அறிமுகம் :
நிலவியல் கண்டுபிடிப்புகள், மறுமலர்ச்சி,
சமய மறுமலர்ச்சி, “முடியரசர்களின் காலம்”
ஆகியவற்றின் காரணமாக, பதினெட்டாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில், உலகம்
முழுவதிலும், அரசியல், சமய, சமூக, பொருளாதார
நிலைகள் மாற்றமடையத் தொடங்கின.
பதினெட்டாம் நூற்றாண்டு முடிவடைகின்ற
தருவாயில் இரு புரட்சிகள் நடைபெற்றன. அவை
அமெரிக்க புரட்சி (1775-83), பிரெஞ்சுப் புரட்சி
(1789-95) ஆகியனவாகும். இப்புரட்சிகள்
முடியாட்சிமுறை சார்ந்த அரசாங்கங்களுக்கு
பெரும் வீழ்ச்சியைக் கொடுத்ததோடு, அதற்குப்
பின்னரான மனிதகுல வரலாற்றின்மீது
நிலையான தாக்கத்தினையும் ஏற்படுத்தின.
இப்புரட்சிகள் மக்களின் வாழ்க்கையில் பல
மாற்றங்களை ஏற்படுத்தியது. அத்துடன்
வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட
பொருளாதாரமானது ஆலையை அடிப்படையாகக்
கொண்ட பொருளாதாரமாக மாற்றம்பெறும் புதிய
காலகட்டத்தை அடைந்தது. மேற்சொல்லப்பட்ட,
உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைப்
புரிந்து கொள்ள இப்பாடம் நமக்கு உதவும்.
அமெரிக்க விடுதலைப் போர்:
கண்டுபிடிப்புகளின் காலம் என்றறியப்படும்
காலப்பகுதியில், துணிச்சல்மிக்க கடலோடிகள் புதிய
உலகம் என்று சொல்லப்பட்ட நிலப்ப குதிகளில் ஆய்வு
மேற்கொண்டதோடு, அரசர்களின் உதவியுடன்
புதிய வணிகப்பாதைகளையும் கண்டுபிடித்தனர்.
இது மேம்பட்ட தொடர்புகளையும் லாபத்தையும்
உறுதிப்படுத்தியது. புதிய இடங்களில் ஆய்வுகள்
மேற்கொள்ளுதல், வணிக மையங்களை
உருவாக்குதல், பின்னர் காலனிகளை ஏற்படுத்துதல்
ஆகியவற்றில் தொடக்கத்தில் ஸ்பெ யின், போர்த்துகல்
ஆகிய நாடுகள் முன்னணி வகித்தாலும்
இங்கிலாந்துதான் உலகம் முழுவதிலும் காலனிகளை
ஏற்படுத்தி அவற்றை நீண்டகாலம் வெற்றிகரமாகவும்
கட்டுப்படுத்தியது. வடஅமெரிக்கா வில்
ஆங்கிலேயர்களே முதன் முதலாக குடியேறினார்கள்
என்றாலும், காலப்போக்கில் ஜெர்மானியர்,
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தோர், பிரெஞ்சுக்காரர்கள்,
இத்தாலியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோரும்
அமெரிக்கா சென்று குடியமர்ந்தனர். மிக விரைவாகப்
பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த
ஒரு காலகட்டத்தில், ஐரோப்பிய மக்கட்தொகைப்
பெருக்கத்தை புதியஉலகில் உருவாக்கப்பட்ட
காலனிகள், தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டன.
