Skip to main content

19 Century Indian History Important Lines and One Mark Questions - PR220


அறிமுகம் :


பத்தொன்பதாம் நூற்றாண்டின்

இறுதிப் பத்தாண்டுகளில் இந்திய தேசிய 

காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு 

எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவியது. 

இவ்வெறுப்பு முடிவில் ஒரு புதியப் போக்கா கத்

தோற்றம் பெற்று அது தீவிர தேசியவாதப்

போக்கெனக் குறிப்பிடப்பட்டது. இத்தீவிர 

தேசியவாதிகள் அல்லது முற்போக்காளர்கள்

அல்லது போர்க்குணமிக்கவர்கள் என நாம்

அழைக்க விரும்பும் இக்குழுவினர் மிதவாத 

தேசியவாதிகளின் கவனமான அணுகுமுறை, 

ஆங்கிலேயரிடம் மன்றாடுதல், மனுச் 

சமர்ப்பித்தல் போன்ற அவர்களின் “இறைஞ்சுதல்

கொள்கைகளை” கடுமையாக விமர்சித்தனர். 

மகாராஷ்டிராவில் பாலகங்காதர திலகர், 

வங்காளத்தில் பிபின் சந்திரபால், பஞ்சாபில் 

லாலா லஜபதி ராய் ஆகியோரின் தலைமையில் 

இப்போர்க்குணம் வளர்ச்சி பெற்றது. இத்தகையப்

போக்கு வளர்ச்சி பெற்றதற்கான அடிப்ப டைக்

காரணங்கள்: காங்கிரசுக்குள் உருவான 

உட்குழுக்கள், மிதவாத தேசியவாதிகளின்

அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு, 

வங்காளத்தைப் பிரித்ததற்காக கர்சன் மீது ஏற்பட்ட

கோபம். ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு

முதன்மையான எடுத்துக்காட்டு 1905 ஆம் ஆண்டு 

வங்கப் பிரிவினையாகும். அது காலனிய எதிர்ப்பு, 

சுதேசி, தேசியம் வளர்வதற்கு வினையூக்கியாய் 

அமைந்தது. பிரிவினைத் திட்டம் முதன்முதலில் 

மிதவாத தேசியவாதிகளால் எதிர்க்கப்பட்டது. 

ஆனால் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில்

சுதேசி இயக்கத்திற்கான பல உத்திகள்

முன்னெடுக்கப்பட்டன. அந்நியப் பொருட்களைப்

புறக்கணிப்பது, அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களைப் புறக்கணிப்பது ஆகியன சுதேசி 

இயக்கத்தின் ஆக்கபூர்வமானத் திட்டங்களாக 

இருந்தன. இவ்வியக்கமே (1905-1911) 

காந்தியடிகளின் சகாப்தத்திற்கு முந்தைய இந்திய 

தேசிய இயக்கத்தின் மிக முக்கியக் கட்டமாகும். 

