அறிமுகம் :
முகலாயரின் வீழ்ச்சியில் மராத்தியர் முக்கியப்
பங்கு வகித்தனர். 18ஆம் நூற்றாண்டின் மத்தியில்
இந்தியாவின் மையப்பகுதியில் மராத்திய
மாமன்னர் சிவாஜியின் தலைமையில் முகலாய
ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் வெற் றி
பெற்றனர். தஞ்சாவூரில் நாயக்க மன்னரின்
ஆட்சி முடிவடைந்த உடன் மராத்தியத் தளபதி
வெங்கோஜி (சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர்)
தமிழகத்தில் மராத்திய ஆட்சியை ஏற்படுத்துவதில்
வெற்றி கண்டார். தஞ்சாவூரில் 1674ஆம் ஆண்டு
தொடங்கிய மராத்தியரின் ஆட்சி 1832ஆம் ஆண்டு
இரண்டாவது சரபோஜி மன்னர் மரணம் வரை
நீடித்தது.
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள :
மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி
கொங்கணம் என்று அழைக்கப்பட்ட து.
செங்குத்தான மலைகளும், எளிதில் அணுகமுடியாத
பள்ளத்தாக்குகளும், பாதுகாப்பு அரண்களாகத்
திகழ்ந்த மலைகோட்டை களும் இராணுவப்
பாதுகாப்புக்கு உகந்தவையாக இருந்தன.
போர்ச் செயல்பாடுகளில் நீண்ட மரபைக்
கொண்ட மராத்தியர் விசுவாசம், வீரம், ஒழுக்கம்,
தந்திரம், எதிரிகளை தாக்கும் ஆற்றல் ஆகியவற்றில சிறந்து விளங்கினார்கள். முன்னதாக பாமினி
சுல்தான்களின் கீழ் செயல்பட்ட மராத்தியர், சிவாஜி
காலத்தில் எழுச்சிப் பெற்றனர். சிவாஜி மறைவுக்குப்
பிறகு அகமதுநகர், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார்,
பீரார் ஆகிய சுல்தான்களின் கீழ் செயல்பட்டனர்.
வலிமை மிகுந்த காலாட்படையும் ஆபத்தான
ஆயுதங்களையும் கொண்டிருந்த முகலாய
இராணுவத்துடன் நேரடியாக மோதுவதை
மராத்தியர் தவிர்த்தனர். கொரில்லா தாக்குதல்
முறை அவர்களின் வலிமையாகத் திகழ்ந்தது.
இரவு நேரங்களில் திடீரெ ன மின்னல் வேகத்தில்
தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நடத்துவதிலும்
திறமை கொண்டிருந்தனர். மேலும் மேலதிகாரியின்
உத்தரவுக்குக் காத்திருக்காமல் போர்ச்சூழலைக்
கருத்தில் கொண்டு வழிமுறைகளை மாற்றிச்
செயல்படுத்தும் திறனையும் அவர்கள்
வெளிப்படுத்தினார்கள்.
பக்தி இயக்கமும் அதன் தாக்கமும :
பக்தி இயக்கம் பரவியதன் மூலமாக மராத்தியரிடம் ஒற்றுமை
உணர்வு மேலோ ங்கியது. துக்காராம், ராம்தாஸ், ஏகநாதர்,
ஆகியோர் பக்தி இயக்கத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.
