அறிமுகம் :
நமதுநாடு பழைமையான பண்பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்வியல்
முறைகள், இலக்கியம், கணிதம், வானவியல், இசை, ஓவியம், நடனம், சிற்பம், கட்டடக்கலை
போன்றவற்றில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது. தே சிய ஒருமைப்பாட்டை
மையப்படுத்தும், ஆன்மிக உணர்வு, இந்தியாவின் பலம் என சுவாமி விவேகானந்தர்
குறிப்பிட்டுள்ளார். “உலகப்பொதுமறை“ என்றழைக்கப்படும் திருக்குறள் , தமிழர்
வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெ றிகளைக் கூறும் சங்க இலக்கியம், இராமாயணம்,
மகாபாரதம், கௌதம புத்தர் தோற்றுவித்த பௌத்தசமயம் போன்றவை , உலகிற்கு
இந்தியா வழங்கிய அளப்பரிய பண்பாட்டுக் கொடையாகும்
இந்தியப் பண்பாட்டின் மேன்மைகள் :
இந்தியப் பாரம்பரியத்தின் உயரியப்பண்பு சகிப்புத்தன்மையும்
பன்முகத்தன்மையுமாகும். யூதர்கள் , கிறித்துவர்கள் , முஸ்லீம்கள் , பார்சிக்கள்
போன்றோர் இந்தியாவில் குடியேறி, இந்தியப்பன்முகத்த ன்மையை ஏற்றுக்கொண்டு,
இந்தியப்பண்பாட் டுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள் . மதநல்லிணக்க அடிப்படையில்
அனைத்துச் சமயங்களிலுமுள்ள நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்ளல், பிற
சமயத்தினருக்கும் மதிப்பளித்தல் போன்ற உணர்வுகளை த் தன்னகத்தே கொண்டு,
சகிப்புத் தன்மையுடன் நடப்பது இந்தியர்களின் தலை சிறந்த பண்பாடாகும்.
நம் சமுதாயம், தருமம் என்ற அறக்கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
எல்லாச் சமயங்களும் எல்லா இனங்களும் சரிசமம். இஃது ஆண் - பெண் சமத்துவம்
போன்ற சிறந்த கொள்கைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. நம் பண்பா டு
இயற்கை யிலுள்ள அனை த்து உயிர்களையும் உயிரற்றவை களையும் நேசிக்கும் பண்பைக்
கொண்டுள்ளது. மரம், செடி, கொடி, நதி என எல்லாவற்றையும் வணங்கும் பாங்கு, நமது
உயரிய நற்பண்புகளை எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது
இந்தியப் பண்பாட் டில் கட்டடக்கலை , மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
எடுத்துக்காட்டாக எல்லோராகுகைக்கோயில், அஜந்தா ஓவியம், குடை வரைக்கோயில்
(மகாபலிபுரம்), லிங்கராஜா கோயில் (புவனேஸ்வர்), சூரியனார்கோயில் (கோனார்க்),
நடராஜர் கோயில் (சிதம்பரம்), தஞ்சைப் பெரியகோயில் போன்றவற்றைக் கூறலாம்.
மே லும் சிற்பங்கள் , ஓவியங்கள் , நடனங்கள் , நாடகங்கள் , இசை போன்றவற்றில் உலகிற்கே
முன்னோடியாக இந்தியப்பண்பாடு திகழ்கிறது. “உண்மையில்லா நிலை யிலிருந்து
உண்மையையும், இருட்டிலிருந்து வெளிச்சத்தையும், ஒழுக்கக் கேட்டிலிருந்து
விடுதலையையும் பெற்றுத் தரும் ஒரு சாதனமாக அமைந்துள்ளது இந்தியப் பண்பாடாகும் “.
