அறிமுகம் :
வழக்கமான நேர்க்கோட்டு முறையிலான
இந்திய வரலாறு, சிந்து நாகரிகம் குறித்த
தகவல்களை வழங்கி, பின் வேதகாலத்திற்கு
நகர்ந்து, அதன் பின்னர் மகாஜனபதங்கள் குறித்த
விளக்கங்களைத் தருகின்றது. ஆனால் சிந்துப்
பண்பாட்டின் சரிவுக்குப் பின்னர் பொ.ஆ.மு.
2000 முதல் பொ.ஆ.மு. 600 வரையிலுமான
காலகட்டத்தையும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி
வரையிலுமான, அருணாசலப் பிரதேசத்திலிருந்து
குஜராத் வரையிலுமான நிலப்பரப்பு முழுவதையும்
நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் , பழங்கால
இந்தியாவில் பல்வேறு மொ ழிகளைப் பேசிய
பல்வகைப்பட்ட பண்பா டுகளைச் சேர்ந்த மக்கள்
வாழ்ந்தனர் என்பது தெ ளிவாக விளங்கும்.
இப்பாடம் பிந்தை ய ஹரப்பா காலகட்டம்,
செம்புக்காலம், பெருங்கற்கா லம், இரும்புக்காலம்,
வேதகாலப் பண்பா டுகள் மற்றும் ஆரியர்கள் குறித்து
விவரிக்கின்றது. சிந்துப் பண்பா டு குறித்து முந்தை ய
பாடத்தில் கற்றோ ம். இப்பாட ம் சுமார் பொ.ஆ.மு.
3000த்திற்கும், மகாஜனபதங்கள் தோற்றத் திற்கும்
இடையேயான வரலாறு, குறிப்பாக சமூகப்
பொருளாதார மாற்றங்கள் குறித்து விளக்குகின்றன.
சான்றுகள் :
பொ.ஆ.மு. 1900 காலகட்டத்தில் சிந்து நாகரிகம்
மறைந்ததைத் தொடர் ந்து இந்திய வரலாறு
புதிய கற்காலம், செம்புக்காலம், பெருங்கற்கா லம்,
இரும்புக்காலம், வேதகாலம் ஆகிய பண்பா டுகளைச் சேர்ந்த நாடோடிச் சமூகங்கள், வேட்டை யாடும்,
உணவு சேகரிக்கும் சமூகங்கள், நிரந்தரமற்ற, ஓரளவு
நிரந்தரமான இடத்தில் தங்கி வாழ்ந்த வேளாண்-
மேய்ச்சல் சமூகங்களைக் கொண் டிருந்தது.
இந்திய வரலாற்றில் பொ.ஆ.மு. 3000 முதல்
பொ.ஆ.மு. 600 வரையிலான நீண்ட கால வரலாறு
தொடர்பாக இருவகைப்பட்ட முக்கிய வரலாற்றுச்
சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று அகழ்வாய் வு
செய்யப்பட்ட இடங்கள், களிமண் பாண்டங்கள்,
மக்கிய தாவரங்கள், உலோக ப் பொருள்கள்
ஆகியன உள்ளடக் கிய சான்றுகளாகும். மற்றொ ன்று
வேதகால இலக்கியங்களாகும். இக்கால கட்டத்திற்கு
எழுதப்பெற்ற சான்றுகள் இல்லை. ஏனெனில்
வேத இலக்கியங்கள் வழிவழியாக வாய்மொழி
மூலம் பயிலப்பட்டு நினைவில் கொள்ளப்பட்டவை
ஆகும். இக்குறிப்பிட்ட காலத்தில் சிந்துப் பண்பாடு
சார்ந்த குறியீடுகள் (இவை இன்றளவும் வாசித்து
அறியப்படவில்லை) தவிர வேறு எழுத்து முறையை
மக்கள் வளர்த் துக்கொள்ள வில்லை. வேத
நூல்களில் சொல்லப்ப ட்டுள்ள பல குழுக்களைச்
சேர்ந்த மக்களைப் பற்றிய செய்திகளையும்
தொல்லியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட
பண்பாடுகளையும் ஒன்றோடொ ன்று ஒப்பிட்டு
