அறிமுகம் :
ஜாலியன் வாலாபாக் படுகொலை :
நாடு முழுவதும் நடந்த மக்கள்
போராட்டங்கள் மற்றும் மக்களிடம் காணப்ப ட்ட
மகத்தான தன்னெழுச்சி காரணமாக காலனி
அரசு ஆத்திரமடைந்தது. 1919 ஏப்ரல் 13இல்,
அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக்
பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள்
மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள்
இழைக்கப்பட்டன. சத்தியபால், சாய்புதீன் கிச்லு
ஆகியோரைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத்
தெரிவித்து அமைதியான வகையில் ஆர்ப்பாட்டம்
நடத்துவதற்காக இரண்டாயிரத்துக்கும் அதிகமான
மக்கள் போராட்டக் களத்தில் குழுமியிருந்தனர்.
பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல்
ஓ டையரும், ராணுவக் கமாண்டராக ஜெனரல்
ரெஜினால்டு டையரும் பதவி வகித்தனர். அவர்கள்
இருவரும் தங்களுடைய அதிகாரங்களைப்
பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பாடம் புகட்ட விரும்பினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த
இடத்துக்கு ஒரே ஒரு குறுகிய வாயில் மட்டுமே
இருந்தது. அங்கு சிக்கிக்கொண்ட மக்களைக்
குறிவைத்து எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுகள்
தீரும் வரை சுடுமாறு ஜெனரல் டையர்உத்தரவிட்டார்.
அரசு தகவல்களின் படி உயிரிழப்புகள் 379 என்ற
எண்ணிக்கையில் இருந்தபோதிலும் உண்மையில்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும்.
ராணுவச் சட்டம் பஞ்சாப் முழுவதும் அமல்படுத்தப்ப ட்ட
நிலையில் மக்கள் சொல்லமுடியாத அளவுக்கு
துயரங்களை சந்தித்தனர்.இந்தக் கொடுமைகளைக் கண்டு நாடு
முழுவதும் கொந்தளித்தது. பம்பாய், கல்கத்தா, டெல்லி,
லாகூர் ஆகிய இடங்களில் ரௌலட் சட்டத்துக்கு
எதிராகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்த
நிலையில் அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது
துப்பாக்கிச் சூடு நடத்தப்ப ட்டன. பல நகரங்கள் மற்றும்
மாநகரங்களில் வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.
இந்த கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து
இரவீந்திரநாத் தாகூர் உட்பட பல பிரபலங்கள்
தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களைத் துறந்தனர்.
கிலாபத், பஞ்சாப் கொடுமை ஆகிய இரண்டு
காரணங்களால் ஒத்துழையாமை இயக்கம்
தொடங்கப்பட்டது. துருக்கி சுல்தான் மற்றும்
இசுலாமிய புனிதத் தலங்கள் தொடர்பானது கிலாபத் இயக்கம். ஜாலியன் வாலாபாக்கில்
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு
படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பஞ்சாப் கொடுமை
எனப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின்
உறுதிமொழிகளுக்கு எதிராக இசுலாமிய புனிதத்
தலங்களின் கட்டுப்பாட்டை இசுலாம் அல்லாத
சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட
நிலையில் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட
கொடுமைகளுக்குக் காரணமான ரெஜினால்டு
டையர், மைக்கேல் ஓ டையர் இருவரையும்
பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் குற்றங்களில் இருந்து
விடுதலை செய்துவிட்டது. இந்து - முஸ்லிம் ஒற்றுமை குறித்து அக்கறை
கொண்ட காந்தியடிகளும் காங்கிரசும் பிரிட்டிஷ்
ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டதாக உணரப்பட்ட
முஸ்லிம் தோழர்களுக்குத் துணையாக நின்றனர்.
மௌலானா சௌகத் அலி மற்றும் முகமது அலி
என்ற சகோதரர்கள் மௌலானா அபுல் கலாம் ஆசாத்
உடன் இணைந்து கிலாபத் இயக்கத்தின் முக்கியத்
தலைவர்களாக விளங்கினர்.
ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கம் :
கிலாபத் மாநாட்டில், காந்தியடிகளின்
வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்டு 31 முதல்
ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவ செய்யப்பட்டது. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும்
அரசு நீதிமன்றங்களைப் புறக்கணிக்கும் திட்டத்தை
அலகாபாத்தில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம்
முடிவு செய்தது. 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில்
காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக்
கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின்
யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. கிலாபத் மற்றும் பஞ்சாப்
குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு
நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக்
கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள்,
அரசு அலுவலகங்கள், சட்டப்பே ரவைகள்,
அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், அரசு
வழங்கிய பட்டங்களையும் விருதுகளையும்
திரும்ப ஒப்படைப்பது ஆகியன ஒத்துழையாமை
இயக்கத்தில் சேர்க்கப்ப ட்டன. மாற்றாக,
தேசியப்பள்ளிகள், பஞ்சாயத்துகள் ஆகியன
அமைக்கப்பட்டு சுதேசிப் பொருட்கள் உற்பத்தி
செய்யப்பட்டு பயன்படுத்தப்படும். வரிகொடா இயக்கம்,
சட்டமறுப்பு இயக்கம் போன்ற பல இயக்கங்களைப்
பின்னர் இந்தப் போராட்டத்தில் இணைக்கவும் முடிவு
செய்யப்பட்டது. 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த
காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டன. மொழிசார்ந்த மாகாண
காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு
வகை செய்யும் மற்றொரு முக்கியத் தீர்மானம்
நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதனால்
பெரும் எண்ணிக்கையிலானப் பணியாளர்கள்
இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். காங்கிரஸின்
அடிப்படையை விரிவாக்கும் நடவடிக்கையாகப்
பணியாளர்கள் கிராமங்களுக்குச் சென்று 4 அணா
(25 பைசா) என்கிற குறைவான கட்டணத்தில்
கிராமத்தினரைக் காங்கிரஸில் சேர்க்கவேண்டும்.
இதனால் காங்கிரஸின் ஒட்டுமொத்த செயல்பாடுகள்
மாற்றம் பெற்றன. நாட்டின் பெயரில் ஒன்றுசேர்ந்த
மக்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஆனால் மக்கள் போராட்டத்தை எதிர்த்தப பழைமைவாதிகள் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து
விலக வழி அமைத்தது. மேல் குடிக்கானது என்ற
அடையாளத்தைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி
மெதுமெதுவேஉண்மையான தேசியஅமைப்பு என்ற
தோற்றத்தில் மக்கள் அமைப்பாக காந்தியடிகளின்
தலைமையிலான காங்கிரஸ் மாறியது
காந்தியடிகளின் தலைமைஏற்படுத்தியத் தாக்கம் :
உள்ளூர் மக்களால் ஆயிரக்கணக்கான
பள்ளிகள், நூற்றுக்கணக்கான கல்லூரிகள்
மற்றும் வித்யாபீடங்கள் நிறுவப்பட்டன. பல
முன்னணி வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலைக்
கைவிட்டனர். ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்கள் அரசு நிறுவனங்களை
விட்டு வெளியேறினர். தேசத்துரோக குற்றம்
சாட்டப்பட்ட அலி சகோதரர்கள் கைது செய்யப்பட்டு
சிறையிலடைக்கப்பட்டனர். சட்டமறுப்பு
இயக்கத்தைத் தொடங்குமாறு மக்களுக்கு
அந்தந்த பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் அழைப்பு
விடுத்தன. அரசு வழக்கம் போல் அடக்குமுறையைக்
கையாண்டது. பாரபட்சமில்லாமல் கைது
செய்யப்பட்டத் தொண்டர்கள் சிறையில்
அடைக்கப்பட்டார்கள். இந்தியாவின் பல
நகரங்களுக்கு 1921இல் வேல்ஸ் இளவரசர்
மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
இந்திய மக்களின் விசுவாச உணர்வை வேல்ஸ்
இளவரசரின் பயணம் தூண்டும் என்று எதிர்பார்த்த
காலனி ஆதிக்க அரசின் கணக்கு தவறாகப் போனது.
