முன்னுரை :
மேலாண்மை என்பது நிறுவனத்தின் நோக்கங்களை அடைவதற்காக ஒவ்வொரு
நபரும் இணைந்து குழுவாக செயல்படக்கூடிய சூழலை உருவாக்குதல் மற்றும் அதனை
தக்க வை த்துக் கொள்வ துமாகும் . நிர்வாகம் ஊழியர்களை ஊக்குவிப்பதன்
மூலம் தன் பணியை திறமையாக செயலாற்றுகிறது. இதற்கு நிறுவனம்
தன் ஊழியர்களை ஊக்குவிக்கும் காரணிகளை அறிந்துகொள்ளவேண்டும்.
திறமையான ஊக்கத்தின் வெற்றி என்பது ஒப்புக்கொள்ளப்படுகின்ற ஆணை
மட்டுமன்றி திறமையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை பார்க்கும்
உறுதிப்பாடுமாகும். எனவே நிறுவனம் ஊழியர்கள் நிறுவனத்திற்காக உழைக்க
ஊக்கிகளை வழங்கவேண்டும்.
ஊக்கப்படுத்துதலின் பொருள் :
ஊக்கப்படுத்துதல் என்பது ஒரு செயலைச் செய்வதற்கான காரணம்
என்னும் பொருள் கொண்ட’ஊக்கு காரணி”என்னும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
ஊக்கம் என்பது திசை, தீவிரம் மற்றும் தொடர்ச்சியான இருப்புடைய தன்னார்வ
நடத்தை போன்றவற்றை பாதிக்கும் ஒரு நபரின் உள்ளிருக்கும் விசைகளின்
தொகுப்பு. முழுமையான உந்துதல்கள், ஆசைகள், தேவைகள், விருப்பங்கள் மற்றும்
ஒத்த விசைகளுக்கு பொருந்தக்கூடிய பொதுவான கருத்தியல் சொல்
ஊக்கப்படுத்துதலாகும். ஊக்கப்படுத்துதல் என்பது நிறுவனத்தின் நோக்கங்களை
அடைவதற்காக ஒரு நபரின் உள்உந்துதல்களை முறைமைப்படுத்தும்
செயல்முறைகளாகும்.
ஊக்கப்படுத்துதல் என்பது நிறுவன நோக்கங்களைஅடைவதற்காக தனிநபரின்
தீவிரமான நெறிப்படுத்தப்பட்ட மற்றும் உறுதியான முயற்சிகளை கொண்ட
செயல்முறைகளாகும். பொதுவான ஊக்கம் என்பது எவ்வகை நோக்கத்தை
அடையவும் எடுக்கப்படும் முயற்சியுடன் தொடர்புடையது என்றாலும் நிறுவன
நோக்கங்கள் பணிசார்ந்த நடத்தையில் மட்டும் தனிப்பட்ட விருப்பத்தை
பிரதிபலிக்கும் வகையில் நேர்படுத்தப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தப்படுகின்றது.
ஊக்கப்படுத்தப்பட்ட நபார்கள் நோக்கத்தை அடையும் வரை செயல்களில் நீண்ட காலம்
இணைந்திருப்பார். மேலாண்மையில் ஊக்கப்படுத்துதல் என்பது மேலாளர்கள்
பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்தும் வழிமுறைகளை விளக்குகிறது.
ஊக்கப்படுத்துதலின் செயல்முறைகள்
பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றன:
1. தேவை :
ஊக்கப்படுத்துதலின் செயல்முறைகள் தேவைகள் அல்லது எதிர்பார்ப்பில்
இருந்து தொடங்குகிறது . பணியாளர்களுக்கு தேவைகள்
அல்லது எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லையெனில் அவர்களை
ஊக்குவிக்க இயலாது. பணியாளர்கள் தேவைகள் அல்லது எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்ய அல்லது தீர்த்துக் கொள்ள ஓடுகிறார்கள். தேவைகள் அல்லது
எதிர்பார்ப்புகள் ஊக்கப்படுத்துதல் செயல்முறைகளுக்கு மிகவும்
முக்கியமானதாகும். நிறுவன மேலாளர் பணியாளர்களின்
தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அவர்களின் உணார்வுகளை மதிக்கும்
வகையில் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும். உணவு இதற்கு
பொருத்தமான ஒரு உதாரணம்.