அமெரிக்க விடுதலைப் போர்: காரணங்கள் :
காலனிய ஆட்சி: நாவாய் சட்டங்கள் :
காலனிகளைத் தனது நாட்டின் பகுதிகளாகவே கருதிய
இங்கிலாந்து, காலனி மக்களின்நலன்களைப் புறக்கணித்துத்
தனது நலன்களுக்காகவே ஆட்சி செய்தது. நாவாய்
சட்டங்கள் எனும் சட்டங்களைஇயற்றியதன் மூலமாக
இங்கிலாந்து தனது காலனி நாடுகளின் அனைத்துப் பொருட்களும் ஆங்கிலக்
கப்பல்களின் மூலமாகவே ஏற்றுமதி செய்யப்பட
வேண்டுமென கட்டாயப்படுத்தியது. காலனி நாடுகள்
ஜவுளி போன்ற ஒரு சில பொருட்களை உற்பத்தி
செய்வதைக் கட்டுப்ப டுத்தியும் தடுத்தும் சட்டங்கள்
இயற்றப்பட்டன
ஏழாண்டுப் போர் (1756-63) :
ஏழாண்டுப் போரில் இங்கிலாந்து தலையிட்டது
இங்கிலாந்திற்கு எதிரான காலனிநாடுகளின்
கிளர்ச்சிகளின் நேரடி விளைவாகும். போரின்போது
காலனி நாடுகளின் சட்டமன்றங்கள் தாய்நாடு
எதிர்பார்த்த மாதிரியான ஒத்துழைப்பை
நல்கவில்லை. குறைந்த அளவிலான பொருட்களின்
விநியோகத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு
வாக்களித்த அவைகள் அமெரிக்கர்கள்
பயன்படுத்தும் சில பண்டங்களின் மீது இங்கிலாந்து
வரிவிதிக்க மேற்கொண்ட முயற்சிகளை
எதிர்த்தன. இதனிடையே கனடாவை இங்கிலாந்து
கைப்பற்றியதும் பிரெஞ்சுக்காரர்கள் குறித்த
அச்சம் நீங்கியதும் இங்கிலாந்தைப் பாதுகாப்பாக
இருப்பதாக உணர வைத்தது.மாறாக இந்நிகழ்வுகள்
காலனி நாடுகளை அச்சங்கொள்ளச் செய்ததோடு,
எப்போதுமில்லாத வகையில் இங்கிலாந்தின்
கட்டளைகளுக்கு அவை அடிபணிய மறுத்தன.
காலனி நாடுகளின் மீதான வரிவிதிப்பு :
ஏனைய ஐரோப்பிய நாடுகளோடு
மேற்கொள்ளப்பட்ட நிரந்தர போர்களால் ஏற்பட்ட
பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக
இங்கிலாந்து தனது காலனி நாடுகளின் மீது
புதிய வரிகளைச் சுமத்தியது. முதல் வரியானது
1764இல் சர்க்கரையின் மீதும் சர்க்கரையின்
துணைப் பொருளான சர்க்கரைப்பா கின் மீதும்
விதிக்கப்பட்டது. வடஅமெரிக்கா விலிருந்த
அனைத்து காலனிகளும் இவ்வரியைச் செலுத்த
கட்டாயப்படுத்தப்பட்டன. குடியேற்ற நாடுகள்
“பிரதிநிதித்துவம் இல்லையேல் வரியுமில்லை”
எனும் முழக்கத்தை எழுப்பி இதை எதிர்த்தன.
முத்திரைச் சட்டம் :
1765இல் முத்திரைகள் மீதான புதிய
வரிச்சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் மூலம் குடியேற்ற நாடுகளின் மக்கள் சட்டத்
தொடர்புடைய அனைத்து ஆவணங்களிலும்
வருவாய் முத்திரைகளை ஒட்டவும்
முத்திரைகளை பயன்படுத்த வரிசெலுத்தவும்
கட்டாயப்படுத்தப்பட்டனர். குடியேற்ற நாடுகளின்
மக்கள் அவற்றை வாங்குவதற்கு மறுக்கவே
ஆங்கில வணிகர்கள் குடியேற்றநாட்டு அரசுகளை
அச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வற்புறுத்தின
டவுன்ஷெண்ட் சட்டம் :
1766இல் முத்திரைச் சட்டம் ஒழிக்கப்பட்டாலும்
அடுத்த ஆண்டிலேயே ஒரு சட்டம் அறிமுகமானது.
இதன்படி இங்கிலாந்திலிருந்து இறக்குமதி
செய்யப்படும் சில பண்டங்களின் மீது
வரிகள் விதிக்கப்பட்டது. இங்கிலாந்தின்
நிதியமைச்சரான டவுன்ஷெண்ட் இச்சட்டத்தை
நடைமுறைப்படுத்தியதால் அவர் பெயரிலேயே
இச்சட்டம் டவுன்ஷெண்ட் சட்டமென அறியப்படலாயிற்று
பாஸ்டன் படுகொலை :
1770இல் இங்கிலாந்தின் புதிய பிரதமரான
நார்த் பிரபு தேயிலையின் மீதான வரியைத்
தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை
நீக்கினார். இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்கு
குடியேற்ற நாடுகளின் மீது, நேரடியாகவோ அல்லது
மறைமுகமாகவோ வரிவிதிக்கும் உரிமை உண்டு
என்பதை உறுதிப்படுத்தவே தேயிலையின்
மீதான வரி நீக்கப்படாமல் தொடர்ந்தது.