தொடர்புபடுத்துவது எளிதான பணியல்ல. சிந்து
நாகரிகத்தைத் தோ ற்றுவித்தவர்கள் யார் என்பது
குறித்தும் பிற தொல் லியல் பண்பா டுகள் குறித்தும்
பல கருத்துக்கள் நிலவுகின்றன. இந்தக் கால
வெளிக்குள் வெவ்வேறான பண்பா டுகளும், பல்வேறு
வகைப்பட்ட வாழ்க்கை முறைகளைமேற்கொண்ட
சமூகங்களும் இந்தியாவில் வாழ்ந்தன. தொடக்ககால வேதப்பண்பாடு இந்தியாவின்
சில செம்புக்கால பண்பா டுகளின் கூறுகளோ டு
பொருந்துகிறது. அதைப் போலவே பிற்கால வேதப்
பண்பாடு இந்தியாவின் இரும்புக்காலத்தைச்
சேர்ந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட சாம்பல் நிறப்
பாண்டப் பண்பாட்டோடு பொருந்தி உள்ளது.
சிந்து நாகரிகக் காலத்தில் குறிப்பிட்ட நிலப்
பகுதிகளில் மட்டும் நிலவிய நகர் ப்புறம் சார்ந்த
பண்பாடுகள் போல் இல்லாமல், இக்காலகட்டத்தில்
இந்தியாவின் பல பகுதிகளிலும், வேளாண்மை
மற்றும் தொழில் நுட்பங்களின் விரிவாக்கத்தையும்,
வளர்ச்சியையும் காண முடிகிறது. இக்காலத்தில்,
கைவினைப்பொருள் உற்பத்திப் பெருக்கமும்
மக்கட்தொகைப் பெருக்கமும் ஏற்பட்டன. இந்தியா
முழுவதிலும் ஒரு வலுவான பண்பாட்டு அடித்தளம்
உருவாக்கப்பட்டதும் இக்காலகட்டத்திலேத ான்
ஆகும். இன்றள வும் வேளாண்மையும் கால்நடை
மேய்ச்சலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின்
கிராமக் குடியிருப்புகளுக்கான விரிவான அடித்தளம்
இக்காலகட்டத்திலேயே அமைக்கப்பட்டது.
வேதகால இலக்கியங்கள் :
இந்தியாவின் பழம்பெ ரும் சமயநூல்களில்
வேதங்களும் அடங்கும் (வேதங்கள்; வித்=தெரிந்து
கொள்ளல், வித்யா). வேதங்கள் நான்கா கும்.
அவை ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்களாகும்.
இவற்றில் ரிக் வேத ம் பழமையானதாகும். இவை
மனப்பாடம் செய்யப்ப ட்டு வாய்வழி வாயிலாக,
தலைமுறை தலை முறையாக பிராமணர்களால்
போதிக்கப்பட்டது. எழுதும் முறை அறிமுகமான
பின்னர் பிற்கா லத்தில் இவை எழுத்து வடிவம்
பெற்றன. பொ.ஆ. 10-11ஆம் நூற்றாண் டுகளில்தான்
வேதப்பாடல்கள் முதன்முதலாக எழுதப்பெற்றதாக
அறியப்படுகிறது. அப்பாட ல்கள் அரசியல், சமூகம், மதம்,
தத்துவம் சார்ந்த செய்திகளைக் கொண் டிருப்பதால்,
அவை வரலாறு எழுதுவதற்கா ன சான்றுகளாகப்
பயன்படுத்தப்படுகின்றன.
வேதப்பாடல்களின் முக்கியத் தொ குப்புகள்
சம்ஹிதைகள் என்றழை க்கப்படுகின்றன. இவற்றில்
பழமையானது ரிக் வேத சம்ஹிதை ஆகும். இது
பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு.1000க்கும் இடைப்பட்ட
காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்ப டுகிறது. ரிக்
வேதம் மொத்தம் 10 காண்டங்களைக்கொண் டுள்ளது.