ஏனெனில் இவ்வியக்கத்தின் போக்கில் இந்திய 

தேசிய இயக்கத்தின் இயல்பில் குறிப்பிடத்தகுந்த

மாற்றங்கள் ஏற்பட்டன. அது முன்வைத்த

நோக்கங்கள், போராட்ட வழிமுறைகள், அதன்

சமூக ஆதரவுத் தளம் ஆகியன மாற்றம் பெற்றன. ஆங்கில அரசாட்சியின் கீழ் சமூகத்தின்

பல்வேறு பிரிவினர் எதிர்கொண்ட பிரச்சனைகள், 

அவர்களனைவருடைய வாழ்வின் பொது

அம்சமாகிவிட்ட காலனியச் சுரண்டல் ஆகியவை

வெளிக் கொணரப்பட்டதால் இயக்கத்தின் சமூக 

ஆதரவுத்தளம் விரிவடைந்தது. இந்திய தேசிய 

இயக்கத்தின் வரலாற்றில் முதன்முதலாக 

பெண்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும்,

விளிம்பு நிலை மக்களும், நவீன தேசியச் 

சிந்தனைகளையும் அரசியலையும் அறிந்து 

கொண்டனர். இக்காலப்பகுதியில்தான்

முதன்முதலாக உயர்குடியினர் முழுமுயற்சி 

மேற்கொண்டு சாமானிய மக்களிடம் பேசி

அவர்களையும் அரசியலில் இணைந்து 

கொள்ள அழைத்தனர். மேலும் இந்தியாவின்

பலபகுதிகளில் வட்டார மொழிப் பத்திரிகைகள்

பெற்ற வளர்ச்சி சுதேசி இயக்கத்தின் முக்கியச் 

சாதனையாகும். இக்கால கட்டத்தில் வட்டார 

மொழிப் பத்திரிகைகளின் தேசியத்தன்மை

மிகத் தெளிவாகவே புலப்ப ட்டது. தமிழ்நாட்டில்

சுதேசமித்திரன், மகாராஷ்டிராவில் கேசரி,

வங்காளத்தில் யுகந்தர் ஆகிய பத்திரிக்கைகளின்

பங்களிப்பு ஒரு சில எடுத்துக்காட்டுகளாகும். நடவடிக்கைகளை, அவை எத்தகையதாக 

இருந்தாலும் அவற்றை நசுக்கும் பொருட்டு ஆங்கில 

அரசு, பொதுக்கூட்டங்கள் சட்டம் (1907), வெடி மருந்துச் 

சட்டம் (1908), செய்தித்தாள் சட்டம், தூண்டுதல் குற்றச்

சட்டம் (1908), இந்தியப் பத்திரிகைச் சட்டம் (1910) என பல 

அடக்குமுறைச் சட்டங்களை வரிசையாய் இயற்றியது. 

பொதுக்கூட்டங்களைக் கண்காணிப்பதும், 

பதிவு செய்வதும் அவ்வாறு மேற்கொள்ளப்ப ட்ட

நடவடிக்கைகளில் ஒன்றாகும். (பேச்சுகளைப் பதிவு 

செய்வதற்காக முதன்முறையாக காவல் துறையினர்

சுருக்கெழுத்து முறையைப் பயன்படுத்தினர்). 

இப்பாடத்தில் வங்காளத்திலும் தேசிய அளவிலும் 

நடைபெற்ற நிகழ்வுகளை விவாதிக்கும்போதே, 

தமிழ்நாட்டில் நடத்தப்பெற்ற சுதேசி இயக்கத்தையும்

விவாதிக்க உள்ளோம். குறிப்பாக வ.உ.சிதம்பரம், 

வ.வே.சுப்ரமணியம், சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய 

பாரதி ஆகியோர் வகித்த பாத்திரத்தின் மீது 

தனிக்கவனம் செலுத்துகிறோம்


வங்கப் பிரிவினை :


1899 ஜனவரி  6 இல் புதிய தலைமை ஆளுநராகவும்

இந்தியாவின் அரசப் பிரதிநிதியாகவும்  கர்சன் பிரபு பணி 

நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து ஏற்பட்டப்  பஞ்சங்கள், பிளேக் நோய்

ஆகியவை ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாய் ஆங்கிலேயரின்

செல்வாக்கு மேன்மேலும் குறைந்து

கொண்டிருந்த காலமது. கற்றறிந்த இந்திய மக்கள்

பிரிவினரின் கருத்துகளை மாற்றுவதற்கு கர்சன்

சிறியளவிலான முயற்சிகளை மேற்கொண்டார்.

கற்றறிந்த தேசியவாத அறிஞர்களோடு ஈடுபாட்டை

ஏற்படுத்திக் கொள்வதற்கு மாறாக அவர்

வரிசையாகப் பல அடக்குமுறை நடவடிக்கைகளை

மேற்கொண்டார். எடுத்துக்காட்டாக கல்கத்தா

மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்தத்

தேர்ந்தெடுக்கப்ப ட்ட இந்திய உறுப்பினர்களின்

எண்ணிக்கையைக் குறைத்தார் (1899). 1904இல் 

இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி 

கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக்

கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டது. இந்தியச் 

செய்திப் பத்திரிகைகளின் தேசியவாதத்

தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச் 

சட்டத்தில் (1904) திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

இறுதியாக வங்காளத்தைப் பிரிக்க 1905இல் 

ஆணை பிறப்பித்தார். இப்பிரிவினை இந்தியா

முழுவதும் பரவலான எதிர்ப்புக்கு இட்டுச் சென்று

இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு புதிய கட்டத்தைத்

தொடங்கி வைத்தது. ஒரு நிர்வாகப் பிரிவு 

எனும் பொருளில் வங்காள மாகாணம் உண்மையிலேயே

மேலாண்மை செய்ய இயலாத வகையில் வடிவத்தில்  பெரிதாக இருந்தது. 

