அறிமுகம் : நமதுநாடு பழைமையான பண்பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்வியல் முறைகள், இலக்கியம், கணிதம், வானவியல், இசை, ஓவியம், நடனம், சிற்பம், கட்டடக்கலை போன்றவற்றில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது. தே சிய ஒருமைப்பாட்டை மையப்படுத்தும், ஆன்மிக உணர்வு, இந்தியாவின் பலம் என சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். “உலகப்பொதுமறை“ என்றழைக்கப்படும் திருக்குறள் , தமிழர் வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெ றிகளைக் கூறும் சங்க இலக்கியம், இராமாயணம், மகாபாரதம், கௌதம புத்தர் தோற்றுவித்த பௌத்தசமயம் போன்றவை , உலகிற்கு இந்தியா வழங்கிய அளப்பரிய பண்பாட்டுக் கொடையாகும் இந்தியப் பண்பாட்டின் மேன்மைகள் : இந்தியப் பாரம்பரியத்தின் உயரியப்பண்பு சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மையுமாகும். யூதர்கள் , கிறித்துவர்கள் , முஸ்லீம்கள் , பார்சிக்கள் போன்றோர் இந்தியாவில் குடியேறி, இந்தியப்பன்முகத்த ன்மையை ஏற்றுக்கொண்டு, இந்தியப்பண்பாட் டுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள் . மதநல்லிணக்க அடிப்படையில் அனைத்துச் சமயங்களிலுமுள்ள நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்ளல், பிற சமயத்தினருக்கும் மதிப்பளித்தல் போன்ற உணர்வுகளை த் தன்னகத்தே கொண