Skip to main content

Posts

Freedom Stage World History Important Lines and Questions For Tnpsc Exams - PR220

அறிமுகம் : கிரோண்டியர்களும் ஜேக்கோபியர்களும் : லஃபாயட்டியின் அரசியல் அமைப்புக்குக் கட்டுப்பட்ட முடியாட்சி இரண்டு ஆண்டு காலம்  பிரெஞ்சு அரசியல் களத்தில் கோலோச்சியது. 1791  ஜூனில் பாரிசிலிருந்து தப்பித்து, எல்லையைக் கடந்து அங்கே கூடியிருக்கும் எதிர்புரட்சிப்  படைகளுடன் இணைவதற்காக மன்னர் மேற்கொண்ட முயற்சியைக் குடியானவர்  படையொன்று முறியடித்தது. இருந்தபோதிலும்  உணவுப் பண்டங்களுக்கான பற்றாக்குறையும்  விலையேற்றமும் வேலையில்லாத் திண்டாட்டமும் கைவினைஞர்களையும் சிறு வணிகர்களையும்  தொழிலாளர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்தது ஏமாற்றத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றது. மக்கள் பொங்கியெழுவதை அடக்குமுறையால் கட்டுப்படுத்த இயலவில்லை. அரசாங்கத்தை நடத்திய மிதவாதிகள் தங்களுக்குள்ளேயே வேறுபட்டனர். ஜோக்கோபியன் குழுவிற்குள் இருந்த கிரோண்டியர்கள் (அவர்களின் ஒரு  தலைவர் பிரிசாட் என்ற பெயரால் பிரிசாடினியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்) ரோபஸ்பியரைப் போலவோ, டாண்டனைப் போலவோ அதி  தீவிரவாதிகளாக இல்லை. அவர்களுக்குள்ளே பல கருத்து வேறுபாடுகளிருந்தாலும் ரோபஸ்பியரைத் தவிர மற்றவர்கள்,...

Tamil Indian History Best Awesome Points for Tnpsc Exams - PR220

அறிமுகம் : நிலவியல் கண்டுபிடிப்புகள், மறுமலர்ச்சி, சமய மறுமலர்ச்சி, “முடியரசர்களின் காலம்” ஆகியவற்றின் காரணமாக, பதினெட்டாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில், உலகம் முழுவதிலும், அரசியல், சமய, சமூக, பொருளாதார நிலைகள் மாற்றமடையத் தொடங்கின. பதினெட்டாம் நூற்றாண்டு முடிவடைகின்ற  தருவாயில் இரு புரட்சிகள் நடைபெற்றன. அவை அமெரிக்க புரட்சி (1775-83), பிரெஞ்சுப் புரட்சி  (1789-95) ஆகியனவாகும். இப்புரட்சிகள்  முடியாட்சிமுறை சார்ந்த அரசாங்கங்களுக்கு  பெரும் வீழ்ச்சியைக் கொடுத்ததோடு, அதற்குப்  பின்னரான மனிதகுல வரலாற்றின்மீது நிலையான தாக்கத்தினையும் ஏற்படுத்தின.  இப்புரட்சிகள் மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அத்துடன் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட  பொருளாதாரமானது ஆலையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றம்பெறும் புதிய  காலகட்டத்தை அடைந்தது. மேற்சொல்லப்பட்ட, உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைப் புரிந்து கொள்ள இப்பாடம் நமக்கு உதவும். அமெரிக்க விடுதலைப் போர்: கண்டுபிடிப்புகளின் காலம் என்றறியப்படும்  காலப்பகுதியில், துணிச்சல்மிக்க கடலோடிகள...