பிரிக்கப்பட வேண்டியதின் அவசியம் தொடர்பாக 1860ஆம் ஆண்டு முதலாக

விவாதங்கள் நடைபெற்று வந்தன. மார்ச் 1890இல் 

பிரிவினைக்கானத் திட்டத்திற்குப் புத்துயிர்

அளிக்கப்பட்டது. கர்சன் அசாம் சென்றிருந்த

போது ஐரோப்பியப் பெரும் பண்ணையார்கள்

அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர்.

கல்கத்தாவிற்கு அருகே தங்களுக்கு ஒரு கடல் 

வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் அசாம்

- பெங்கால் இருப்புப்பாதையைச் சார்ந்திருப்பதை

ஓரளவு தவிர்த்துக் கொள்ள முடியும். என வேண்டினர்.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 1903இல் தன்னுடைய

இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான

குறிப்புகளில் ஒரு திட்டத்தை கர்சன் தீட்டியிருந்தார். 

அதுவே பின்னர் திருத்தம் செய்யப்பட்டு ரிஸ்லி 

அறிக்கை (Risely Papers) என்ற பெயரில் 

வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை பிரிவினைக்கு 

ஆதரவாக இரண்டு காரணங்களை முன்வைத்தது. 

அவை: வங்காளத்திற்கு சுமை குறைவு, அசாமின்

முன்னேற்றம் ஆகியனவாகும். எப்படியிருந்தபோதிலும் 

இத்திட்டம் எவ்வாறு ஆங்கிலேய அதிகாரிகளின், 

ஐரோப்பிய வணிகர்களின் வசதிக்கேற்றவாறு 

உண்மையிலே தீட்டப்ப ட்டது என்பது பற்றிய

செய்திகள் மறைக்கப்பட்டன.


இந்து முஸ்லிம்களைப் பிரிக்கும் நோக்கம் :


ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வங்காளத்தில் 

நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளை அடக்கி 

இந்து - முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை

உருவாக்குவது என்பதே கர்சனுடைய 

நோக்கமாகும். குடிமைப் பணியாளர்கள்

முன்வைத்த மாற்றுத் திட்டங்களைக் குறிப்பாக, 

வங்காளத்தை மொழி அடிப்ப டையில் பிரிப்ப து

எனும் கருத்து வேண்டுமென்றே புறந்தள்ளப்ப ட்டது. 

