Skip to main content

Under British rule Early Protests Indian Culture History - PR220

அறிமுகம் :


ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பலருடைய ஆட்சிப்பகுதிகளை வெற்றி கொண்டதும்

தங்களது எல்லையை விரிவுப்படுத்திக்கொண்டே போனதும் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளுக்கு 

வழிவகுத்தன. அவர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர்கள் அல்லது அவர்களின்

வாரிசுகள், தங்கள் ஆட்சிப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜமீன்தார்கள் , 

பாளையக்காரர்கள் ஆகியோரால் இத்தகையை கிளர்ச்சிகள் ஏற்பட்டன. வரலாற்றாசிரியர்கள் 

இதைத் தொடக்கநிலை எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள். உடைமைகள் பறிக்கப்பட்ட

விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் எழுச்சியும் இத்தகைய கிளர்ச்சிகளையொட்டித் 

தோன்றின. வேளாண் உறவுகளிலும், நில வருவாய் முறையிலும், நீதி நிர்வாகத்திலும்

ஆங்கிலேயர் செய்த மிக விரைவான மாற்றங்கள் பற்றி முந்தையபாடம்

விரிவாகக் கூறியுள்ளது. இம்மாற்றங்கள்


வேளாண் பொருளாதார அமைப்பில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தின. சமூகத்தின்

பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களும் அவதிப்பட்டார்கள். எனவே, மனக்கொதிப்பில்

இருந்த இந்திய ஆட்சியாளர்கள் கலகத்தில் இறங்கியபோது, அவர்களுக்கு விவசாயிகள், 

கைவினைஞர்கள் ஆகியோரின் ஆதரவும் இயல்பாகவே கிடைத்தது. அக்காலகட்டத்தில்

தென்னிந்தியாவில் நடந்த நிகழ்வுகளும் 1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சியும் இப்பாடத்தில்

விவரிக்கப்படுகின்றன


ஹைதர் அலியின் எழுச்சி :


மைசூர், விஜயநகரப் பேரரசின் கீழ் நிலமானிய  முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது. 

1565இல் விஜயநகரப் பேரரசு வீழ்ந்ததற்குப் பிறகு உடையார் வம்சத்தினர் சுதந்திரமான ஆட்சியாளர் 

ஆயினர். ராஜா உடையார் 1578இல் அரியணை ஏறினார். 1610இல் தலைநகரம் மைசூரிலிருந்து 

ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு மாற்றப்பட்டது. அப்போதிருந்து உடையார் வம்சத்தினரின்

ஆட்சி தொடர்ந்தது. 1710இல் தளவாய் அல்லது  முதன்மை அமைச்சராக நியமிக்கப்பட்ட

ஹைதர் அலி அதிகாரத்தைக் கைப்பற்றும்வரை உடையார்களின் ஆட்சி நீடித்தது.

ஹைதர் அலியின் தந்தை ஃபதே முகம்மது கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் 

தளபதியாக (பௌஜ்தார்) இருந்தார். அவரது  இறப்புக்குப் பின் ஹைதர் அலி தன்

தலைமைப்பண்புகள் மூலம் படையின் உயர்பதவிகளை விரைவாக அடைந்தார். 

1755க்குள் அவர் 100 குதிரைப்படை வீரர்களையும் 2000 காலாட்படை வீரர்களையும் நிர்வகிக்கும்

அளவுக்கு அதிகாரம் படைத்த பொறுப்பைப் பெற்றிருந்தார். மைசூரில் இராணுவத்தில்

ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கினார். மராத்தியர்  ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை 

ஹைதர் மீட்டெடுத்தார். இதற்காக அவர் ‘ஃபதே ஹைதர் பகதூர்’ (வீரமும் வெற்றியும் கொண்ட

சிங்கம்) என்ற பட்டம் பெற்றார். 1760இல் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக புதுச்சேரியில்

இருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தார். ஆனால் அவர் தனது சொந்த மண்ணில்

மராத்தியரால் உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும்

ஹைதர் அதை வெற்றிகரமாக முறியடித்தார்.