World History and Indian History Important Questions and One Mark Question - PR220

அறிமுகம் : கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451-1506) : ஜெனோவாவைச் சேர்ந்த இத்தாலியரான கிறிஸ்டோபர் கொலம்பஸ்ஸ்பானிய ஆட்சியாளர்கள்  பெர்டினான்ட் மற்றும் இசபெல்லாவின் ஆதரவைப் பெறுவதற்கு முன் பல கடினமான சூழ்நிலைகளை கடக்க நேரிட்டது. 1492 ஆகஸ்ட் 3இல்  கொலம்பஸ் காடிஸ் அருகே உள்ள பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று சிறிய கப்பல்க ள் (தி  சாண்டா மரியா, தி பிண்ட்டா, தி நினா) மூலமாகப்  பயணித்தார். 1492ஆம் ஆண்டில் இரண்டு  மாதங்கள் மற்றும் ஒன்பது நாட்களுக்கான பயணத்துக்குப் பிறகு இந்தியா என்று அவரால்  நம்பப்பட்ட நிலப்பகுதியை அவர் வந்தடைந்தார்.  ஆனால் உண்மையில் அது அமெரிக்கா எனும் ஒரு  புதிய கண்டமாகும். தங்கம், பருத்தி, விந்தையான மிருகங்கள் மற்றும் கிறித்தவ சமயத்தில்  ஞானஸ்தானம் கொடுக்கப்பட வண்ணம்  தீட்டப்பட்ட அகலமான கண்களுடன் இரண்டு  இந்தியர்களுடன் ஸ்பெ யின் சென்றுசேர்ந்தார். தான் கண்டுபிடித்த நிலப்பகுதி இந்தியா என்று  அவர் தனது இறுதிக் காலம் வரை நம்பியதால் அவர்கள் இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். வாஸ்கோடகாமா : கொலம்பஸ் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஸ்க...

World History and Indian History Unique Important Questions and One Mark - PR220

அறிமுகம் : பதினைந்து மற்றும் பதினாறாம்  நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மூன்று பெரும் நிகழ்வுகளாக மறுமலர்ச்சி, புவியியல் கண்டுபிடிப்புகள்,  சீர்திருத்த இயக்கங்களின் தோற்றம் ஆகிய  மூன்று முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.  இவை இடைக்காலம் தொடங்கி நவீனகாலம் வரையிலான மாற்றங்களைக் குறிக்கும் விதமாக  அமைந்தன. மறுமலர்ச்சியின் சாரம் மனிதர்களுக்கும்  இயற்கைக்கும் முக்கியமாக அமைந்த சமயம்  இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டதே எனலாம். மறுமலர்ச்சி நவீன உலகை உருவாக்குவதில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  ஐரோப்பாவின் புவியியல் சார்ந்த கற்பனைகளுக்கு  அது ஊக்கமாக அமைந்தது. கொலம்பஸ் பெற்ற வெற்றியானது வெளிநாட்டு அமைப்புக்களுக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக அமைந்தது. கத்தோலிக்க தேவாலயங்களுக்கு எதிரான கிளர்ச்சியாக  உருவான சீர்திருத்தங்கள் சமய வரைபடத்தில்  மாற்றங்களை உருவாக்கியதோடு சமயம் தொடர்பான அணுகுமுறைகளில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முடியாட்சியை ஒருங்கிணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் அதனை  உறுதியாக்கும் நடவடிக்கைகளின் விளைவாக ஸ்பெய...

India 5 Year Plan and New Development Indian History Important Lines and Questions - PR220