அவற்றில் இரண்டிலிருந்து ஏழு வரையிலான
காண்டங்கள் முதலில் எழுதப்பெற்ற ன எனவும், 1, 8,
9, 10 ஆகிய காண்டங்கள் பிற்கா லத்தைச் சேர்ந்தவை
எனவும் கருதப்ப டுகின்றன.
ஒவ்வொரு சம்ஹிதையும் பிராமணங்கள்
என்னும் இணைப்புக்குறிப்புகளைக்கொண் டுள்ளன.
இவை பாடல்கள் மற்றும் சடங்குகள் குறித்த கண்டறியப்பட்டுள்ளன. இம்மட்பா ண்டங்கள்
சிவப்பு நிற அடிப்புறத்தின் மேல் பழுப்புமஞ்சள்
நிறத்தைக் கொண் டுள்ளதாகக் காட்சியளிக்கும்.
(மட்பாண்டங்களைத் தொட்டவுடன் பழுப்புநிறம்
விரல்களில் ஒட்டிக்கொள்ளும்.) எனவேதான்
இவை பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டங்கள்
என்றழைக்கப்படுகின்றன. இவை கருப்புநிற
ஓவியங்களைக் கொண் டுள்ளன. பழுப்புமஞ்சள்நிற
மட்பாண்டங்ளில்ஜாடிகள், கொள ்கலன்கள், தட்டுக்கள்
அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன. பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டப் பண்பா ட்டின்
காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு.
1200 வரையாகும். சிந்து-கங்கை ச் சமவெளிப்
பகுதிகளில் காணப்படும் இப்பண்பா டு தொட க்க
வேதகால பண்பாட்டோ டு தொடர் புகளைக்
கொண்டுள்ளது. இப்பண்பா டு நலிந்த ஹரப்பா
பண்பாடாக பார்க்கப்படுகிறது. சில அறிஞர்கள்
இப்பண்பா ட்டிற்கும் ஹரப்பா பண்பா ட்டிற்கும்
இடையே எவ்வித உறவும் இல்லை எனக்
கருதுகின்றனர். பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டப்
பண்பாடு தொடர்பான ஆய்விடங்களில் செம்பினால்
செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருள்களும்
அதிகம் கிடைப்பதால், இது ‘செம்புப்பொருட்குவியல்
பண்பாடு’ என்றும் அறியப்படுகிறது. இப்பண்பா டு
ஒரு கிராமியப் பண்பாடாகும். இப்பண்பா ட்டு
இடங்களில் நெல் , பார்லி, பட்டாணி, காய்வகைக ள்
ஆகியன விளைவிக்கப்பட்டதற்கா ன சான்றுகள்
உள்ளன. நாட்டுப்புற வாழ்க்கையை மேற்கொ ண்ட
இப்பண்பா ட்டு மக்கள் எருது, பசு, வெள்ளா டு,
செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை
வளர்த்துள்ளா ர்கள். கிராமங்கள் மரதட்டிகளின் மேல்
களிமண்பூசிக்கட்டப்பட்ட சுவர், மேல் கூரைகொண்ட
வீடுகளைக் கொண் டிருந்தன. செம்பிலும், சுட்ட
களிமண்ணிலும் செய்யப்பட்ட அணிகலன்களைப்
பயன்படுத்திய அவர்கள் விலங்குகளின் சுடுமண்
உருவங்களையும் செய்தனர்.