ஹைதர் அலியும் ஆங்கிலேயரும் :


கிழக்கிந்தியக் கம்பெனி திவானி உரிமையைப் பெற்ற (வங்காளம், பீகார், ஒரிசா ஆகியவற்றில்

முகலாய அரசுக்குப் பதிலாக வரி வசூலிக்கும் உரிமை) பிறகு, தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட

பகுதிகளைக் கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டியிருந்தது. கம்பெனி போதுமான 

வலிமையுடன் இல்லாததால், இந்திய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்து 

வந்தது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகாரத்துக்கு  உட்பட்ட இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள

இடைப்பட்ட நாடுகளை (buffer states) வாரன் ஹேஸ்டிங்ஸ் சுற்றுவேலிக் கொள்கை மூலம்

தொடர்ந்து அனுமதித்தார். எனினும் கம்பெனி  கர்நாடக அரசியல் விவகாரங்களினால்

ஈர்க்கப்பட்டது. நவாப் பதவிக்காகத் தொடர்ச்சியாக  நடைபெற்ற மோதல்களே இதற்குக் காரணம். 

ஆங்கிலேய வணிகர்கள் இதை இந்திய அரசியலில்நேரடியாகத் தலையிடுவதற்கான ஒரு பெரிய 

வாய்ப்பாகக் கருதினார்கள். ஆனால் அவர்களின் முயற்சிக்கு ஹைதர் அலி, ஹைதராபாத் 

நிஜாம் ஆகிய வலிமைமிக்க சக்திகளிடமிருந்து  அச்சுறுத்தல்கள் இருந்தன


முதலாம் மைசூர் போர் 1767-69 :


மூன்றாம் கர்நாடகப் போரில் வங்காளத்திலிருந்து படைகளை வழிநடத்திய கர்னல் ஃபோர்டே

1759இல் மசூலிப்பட்டிணத்தைக் கைப்பற்றினார். இது ஜாலாபத் ஜங் உடனான உடன்படிக்கைக்கு 

வழிவகுத்தது. அவர் ‘வட சர்க்கார்கள்’ என அறியப்படும் கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, 

கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்க

வேண்டியிருந்தது. வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசம் ஆனதை முகலாயப் பேரரசர் 1765இல்

அலகாபாத் உடன்படிக்கை மூலம் அங்கீகரித்தார். ஆனால் 1766இல் ஆங்கிலேயர் இப்பகுதியைக் 

கையகப்படுத்தியபோது பிரச்சனை தோன்றியது. இந்தப் பகுதிகளை ஆங்கிலேயர் கையகப்படுத்த 

நிஜாம் அலி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக அவருக்கு 

எதிரிகளிடமிருந்து ஆபத்து வரும்போது  ஆங்கிலேயர் உதவிக்கு வருவார்கள் என்றும்

ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வாக்குறுதி மூலம் ஹைதர் அலிக்கு எதிராக நிஜாம்

அலிக்கு உதவத் தாங்கள் தயாராக இருப்பதை உணர்த்தினார்கள். ஆங்கிலேயர் பின்னாட்களில்

பின்பற்றிய துணைப்படைத்திட்டத்துக்கு இந்நடைமுறை காரணியாக அமைந்தது. 

நிஜாம் அலி ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டாலும், 1767இல் அவருக்கும்

ஹைதர் அலிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு  உடன்பாடு ஏற்பட்டது. எனவே ஆங்கிலேயர்

ஹைதருக்கு எதிரான போரை அறிவித்தார்கள். இது முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் அல்லது 

முதலாம் மைசூர் போர் என அறியப்படுகிறது.


இரண்டாம் மைசூர் போரும் (1780)

ஹைதரும்


அமெரிக்கச் சுதந்திரப்போருக்குப் பிறகு பிரான்ஸ் அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை (1778) 

செய்துகொண்டது. எனவே பிரிட்டன் பிரான்ஸுக்கு எதிரான போரை அறிவித்தது. இதைப்

போலவே ஸ்பெயினும் அமெரிக்காவுடன் நட்பு  உடன்படிக்கை மேற்கொண்டு, இங்கிலாந்துக்கு 

எதிராகப் போரில் (1779) இறங்கியபோது  இங்கிலாந்து தனிமைப்பட்டது. இந்தியாவிலும்

பிரெஞ்சுப்படையின் ஆதரவுடன் நிஜாம் அலியும் மராத்தியரும் கைகோத்துச் செயல்பட்ட

போக்கு ஆங்கிலேயருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது. ஹைதர் அலி இந்தச் சூழலைத் 

தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கர்நாடகத்திற்குப் படையெடுத்தார்.

