அறிமுகம் :
இயற்கையிலேயே மனிதனுக்கு இறைவனை நோக்கிய உந்துதல் உள்ளது.
அதனை நமது முன்னோர்களாகிய யோகிகளும், ஞானிகளும், முனிவர்களும்
முறைப்படுத்தி, நமது பாரதத் திருநாட்டிற்கு மட்டுமல்லாது உலகத்திற்கே இறைநெறியில்
வாழ அளித்திருக்கும் கொடைதான் யோகா . ஞானிகளும் யோகிகளும் முனிவர்களும்
மனிதப் பிறவிப்பயனை, மக்கள் அடையும் நிலைகளை , யோக முறையில்
வடிவமைத்துத் தந்துள்ளனர் . யோகா என்பது, முனிவர்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே
உகந்தது என்ற கருத்து மாறித் தற்போது உலகிலுள்ள அனைத்து சமயத்தைச் சார்ந்த
மக்களாலும் பின்பற்றப்படும் வாழ்வியல் கலையாக மிளிர்ந்துள்ளது
யோகா - பொருள் :
யோகா என்ற சமஸ்கிருத சொல்லானது யுஜ் (YUJ) என்ற சொல்லிருந்து தோன்றி யோக்
(YOKE) என்ற சொல்லாக மாறி இறுதியில் “யோகா ” (Yoga) எனப் பெயர்பெற்றது. யுஜ் மற்றும்
யோக் என்ற சொற்கள் “இணைத்தல்” என்று பொருள்படுகின்றன .இதில்இணைத்தல் என்பது
- உடலையும் மனத்தையும் இணைத்தல் முதல் நிலை
- உடலையும் உயிரையும் இணைத்தல் இரண்டாம் நிலை
- உயிரையும் இறைவனையும் இணைத்தல் மூன்றாம் நிலை
யோகா பொருள்
பதஞ்சலி முனிவரின்கூற்றுப்படி யோகா என்பது, “யோகஹ சித்த விருத்தி நிரோதா ”
என்று அழைக்க ப்படுகிறது. இதில் சித்த என்பது மனம்; விருத்தி என்பது மனச்சஞ்சலம்; நிரோதா
என்பது கட்டுப்படுத்துதல். எனவே , யோகா என்பது மனம் மற்றும் மனச்சஞ்சலத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.
யோகா வரலாறு மற்றும் வளர்ச்சி :
யோகா இந்தியாவின் தொன்மையான வாழ்வியல்கலை . இஃது அறிவியல்,
உடல்நலம், மனநலம் மற்றும் ஒழுக்கநெறிகளை உள்ளடக்கிக் கட்டுப்பாட்டுடன்
அறத்தைப் பின்பற்றி வாழும் நெறிமுறைகளை விளக்குகிறது. பதஞ்சலி முனிவர் யோகா
வளர்ச்சியடைய அடித்தளம் அமைத்தார் . எனவே , இவர் “நவீன யோகாவின் முன்னோடி“
என அழைக்கப்படுகிறார் . யோகக்கலை வல்லுநர்கள் யோகா வளர்ச்சியை நான்கு
படிநிலைகளில் வகைப்படுத்தியுள்ளனர் .
பதஞ்சலி காலத்திற்கு முன்பு யோகா :
வரலாற்று ஆய்வின் அடிப்படையில், யோகா சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே
இந்தியாவில் தோன்றியது எனலாம். இக்காலக்கட்டத்தை பதஞ்சலி முனிவர்
காலத்திற்கு முந்திய காலம் என்றும், இஃது இலக்கிய கால த்திற்கு முன்பான யோகா என்றும்
அழைக்கப்படுகிறது. இக்காலத்திலிருந்த , வேதங்கள் , உபநிடதங்கள் , ஸ்மிருதி, பௌத்த
சமயம், சமண சமயம், இதிகாசங்கள் மற்றும் புராணங்களிலிருந்து யோகா பற்றிய செய்திகள்
அறியப்பட்டுள்ளன.