அறக்கோட்பாடுகள் :
‘அறம்‘ என்ற சொல்லுக்குச் சான்றோர்கள் பல்வேறு பொருள்களைக்
குறிப்பிடுகிறார்கள் . தமிழ் இலக்கிய அகராதி, அறம் என்னும் சொல்லுக்கும் புண்ணியம்,
தருமம், வாழ்வியல் விதி, ஒழுக்கம் எனப் பல பொருள்களைக் குறிப்பிடுகின்றது
“மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் நிறை வடிவமே
அறம்“ என க. அரங்கசாமி குறிப்பிடுகின்றார்
நான்கு புருஷார்த்தங்கள் :
வாழ்வின் உறுதிப் பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய
நான்கையும் புருஷார்த்த ங்கள் என்று அழைக்கிறோம். இவற்றில் வீடுபேற்றை
அடை வதையே மனிதன் தம் குறிக்கோளாகக் கொள்ளவேண் டும். அதனை அடைய,
வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வாழ்வியல் நெறிக்கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றிட
வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்துகின்றனர்
தொல்காப்பியரின் அறக்கோட்பாடு :
தொல்காப்பியர் அகத்திணையியல் களவியல், கற்பியல், பொருளியல் முதலிய
அகப்பொருள் கோட்பா டுகளையும், புறத்திணையியல் மரபியல் பற்றிய
அறக்கோட்பா டுகளையும் வழங்கியுள்ளார். பழைமை யான மரபையே பின்பற்றச் சொல்லும்
பிற்போக்கு எண்ணம் இல்லா த தொல்காப்பியர்,‘கடிசொல் இல்லைக் காலத்துப்படினே ’
எனக்கூறி பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தார்
இதிகாசங்களில் அறக்கோட்பாடு :
வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமாயணமும், வேதவியாசரால் எழுதப்பட்ட
மகாபாரதமும் இதிகாசங்களாகும். இராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி பெரியோருக்குக் கீழ்ப்படிதல்
கற்புநெறி நன்றிமறவாமை பிறன்மனை நோக்கா திருத்தல் உண்மையே வெல்லும்’
போன்ற உயரிய அறநெறிக் கோட்பாடுகளை உலகிற்கு வழங் கியுள்ளது.
மகாபாரதம் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதன் பின்பற்ற
வேண் டிய நால்வகை நோக்க ங்களைப்பற்றிக் கூறுகிறது. தனிப்பட்டவர்க ளுக்கு உரிய சிறந்த
குணங்களையும், சூது வாழ்க்கைக்குக் கேடு, மண்ணாசை வேண்டாம், தர்மம்வெல்லும்,
நன்றிமறவாமை , சகிப்புத்தன்மை , தியாகம், செஞ்சோற்றுக் கடன்தீர்த்தல்
போ ன்ற அறங்களையும் இவ்வுலகிற்கு எடுத்தியம்புகிறது.
சமண அறக்கோட்பாடுகள் :
வர்த்தமானமகாவீரர் ‘திரிரத்தினங்கள் ‘என்ற மும்மணிகளையும் வாழ்வியலுக்கான
இல்லறக் கோட்பாடுகளையும், கர்மவிணை போன்ற அறக்கோட்பாடுகளையும் சமண
சமயத்தின் மூலம் நமக்கு அளித்துள்ளார்
பெளத்த அறக்கோட்பாடுகள் :
கௌதமபுத்தர் மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நால்வகை உயரிய
உண்மைகளையும், எண்வகை பாதைகளையும் வகுத்தளித்துள்ளார். மேலும் இல்லறத்தார்,
துறவறத்தார் கடைப்பிடிக்க வேண்டிய நெ றிமுறைகளையும் வழங்கியுள்ளார்
ஔவையாரின் அறக்கோட்பாடுகள் :
ஔவையார் தமது ஆத்திசூடி,கொன்றை வேந்தன், மூதுரை , நல்வழி போன்ற
அறநூல்கள் வாயிலாக வாழ்வியல் அறங்களான கற்பு, தர்ம ம், கல்வி, பிறருக்கு உதவும்
மனப்பான்மை போன்றவற்றை எளிமையாகக் கடைப் பிடிக்கும் நோக்கில் விளக்கியுள்ளார்.