பாஸ்டன் நகர வீதிகளில் ஆங்கிலப் படைகள்
அணிவகுத்துச் சென்றபோது அமெரிக்கர்கள்
ஆங்கிலேயரை விமர்சனம் செய்தனர். சினம்
கொண்ட ஆங்கிலப்படைகள் அமெரிக்க மக்களுக்கு
எதிராகச் துப்பாக்கிச்சூடு நடத்தின. இந்த பாஸ்டன்
படுகொலை ஆங்கில அரசின் ஏகாதிபத்திய
மற்றும் வலுச்சண்டை செய்யும் இயல்புகளை
வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
பாஸ்டன் தேநீர் விருந்து (1773):
பாஸ்டன் படுகொலையைத் தொடர்ந்து
பூர்வகுடி அமெரிக்கர்களைப் போல வேடம் தரித்த
100 கிளர்ச்சியாளர்கள் பாஸ்டன் துறைமுகத்தில்
தேயிலையைக் கொண்டு வந்திருந்த மூன்று
கப்பல்களில் ஏறி 342 பெட்டிகளைக் கடலுக்குள் வீசி
எறிந்தனர். இந்நிகழ்வு பாஸ்டன் தேநீர் விருந்து என
அழைக்கப்பட்டது.இங்கிலாந்துப் பாராளுமன்றம் கடுமையான
எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கேஜ்
எனும் தளபதி மாசாசூசெட்ஸின் ஆளுநராகப் பணியமர்த்தப்பட்டார். காலனிகளை அடக்கி
ஒடுக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டு படைகளும்
அனுப்பி வைக்கப்பட்டன
பொறுத்துக்கொள்ள முடியாத சட்டங்கள் (1774) :
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வால் சினம்
கொண்ட இங்கிலாந்துப் பாராளுமன்றம் பாஸ்டன்
துறைமுக மசோதாவை நிறைவேற்றியது.
அதன்படி கடலில் வீசப்பட்ட தேயிலைக்கான
ஈட்டுத்தொகை காலனி மக்களால் வழங்கப்படும்
வரை பாஸ்டன் துறைமுகம் மூடப்படுமென
அறிவிக்கப்பட்டது. இரண்டாவதாக மாசாசூசெட்ஸ்
அரசுச் சட்டத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றம்
நிறைவேற்றியது. அதன்படி மாசாசூசெட்ஸின்
தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கலைக்கப்படவும்,
ராணுவ ஆளுநர் கேஜ் என்பவரின் அதிகாரம்
அதிகரிக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது.
மூன்றாவதாக நீதி நிர்வாகச் சட்டம் இயற்றப்பட்டு
கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள் எனக்
குற்றம் சாட்டப்பட்ட ஆங்கில அதிகாரிகளை வேறு
காலனிகளிலோ அல்லது இங்கிலாந்திலோ வைத்து
விசாரிக்க அனுமதி வழங்கியது. நான்காவதாக
இயற்றப்பட்ட பொறுத்துக்கொள்ள முடியாத சட்டம்
ஏற்கனவே நடைமுறையில் இருந்து விலக்கிக்
கொள்ளப்பட்ட படைவீரர்கள் தங்குமிடச் சட்டம்
என்பதன் மறுபதிப்பாகும். இச்சட்டம் காலியாகவுள்ள
கட்டடங்களில் ஆங்கிலப்படைகள் தங்கிக்கொள்ள
அனுமதி வழங்கியது. அடக்குமுறைச் சட்டங்கள்
என்றும் அறியப்பட்ட இப்பொறுக்க முடியாத
சட்டங்கள் (1774) காலனிகளிடையே பெரும்
வன்முறை அலைகளை ஏற்படுத்தியது
கியூபெக் சட்டம் :
1774இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தால்
இயற்றப்பட்ட கியூபெக் சட்டத்தின்படி, ஓஹியோ
மற்றும் மிசிசிபி ஆகிய இரு நதிகளுக்கு இடைப்பட்ட
நிலப்பகுதி கியூபெக்கிற்கு வழங்கப்பட்டது. இதனால்
நியூயார்க், பென்சில்வேனியா, வெர்ஜினியா
ஆகிய அரசுகள் கோபம் கொ ண்டன. ஏனெனில்
இதே நிலப்பகுதி இக்காலனியரசுகளுக்கு அரச
பட்டயத்தின் மூலம் முன்னரே வழங்கப்பட்ட
