அறிமுகம் : முகலாயப் பேரரசின் வீழ்ச்சியோடு மைய அதிகாரம் நொறுங்கியதால் ஓர் ஆங்கிலேய வணிக நிறுவனம் இந்தியாவை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் நிர்வாகம் செய்வது அல்ல; மாறாக அது சிக்கலில்லாமல் வியாபாரம் புரிவதாகவே இருந்தது. எனினும், வங்காளத்தில் 1770இல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்திற்குப் பின் சற்றே அதிகாரத்தை பொறுப்புணர்வு கொண்டதாக அவர்கள் மாற்றினர். ஒருபுறம் பாரபட்சமான சுரண்டல் பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடித்தபோதும், அவர்கள் தாங்கள் ஆண்ட மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் நீதி நடைமுறைகளையும் காக்க முயல்வதாகப் பறைசாற்றிக் கொண்டார்கள். பாரம்பரிய அரசாட்சி சர்வாதிகாரக் கொடுமையை உள்ளடக்கியதாக இருப்பதாலும், எதிர்பாராத படையெடுப்புகளாலும் கள்வர்களாலும் மக்கள் இன்னல் அனுபவிப்பதாலும் தங்களின் அதிகாரம் விரிவடைவது தவிர்க்க முடியாததென நியாயப்படுத்திக் கொண்டார்கள். இருப்புப்பாதை ஏற்படுத்தியதும், தந்தி தொடர்பு முறையும், எதிர்ப்புகளை ஒடுக்கவும், உள்ளூர் மக்களை எளிதாகக் கட்டுப்படுத்தவும் உதவின. ஆங்கிலேயரின் விவசாய, வணிகக் கொள்கைகள் இந்தியப்