2. உந்துதல்/செயல் :
உந்துதல் செயல்சார்ந்தது . எதிர்பார்ப்பை தொடர்ந்து மக்கள்
வேலை தேடுகிறார்கள். செயல் என்பது எதிர்பார்ப்பு அல்லது தேவையை பூர்த்தி
செய்வதற்கு தேவைப்படுகின்றது. செயல்படாமல் பணியாளர்களால்
உணவுப்பிரச்சனையை தீர்க்க இயலாது. எனவே தேவை
ஏற்படும்போது மக்கள்அதனை செயல்படுத்த முயலுகிறார்கள்.
3. ஊக்குவிப்புகள் :
ஊக்கப்படுத்துதலின் கடைசி செயல்முறை ஊக் கு விப் பு .
பணியமர் த்தியவுடன் பணியாளர்களுக்கு பிறரை
விஞ்சிநிற்கும் வகையில் ஊதியம் வழங்க வேண்டும்.
தேவை அல்லது எதிர்பார்ப்பை குறிப்பிடத்தக்கவகையில் தீர்க்க
துணைநிற்க வேண்டு ம் . பணியாளர்கள் தங்களின் அறிவு,
திறன் மற்றும் உழைப்பை விற்பனை செய்ய நிறுவனத்திற்கு வருகிறார்கள்.
பணியாளர்கள் தங்களின் உழைப்பை விற்பனை செய்யும்போது அவர்களுக்கு
ஊக்கங்கள் வழங்கப்படுகின்றன. சிறப்பு ஊக்கப்படுத்துதல் உத்திகள்
என்பவை பணம், ஊக்குவிப்புடன் கூடிய பங்கேற்பு மற்றும் பணியாளரின்
பணிவாழ்வு தரமேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
ஊக்கப்படுத்துதல் வரையறை :
ஊக்கப்படுத்துதல் என்பது ஒருநபர் அல்லது குழுவினரை பணிபுரிய தூண்டும்
அனைத்து வகையான உந்துதல்கள், ஆசைகள், தேவைகள், விருப்பங்கள் மற்றும்
ஒத்த விசைகளை குறிக்கும் பொதுவான சொற்கூறு. - கூன்ஸ் மற்றும் ஒ’டோனல்
ஊக்கப்படுத்துதல் என்பது மக்களை நோக்கங்களை அடைய செயல்பட தூண்டும்
செயல்முறையாகும். - வில்லியம் ஜி. ஸ்கார்ட்
4 ஊக்கப்படுத்துதலின் குணாதிசயங்கள் :
1. ஊக்கம் தேவை சார்ந்தது:
ஒரு நபருக்கு தேவை ஏற்படாவிடின் ஊக்கப்படுத்துதலின் செயல்முறை
தோல்வியடைகிறது.
2. ஊக்கம் ஒர் தொடர் செயல்பாடு:
மனிதனின் பெரும்பாலான தேவைகள் மீண்டும் மீண்டும்
ஏற்படக்கூடியவை. அவற்றில் சில தேவைகள் பூர்த்தியடைவதில்லை.
எனவே ஊக்கபடுத்தும் செயல்பாடு தொடர்ச்சியான அடிப்படையில்
செயல்படுத்தப்பட வேண்டும்.