மேலும், நல்வழி என்ற அறநூலில் ‘சாதி இரண்டே இதுவே நீதி’, ‘வருவது வரும் வாடாதே ’,
‘ஏர் பிடித்தோர்க்கு இணை யில்லை ’, ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ போன்ற
உயர்ந்த அறக்கருத்துகளை மனித சமூகத்திற்கு வழங்கியுள்ளார்.
ஆன்மிகம் :
ஆன்மிகம் என்பது பொதுவாகப் ‘புலன்கடந்த அனுபவநிலையாகும்‘. மனிதன்,
தன்னுள் இருக்கும் ஆத்ம ஞானத்தை உணர்வதுதான் ஆன்மிகமாகும். ஞானயோகம்,
கர்மயோகம் மற்றும் பக்தியோகம் என்பன ஒவ்வோர் உயிரும் அதன் கர்மவினைகளின்படி,
அதன் தற்போதைய நிலையின்படி, ஏற்ற வழியைப் பின்பற்றித் தமது குறிக்கோளான
வீடுபேறு அல்ல து ஆன்மாவின் உண்மை நிலையை அறிவதே ஆன்மிகம் எனலாம்.
சமயக் கோட்பாடுகளின்படி, உயிரினங்கள் அனை த்தும் தெய்வீகத் தன்மை
கொண்டவை எனலாம். தெய்வீகத்தின் அங்கமாகத்தான் இவ்வுலகம் அமைந்துள்ளது.
அந்தத் தெய்வீகத் தன்மையை உணர்த்துவதுதான் ஆன்மிகமாகும். மனிதன் இவ்வுலகில்
யோகா :
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் பாரத நாட்டில் தோன்றிய
பழைமையான ‘வாழ்வியல் பயிற்று முறை‘ யோகாவாகும். உடல், மனம், அறிவு, உணர்வு
ஆன்மிகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை
யோகக்கலையாகும். இஃது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும்
ஒழுக்கங்களைப் பற்றிய நெறியாகும். ‘யோகா‘என்பது, ஒரு சமயம் அன்று; அஃது ஒரு
பெ ருந்த த்துவம்; ஒரு கலை ; ஓர் அறிவியல் மற்றும் வாழ்க்கை நெ றிமுறையாகும். (Yoga in short,
is not a religion but a great philosophy, an art, a science and a
way of life) யோகநிலையில்தான் மற்ற உயிர்களையும் தன்னுயிர் போலவே நேசிக்க
முடியும். இதனையே இராமலிங்க அடிகளார் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றார். கிறித்துவ
புனித நூலான பை பிள் “உன்னைப் போல பிறரையும் நேசி“ என்று குறிப்பிடுகின்றது.
இஸ்லாமிய புனித நூலான திருக்குரான் “நீ பிறரிடம் இரக்கம் காட்டினால் நான் உன்னிடம்
இருமடங்கு இரக்கமுடையவனாய் இருப்பே ன்“ என்கிறது. இந்த ஆன்மநே ய ஒருமைப்பாட்டு
உரிமை , யோகமுறையை மே ற்கொள்வதால் அடை யமுடிகிறது
இந்திய வானவியல் :
குப்தர்கள் காலத்தில் கணிதம், வானவியல், மருத்துவம், ஜோதிடம் போன்ற துறைகளில்
இந்தியா வளர்ச்சி பெற்றிருந்தது. இவர்கள் காலத்தில் வாழ்ந்த ‘ஆரியபட்டர்‘ வானவியல்
மற்றும் கணிதத்தில் சிறந்து விளங் கினார். ”ஆரிய சித்தாந்தம்” என்ற தமது வானவியல்
நூலில், ‘உலகம் உருண்டையானது, பூமி தனது அச்சில் சுழலுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது‘
என்றார். இவர் சூரிய, சந்திரகிரகணங்கள் தோன்ற உண்மையான காரணங்களை விளக்கிக்
கூறியுள்ளார். ஆனால், மேலை நாட்டு வானவியல் அறிஞர்கள் பிற்காலத்தில்தான் இவ்வுண்மைகளை
அறிந்தனர். ஆரியபட்டர் எழுதிய ‘ஆரியபட்டீயம்‘என்ற நூல் உலகமே வியக்கும் வானவியல்
நூலாகப் போற்றப்படுகிறது.