பகுதிகளாகும். மேலும் இப்புதிய பகுதியில் பிரெஞ்சுக்
குடிமைச் சட்டங்களும், ரோமன் கத்தோலிக்க
மதமும் செயல்பட இங்கிலாந்து அனுமதித்ததன்
மூலம் பிராட்டஸ்டன்ட் காலனிகளையும் கோபம்
கொள்ளச் செய்தது.774இல் இயற்றப்பட்ட பொறுத்துக்கொள்ள
முடியாத சட்டங்களின் விளைவாக குடியேற்ற
நாடுகள், பிலடெல்பியாவில் முதன்முதலில் பொது
மாநாட்டைக் கூட்டின. ஜார்ஜியாநீங்கலா கமாநாட்டில்
கலந்துகொண்ட ஏனைய குடியேற்றங்களின்
பிரதிநிதிகள் பொறுத்துக்கொள்ள முடியாத சட்டங்கள்
நீக்கப்படவேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அதுவரையிலும் ஆங்கிலேயப் பொருட்களைப்
புறக்கணிப்பது என்றும் காங்கிரஸ் (மாநாடு) முடிவு
செய்தது. அவர்கள் இங்கிலாந்து அரசர் மூன்றாம்
ஜார்ஜுக்கு கோரிக்கை மனுவொன்றை ஒரு
ஆலிவ் கிளையோடு (அமைதி நடவடிக்கைகள்)
அனுப்பி வைத்தனர். இதுவே ஆலிவ் கிளை
விண்ணப்பமென அழைக்கப்பட்டது. ஆனால் அரசர்
அமைதியை ஏற்படுத்த மறுத்துவிட்டார்
குடியேற்ற நாடுகளுடன் ஐரோப்பிய சக்திகளின்
ஒருமைப்பாடு :
அமெரிக்க சுதந்திரப்போரின் போது
இங்கிலாந்துடன் நட்புறவு கொண்டிராத ஐரோப்பிய
நாடுகள் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை
ஆதரிப்பதென முடிவு செய்தன. பிரஷ்யா,
ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட வட ஐரோப்பிய
நாடுகள் இங்கிலாந்திற்கு எதிராக ஆயுதமேந்திய
நடுநிலைமையை உருவாக்கின. ஒருபுறம் தனது
எதிரி நாடுகளின் பகைமையை யும் மறுபுறத்தில்
நடுநிலை நாடுகளின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள
நேர்ந்ததால் இங்கிலாந்து பெருங்குழப்பத்தில்
ஆழ்ந்தது. பிரெஞ்சுக்காரர்களும் அவர்களைத் தொடர்ந்து
ஸ்பானியரும் டச்சுக்காரர்களும் இவ்விடுதலைப்
போரில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு
உதவினர். கனடாவை இழந்ததற்குப்
பழிவாங்குவதாகவே பிரான்ஸ் அமெரிக்கர்களுக்கு
உதவியது. குடியேற்ற நாடுகளுக்கு உதவி
செய்வதற்காக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து
சென்ற பிரான்ஸ்நாட்டின் தன்னார்வத் தொண்டர்கள்
தனிமனித சுதந்திரம் குறித்த கருத்துக்களோடு நாடு
திரும்பினர். அக்கருத்துக்கள் அவர்களை போர்பன்
மன்னர்களின் கட்டுப்பா டுகளைச் சகித்துக்கொள்ள
முடியாதவர்களாக மாற்றின.
பிரெஞ்சுப் புரட்சி :
பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா
பல்வேறு வம்சாவளிகளைச் சேர்ந்த
முடியரசர்களால் ஆளப்பட்டது. அவ்வரசர்கள்
முழுமையான அதிகாரம் செலுத்தினர். அவர்கள்
நிலப்பிரபுக்கள், சமய குருமார்கள் ஆகியோருடன்
பாரம்பரியமான உரிமைகளை அனுபவித்தனர்.
பிரான்சில் சாதாரண மக்கள் வரி செலுத்துவதைப்
போல நிலப்பிரபுக்களும் மதகுருமார்களும் வரி
செலுத்தவில்லை. இச்சூழலில்தான் பிரெஞ்சுப் புரட்சி
நடைபெற்றது. அப்புரட்சி சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு ஆதரவளித்தது.
நிதி நிர்வாகச் சீர்கேடு :
அண்டை நாடான ஆங்கிலப் பேரரசுடன்
பிரான்ஸ் தொடர்ந்து போர் மேற்கொண்டதால்
கருவூலத்திற்குப் பெருஞ்செலவை ஏற்படுத்தியது.