வேதங்கள் :
ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் மற்றும் அதர்வண வேதம் போன்ற நான்கு
வேதங்களிலும் யோகா என்ற வார்த்தை நேரடியாக பயன்படுத்தப்படவில்லை.
மாறாக , “தீரா ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீரா என்பதன் பொருள், ‘தன்னை
உணர்ந்த நிலையாகும்‘ (self realized state).மேலும், வேதங்களில் தியானம் செய்யும்
நோக்கிலேயே யோகா விளக்கப்பட்டுள்ளது. இதில் சூரியவணக்கம் அனுதின நிகழ்வாக
இருந்தது. யஜுர் வேதத்தில் அனுலோமா, வயலோமா என்னும் மூச்சுப்பயிற்சி முறைகள்
விளக்கப்பட்டுள்ளன
உபநிடதங்கள் :
உபநிடதங்களில் யோகா பற்றிய குறிப்பு உள்ளது. இவற்றுள் தைத்ரிய உபநிடதத்தில்
பஞ்சகோச கோட்பாடு யோகா என்பது, நோய்களைக் குணமாக்கும் முறையை
குறிப்பிடுகிறது. கீனோ உபநிடதம், ஈஸாவஸ்ய உபநிடதம், ஸ்வே தாசுவர உபநிடதம்
போன்றவை ஆன்மாவின் பண்புகளையும், கதோபநிடதம் சமாதி அடையும் முறையையும்
விளக்குகிறது
ஸ்மிருதி :
வேதகால ங்களில் எழுதப்பட்ட சமய விதிகளின் தொகுப்பான ஸ்மிருதியில்
ஒருவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் வாழ்வியல்
படிநிலைகளுடன் தியானம் மற்றும் ஆசனப் பயிற்சிகளும் விளக்கப்பட்டுள்ளன
சமண சமயம் :
சமண சமயம், ‘மனம் மற்றும் உடல் ஆன்மாவை நோக்கிப் பயணிப்பது யோகா ‘
என்று குறிப்பிடுகிறது.
பாணினி :
பாணினி என்பவர் சமஸ்கிருத ஆசிரியர் ஆவார் . இவர்தாம் எழுதிய அஸ்டாத்யாயி என்ற
நூலில் யோகா மேற்கொள்ளும் முறையையும் அவற்றின் பயன்களையும் குறிப்பிட்டுள்ளார் .
இதிகாசங்கள் :
இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில், யோகா பற்றி
விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் “நிரோத யோகம்“ என்னும் யோக நெறியில்
மனித ஆன்மா பரமாத்மா வுடன் இணைவது பற்றி விளக்கப்பட்டுள்ளது. இராமாயணத்தில்
ஒழுக்க நெறிகளான யாமம், நியமம் மற்றும் தர்மம் போன்ற யோக நெறிகள்
குறிப்பிடப்பட்டுள்ளன. யோகாவின் மிகச் சிறந்த புத்தகமான “யோகவசிஸ்தா ” புராண காலத்தில்
எழுதப்பட்டதாகும்
பதஞ்சலி கால யோக வளர்ச்சி :
வரலாற் று ஆய்வுகளின்படி கி.மு. (பொ.ஆ. மு) 500 முதல் கி.பி (பொ . ஆ) 800 வரையுள்ள
காலத்தைப் பதஞ்சலி யோகா வளர்ச்சி நிலை காலமாகக் கருதலாம். யோக வழிகளை மனித
இனத்திற்குத் தந்தவர் ‘ஹிரண்யகர்பர்’.அவற்றைச் சூத்திரங்களாக்கி வைத்தவர் மஹரிஷி பதஞ்சலி
ஆவார் . பதஞ்சலி முனிவர் ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்பட்டார் . இவருடைய
தந்தை அத்தரி முனிவர், தாய் கோணிகா ஆவார் .அத்தரியின் பிள்ளை என்பதால் ‘ஆத்திரேயர்’
என்றும், கோணிக்காவின் பிள்ளை என்பதால் ‘கோணிகாபுத்திரர்’ என்றும் அழைக்கப்பட்டார் .