தமிழகத்தில் பெருங்கற்காலம்/
இரும்புக்காலம் :
தமிழகத்தில் புதிய கற்காலத்தில் பழக்கத்தில்
இருந்த இறந்தவர்களைப் புதைக் கும் முறை
பெருங்கற்காலத்திலும் தொட ர்ந்தது. ஈமச்
சடங்கின் போது பெரிய கற்ப லகைகளைப்
பயன்படுத்தி வட்ட வடிவம், குத்துக்கல் எனப்
பலவகையான கல்லறைகளை உருவாக்குதல்
பெருங்கற்காலப் பண்பா ட்டுக் கூறாக
அறியப்படுகிறது. இத்தகைய பெருங்கற்கா லச்
சான்றுகள் தமிழகத்தில் பல பகுதிகளிலும்
காணப்படுகின்றன. தாழியில் புதைக் கும் வழக்கம்
மற்றொரு முறையாகும். இதற்கா ன சான்றுகள்
ஆதிச்சநல்லூரில் (தற் போதை ய தூத்துக்குடி
மாவட்டம்) அகழ்ந்தெ டுக்கப்பட்டன. தமிழகத்தில்,
இறந்தவர்கள் புதைக்கப்பட்ட புதைமே டுகளில்
மட்டுமே கருப்புநிற மட்பாண்டங்கள் அதிகம்
கிடைக்கின்றன. அக்கால மக்கள் வாழ்ந்த குடியிருப்பு
பகுதிகளில் அவை காணப்பட வில்லை. முதுமக்கள்
தாழியைப் பொறுத்தமட்டில் பெரும்பா லும்
கற்கள் பயன்படுத்தப்பட வில்லை. இருப்பினும்
முதுமக்கள் தாழிகள் பெருங்கற்கா லத்தவை
என்றே வகைப்ப டுத்தப்பட்டுள்ளன. ஏனெனில்,
மட்பாண்டங்கள், இரும்புப்பொருள்கள், மணிக்கற்கள்
போன்ற ஈமக்காரியங்களில் பயன்படுத்திய
பொருள்கள் பெருங்கற்கா லக் கல்லறைகளில்
காணப்படும் பொருள்கள் போன்றே உள்ளன.
பெருங்கற்கால ஈம நடை முறைகள் பொ.ஆ.
இரண்டு – மூன்றா ம் நூற்றாண் டுகள் வரை
தொடர்ந்தாக மதிப்பிடப்ப டுகிறது. இக்காலகட்டத்தில்
அசோகர் பிராமி எழுத்து முறை போன்ற தமிழ்
பிராமி எழுத்துமுறை இருந்துள்ளது என்பது
கொடுமணல் (ஈரோ டு மாவட்டம்) அகழாய்வில்
கண்டுபிடிக்கப்பட்டது. பெருங்கற்கா ல மரபு பிந்தை ய
நூற்றாண்டுகளில் தொடர் ந்திருப்பதற்கா ன
சான்றுகளும் காணப்படுகின்றன. சங்க
காலம் வரையிலும் இதுபோன்ற ஈமக்குழிகள்
மக்களால் நினைவு கூறப்ப ட்டுள்ளன. வைகை
ஆற்றுப்படுகையின் மேல்பகுதிகளில் காணப்பட்ட
பழைய காலத்தைச் சேர்ந்த நான்கு நடுகற்கள் தமிழ்
பிராமி எழுத்துகளுடன் காணப்படுகின்றன. இவை
ஏறத்தாழ பொ.ஆ.மு. மூன்றா ம் நூற்றாண் டு அல்லது
இரண்டாம் நூற்றா ண்டைச் சேர்ந்தவையாக
இருக்கலாம். ஆநிரை கவர்தல் தொட ர்பாக ச் சங்க
இலக்கியங்களில் விவரிக்கப்படும் நடுகல் நடும்
மரபினை நிறுவும் சான்றுகளாக இந்த நடுகற்கள்
காணப்படுகின்றன. இதன்கா ரணமாக, சங்க
காலம் என்பது பொ.ஆ.மு. முதல் நூற்றாண் டு
அல்லது அதற்குச் சற்று முன்னதாக இருக்கலாம் என்று ஆய்வாள ர்கள் கருதுகிறார்கள். போ ரில்
இறந்த வீரர்கள் நினைவாக நடுகல் நடும்
மரபு ஈமக் குத்துக்கல் மரபின் தொடர் ச்சியாகக்
கருதப்படுகிறது. ஈமக் குத்துக்கல், நினைவுக்கல்,
கல்திட்டை போன்றவை தமிழகத்தில் காணப்படும்
பெருங்கற்கால ஈமச்சின்னங்களாகும்.