வராகமிகிரர் :
இவர் ‘பஞ்ச சித்தாநதிகா, ‘பிருகத் சம்ஹிதா’ முதலான ஜோதிட, வானவியல்
நூல்களையும் எழுதியுள்ளார். மே லும் ‘லகு ஜாதகம்’, ‘பிரிக ஜாதகம்’ போன்ற ஜோதிட,
வானவியல் நூல்களையும் எழுதியுள்ளார்.இவர் தம் நூல்களில் கோள்கள்யாவும் மனித
வாழ்வோடு எவ்வாறு தொட ர்பு கொண்டுள்ளன என்பதை விளக்கிக் கூறியுள்ளார்.
இந்திய மருத்துவ வளர்ச்சி :
மௌரியர் ஆட்சிக் காலத்தில் மருத்துவப் பராமரிப்புக்கும், சுகாதாரத்திற்கும்
முன்னுரிமை அளிக்கப்பட்டது. முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள்
ஆகியோருக்காக சிறப்பு மருத்துவமனைகள் இயங்கிவந்தன. கால்நடைகளுக்கெனத்
தனியாக மருத்துவமனைகளும் இருந்தன. வாக்பட்டரின் அஷ்டாங்கசங்கிரகம்,
அஷ்டாங்கஹிருதயா என்னும் இரு மருத்துவ நூல்கள் புகழ்பெற்றவையாகும்.
‘அஷ்டா ங்கஹிருதயா’ என்ற மருத்துவநூல், நோய் தீர்க்கும்முறை, சுகாதாரம், உடலுறுப்பு
அமைப்பியல் அறுவை சிகிச்சை , தாய்மை மருத்துவம், கண் மருத்துவம் பற்றிக்
குறிப்பிடுகின்றது. சரகர் எழுதிய சரக சம்ஹிதா என்னும் நூல் உடல், உள மருத்துவத்தையும்,
சுசுருதர் எழுதிய சுசுருத சம்ஹிதா அறுவை சிகிச்சை முறையைப் பற்றிக் கூறுகின்றன
நுண்கலைகள் :
இசை, மனித மனத்திற்கு அமைதிதருவதாகும். இசையானது
காலத்திற்கேற்றாற்போலப் பரிமாணத்தைப் பெற்று வருகிறது. இயற்கையினின்றே முதல்
இசை தோன்றியது எனலாம். இதனை ஓசை என்றழைப்பர். அதன்பின்னர், இசை புதிய
வளர்ச்சியைப் பெற்றது. இந்திய இசையின் சாரமாகத் திகழ்வது சாமவேதமாகும்.
பிற்காலத்தில் சாமவேதத்தைத் தழுவி, வட இந்தியாவில் தோன்றிய இசைப்பாணி
இந்துஸ்தானி இசை (Hindustani Music) எனப்பட்டது. அதே காலக்கட்டத்தில், தென்னிந்தியாவில்
கர்நாடக இசை(karnatic Music) புகழ் பெறத் தொடங்கியது. மெளரியர்கள் ,
குப்தர்கள் போன்ற வட இந்திய வம்சா வழி மன்னர்களும் தமிழகத்தில் சங்ககாலம்முதல் பிற்காலப் பாண்டியர்கள்
வரையிலான மன்னர்க ளும், இசைக்கலையை யும் இசைக்கலை ஞர்களையும் ஆதரித்துள்ளனர்.
கி.பி.(பொ .ஆ.) பத்தாம் நூற்றறாண்டின் இறுதியில், இஸ்லாமியர்களின் இசை இந்தியாவில் மெல்ல மெல்ல பரவத்
தொடங்கியது. இஸ்லாமியத் துறவிகளான சூபிக்கள் குவாலிஸ் (Qualis Music) என்ற
இசைமுறையை உருவாக்கிப் பரப்பினரர்
Comments
Post a Comment