்த்துகல் மேற்கொண்ட
வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மூலமாக
காப்ரல் பதிலடிகொடுத்தார். பத்து அராபிய
கப்பல்களை கைப்பற்றிய அவர் அதில் இருந்த
மாலுமிகளை சிரச்சேதம் செய்தார். தெற்கில்
உள்ள இந்திய துறைமுக நகரான கொச்சினுக்கு
(தற்போது கொச்சி) அவர் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு அவர் வரவேற்கப்பட்டு வர்த்தகம் செய்ய
அனுமதிக்கப்பட்டார். கண்ணனூரில் (தற்போது
கண்ணூர்) ஒரு துறைமுகத்தை நிறுவியபிறகு
அவர் 1501 ஜனவரி 16இல் நறுமணப் பொருட்கள்
நிரப்பப்பட்ட ஆறு கப்பல்களுடன் போர்த்துகலுக்கு
பயணம் மேற்கொண்டார். எனினும் செல்லும்
வழியில் இரண்டு கப்பல்கள் வழிதவறிப்போயின.
இறுதியாக காப்ரல் 1501ஆம் ஆண்டு ஜூன்
23ஆம் தேதி நான்கு கப்பல்களுடன் போர்த்துகல்
திரும்பினார்
மெகல்லனின் கப்பல் பயணம் :
போர்த்துகீசிய மாலுமியான பெர்டினான்ட்
மெகல்லன் உலகை ஆராய ஸ்பெயின்
நாட்டின் ஆதரவைப் பெற்றார். செவில்லேவில்
இருந்து மேற்குநோக்கி 1519ஆம் ஆண்டு ஐந்து
கப்பல்களுடன் புறப்பட்டார். தென்அமெரிக்காவின்
முனையில் ஒரு நீர்ச்சந்தியை கண்டுபிடித்த அவர்
அதற்கு 'மெகல்லன் நீர்ச்சந்தி' என்று பெயரிட்டார்.
அங்கிருந்து இந்த மாலுமிகள் குழு பெரிய
தென் கடலைச் சென்று சேர்ந்தது. இந்தக் கடல்
அமைதியாக இருந்ததால் அதற்கு பசிபிக் பெருங்கடல்
என்று பெயரிட்டா ர் (Pacifico என்றால் ஸ்பானிய
மொழியில் அமைதியானது என்று பொருள்).
இந்தப் பயணத்தின்போது மெகல்லன் தனது
இரண்டு கப்பல்களையும், நோய் காரணமாக பல
மாலுமிகளையும் இழந்தார். பிலிப்பி தீவில் மெகல்லன்
கொல்லப்பட்டார். இறுதியாக விட்டோரியா
(விக்டோரியா) என்ற ஒரேயொரு கப்பல் மட்டும் 18
மாலுமிகளுடன் 1522இல் செவில்லேவுக்குத் திரும்பியது. உலகத்தை
முதன்முதலாக சுற்றிய கப்பல் என்ற சிறப்பு விட்டோரியா கப்பலுக்குக்
கிடைத்தது. துருக்கியர்கள், பிரெஞ்சுக்காரர்கள்,
ஆங்கிலேயர் மற்றும் ஜெர்மானியர்கள் ஆகியோர்
ஆசியாவுக்கான புதிய கடல்வழித்தடங்களின்
முக்கியத்துவத்தை அப்போது அறிந்திருக்கவில்லை.
அமெரிக்காவை ஐரோப்பியர்கள் கண்டுபிடித்ததன்
அரசியல் முக்கியத்துவத்தையும் அவர்கள்
அறியவேண்டிய நிலைமையில் இருந்தார்கள்.
ஸ்பெயினைச் சேர்ந்த போர் வெற்றியாளரான
ஹெர்னன் கார்ட்ஸ் என்பவர் ஒரு சில வீரர்களுடன்
ஸ்பெயினுக்காக மெக்சிகோ பேரரசைக்
கைப்பற்றினார். பனாமாவின் நிலச்சந்தியைக்
கடந்த பிஸார்ர ோ (1530) தென்அமெரிக்காவில்
இன்கா பேரரசினை அழித்து பெரு என்ற மற்றொரு
நாட்டைக் கைப்பற்றினார்.
இதர முக்கியமான ஐரோப்பிய பயணங்கள் :
போர்த்துகீசிய மற்றும் ஸ்பெயின் நாட்டு
கடற்பயணம் மேற்கொள்வோரை பின்பற்றி இதர
ஐரோப்பிய நாடுகளும் உலகை வலம் வந்து
புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிக்க ஆர்வம்
கொண்டன. உலகத்தின் பல புதிய நிலப்பகுதிகளை
கண்டுபிடிப்பதற்காக இத்தாலிய கடற்பயணியான
ஜான் கேபட் என்பவரை இங்கிலாந்து நியமித்தது.