ஹெக்டர் மன்றோ தலைமையிலான  படையுடன் சேர்ந்து செயல்பட வேண்டிய 

கர்னல் பெய்லி ஹைதரின் திடீர்த்தாக்குதலில் கடுமையாகக் காயமுற்றார். இது மன்றோவை

சென்னை நோக்கிச் செல்ல வைத்தது.  ஹைதர் ஆற்காட்டை க் கைப்பற்றினார் (1780). 

இந்நிலையில் சென்னை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வந்தவாசிப்

போரில் வெற்றிபெற்ற அயர்கூட் மதராஸைக்  கடல்வழியே முற்றுகையிட வங்காளத்திலிருந்து 

அனுப்பப்பட்டார். ஹைதருக்கு எதிராக வெற்றியை ஈட்டிய கூட் புதுச்சேரியை நோக்கி 

நகர்ந்தார். இதற்கிடையே ஹைதர் தஞ்சாவூர்  அரசைத் தன் பிடிக்குள் கொண்டுவந்தார். 

கூட் பரங்கிப்பேட்டையை (Porto Novo) அடைந்து, ஹைதருக்குப் பெரும் பின்னடைவை

ஏற்படுத்தும் வகையில் வெற்றி பெற்றார். ஹைதர்  அங்கு நடைபெற்ற மோதலில் ஆங்கிலேயரிடம்

பிடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பினார்


மூன்றாம் மைசூர் போர் 1790-92 :


இடைப்பட்ட காலத்தில் கார்ன்வாலிஸ்  கவர்னர் ஜெனரல் ஆகப் பொறுப்பேற்றார். 

அவர் திப்பு சுல்தானைப் பழிவாங்கும் விதத்தில் நடந்துகொண்டார். தெற்கில் இரு மிகப்பெரும்

சக்திகளாக விளங்கிய ஹைதராபாத் நிஜாமும் மராத்தியரின் கூட்டமைப்பும் ஆங்கிலேயரின்

கூட்டாளிகளாக இதில் செயல்பட்டார்கள். திப்புவுடனான போருக்குத் தேவைப்பட்ட

நிதியாதாரங்களையும் கூடவே தன் படைகளையும் ஹைதராபாத் நிஜாம் ஆங்கிலேயருக்கு 

வழங்கினார். 1782இல் முதல் ஆங்கிலேய�மராத்தியப் போருக்குப் பின் ஆங்கிலேயருடன்

சால்பை உடன்படிக்கை செய்துகொண்ட மராத்தியர் ஆங்கிலேயரை ஆதரித்தார்கள். நிஜாம், 

மராத்தியர் ஆகிய இரு தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவால் ஆங்கிலேயரின் கை ஓங்கியது.

திப்பு கான்ஸ்டாண்டிநோபிளுக்கும் 1787இல் பாரிஸுக்கும் தூதுக்குழுவை

அனுப்பினார். ஆங்கிலேயருக்கு எதிராகத்  தன்னை வலுப்படுத்திக்கொள்வதற்காகத் திப்பு 

இந்த இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டார்.  பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி தூதுக்குழுவை

நட்புறவுடன் நடத்தினாலும், திப்பு எதிர்பார்த்த ஆதரவு குறித்து வெற்று வாக்குறுதியையே அளித்தார்.

பிரிட்டனுடன் நட்பு பாராட்டிய  திருவிதாங்கூர் மீதான திப்புவின் தாக்குதலும்

கொடுங்களூரைக் கைப்பற்றியதும் கம்பெனி  அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன. 

இவ்வாறு மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் தொடங்கியது. கர்னல் ஹார்ட்லி திப்புவின் தளபதி 

ஹுசைன் அலியைக் கள்ளிக்கோட்டையில் தோற்கடித்தார். இதற்குப் பதிலடியாகத் திப்பு 

திருவண்ணாமலையைக் கைப்பற்றினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநரின் ஆதரவைப்

பெறுவதற்குத் திப்பு எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. கவர்னர் ஜெனரலான 

காரன்வாலிஸ் தானே வேலூரிலிருந்து படையெடுத்து வந்து, பெங்களூரை அடைந்தார். 