மராத்தி மொழியில் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் சமூகத்தில்
வாழ்ந்த மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தின. ஜுன்னார் என்ற
இடத்திற்கு அருகே ஷிவ்னர் என்ற பகுதியில் ஷாஜி
போன்ஸ்லே மற்றும் அவரது முதல் மனைவி ஜீஜாபாய்க்கு
மகனாக சிவாஜி பிறந்தார். தாய் வழியில் தேவகிரியை
ஆண்ட யாதவ மன்னர்களின்வழித்தோன்றலாகவும்
தந்தை வழியில் மேவாரின் சிசோடியாக்களின் வழித்தோன்ற லாகவும் ஷாஜி
போன்ஸ்லே விளங்கினார். அகமது நகர், அகமது
ஷாவின் அபிசீனிய அமைச்சராகவும், முன்னாள்
அடிமையாகவும் இருந்த மாலிக் அம்ப ர் (1548-
1626) என்பவரின் கீழ் ஷாஜி போன்ஸ்லே
சேவை புரிந்தார். மாலிக் அம்பர் மறைவுக்குப் பிறகு
அரசியலில் ஈடுபட்ட ஷாஜி போன்ஸ்லே அகமதுநகர்
முகலாயர்களால் இணைக்கப்பட்ட பிறகு பீஜப்பூர்
சுல்தானிடம் தன் பணியைத் தொடர்ந்தார்.
பூனாவில் இருந்த ஷாஜி போன்ஸ்லேவின்
ஜாகீர்தாரான தாதாஜி கொண்டதேவ் என்பவரின்
பராமரிப்பில் சிவாஜியும் அவரது தாயும் விடப்பட்டனர்.
(இராணுவ மற்றும் நிர்வாக சேவைகளுக்கான
அங்கீகாரமாக வழங்கப்பட்ட நிலம் ஜாகீர் ஆகும்.)
பூனாவைச் சுற்றியிருந்த மலைப்பாங்கா ன
பகுதிகளில் அனுபவமும் அறிவும் வலிமையும் கொண்ட மாவலியைச் சேர்ந்த விவசாயிகள்
மற்றும் தலைவர்களின் நன்மதிப்பை சிவாஜி
பெற்றார். மதத் துறவிகளாக விளங்கிய ராம்தா ஸ்,
துக்காராம் ஆகியோரும் சிவாஜியிடம் தாக்கத்தை
ஏற்படுத்தினார்கள், துறவி ராம்தாஸ் அவர்களை
சிவாஜி தனது குருவாக ஏற்று மரியாதை
செலுத்தினார்.
இராணுவ வெற்றிகள :
சிவாஜி தமது 19ஆவது வயது முதல்
இராணுவத்தில் ஈடுபாடு காட்டத் தொட ங்கினார்.
1646இல் தோர்னா கோட்டையை பீஜப்பூர்
சுல்தானிடமிருந்து கைப்பற் றினார். தோர்னாவில்
இருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த
ராய்கர் கோட்டையையும் கைப்பற்றி மீண்டும்
முழுமையாக அதனைக் கட்டினார். 1647இல்
தாதாஜி கொண்டதேவ் மறைந்த பிறகு தமது
தந்தையின் (ஜாகீர்) நிலத்தை நிர்வகிக்கும்
பொறுப்பை சிவாஜி ஏற்றார். அதனைத் தொட ர்ந்து
பாராமதி, இந்தபுரம், புரந்தர், கொன்டானா
ஆகிய கோட்டைகளும் அடுத்தடுத்து அவரது
நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அந்தப்
பகுதியிலிருந்த கல்யா ண் என்ற முக்கிய
நகரையும் மராத்தியர் முன்பே கைப்பற் றி
இருந்தார்கள்.பீஜப்பூர் சுல்தான், சிவாஜியின் தந்தையை
சிறுமைப்படுத்திச் சிறையில் அடைத்தார்.
தக்காணத்தின் முகலாய அரசப்பிரதிநிதியாக
இருந்த இளவரசர் மூராத் உடன் பேச்சுவார்த்தை
நடத்திய அவர் முகலாய சேவையில் சேர விருப்பம்
தெரிவித்தார். 1649ஆம் ஆண்டு சில நிபந்தனைகளின்
அடிப்படையில் பீஜப்பூர் சுல்தான் ஷாஜியை
விடுதலை செய்தா ர். 1649 முதல் 1655 வரை
இராணுவச் செயல்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து
சிவாஜி விலகியிருந்தார். இந்தக் காலகட்டத்தில்
அவர் தனது அதிகாரத்தையும் நிர்வாகத்தையும்
ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தினார்.