அறிமுகம் : தொழிலக வளர்ச்சி : பொருளாதார வளர்ச்சிக்கு விரைவான தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும்  யோசனைக்கு இந்தியா உறுதியளித்தது.  பல்வேறு வழிகளின் மூலம் வளர்ச்சியை அடைய முடியும். இந்தியா போன்ற அதிக மக்கள்  தொகை கொண்ட நாடுகளில், பலவகை கச்சாப்  பொருட்கள் கிடைக்கின்ற அல்லது விளைகின்ற,  அதிக உழைப்பு மிகுந்த செயலாக்க தொழில்களும்  தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதற்கு  மாற்றான காந்தியின் மாதிரி கிராமவளர்ச்சிக்கும்  முக்கியத்துவம் கொடுத்தது. குடிசைத் தொழில்களின்  மூலம் நுகர்வுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டால்  அது கிராமப்புற வறுமையையும் வேலையின்மையும்  அகற்றும் எனும் கருத்தை முன்வைத்தது.  ஆனால் அரசு பல்வகைப்பட்ட தொழில்களின்  முன்னேற்றத்திற்காக மிகப்பெரிய அளவிலான கனரகத் தொழில்களை உருவாக்குவதில் கவனம்  செலுத்தும் நேருவின் மாதிரியைக்கைக்கொண்டது.  “சமதர்ம சமூகம்” எனும் அடிப்படைக் கொள்கைக்கு ஏற்றவாறு அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் அடங்கிய தொழில்துறையை வளர்ப்பதில் அரசு பெரும்பங்கு வகிக்கும். எஃகு  உற்பத்திக்...

New India After Struggle and Culture Development Important Lines and One Mark Questions - PR220

அறிமுகம் : 1947இல் இந்தியா விடுதலையடைந்தபோது  நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவற்றதாகவும்  பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டது.  வறுமையின் அளவு மிக அதிகமாக  இருந்தது. மக்கள் தொகையில் ஏறத்தாழ 80  விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்ந்ததோடு  தங்கள் வாழ்வாதாரத்திற்காக அவர்கள்  வேளாண்மையைச் சார்ந்திருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கைவினைத் தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதால் திறமைமிக்க கைவினைஞர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதன் விளைவாக வேளாண் துறையில் மக்கள் நெருக்கடி அதிகமானதோடு,  வேளாண்மையிலிருந்து பெறப்படும்  தனிநபரின் தலாவருமானமும் குறைந்தது. நில உடைமையாளர்கள் மற்றும் பயிரிடுவோர் அல்லது  விவசாயிகளுக்குமிடையே நிலவிய நிலப்பிரபுத்துவ  பிணைப்பு வேளாண்மையின் இயல்பாக இருந்தது.  இவ்விவசாயிகள் நிலவுடைமை வர்க்கத்தாரால்  சுரண்டப்பட்டனர். விடுதலைக்கு முந்தைய பதிற்றாண்டுகளில்  தொழில்துறை வளர்ச்சியடைந்திருந்தது.  ஆனால் அது மிக குறைவானதாகவே இருந்தது.  டாட்டா இரும்பு எஃகுத் தொழிற்சாலை மட்டுமே நன்கறியப்...

India Freedom Last Stage History Important Lines and One Mark - PR220

அறிமுகம் : காலனித்துவ ஆட்சியிலிருந்து கிடைத்த  விடுதலைக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியப் பிரிவினை  வங்காளம் மற்றும் பஞ்சாபின் மாகாணங்களை இரண்டாகப் பிரித்தது. பிரிவினையின்போது  திட்டமிடப்படவில்லை என்றாலும், இந்துக்கள் கிழக்கு  வங்காளத்திலிருந்து மேற்கு வங்காளத்திற்கும்  இஸ்லாமியர்கள் பீகார் மற்றும் மேற்கு  வங்காளத்தில் இருந்து கிழக்கு வங்காளத்திற்கும்  இடம்பெயர ஆரம்பித்தனர், இதேபோல், மேற்கு  பஞ்சாபில் இருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்  கிழக்கு பஞ்சாபிற்கும் கிழக்கு பஞ்சாபில் இருந்த  முஸ்லிம்கள் மேற்கு பஞ்சாபிற்கும் குடிபெயர்ந்தனர்.  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்த கிராமங்கள்  அவற்றில் வாழ்ந்த பெரும்பான்மை மதத்தினரைப்  பொருத்துப் பிரிக்கப்பட்டன. முஸ்லிம்கள்  பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள்  பாகிஸ்தானுக்கு எனப் பிரிக்கப்பட்டன; இந்துக்கள்  பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள்  இந்தியாவோடு இணைக்கப்பட்டன. அந்த  கிராமங்களில் வாழ்ந்த சிறுபான்மையினரைப்...