3. ஊக்கப்படுத்துதல் திட்டமிட்ட செயல்பாடு:
விரும்பிய முடிவுகளை அடைய தூண்டுதல் அளித்து
மற்றும் ஆதிக்கம் செலுத்தி மனித நடவடிக்கைகளை பொது நோக்கத்தை
சிறப்பாக நடைமுறைப்படுத்த திட்டமிட்ட ஊக்க செயல்பாடு
அவசியம். இருநபார்களை ஒரே முறையில் ஊக்குவிக்க இயலாது
ஏனெனில் ஊக்கப்படுத்துதலின் செயல்முறைகளை பிரதிபலிப்பதில்
இருவரின் அணுகுமுறையும் வேறுபடும்.
4. ஊக்கப்படுத்துதல் நேர்மறை அல்லது எதிர்மறையாக இருக்கும்:
நேர்மறை ஊக்கப்படுத்துதல் மக்களுக்கு ஊக்கிகளை வழங்க
உறுதியளிக்கிறது (ஊதியம்,வெகுமதி, ஊக்கஊதியம் இன்னபிற) எதிர்மறை
ஊக்கப்படுத்துதல் செயலில் பின்னடைய செய்வனவற்றை
செயல்படுத்துகிறது (அபராதம், ஒழுங்கு நடவடிக்கை, பதவி இறக்க அச்சுறுத்தல்,
பணி இழப்பு குறித்த அச்சம் இன்ன பிற)
இயல்பு அடிப்படையிலான வகைப்பாடு :
1. உள்ளார்ந்த ஊக்கம்:
உள்ளார்ந்த ஊக்கம் பணியின் போது ஏற்பட்டு
பணிபுரியும்போது மனநிறைவை அளிக்கிறது. தகுதி, அதிகாரம்
தயாரிப்பு, பணியில் பன்முகத்தன்மை, பணியில் முன்னேறுவதற்கான
அதிக வாய்ப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியது உள்ளர்ந் ஊக்கிகள்.
2. வெளிப்புற ஊக்கம்:
வெளிப்புற ஊக்கிகள் பணியில் ஏற்படுவதில்லை
மாறாக பணியை சுற்றி ஏற்படுகிறது. வெளிப்புற வெகுமதி என்பது
நேரடியாக செயல்திறனுடன் தொடர்புடைய ஊதிய ஊக்கம் மற்றும்
மறைமுக சலுகையான இலவச வீடு, பயணப்படி போன்றவை. பொதுவாக
நேரடி சலுகைகள் மறைமுக சலுகைகளை காட்டிலும் பயனுள்ள
ஊக்கிகளாக செயல்படுகின்றன. வெளிப்புற வெகுமதிகள் ஊழியர்களை
தக்கவைக்கின்றன ஆனால் உள்ளார்ந்த வெகுமதிகள் அவர்களை
ஊக்குவிக்கின்றன. வெளிப்புற ஊக்கம் உள்ளர்ந்த
ஊக்கம் வெகுமதியை பெற அல்லது தண்டனையை சுயவெகுமதிக்காகவும்
ஒரு தவிர்க்க ஒரு செயலை செய்ய ஊக்குவித்தல் செயலுக்காகவும்
ஊக்குவித்தல்
ஊக்கப்படுத்துதலின் கோட்பாடுகள் :
நிறுவன நோக்கங்களை அடைய மக்களை ஊக்கப்படுத்துவதன் மூலமே
மேலாண்மை தன்பணியை திறமையாக செயல்படுத்துகிறது. ஊக்கப்படுத்துதலின்
முக்கிய கோட்பாடுகள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது:
1. மாஸ்லோவின் தேவை வரிசை கோட்பாடு
2. மெக்கிரிகாரின் X மற்றும் Y கோட்பாடு
3. ஹார்ஷ்பொர்க் இரு காரணி கோட்பாடு
4. மெக்கலிலாண்ட் தேவை கோட்பாடு
5. விரூம் எதிர்பார்ப்பு கோட்பாடு
6. ஈக்விட்டி கோட்பாடு
மாஸ்லோவின் தேவை கோட்பாடு :
மனித நடத்தையை ஊக்கப்படுத்தும் தேவைகளின் விளக்கமே மாஸ்லோவின்
தேவை வரிசைகளாகும். 1943 - ல் ஆபிரகாம் மாஸ்லோ உயிர்வாழ்வதற்கான
மிக அடிப்படையான தேவைகளில் தொடங்கி ஐந்து வகையான மனித தேவைகளை
முன்மொழிந்தார். உடலியல் தேவைகளான உணவு
மற்றும் உறைவிடத்தை பாதுபாப்பு தொடர்பான தேவைகள் தொடர்ந்தன.