வழியில் அவர் திப்புவை எதிர்கொள்ள நேர்ந்தது. ஸ்ரீரங்கப்பட்டணம் அருகே திப்பு 

தோற்கடிக்கப்பட்டார். படையெடுப்பின்போது  தேவைப்படும் பொருட்களின் பற்றாக்குறையால்

காரன்வாலில் பின்வாங்க வேண்டியிருந்தது. இந்தத் தருணத்தில் மராத்தியர் ஆங்கிலேயருக்குத் 

தேவையான பொருட்களை வழங்கினார்கள்.  கூடுதல் வலிமை பெற்ற ஆங்கிலேயப்படை 

ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டது. அதன் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்

திப்பு அமைதி உடன்படிக்கைக்கு அழைப்பு  விடுத்தார். உடன்படிக்கையில் கார்ன்வாலிஸ் 

விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.


நான்காம் மைசூர் போர் 1799 :


திப்பு தனது படையையும் நிதியாதாரங்களையும் வலுப்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும்

மேற்கொண்டார். 1796இல் பாரிஸுக்கு  மீண்டும் தூதர்களை அனுப்பினார். 1797இல்

அவரை மொரிஷியஸிலிருந்து வந்த ஒரு பிரெஞ்சு தூதர் சந்தித்து, பிரான்சின்

ஆதரவை உறுதிப்படுத்தினார். பிரான்சில் இருப்பதைப் போல ஸ்ரீரங்கப்பட்டணத்திலும்

ஜேக்கோபியர் கழகம் தொடங்கப்பட்டது. இது பிரெஞ்சுப்புரட்சியின்போது நிறுவப்பட்டு, பின்னர் 

ஆட்சி அதிகாரத்துக்கு வந்த புரட்சிகர அமைப்பாகும்.  மைசூர் சுல்தானுக்கும் பிரெஞ்சு அரசுக்குமான 

நல்லுறவைத் தெரிவிக்கும் விதத்தில் பிரெஞ்சு குடியரசின் கொடி ஏற்றப்பட்டது.

பிரான்சுடன் திப்பு ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியால் கோபமுற்ற புதிய 

கவர்னர் ஜெனரலான வெல்லெஸ்லி  துணைப்படைத்திட்டத்தின் கீழ் மைசூரில்

ஆங்கிலேயப் படை ஒன்றை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

திப்பு இதை ஏற்கவில்லை. ஆங்கிலேயர் நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரை

1799இல் அறிவித்தனர். ஜெனரல் டேவிட் பெய்ர்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது திடீர் 

தாக்குதல் தொடுத்துக் கைப்பற்றினார். அமைதி உடன்படிக்கைக்கான திப்புவின் வேண்டுகோள் 

நிராகரிக்கப்பட்டது. இறுதி மோதலில் காயமுற்ற திப்பு ஓர் ஐரோப்பியப் படைவீரனால்

சுட்டுக்கொல்லப்பட்டார். திப்புவை அகற்றியதும் உடையார் வம்சத்தினரை மீண்டும் ஆட்சியில்

அமர்த்தியதும் தென்னிந்தியாவில் கம்பெனி  ஆட்சியின் உண்மையான தொடக்கமாக 

அமைந்தன. திப்புவின் மகன்கள் முதலில் வேலூரில் சிறைவைக்கப்பட்டார்கள்


பாளையங்களின் தோற்றம் :


விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு,  அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்த நாகம 

நாயக்கரும் அவருடைய மகன் விஸ்வநாத நாயக்கரும் மதுரை, திருநெல்வேலி 

ஆகியவற்றின் சுதந்திரமான ஆட்சியாளர்களாகத்  தங்களை உறுதிப்படுத்திக்கொண்டனர். 

தளவாய் அரியநாயக முதலியாரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் பாண்டியப்

பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் வகைப்படுத்தப்பட்டு, 72 பாளையங்களாக 

மாற்றப்பட்டன. விஸ்வநாத நாயக்கர் மதுரையைச்  சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை

எழுப்பினார். அதில் 72 அரண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைமையின் கீழ் 

இருந்தனபாளையக்காரர் அரசருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையைக் கப்பமாகச் 

செலுத்துவதற்கும் தேவையானபோது  படைவீரர்களை அனுப்புவதற்கும் பாளையத்தில்

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டவர். இந்தக் கடமைகளையும் பிற

பணிகளையும் செய்வதற்குத் தேவையான நிதியாதாரத்தைப் பெற சில கிராமங்கள் அவருக்கு 

வழங்கப்பட்டிருந்தன. அக்கிராமங்களில் அவர்  வரிவிதித்து நிதி திரட்டினார். இத்துடன்

கூடுதலாகப் பல பட்டங்களும் சிறப்புரிமைகளும் பாளையக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. 

பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்னைகளிலும் குற்றவியல் பிரச்னைகளிலும்

விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. பாளையங்கள் பூகோளரீதியாகப்

பரவியிருந்ததன் அடிப்படையில் மேற்குப் பாளையங்கள், கிழக்குப் பாளையங்கள் எனப்

பிரிக்கலாம். மறவர் குறுநில மன்னர்களிடமிருந்த பாளையங்கள் பெரும்பாலும் திருநெல்வேலியின்

மேற்குப்பகுதியில் அமைந்திருந்தன. கிழக்குப் பகுதியில் உள்ள கரிசல் நிலப்பரப்புகளில் தெலுங்கு 

பேசுவோர் குடியேறியிருந்தார்கள். அவை நாயக்கர் பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன


பாளையக்காரர்களின் கிளர்ச்சி :


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிராமங்களை அடகு வைத்து ஏராளமாகக் கடன்

வாங்கியிருந்த ஆற்காடு நவாப் அங்கெல்லாம் நிலவரி வசூல்செய்யும் உரிமையை

கம்பெனிக்கு அளித்தார். கான் சாகிப் என்று  அழைக்கப்பட்ட யூசுப்கான் கிழக்கிந்திய 

கம்பெனி படையில் இந்திய வீரர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்குப்

படைத் தலைமையுடன் வரி வசூலிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆற்காடு நவாபின்

வேண்டுகோளின்படி, 1755இல் அவருக்கு உதவி செய்ய 500 ஐரோப்பியரும் 200 சிப்பாய்களும்

அடங்கிய படை மதுரை, திருநெல்வேலி  பகுதிகளுக்குள் நுழைய உத்தரவிடப்பட்டது. 

பாளையக்காரர்களின் அதிகாரத்தில் கம்பெனி நிர்வாகத்தின் குறுக்கீடு கடுமையான எதிர்ப்பை

ஏற்படுத்தியது.


தென்னிந்தியக் கிளர்ச்சி (1801) :


திப்புவையும் கட்டபொம்மனையும் ஆங்கிலேயர் வென்ற பின்னர், அவர்களின் படைகள் பல்வேறு 

முனைகளிலிருந்து திரும்பி இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் கிளர்ச்சியாளர்களை 

எதிர்கொள்ள முடிந்தது. சிவகங்கையின் முன்னாள் ஆட்சியாளரின் வழித்தோன்றல்

படமாத்தூர் ஒய்யாத்தேவரின் ஆதரவையும் கிழக்கிந்தியக் கம்பெனி பெற முடிந்தது. அவர் 

சிவகங்கையின் ஆட்சியாளராகக் கம்பெனியால் அங்கீகரிக்கப்பட்டார். இந்தப் பிரித்தாளும் தந்திரம்

அரசரின் ஆதரவாளர்களிடையே பிளவை ஏற்படுத்தி, இறுதியில் கிளர்ச்சியாளர்களை 

மனந்தளர வைத்தது.  1801 மே மாதத்தில் அக்னியு தலைமையிலான ஒரு படைப்பிரிவு தன்

நடவடிக்கைகளைத் துவக்கியது. இப்படை  மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப்

பயணித்து, கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பரமக்குடி அரண்களை ஆக்கிரமித்தது. 

மோதலின்போது இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் கிளர்ச்சியாளர்களின்

அடங்காத எதிர்ப்பும் மருது சகோதரர்களின் வீரம் செறிந்த சண்டைகளும் ஆங்கிலேயரின்

நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது. முடிவில், ஆங்கிலேயரின் படை வலிமையும்

தளபதிகளின் திறமையுமே வெற்றி பெற்றன. ஆங்கிலேயர் ஊமைத்துரையைக் கைது 

செய்ததைத் தொடர்ந்து, மருது பாண்டியரைச்  சிங்கம்புணரி குன்றுகளிலும் செவத்தையாவை

வத்தலகுண்டு பகுதியிலும் வெள்ளை மருதின் மகன் துரைசாமியை மதுரைக்கு அருகிலும்

கைது செய்தனர். சின்ன மருதுவும் அவருடைய  சகோதரர் வெள்ளை மருதுவும் 1801 அக்டோபர் 

24இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரையும் செவத்தையாவும் அவர்களின்

ஆதரவாளர்கள் பலரும் பாஞ்சாலங்குறிச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு 1801 நவம்பர் 16ஆம் நாள் 

தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 73 கிளர்ச்சியாளர்கள் 1802 ஏப்ரல் மாதத்தில்

மலேயாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.