1656ஆண்டு முதல் சிவாஜி, தனது
இராணுவச் செயல்பாடுகளை மீண்டும்
தொடங்கினார். சதாரா மாவட்டத்தில் ஜாவ்லி என்ற
இடத்தைக் கைப்பற்றினார். இந்தக் குறிப்பிடத்தக்க
வெற்றியால் அவர் மராத்தியரின் மத்தியில்
பிரபலம் அடைந்தார். இளைஞர்கள் அவரது
இராணுவத்தில் இணைந்தனர். ஜாவ்லி என்ற
இடத்திலிருந்து மேற்கே இரண்டு மைல் தொலை வில்
பிரதாப்கர் என்ற புதிய கோட்டை கட்டப்பட்டத 1676ஆம் ஆண்டு தெற் குப் பகுதியில் சிவாஜி
தனது வெற்றியைத் துவக்கினார். கோல்கொண்டா
சுல்தானுடன் இரகசிய ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டார். இதற்குக் கைமாறாக சிவாஜி
சில பகுதிகளைத் தருவதாக உறுதியளித்தார்.
செஞ்சி, வேலூர் ஆகியவற்றை க் கைப்பற்றிய அவர்,
அடுத்திருந்த தனது தந்தை ஷாஜிக்குச் சொந்தமான
பகுதிகளையும் சேர்த்துக்கொண்டார். சகோதர
உறவிலான வெங ்கோஜியை அல்லது எக்கோஜி,
தஞ்சாவூரை நிர்வகிக்குமாறு அவர் பணித்தா ர்.
மதுரை நாயக்கர்களுக்குப் பெரும் தொகையை க்
கப்பமாக தரவும் உறுதியளித்தார். கர்நாடக
முற்றுகை முயற்சிகள் சிவாஜிக்கு பெருமையையும்
புகழையும் கொடுத்தன. புதிதாகக் கைப்பற் றிய
செஞ்சி அவருக்குப் பிறகு பொறுப்பேற்றவர்களுக்கு
இரண்டாம் கட்டப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தத
சிவாஜியின் கடைசி நாட்கள் :
சிவாஜியின் கடைசி நாட்கள் மகிழ்ச்சியானவையாக இல்லை. அவரது மூத்த
மகன் சாம்பா ஜி அவரைக் கைவிட்டுவிட்டு முகலாய
முகாமில் இணைந்தா ர். சாம்பா ஜி திரும்பியபோது
ஒளரங்கசீப்பா ல் சிறைபிடிக்கப்ப ட்டு பன்ஹலா
கோட்டைக்கு அனுப்பப்பட்டார். அடுத்தடுத்த போர்கள்
சிவாஜியின் உடல்நலத்தைப் பாதித்தன. அவர் தனது
53 ஆவது வயதில் 1680ஆம் ஆண்டு காலமானார்.
அவரது மறைவின்போது மேற்குத் தொட ர்ச்சி
மலைகள், கல்யாண் மற்றும் கோவா இடையேயான
கொங்கணப் பகுதி ஆகியன சிவாஜி அரசின் கீழ்
இருந்தன. தெற்கில் பெல்காம் தொடங்கி துங்கபத்திரை
நதிக்கரை வரைமேற்கு கர்நாடகாவைஉள்ளடக்கிய
பகுதிகள் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.
அவரது மரணத்தின்போது வேலூர், செஞ்சி மற்றும்
இதர சில மாவட்டங்கள் பற்றிய விஷயத்தில் தீர்வு
காணப்படவில்லை. சிவாஜி மறைந்து ஓராண்டுக்குப் பிறகு அவரது
மூத்த மகன் சாம்பா ஜி மராத்திய இராணுவத்திற்கு
தலைமை ஏற்று முகலாயப் பகுதிக்குள் நுழைந்து
பீராரில் பகதூர்பூரைக் கைப்பற் றி அங்கிருந்த
சொத்துக்களைக் கைப்பற் றினார். இதனால்
ஆத்திரமடைந்த ஔரங்கசீப் மேவாரைச் சேர்ந்த
ரஜபுத்திரர்களுடன் சமரசம் மேற்கொண்டு தக்காணப்
பகுதிக்குள் படைகளை வழிநடத்திச் சென்றார்.