பதஞ்சலி முனிவர் யோக முறைகளைச் சூத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தினார் . இவை
பதஞ்சலி யோகசூத்திரங்களா கும். யோகசூத்திரா என்னும் யோக சாஸ்திரம் 196 சூத்திரங்களை
உள்ளடக்கியது. இது நான்கு பெரும் அத்தியாயங்களைக் கொண்டது
- சமாதி பாதம்
- சாதன பாதம்
- விபூதி பாதம்
- கைவல்ய பாதம் என்பனவாகும்
இன்றைய உலகில் யோகா :
யோகா பயிற்சியின் பயன்களை 1960-ஆம் ஆண்டுவரை , உலக மக்கள்
அறிந்திருக்கவில்லை. தற்போது, யோகா அனைத்து நாடுகளிலும் பிரபல மடைந்துள்ளது.
உலகளவில் மக்களிடையே உடல்நலத்தின் முக்கியத்துவம், அமைதியான வாழ்க்கை,
உடல்நலம் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்பட்டு, அனைத்து மனிதர்களும் யோக
முறைகளைப் பின்பற்றி வருகின்றனர் . அனைத்து நாடுகளிலும் யோகா பயிற்சி
மையங்கள் அமைக்கப்பட்டு, யோகா பயிற்சியை மேற்கொள்கின்றனர் .
உலக அளவில் யோகா புகழ் பெறுவதற்கு காரணமான சுவாமி சித்தானந்தா , ஸ்ரீ
கிருஷ்ணமாச்சாரியார் . ஓஷோ, மகரிஷி, மகேஷ் யோகி, யோகி அரவிந்தா , ஸ்ரீ B.K.S ஐயங்கார்
மற்றும் வே தாத்ரி மகரிஷி போன்றவர்களது யோகா பணி சிறப்புமிக்கது.
யோகாவின் பிரிவுகள் (Branches of Yoga) :
யோக முறையில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், பக்தி யோகம், கர்ம யோகம்,
ஞான யோகம், ராஜயோகம் என நான்கு முறைகள் மட்டுமே முதன்மையானதாக
கருதப்படுகின்றன .
1. பக்தி யோகம் :
பக்தி யோகம் என்பது நாயன்மார்களும், ஆழ்வார்களும் மேற்கொண்ட பக்தி
நெறியாகும். எல்லாம் இறைவன் செயல். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை
வெ ளிப்படுத்துவது பக்தி யோகமாகும். உலகில் உள்ள அனைத்துச் சமயங்களும் பக்தி
யோகத்தையே வலியுறுத்துகின்றன . எல்லாச் சமயமும் சமமே . மனத்தை நன்னிலைக்குக்
கொண்டு வருதலே சமயங்களின் நோக்க மாகும். சமுதாயத்தில் அமைதி
வழியில் மனத்தை இறைவன்பால் ஈடுபடுத்த தோற்றுவிக்கப்பட்டவையே சமயங்களாகும்
2. கர்ம யோகம் :
மனத்தை முழுவதுமாக ஈடுபடுத்திச் சமுதாயத்தில் தம் நிலைக்கு உகந்த கடமையைச்
சிறப்பாகச் செயல்படுத்துவதை , கர்மயோகம் என்று கூறுவர். ஒருவர் மேற்கொள்ளும்
செயலில் தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைத் தகர்த்து, அச்செயலில் வெற்றி அடைவது கர்ம
யோகத்தின் நோக்கமாகும்.
3. ஞான யோகம் :
பேரறிவு பெறுதலே பெரும் ஆற்றல் என்பது, ஞான யோகத்தின் மேன்மையைக்
குறிப்பதாகும். ஞானயோகத்தின் கருப்பொருள், ‘அறிவே கடவுள்‘. இதில் பல்வேறு நூல்களைக்
கற்று, ஒவ்வொரு செயலுக்கும் ஏன், ஏதற்கு, எப்படி, எவ்வாறு என்று பல்வேறு கேள்விகளை
எழுப்பி, ஆராய்ந்து பார்த்து, உண்மை நிலையை அறிந்து, தெ ளிந்து, உணரும் நிலையே , ஞான
யோகம் எனப்படும்.