அவர் தனது பயணத்தின் போதே கனடாவை
கண்டுபிடித்து அதனை ஆங்கிலேயக் காலனியாக
மாற்றினார். மற்றொரு இத்தாலியரான ஜியோவனி
டா வெர்ராசானோ பிரான்ஸ் நாட்டுக்காக
நிலப்பகுதிகளை ஆராய்ந்தார். கிழக்கு கனடாவில்
பிரான்ஸ் நாட்டுக்காக மாகாணங்களை
இணைத்தார். ஹென்றி ஹட்சன் என்ற ஆங்கிலேய
கடற்பயணி வட அமெரிக்காவில் இருந்து பசிபிக்
பெருங்கடல் பகுதிக்கு பாதை காண முயன்றார்.
அவர் தனது முயற்சியில் தோல்வி அடைந்தாலும்
அவர் அந்தப் பகுதியை ஆராய்ந்தார். அது தற்போது
ஹட்சன் நதி என்ற பெயர் தாங்கி இருக்கிறது.
வர்த்தகப் புரட்சி :
மறுமலர்ச்சி மற்றும் சீர்த்திருத்த
நடவடிக்கைகளுடன் அடிப்படைப் பொருளாதார
மாற்றங்களும் நிகழ்ந்தன. இந்த தொடர் பொருளாதார
மாற்றங்களின் விளைவாக இடைக்காலத்தின்
பிற்பகுதியில் இருந்த ஓரளவு நிலையான, உள்ளூர்
நிலையிலான, இலாப நோக்கற்ற பொருளாதாரம்,
பதினான்காம் நூற்றாண்டு மற்றும் அதனை
அடுத்து வந்த நூற்றாண்டுகளில் உலகளாவிய
வலுவான முதலாளித்துவ நிலைக்கு மாற்றம்
பெற்றது. வர்த்தகப் புரட்சி என்று அழைக்கப்பட்ட இது
திடீரென நிகழ்ந்துவிடவில்லை படிப்படியாகவே
நிகழ்ந்தது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இந்தக்
காரணிகளுடன் இத்தாலியக் கட்டுப்பாடு இன்றி
கிழக்குப்பகுதிக்கு புதிய வழித்தடத்தை கண்டுபிடிக்க
ஸ்பெயின் மற்றும் போர்த்துகீசிய வணிகர்கள்
அளித்த ஊக்கம் வர்த்தகப் புரட்சிக்கு வித்திட்டன.
வர்த்தகப் புரட்சியின் முக்கிய விளைவுகள் :
வங்கித்துறை வளர்ச்சி என்பது வர்த்தகப்
புரட்சிக்கான முக்கிய காரணியாகும். வட்டிக்கு
பணம் கொடுப்ப து, வங்கித்துறை ஆகியன
இடைக்காலத்தில் மரியாதை மிகுந்த தொழில்
இல்லை என்று சமயத்தால் குறிக்கப்பட்டிருந்தன.
ஆனால் 14ஆம் நூற்றாண்டில் லாபத்துக்காக
பணத்தை கடனாக வழங்கும் தொழில் ஒரு
நிறுவப்பட்ட வர்த்தக நடைமுறையாக மாறியது.
இத்தாலிய நகரங்களின் மிகப்பெரிய வர்த்தக
மையங்கள்தான் உண்மையில் நிறுவின.
பதினைந்தாம் நூற்றாண்டில் வங்கித் தொழில்
தெற்கு ஜெர்மனி மற்றும் பிரான்சுக்கு பரவியது.
தனியார் நிதி நிறுவனங்களின் எழுச்சியை அடுத்து
அரசு வங்கிகள் நிறுவப்பட்டன. 1657இல் பேங்க்
ஆஃப் ஸ்வீடன் முதலில் நிறுவப்பட்டது. 1694இல்
பேங்க் ஆஃப் இங்கிலாந்து நிறுவப்பட்டது. சுரங்கத்தொழில், உருக்குதல் தொழில்
ஆகிய புதிய தொழில்கள் வளர்ந்து தொழில்நுட்ப
வளர்ச்சியால் மேலும் ஊக்கம் பெற்றன.
வணிக அமைப்புகளிலும் மாற்றம் வந்தது.
நெறிப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் உருவாகின.
ஒரு பொதுக்காரணத்துக்காக வணிகர்கள்
ஒன்றிணைந்து இத்தகைய நெறிப்ப டுத்தப்பட்ட
கம்பெனியை உருவாக்கினார்கள். நெதர்லாந்து
மற்றும் ஜெர்மனி இடையே வர்த்தகத்திற்காக
நிறுவப்பட்ட மெர்ச்சன்ட் அட்வென்சரர்ஸ்
என்ற ஆங்கிலேய கம்பெனி ஒரு நல்ல
உதாரணமாகும் இடைக்காலத்தின் பிற்பகுதியில் கைவினைக்
குழுக்களால் உருவாக்கப்பட்ட உற்பத்திமுறை
செயலிழந்தது. பதினேழாம் நூற்றாண்டில்
நெறிப்படுத்தப்பட்ட கம்பெனி என்பது கூட்டுப்
பங்கு நிறுவனங்களாக புதிய வகையில்
உருமாற்றம் பெற்றது. வரையறுக்கப்பட்ட
பொறுப்புடன் கூட்டுப்பங்கு நிறுவனம் எனும்
கருத்து டச்சு நாட்டின் கண்டுபிடிப்பு ஆகும். இது
அதிக எண்ணிக்கையிலான மக்களிடையே
அபாயங்களை (மற்றும் இலாபங்களை)
பரப்புவதன் மூலம் பெரிய அளவிலான முதலீட்டை
சாத்தியமாக்கியது.
சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் :
தேவாலய நிர்வாகத்தினரின் ஊழல் :
பாவமன்னிப்பு வழங்கும் முறைக்கு பணம்
பெற்றது (ஒருவரின் பாவத்தை மன்னித்து
அவருக்கு புனிதத்தை வழங்கும் போப்பாண்டவரின்
பாவமன்னிப்புக்கு பணம் பெற்றது),
வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது,
தேவாலயப் பணிகளை பணத்துக்கு விற்பது ஆகியன
தாக்குதலுக்கு உள்ளானது. போப்பாண்டவரிடம்
பாவமன்னிப்பைப் பெற ஏழைகள் பணம் கொடுக்க
நேரிட்டதால் அவர்கள் பணமின்றி தவித்தார்கள்.
ஆறாம் அலெக்ஸாண்டர், இரண்டாம் ஜூலியஸ்,
பத்தாம் லியோ ஆகிய சில போப்பாண்டவர்கள் இது
போன்ற நடைமுறைகளால் ஆட்சியாளர்களிடம்
சண்டையிட்டனர். போப் பத்தாம் லியோவுக்கு பணம்
கொடுத்து மெயின்ஸின் ஆல்பர்ட் என்பவர் ஆர்ச்பிஷபாக பதவியேற்ற
சம்பவமும் நடந்தது. போப்பாண்டவர் இந்தப்
பணத்தை வசூலித்ததாகக் கூறப்பட்டதோடு அதில்
பாதிப்பணம் செயின்ட் பீட்டர் பேராலயத்தைக் கட்ட
பயன்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டது.
மெடிசி குடும்பம் போன்ற மிகப்பெரிய
வர்த்தகக் குடும்பங்களின் உறுப்பினர்கள்
தங்கள் சொத்தைப் பெருக்கவும் தங்களுக்கு
முறைதவறிப் பிறந்த மகன்களுக்கு அந்தச்
சொத்தை வழங்கவும் போப்பாண்டவர்களாக
மாறினார்கள். பிஷப் பதவிகளில் அனுபவம் இல்லாத
இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். பல்வேறு
தேவாலயங்களில் இருந்து வருமானம் பெற்ற
பாதிரிமார்கள் அவற்றில் எந்த தேவாலயத்துக்கும்
சென்றதில்லை. விவசாயிகள் இந்த தேவாலயத்தை
அடக்கி ஆளும் நிலப்பிரபுவாகப் பார்த்தனர். பல
இளவரசர்கள் தங்கள் பேராசை மிகுந்த கண்களை
தேவாலயங்களின் பரந்துபட்ட சொத்துக்களின் மீது
வைத்தனர்.
கிறித்தவ சீர்திருத்த இயக்கத்தின் பின் இருந்தவர்கள் :
கிறித்தவ சீர்திருத்த இயக்கம் சில முன்னோடிகளைக்
கொண்டிருந்தது . எராஸ்மஸ், தேவாலய
வழக்கங்கள் மற்றும் போதனைகளுக்கு
எதிராகப் போராட்டம் நடத்தினார். மடமையின்
புகழ்ச்சி (The Praise of Folly, 1511) என்ற அவரது சிறந்த படைப்பு கிறித்தவ
துறவிகள் மற்றும் இறையியல் போதகர்களையும்
கேலி செய்தது. ஜான் வைகிளிஃப் மற்றும் ஜான் ஹஸ் ஆகியோர் அவருக்கு
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால்
சீர்திருத்தத்துக்காக உழைத்தவர்களாவர்.
கடவுளின் செய்தியை லத்தீன் மொழியில்
போதனை செய்யாமல் மக்களின் மொழியில்
போதித்தனர். ஜான் வைகிளிஃப் என்ற
ஆங்கிலேய பாதிரியார் பைபிளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்த முதல் மொழிபெயர்ப்பாள ர்
என்பதால் பிரபலமடைந்தார். அவர் தனது
வாழ்நாளில் ரோமானிய தேவாலயத்தின்
கோபத்தில் இருந்து தப்பிப் பிழைத்தார். ஆனால்
1415ஆம் ஆண்டு அவர் மறைந்து 31 ஆண்டுகளுக்குப்
பிறகு அவரது உடலைத் தோண்டி எடுத்து அவரது
எலும்புகளை எரியூட்டுமாறு கிறித்தவ திருச்சபை
ஆணையிட்டது. இந்த ஆணை சிரத்தையுடன்
பின்பற்றப்பட்டது
Comments
Post a Comment