அடுத்ததாக அன்பு மற்றும் உரிமை தேவைகள். நான்காவதாக மனிதனுக்கு
தேவைப்படும் மதிப்பு போன்ற தேவைகள். தேவைகளின் வரிசையில் இறுதியானது சுய
இயல்பாக்க தேவை (ஒருவரின் ஆற்றலை பூர்த்தி செய்தல்). தேவை வரிசை பட்டியல்
முதலில் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
உதாரணமான பட்டினி கிடக்கும் ஒருவன் சுய இயல்பாக்கத்தை நாடுவதற்கு முன்
உணவை நாடுவான். ஊக்கப்படுத்துதலுக்கு நன்கு
அறியப்படும் அணுகுமுறை ஆபிரகாம் மாஸ்லோவின் தேவை கோட்பாடு.
1. உடலியல் தேவைகள்:
பசி, தாகம், உறைவிடம் மற்றும் ஏனைய உடலியல்
தேவைகளை உள்ளடக்கியது. பணிநிலையில் இத்தேவைகளை
சிறந்த பணிச்சூழல், ஈர்க்கும் ஊதியம், சலுகை விலை வீடு, இலவச உணவு
போன்றவற்றை வழங்கி பூர்த்தி செய்யலாம்.
2. பாதுகாப்பு தேவைகள்:
உடலியல் மற்றும் மனரீதியிலான துன்பங்களிலிருந்து பாதுகாப்பை
உள்ளடக்கியது. பணிநிலையில் இத்தேவையை பாதுகாப்பான
பணிநிலைகள், தனிப்பட்ட நலகாப்பு, ஈர்க்கும் ஓய்வுதியம் போன்றவற்றை
வழங்கி பூர்த்தி செய்யலாம்.
3. சமூக தேவைகள்:
நேசம், ஒரு வகையான உரிமை மற்றும் நட்பு போன்றவற்றை
உள்ளடக்கியது. இத்தேவைகளை பின்வருவனவற்றை வழங்குவதன்
மூலம் பூர்த்தி செய்யலாம். அவை: நிறுவன விளையாட்டுகள் மற்றும்
சமுதாய மன்றம், நிறுவன கூட்டங்கள், உல்லாச பயணம், முறைசாரா
செயல்களுக்கு அனுமதி மற்றும் வெளிப்படையான தகவல்தொடர்பு.
4. மதிப்பு தேவைகள்:
சுய மரியாதை மற்றும் சாதனை போன்ற
உள்காரணிகள் மற்றும் தகுதிநிலை, அங்கீகாரம் மற்றும் கவனம்
போன்ற வெளிகாரணிகளை உள்ளடக்கியது . இவற்றை
வழக்கமான நேர்மறை பின்னூட்டம், மதிப்புமிக்க பணிபட்டங்கள், நிறுவன
பத்திரிக்கைகளில் படங்கள், பதவி உயர்வு போன்றவற்றின் மூலம்
வழங்கலாம்.
5. சுய இயல்பாக்க தேவைகள்:
ஒருவர் என்னவாக வருவதற்கு திறன்பெற்றுள்ளாரோ அதற்கு
ஊக்கியாக திகழும் வளர்ச்சி ஒருவரின் திறன் அடைதல் மற்றும்
தன்னிறைவு, பதவி உயர்வு, சவாலான பணி ஏற்றங்கள் மற்றும்
படைப்பாற்றலை ஊக்குவித்தல் போன்றவை இத்தேவைகளை பூர்த்தி
செய்கின்றன.
Comments
Post a Comment