இத்திட்டம் வங்காள அரசியல்வாதிகளை

மேன்மேலும் ஒருங்கிணைத்துவிடும் என்பதால் 

கர்சன் இத்திட்டத்தை ஏற்க மறுத்தார். கர்சன்

பிடிவாதமாக, பிரிக்கப்பட்ட வங்காளம் தெளிவாகத்

தனித்தனியாய் பிரிக்கப்பட்ட இந்து - முஸ்லிம் 

மக்களைக் கொண்டிருக்க வேண்டுமென

விரும்பினார். புவியியல் அடிப்படையில் பாகீரதி 

ஆறு இயற்கையாகவே வங்காளத்தைப் 

பிரிப்பதாக அமைந்திருந்தது. தனக்கு முன்னர்

பணியாற்றியவர்களைப் போலவே கர்சனும்

இதனை அறிந்திருந்தார். கிழக்கு வங்காளத்தில்

முஸ்லிம்கள் அதிகம் இருந்தனர். மேற்கு

வங்காளத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினராக

இருந்தனர். மத்திய வங்கத்தில் இரு சமூகத்தினரும் 

சமஅளவில் வாழ்ந்து வந்தனர். முஸ்லிம் மக்களின்

நன்மதிப்பைப் பெறும் உள்நோக்கத்தோடு அவர்களை

நயந்து செல்லும் போக்கை ஆங்கில நிர்வாகம்

கடைபிடித்தது. முந்தைய முஸ்லிம் ஆட்சி முதலாக 

முஸ்லிம் மக்கள் ஒருபோதும் அனுபவித்திராத 

ஓர் ஒற்றுமையைப் புதிய மாகாணமான கிழக்கு 

வங்காளத்தில் அனுபவிப்பார்கள் என பிப்ரவரி 

1904இல் டாக்காவில் கர்சன், முஸ்லிம்களுக்கு

உறுதியளித்தார். வங்கப் பிரிவினை வங்காள மக்களை

மதத்தின் அடிப்படையில் பிரிப்பதற்குப் பதிலாக 

அவர்களை ஒன்றுபடுத்தியது. இனம், வர்க்கம், 

சமயம், வட்டாரம் ஆகியத் தடைகளைத் தாண்டி 

மக்களிடையே வளர்ந்து கொண்டிருந்த

வங்காளிகள் எனும் அடையாளத்தை

ஆங்கில நிர்வாகம் ஒருவேளை குறைத்து 

மதிப்பிட்டிருக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின்

இறுதியில் சமூகத்தின் பெரும்பகுதியினரிடைய வங்காள ஒற்றுமை எனும் வலுவான எண்ணம் 

வளர்ந்து விட்டது. ரவீந்திரநாத் தாகூரைமையமாகக் 

கொண்டு வங்க மொழி இலக்கிய மதிப்பைப் 

பெற்றுவிட்டது. வட்டாரமொழிப் பத்திரிகைகளின்

வளர்ச்சி ஒற்றுமை தொடர்பான கதை வடிவிலான 

விவரிப்புகளைக் கட்டமைப்பதில் பங்காற்றியது. 

இதைப்போலவே மீண்டும் மீண்டும் தோன்றிய 

பஞ்சங்கள், வேலையின்மை, பொருளாதார 

வளர்ச்சியில் ஏற்பட்ட சறுக்கல் ஆகியவை காலனிய 

எதிர்ப்பு உணர்வுகளைத் தோற்றுவித்தன.


பிரிவினை எதிர்ப்பு இயக்கம் :


ிசம்பர் 1903இல் வங்கப்பிரிவினை

அறிவிக்கப்பட்டதில் இருந்தே தீவிர 

தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகள்

ஆகிய இருதரப்பினரும் அதை விமர்சனம் 

செய்தனர். ஆனால் சுரேந்திரநாத் பானர்ஜி,

 K. K. மித்ரா, பிரித்விஸ் சந்திர ரே போன்றவர்களின்

எதிர்வினையானது வேண்டுகோள் விடுப்பது 

மனுச்செய்வது என்ற அளவோடு சுருங்கிப் போனது. 

பிரிவினைக்கு எதிராக இங்கிலாந்து மக்களின்

கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது எனும் 

அளவில் அதன் நோக்கமும் கட்டுக்குள்ளேயே

இருந்தது. எப்படியிருந்தபோதிலும், பரவலான 

எதிர்ப்புகளுக்கிடையே 1905 ஜூலை 19இல் வங்கப் 

பிரிவினை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட

தோல்வி, பிபின் சந்திர பால், அஸ்வினி குமார் தத்தா, 

அரவிந்தகோஷ் போன்ற தலைவர்கள் கொடுத்த

அழுத்தம் ஆகியவற்றால் மிதவாத தேசியவாதிகள்

தங்கள் உத்திகள் குறித்து மறுபரிசீலனை

செய்து புதிய எதிர்ப்பு முறைகளைக் கண்டறிய 

வற்புறுத்தப்பட்டனர். அவைகளுள் ஒன்றுதான்

ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது. 

நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்திய தேசிய

காங்கிரசின் மிதவாத தேசியத் தலைமை இதனை

ஏற்றுக் கொண்டது. முதன்முறையாக மிதவாத 

தேசியவாதிகள் தங்களின் மரபு சார்ந்த அரசியல் 

முறைகளை மீறினர். 1905 ஜுலை 17இல் 

கல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்ப்பை மக்களிடையே

விரிவுபடுத்துவது என்று  முடிவு செய்யப்பட்டது . 

அதே கூட்டத்தில்  ஆங்கிலப்பொருட்களையும்

நிறுவன ங்களை யு ம் புறக்கணிக்க சுரேந்திரநாத்

பானர்ஜி அறைகூவல் விடுத்தார். ஆகஸ்டு 7இல் கல்கத்தா நகரஅரங்கில் 

(Town Hall) நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் சுதேசி 

இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது. 

இருந்தபோதிலும் சுதேசி இயக்கத்தின்

நிகழ்ச்சி நிரலானது வங்கப்பிரிவினையை

ரத்து செய்யப் போதுமானஅளவிற்கு கட்டுக்குள்

வைக்கப்பட்டிருந்தது. மேலும் மிதவாத

தேசியவாதிகள், இவ்வியக்கத்தைப் பயன்படுத்தி 

முழு அளவிலான அமைதி வழியில் எதிர்ப்பைத்

தொடங்குவதற்கு முற்றிலும் எதிராக இருந்தனர். 