இங்கிலாந்துடனும் பிரஷ்யாவுடனும்
மேற்கொள்ளப்பட்ட ஏழாண்டுப் போரில் பிரான்ஸ்
பெருந்தொகையைச் செலவழித்தது. அதைக்
காட்டிலும் அதிகமான தொகையை அமெரிக்கா
இங்கிலாந்துடனான போரில் செலவு செய்தது.
பிரான்ஸ் தனது சக்திக்கு மீறிய மிகப்பெரும்
உதவிகளை அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்குச்
செய்தது. வட்டிக்குக் கடன் கொடுப்போரிடமிருந்து
அரசு பெற்ற கடன்தொகை அதிகமானதால், பெற்ற
கடன்களுக்கு அரசு அதிகமாக வட்டி செலுத்த
வேண்டியதாயிற்று. கடன்களை அடைப்பதற்காக
அரசு சாதாரண மக்களின் மீது அதிக வரிகளைச்
சுமத்தியது. வரி செலுத்துவதிலிருந்து தங்களுக்கு
அளிக்கப்பட்டிருந்த வரிவிலக்கை, பிரபுக்களும்
மதகுருமார்களும் தாங்களாகவே முன்வந்து
விட்டுக் கொடுத்து அரசைக் காக்கத் தயங்கினர்.
அரச சபையின் ஊதாரித்தனமும், பதினாறா ம் லூயி
மன்னரின் திறமையின்மையும் நிலைமைகளை
மேலும் சிக்கலாக்கின
அறிவார்ந்த மக்களின் பங்கு :
1789 புரட்சிக்கு மிக முன்னதாகவே
கருத்துக் களத்தில் புரட்சி நடைபெற்று விட்டது.
அறிவொளிச் சிந்தனைகளால் எழுச்சியூட்டப்பட்டிருந்த
அறிவார்ந்த மக்கள் (பிரெஞ்சு மொழியில் philosophes
என்றழைக்கப்பட்டனர்) அனைத்து
அறிவுத்துறைகளையும் காரணகாரியங்களோடு
பார்க்கத் துவங்கினர். பிரெஞ்சுப் புரட்சி
வெடிப்பதற்காக சமூகத்தை தயார் செய்ததில்
அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். வால்டேர்,
ரூசோ ஆகியோரின் எழுத்துக்கள் புரட்சிக்கு ஒரு
தூண்டுகோலாக அமைந்தன. 'சட்டங்களின்
சாரம்' (The Spirit of Laws) எனும் தனது நூலில்
மாண்டெஸ்கியூ (1689-1755) அதிகாரங்கள்
அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை
எதிர்த்தார். அதிகாரங்கள் சட்டமியற்றுதல்,
சட்டங்களை செயல்படுத்துதல், நீதித்துறை என
பிரிக்கப்பட வேண்டுமெனக் கூறினார். வால்டேர்
(1694-1778) “பதினான்காம் லூயியின் காலம்”
(The Age of Louis XIV) என்ற தனது நூலில்
பிரெஞ்சுக்காரர்களின் மதம்சார்ந்த மூட
நம்பிக்கைகளை எதிர்த்ததோடு முடியாட்சி
மன்னர்களின் கீழ் நடைபெற்ற பிரெஞ்சு
நிர்வாகத்தையும் விமர்சித்தார்.ரூஸோ (1712-
1778) தான் எழுதிய 'சமூக ஒப்பந்தம்' (Social
Contract) எனும் நூலில், ஆள்வோர்க்கும்
ஆளப்படுவோருக்குமான உறவு ஓர் ஒப்பந்தத்தால்
கட்டுப்படுத்தப்பட வேண்டுமென வாதிட்டார்.
ஆள்பவர் நியாயமான முறையில் ஆட்சி செய்தால்
அவர் மக்களால் மதிக்கப்படுவார் என்றும்
ஆள்பவர் ஒப்பந்தத்திற்கு மாறாக நேர்மையற்ற
முறையில் ஆட்சிபுரிந்தால் அவர் தண்டிக்கப்பட
வேண்டும் என்றும் கூறினார். ஆங்கிலத் தத்துவ
ஞானியான ஜான் லாக் “அரசாங்கத்தின் இரு
ஆய்வுக் கட்டுரைகள்” (Two Treatises of
Government) எனும் நூலில் தெய்வீக உரிமைக்
கோட்பாட்டையும் வரம்பற்ற முடியாட்சியையும்
எதிர்த்தார். தீதரோ என்பவரும் மற்றவர்களும்
வெளியிட்ட கலைக்களஞ்சியத்தில்
(Encyclopedia) இது போன்ற கருத்துக்களும்
இடம் பெற்றிருந்தன
Comments
Post a Comment