தமிழகத்தில் பெருங்கற்கால
அகழ்வாய்விடங்கள் :
ஆதிச்சநல்லூர் திருநெல்வேலியிலிருந்து
22 கிலோ மீட்டர் தொலை வில் தூத்துக்குடி
மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1876ஆம் ஆண்டு
ஜெர்மனியைச் சேர்ந்த இயற்கைவியலாளரும்,
இன வரைவியலாளருமான ஆண்டிரு ஜாகர்
ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை மேற்கொ ண்டார் .
அங்கிருந்து சுடப்பட்ட மட்பா ண்டங்கள் பல
அளவுகளிலும் வடிவங்களிலுமான பாத்திரங்கள்
ஆகியவற்றின் மாதிரிகளையும் கணிசமான
எண்ணிக்கையில் இரும்புக் கருவிகள், ஆயுதங்கள்,
பெருமளவிலான எலும்புகள், மண்டையோ டுகள்
ஆகியவற்றையும் தன் னோடு எடுத்துச் சென்றார் .
தற்போது அவையனைத் தும் பெர்லின்
அருங்காட்சியகத் தில் உள்ளன. இதனைத் தொடர் ந்து, அன்றைய
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான
ஏ.ஜே. ஸ்டூவர்ட், புகழ்பெற்ற மொ ழியியல் அறிஞரான
ராபர்ட் கால்டுவெல் ஆகிய இருவரும் ஆதிச்சநல் லூர்
சென்றனர். அப்பகுதியில் படிகக் கற்கள்
நிறைந்திருப்பதைக் கண்டனர். உடனடியாக,
கற்களை வெட்டியெடுப்பது அங்கு தடை செய்யப்ப ட்டு,
அலெக்ஸாண்டர் ரீ என்பாரின் மேற்பார்வையில்
அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின. தன்னுடைய
கண்டுபிடிப்புகள் தொட ர்பாக புகைப்படங்களோடு
கூடிய விரிவான அறிக்கையைத் தயார் செய் து,
இந்திய தொல்லியல் துறையின் (ASI) 1902-03
ஆண்டறிக்கையில் வெளியிட்டார் . சற்றேறக்
குறைய நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் , இந்தியத்
தொல்லியல் துறை மே லும் ஒரு அகழ்வாய்வை இங்கு
நடத்தியது. பல புதிய செய்திகள் கண்டறியப்பட்டன.
அதன் அறிக்கை இன்னும் வெ ளியிடப்பட வில்லை.
கொடுமணல் :
ஈரோட்டிலிருந்து 40 கிலோ மீட்டர்தொலை வில்,
காவிரியாற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றின்
வடகரையில் அமைந்துள்ளது கொடுமணல்.
1980களிலும் 1990களிலும் தொடர் ந்து இங்கு
அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அண்மை
அகழ்வாய்வு 2012இல் நடை பெற்ற து. பழங்கால
மக்கள் வாழ்விடங்களிலும், பெருங்கற்காலப்
புதை மேடுகளிலும் மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,
கருவிகள், அணிகலன்கள், மணிகள்
குறிப்பாக மொக ஞ்சதாரோ அகழ்வாய்வில்
கண்டறியப்பட்டதைப் போன்ற செம்ம ணிக்கற்கள்
ஆகியவை அகழ்ந்தெ டுக்கப்பட்டன. செம்மணிக்
கற்கள் இப்பகுதியைச் சார்ந்தவை அல்ல என்பதால்
தற்போது கொ டுமணலில் கண்டெடுக்கப்பட்டுள்ள
செம்மணிக்கற்கள் வேறு பகுதிகளிலிருந்து இங்கு
கொண்டுவரப்பட்டிருக்கலாம்.