1686இல் பீஜப்பூரும் 1687இல் கோல்கொண்டாவும்
வெல்லப்பட்டன. தன்னுடன் மல்லுக்கட்டும் தனது
மகன் இளவரசர் இரண்டாம் அக்பருக்குப் பாதுகாப்பு
கொடுத்ததற்காக சாம்பாஜிக்கு தண்டனைக கொடுப்பதே ஔரங்கசீப்பின் அடுத்த இலக்காக
இருந்தது. 1689இல் முகலாயப் படை சாம்பாஜியைச்
சிறைபிடித்துக் கொன்றது.
சாம்பாஜியின் மறை வு மராத்தியரை
முடக்கி விடவில்லை. அவரது இளவல் ராஜாராம்
செஞ்சிக்கோட்டை யிலிருந்து சண்டையை த்
தொடங்கினார். இந்த மோதல் பல ஆண்டுகள்
நீடித்தது. ராஜாராம் 1700இல் மரணமடைந்த
பிறகு அவரது மனைவி தாராபாய் தலைமையில்
போராட்டம் தொடர்ந ்தது. கைக்குழந்தை சார்பாக
செயல்பட்ட தாராபாய் 50 ஆயிரம் வீரர்கள்
அடங்கிய குதிரைப்படை மற்றும் காலாட்படையை
ஹைதராபாத் அரசுக்கு எதிராகப் போர்தொடுக்க
பணித்தார். அதன் விளைவாகத் தலைநகர்
சூறையாடப்பட்ட து. இதன் காரணமாக
அருகிலிருந்த மசூலிப்பட்டினம் துறைமுகத்தில்
வர்த்தகம் பல ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டது.
1707இல் ஔரங்கசீப் மறைந்தபோது மராத்தியர்
பல கோட்டை, கொத்தளங்களை தங்களுடைய
கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.
ஔரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு
சாம்பாஜியின் மகன் சாஹூ விடுதலையாகி
மராத்தியரின் அரியணையை அலங்கரித்தார்.
தாராபாய் இதை எதிர்த்தார். அதன் பின் உள்நாட்டுக்
கலகம் வெடித்தது. அதில் சாஹூ வெற் றி பெற்று
1708இல் அரியணையில் அமர்ந்தார். அரியணை
ஏறிய பிறகு, பாலாஜி விஸ்வநாத் அவருக்கு
ஆதரவாக இருந்தார். அதற்கு நன்றிக்கடனாக
பாலாஜி விஸ்வநாத்தைப் பேஷ்வாவாக 1713இல்
நியமித்தார். பின்னர் சாஹூ சதாராவுக்கு
ஓய்வெடுக்கச் சென்றார். பூனாவில் இருந்து பேஷ்வா
ஆட்சி செய்யத் தொடங்கினார். கோல்ஹா பூ ரை த்
தலைநகராகக் கொண்டு தாராபாய் ஒரு மாற்று
அரசாங்கத்தை நடத்தினார். ராஜாராமின் இரண்டாவது
மனைவி ராஜாபாய், அவரது மகன் இரண்டாம் சாம்பாஜி,
தாராபாய் மற்றும் அவரது மகன் ஆகியோரை 1714ஆம்
ஆண்டு சிறைப்பிடித்தனர். இரண்டாம் சாம்பாஜி
கோல்ஹாபூரில் அரியணை ஏறினார். சாஹூவின் அதிகாரத்தை அவர்
ஏற்கவேண்டியிருந்தது. சாஹூ 1749இல்
மறைந்தபிறகு ராமராஜா அரியணை ஏறினார்.
அவர் பேஷ்வாக்களுடன் ஒப்பந்தத்தை எட்டியதால்
தலைமைப் பொறுப்பை அடைந்தா ர். தாராபாய்
இதனால் ஏமாற்றம் அடைந்தார். 1761இல் தாராபாய 1777இல் ராமராஜா ஆகியோர் மரணமடைந்தனர்.