4. ராஜ யோகம் :
பதஞ்சலி முனிவர் யோக முறைகளை , யோக சூத்திரங்களின் அடிப்படையில்
எட்டு நிலைகளாகப் பிரித்து, அவற்றை அஷ்டாங்கயோகம் என்னும் ராஜயோகமாக
வெளிப்படுத்தினார் .
பிராணாயாமம் :
பிராணாயாமம் என்ற சொ ல் “பிரண ம்” மற்றும் “அயமம்” என்ற இரண்டு சொற்களால்
உருவானது. பிரணம் என்றால் “உயிர் மூச்சு” என்றும் அயமம் என்றால் “கட்டுப்படுத்துதல்”
என்றும் பொருள்படும். எனவே பிராணாயாமம் என்பது, ‘உயிர் மூச்சைக் கட்டுப்படுத்துதல்‘
என்று பொ ருள்படுகிறது. சுவாசக்காற்றை ஒழுங்குபடுத்துவதே பிராணாயாமப் பயிற்சியின் நோக்கமாகும்.
முகத்திற்கு வசீகரமும், மனத்திற்குத் திறனும், உடலுக்கு உணவை ஏற்றுக்கொள்ளும் சீரண
சக்தியும் காற்றால்தான் ஏற்படுகிறது
ஆசனம் :
ஆசனம் என்கின்ற சமஸ்கிருத சொல்லுக்கு “அமர்தல்”அல்லது “உட்காருதல்”
என்றும் உடலைப் பல்வேறு நிலைகளில் இருத்துதல் என்றும் பொருள். எனவே ,
யோகாசனம் என்பது, உடலைப் பல்வேறு நிலைகளில் குனிந்து, வளைந்து, நீட்டி, மடித்து,
மடக்கிச் சுவாசத்தை முறையாகப் பின்பற்றி, மேற்கொள் ளும் உடற்பயிற்சியேயாகும். இதில்
உடலை குறிப்பிட்ட தோரணையில் வைத்து மனத்திற்கும் உடலுக்கும் உறுதித்தன்மை
கொண்டு வருவதாகும்.
பச்சி மோத்தாசனம் :
பொருள் : பச்சி மோத்தாசனம் என்ற சொல், ‘பச்சிமா‘ மற்றும் ‘உத்தானா ‘ என்ற
இரண்டு சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உருவானது. பச்சிமா என்பதன் பொருள்,
உடலின் பின்பகுதி. (Back of body) உத்தானா என்பது, நீட்டுதல் அல்லது நீட்சி என்று பொருள்.
எனவே , பச்சிமோத்தாசனா என்பது, அமர்ந்தநிலையில் முதுகை முன்பக்கமாக வளைத்தல்
(Seated forward bend) எனப் பொருள்படும்
பிரத்யாகாரம் :
பிரத்யாகாரம் என்னும் பிரிவு நம் ஐம்புலன்களைப் பயன்படுத்தி, மனத்தைப்
புறத்திலிருந்து நீக்கி, ஒருமுகப்படுத்தி இதயத்தாமரை யில் ஒரு கணம் நிலை
நிறுத்துவதேயாகும். ஐம்புலன்களில் ஏற்படும் தூண்டலைத் தவிர்த்து, மனத்தைக்
கட்டுப்படுத்தி ஒருநிலை ப்படுத்தும் செயலா கும். இதில், இரண்டு புருவங்களுக்கு
இடையே மனத்தை ஒருநிலை ப்படுத்தி நிலை நிறுத்துதல். இரண்டு புருவங்களுக்கு
இடையே உள்ள பகுதி ‘அஞ்ன சக்ரா ’ (AjnaChakra) அல்ல து மூன்றா வது கண் என்று
அழைக்கப்படுகிறது
Comments
Post a Comment