Gf
முன்னுரை : மேலாண்மை என்பது நிறுவனத்தின் நோக்கங்களை அடைவதற்காக ஒவ்வொரு நபரும் இணைந்து குழுவாக செயல்படக்கூடிய சூழலை உருவாக்குதல் மற்றும் அதனை தக்க வை த்துக் கொள்வ துமாகும் . நிர்வாகம் ஊழியர்களை ஊக்குவிப்பதன் மூலம் தன் பணியை திறமையாக செயலாற்றுகிறது. இதற்கு நிறுவனம் தன் ஊழியர்களை ஊக்குவிக்கும் காரணிகளை அறிந்துகொள்ளவேண்டும். திறமையான ஊக்கத்தின் வெற்றி என்பது ஒப்புக்கொள்ளப்படுகின்ற ஆணை மட்டுமன்றி திறமையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை பார்க்கும் உறுதிப்பாடுமாகும். எனவே நிறுவனம் ஊழியர்கள் நிறுவனத்திற்காக உழைக்க ஊக்கிகளை வழங்கவேண்டும். ஊக்கப்படுத்துதலின் பொருள் : ஊக்கப்படுத்துதல் என்பது ஒரு செயலைச் செய்வதற்கான காரணம் என்னும் பொருள் கொண்ட’ஊக்கு காரணி”என்னும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஊக்கம் என்பது திசை, தீவிரம் மற்றும் தொடர்ச்சியான இருப்புடைய தன்னார்வ நடத்தை போன்றவற்றை பாதிக்கும் ஒரு நபரின் உள்ளிருக்கும் விசைகளின் தொகுப்பு. முழுமையான உந்துதல்கள், ஆசைகள், தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஒத்த விசைகளுக்கு பொருந்தக்கூடிய பொதுவான கருத்தியல் சொல் ஊக்கப்படுத்து