நாடு முழுவதும் தொழிலாளர்களும் விவசாயிகளும்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தியர்கள்
ஒத்துழையாமை இயக்கத்ைத வன்முறையற்ற
வகையில் பின்பற்றினால் ஓராண்டுக்குள்
சுயராஜ்யத்தைப் பெற்றுத்தருவதாக காந்தியடிகள்
உறுதி கூறினார். போராட்டத்தின் இந்தக் கட்டத்தில்
தென்னிந்தியா முன்னேறிச் சென்றது. ஆந்திர
விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வழங்கவேண்டிய
வரிகளை நிறுத்திவைத்தனர். சிராலா-பெராலாப்
பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களும் வரி
செலுத்த மறுத்துக் கூட்டம் கூட்டமாக நகரங்களைக்
காலி செய்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான
கிராம பட்டேல்களும் ஷான்போக்களும்
தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
சி. இராஜாஜி, எஸ். சத்தியமூர்த்தி, தந்தை
ஈ.வே.ரா. பெரியார் ஆகிய தலைவர்கள்
தலைமையில் தமிழ்நாட்டில் ஒத்துழையாமை
இயக்கம் நடத்தப்பட்டது. கேரளாவில்
ஜென்மி-க்களுக்கு எதிராக விவசாயிகள்
போராட்டங்களை நடத்தினர்.
சௌரி சௌரா சம்பவம் மற்றும் ஒத்துழையாமை
இயக்கத்தைத் திரும்பப்பெறுதல் :
நாடு விடுதலை அடைந்து சுயராஜ்யம்
கிடைத்துவிடும் என்று பொதுமக்களும்
தேசியவாதத் தொண்டர்களும் அதிக ஊக்கம்
கொண்டு போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
காடுகளில் வசித்த பழங்குடிகள் உட்பட அனைத்து
வகுப்பு மக்களையும் இது பாதித்ததோடு
அவர்களை ஈர்க்கவும் செய்தது. கலவரங்கள்
மற்றும் மோசமான வன்முறைகளும் நாட்டில்
நிகழ்ந்தன. மலபார் மற்றும் ஆந்திராவில் இரண்டு
வன்முறைக் கிளர்ச்சிகள் நடந்தன. கரையோர
ஆந்திராவின் ராம்பா பகுதியில் அல்லூரி சீதாராம
ராஜூ தலைமையில் பழங்குடியினர் கிளர்ச்சி
செய்தனர். மலபாரில் முஸ்லிம் (மாப்பிள்ளை)
விவசாயிகள் ஆயுதமேந்தி உயர்வகுப்பு
நிலப்பிரபுக்கள் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிராகக்
கிளர்ச்சியில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில்
சௌரி சௌரா என்ற கிராமத்தில் மதுக் கடைகள்
மற்றும் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப்
பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டித்து ஒரு
தன்னார்வக் குழு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
1922 பிப்ரவரி 5இல் 3,000 நபர்களுடன் நடந்த ஒரு
காங்கிரஸ் கட்சிப் பேரணி மீது போலீசார் நடத்திய
துப்பாக்கிச் சூட்டால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்
குழுவினர் காவல் நிலையத்தைக் குறிவைத்து
தாக்குதல் நடத்தியதோடு அைத எரித்ததில் 22
போலீசார் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அடுத்து
காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத்
திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
தேசியவாதத் தொண்டர்களுக்கு ஏமாற்றம்
தரும் விதமாக பர்தோலியில் இந்த முடிவை
காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொண்டது. இந்த
முடிவை இளம் தொண்டர்கள் எதிர்த்த நிலையில்
காந்தியடிகள் மீது நம்பிக்கை கொண்ட இதரத தொண்டர்கள் இது ஒரு தந்திரமான முடிவு என்று
கருதினர். கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள்
சிறைத்தண்டனை பெற்ற காந்தியடிகள் பற்றி
ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும்
கடுமையாக விமர்சனம் செய்தனர். இப்படியாக
ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்தது.
துருக்கி மக்கள் முஸ்தபா கமால் பாட்சா
தலைமையில் கிளர்ந்தெழுந்து சுல்தானிடம்
இருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்து கலிபா
என்ற நடைமுறையை ரத்து செய்துவிட்டு, மதமும்
அரசியலும் இணைந்து பயணிக்க முடியாது
என்று அறிவித்த நிலையில் கிலாபத் இயக்கம்
தேவையற்றுப் போனது.
Comments
Post a Comment