ராமராஜாவின் தத்துப் புதல்வரான இரண்டாவது
சாஹூ 1808இல் மரணமடையும் வரை பெயருக்கு
மன்னராக ஆட்சியில் இருந்தா ர். அவரது மகன்
பிரதாப் சிங் அடுத்து அரியணை ஏறினார். பிரிட்டிஷ்
அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம்
சாட்டி, 1839ஆம் ஆண்டு அவரை பிரிட்டிஷ் அரசு
ஆட்சியில் இருந்து நீக்கியது. பிரதாப் சிங் ஒரு
சிறைக்கைதியாக 1847இல் மரணமடைந்தார்.
அவரது இளவல் ஷாஜி அப்பா சாஹிப், இரண்டாம்
ஷாஜி 1839ஆம் ஆண்டு அரசராக பிரிட்டீஷ்
அரசால் பதவியில் அமர்த்தப்பட்டார். தனக்குப் பின்
ஆள்வதற்கு ஒருவருமற்ற நிலையில் இரண்டாம்
ஷாஜி 1848இல் மரணமடைந்தார 25 குதிரைப் படை வீரர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு
இணையான தகுதியில் ஹவில்தார் தலைமையின்
கீழ் செயல்பட்டனர். ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து
ஹவில்தார் செயல்பட்டனர். பத்து ஜமால்தார்க ளின்
தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார். சாரிநௌபத்
குதிரைப்படையின் தலைமைத்தளபதி ஆவார்.
ஒவ்வொரு குதிரைப்பட ையும் இரண்டாகப்
பிரிக்கப்பட்டது. அரசு மூலமாகக் குதிரைகள்
வழங்கப்பட்ட படைவீரர்கள் பர்கிர்கள் என்றும்,
தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து
கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள்
என்றும் அழைக்கப்பட்டனர். இதுதவிர நீர் கொண்டு
செல்லும் குதிரைப்படைவீரர்களும் குதிரைகளுக்கு
லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.சிவாஜி நிலையான இராணுவத்தைக்
கொண்டிருந்தார். ஜாகீர்களை வழங்குவதையும்
மரபுவழியாகச் செய்யப்படும் நியமனங்களையும்
அவர் ஊக்கப்படுத்தவில்லை. படைவீரர்களுக்கு
வீடு வழங்கப்பட்டது. அவர்களுக்கு முறைப்படி
ஊதியமும் வழங்கப்பட்டது. காலாட்படை,
குதிரைப்படை, யானைப்பட ை, ஆயுதப்படை என
இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
கொரில்லாபோர்முறையில் வீரர்கள் சிறந்து
விளங்கியபோதிலும் பாரம்பரியப் போர்முறையிலும்
அவர்கள் பயிற்சி பெற்றனர்.
காலாட்படை ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள்
எனப் பிரிக்கப்பட்டது. ஒன்பது வீரர்களைக்
கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் (கார்ப்பரல்)
தலைமை வகித்தார். ஒவ்வொரு படைப்பிரிவிலும நீதி நிர்வாகம் மரபுவழிப்பட்டதாக இருந்தது.
நிரந்தரமான நீதிமன்றங்களோ, நீதிவழிமுறைகளோ
இல்லை, விசாரணை முறை அனை வருக்கும்
பொதுவாக இருந்தது. கிராமங்க ளில் பஞ்சாயத்து
நடைமுறை இருந்தது. கிரிமினல் வழக்குகளை
பட்டேல்கள் விசாரித்தனர். சிவில், கிரிமினல்
வழக்குகளுக்கான மேல்முறையீடுகளைத்
தலைமை நீதிபதி நியாயதிஷ், ஸ்மிருதிகளின்
ஆலோசனையோடு விசாரித்தா ர். ‘ஹாஜிர்மஜ்லிம்’
இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருந்தத
Comments
Post a Comment