சங்க நூலான பதிற்றுப்பத் தில்சேர அரசனுக்குச்
சொந்தமான கொடுமணம் என்ற ஊர் அங்கு சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள்,
சூளைச் சாம்பல் , தமிழ் பிராமி பொறிப்புகள ைக்
கொண்ட மட்பாண்டக் குவியல்கள் போன்றவை
இங்கு அகழ்ந்தெ டுக்கப்பட்ட ஏனைய பொருள்களாகும்.
ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்ப டுக்கைப் புதைப்பு
எனப் பலவகைப்பட்ட புதைக் கும் முறைகள்
கொடுமணலில் அகழ்ந்தெ டுக்கப்பட்டுள்ளன.
இவற்றோடு மட்பாண்டங்களின் மீது
பொறிக்கப்பட்டிருக்கும் சில மனிதர்களின்
பெயர்கள் பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த
மக்கள் இங்கு வாழ்ந்ததைச் சுட்டுகின்றன.
மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டிருக்கும்
வண்ணக் கலைக ள் மக்களைக் குறித்தும் அவர்தம்
நடவடிக்கைகள் குறித்தும் பல தகவல்களை
தருகின்றன. ஒரு புதைகுழி அருகே காணப்படும்
நடுகல் பெருங்கற்கா லத்தைச் சேர்ந்ததாகக்
கணிக்கப்பட்டுள்ளது. கொடுமணல் அகழ்வாய் வில்
கிடைத்தவை சங்கத் தொகை நூல்கள் காலத்தைச்
சேர்ந்தவையாகும் (பொ.ஆ.மு. இரண்டா ம்
நூற்றாண்டு - பொ.ஆ. இரண்டா ம் நூற்றாண்டு) என
எ.சுப்பராயலு கூறுகிறார்.
ஆரியர்கள் :
ஐரோப்பியர்கள் இந்தியாவில்காலனியாதிக்கம்
செலுத்தத்தொடங்கிய பின்னரே இந்திய வரலாற்றை
எழுதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்கள் இந்தியாவின் வரலாறு, தொல் லியல்,
இலக்கியச் சான்றுகளையும், இந்திய மக்களின்
வாய்மொழி மரபுகளையும் தொ குத்தனர்.
அப்போது ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்கள்
ஐரோப்பிய ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தன.
இக்காலகட்டத்தில்தான் காலனியச் சூழலில்
காலனியாளர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக ,
‘ஆரியர்‘ போன்ற சில கருத்தாக்கங்கள்
உருவாக்கப்பட்டன. இக்காலகட்டத்தில்தான்
மக்களை வகைப்ப டுத்துவதற்கும், பிரித்தறிவதற்கும்
‘இனம்’ என்னும் கோட்பா டு பரவலாக்கப்பட்டது.
இவற்றில் ஒரு சில கருத்துக்கள் காலனியகால
இனவெறிக் கருத்துக்களை எதிரொ லிப்பதாக
இருந்தன. ‘ஆரியர் கருத்தியல்’ நீலநிறக்
கண்களையுடைய வெள்ளை யின மக்களோடு
இணைக்கப்பட்டு பின்னர் ஐரோப்பியரோ டு
தொடர்புபடுத்தப்பட்டது. இந்த ஆரியக் கோட்பாட்டை
நாஜிகள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப்
பயன்படுத்திக் கொண்டனர். இது இறுதியில்
மாபெரும் இனஅழிப்புக்கு இட்டுச் சென்ற து. ஆரியர்
என்ற சொல் இனத்தைக் குறிக்கவில்லை எனவும்,
ஆனால் இந்தோ-ஆரிய மொ ழிகளைப் பூர்விகமாகப்
பேசுபவர்களையே குறிக்கிறது எனவும்
அண்மைக்கால ஆய்வுகள் நிறுவியுள்ளன.
Comments
Post a Comment