ஆனால் தீவிர தேசியவாதிகள் இவ்வியக்கம் 

ஏனைய மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்படவும் 

முழு அளவிலான வெகுஜன இயக்கத்தைத்

துவங்குவதற்கும் ஆதரவாக இருந்தனர்.


இயக்கத்தின் பரவல் :


தலைவர்களின் திட்டமிடப்பட்ட

முயற்சிகளுக்கும் மேலாக வங்கப்பிரிவினைக்கு

எதிராகத் தன்னெழுச்சியான எதிர்ப்புகள்

ஏற்பட்டன. குறிப்பாக மாணவர்கள்

பெருமளவில் பங்கேற்றனர். பிரிவினைக்கு 

எதிரானப் போராட்டத்தில் மாணவர்களின்

பங்கேற்பு அதிகம். இதன் எதிர்வினையாக 

ஆங்கில அதிகாரிகள் நேரடி நடவடிக்கை

நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 

கல்வி உதவித்தொகையும் மானியங்களும் 

நிறுத்தப்படும் எனப் பயமுறுத்தினர். இதற்கு 

எதிர்வினையாக தேசிய கல்வி நிறுவனங்களை, 

பள்ளிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை

மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. 

வங்காளம் முழுமையிலும் நகரங்களிலும் 

கிராமங்களிலும் ஆயிரக்கணக்கில் பொதுக் 

கூட்டங்கள் நடத்தப்பெற்றன. மத விழாக்களான

துர்காபூஜை போன்றவற்றை புறக்கணிப்புப் பற்றிய

வேண்டுகோள் விடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. 

அதிகாரபூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாளான 

1905 அக்டோபர் 16 துக்கதினமாக கடைபிடிக்கப்பட

வேண்டுமென அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் 

மக்கள் கங்கையில் நீராடி வந்தே மாதரம் பாடலைப் 

பாடிக்கொண்டு வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர். 

Comments

Popular posts from this blog

InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download

InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download Description Photo Studio describes exactly what our software is today: a fully-fledged editing program that lets you create your pictures in your way. We’re really excited about this new identity and hope you like the new name as much as we do. And rest-assured, the name might be changing but all the things our users love about Photo Clip are here to stay: Photo Studio 10 will still be a user-friendly photo editing software, full of fun content to help you create the perfect photos and photo montages. Read on to find out more about all the new features and improvements in Photo Studio 10. VirusTotal: Setup : https://www.virustotal.com/gui/file/7d42a6cb22ca51135b70319b37a954a881f22cddc63f60ed8d39b13a62f5b85c/detection Keygen : https://www.virustotal.com/gui/file/1888ddb3f5b96946c77d40c83d3452d566cecbe3a99db505fa8bb1374ee87d5d/detection Screenshot...

Autodesk AUTOCAD LT 2021 (x64) Final + Crack Free Download

Description AutoCAD LT 2021 is designed to develop and detail 2D drawings. The program automates most of the stages of the project. A full set of 2D commands allows you to create drawings, modify them and release working documentation for projects.The program provides built-in support for DWG format and reliability of work, and also contains powerful tools to improve drawing performance.Thanks to this project files can be easily transferred to other specialists. In addition, you can customize the user interface of the program to fit your needs. System Requirements OS Microsoft® Windows® 7 SP1 with Update KB4019990 (64-bit only) Microsoft Windows 8.1 with Update KB2919355 (64-bit only) Microsoft Windows 10 (64-bit only) (version 1803 or higher) CPU Basic:2.5–2.9 GHz processor Recommended:3+ GHz processor Multiple processors:Supported by the application RAM: Basic: 8 GB / Recommended: 16 GB Display Resolution: Conventional Displays:1920 x 1080 with True Color Hig...

PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download

PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download Description PDF-XChange PRO is the ultimate PDF solution. It’s a bundle package that combines the three best-selling applications that Tracker Software produces. Features    PDF-XChange Editor Plus is a hugely dynamic and fully-customizable PDF application. Create, view, edit, annotate, OCR* and sign PDF files – and that’s just the beginning. If you work with PDF then this fully-customizable product will optimize your work process to levels that no other product can achieve. Create PDF files from scanned documents, images, text files, Markdown files and much more. Open, edit and convert Microsoft Office documents.* Avail of over thirty tools to assist in the creation of document comments, annotations, links and fillable forms. These tools make editing PDFs a finely-tuned, precise process that produces documentation and image ...