வேலூர் புரட்சி :


அரியணையை இழந்த அரசர்கள்,  குறுநில மன்னர்கள் ஆகியோரின்

சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சி சுமத்திய  அடிமைத்தளையைத் தகர்க்கத் தொடர்ந்து 

பல முயற்சிகளை மேற்கொண்டனர்.  அவற்றின் மொத்த விளைவுதான் 1806ஆம்

ஆண்டில் ஏற்பட்ட வேலூர் புரட்சி ஆகும்.  மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட

பின்னர், அவர்கள் வேலூரை மையமாகக்  கொண்டு செயல்பட்டனர். எண்ணிக்கையில்

3000க்குக் குறையாத திப்பு சுல்தானின் விசுவாசிகள் வேலூரிலும் அதன் சுற்றுவட்டாரப்

பகுதிகளிலும் குடியேறியிருந்ததால், ஆங்கிலேய  எதிர்ப்புக்கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் 

அங்கு தங்கள் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆங்கிலேயரால்

பதவியோ, சொத்தோ பறிக்கப்பட்டவர்கள்,  கொல்லப்பட்டவர்களின் உறவி னர்கள் 

வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்னர். இதுபோல் பாதிக்கப்பட்ட பலரை வேலூர் 

கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது. இவ்வாறு வேலூர் கோட்டை தென்னிந்தியாவின்

புரட்சியாளர்கள் சந்தித்துக்கொள்ளுமிடமாக ஆனது. சிப்பாய்களும் வேலூருக்கு 

இடம்பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிரமாகக் கலந்தாலோசித்தனர்.

அவற்றில் திப்பு மகன்களின் பிரதிநிதிகளும்பங்கேற்று வந்தனர்


Comments

Popular posts from this blog

InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download

InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download Description Photo Studio describes exactly what our software is today: a fully-fledged editing program that lets you create your pictures in your way. We’re really excited about this new identity and hope you like the new name as much as we do. And rest-assured, the name might be changing but all the things our users love about Photo Clip are here to stay: Photo Studio 10 will still be a user-friendly photo editing software, full of fun content to help you create the perfect photos and photo montages. Read on to find out more about all the new features and improvements in Photo Studio 10. VirusTotal: Setup : https://www.virustotal.com/gui/file/7d42a6cb22ca51135b70319b37a954a881f22cddc63f60ed8d39b13a62f5b85c/detection Keygen : https://www.virustotal.com/gui/file/1888ddb3f5b96946c77d40c83d3452d566cecbe3a99db505fa8bb1374ee87d5d/detection Screenshot...

Autodesk AUTOCAD LT 2021 (x64) Final + Crack Free Download

Description AutoCAD LT 2021 is designed to develop and detail 2D drawings. The program automates most of the stages of the project. A full set of 2D commands allows you to create drawings, modify them and release working documentation for projects.The program provides built-in support for DWG format and reliability of work, and also contains powerful tools to improve drawing performance.Thanks to this project files can be easily transferred to other specialists. In addition, you can customize the user interface of the program to fit your needs. System Requirements OS Microsoft® Windows® 7 SP1 with Update KB4019990 (64-bit only) Microsoft Windows 8.1 with Update KB2919355 (64-bit only) Microsoft Windows 10 (64-bit only) (version 1803 or higher) CPU Basic:2.5–2.9 GHz processor Recommended:3+ GHz processor Multiple processors:Supported by the application RAM: Basic: 8 GB / Recommended: 16 GB Display Resolution: Conventional Displays:1920 x 1080 with True Color Hig...

PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download

PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download Description PDF-XChange PRO is the ultimate PDF solution. It’s a bundle package that combines the three best-selling applications that Tracker Software produces. Features    PDF-XChange Editor Plus is a hugely dynamic and fully-customizable PDF application. Create, view, edit, annotate, OCR* and sign PDF files – and that’s just the beginning. If you work with PDF then this fully-customizable product will optimize your work process to levels that no other product can achieve. Create PDF files from scanned documents, images, text files, Markdown files and much more. Open, edit and convert Microsoft Office documents.* Avail of over thirty tools to assist in the creation of document comments, annotations, links and fillable forms. These tools make editing PDFs a finely-tuned, precise process that produces documentation and image ...